துக்ளக் ஆசிரியர் – “சோ” சொல்வது எந்த அளவிற்கு சரி ….?
(அத்வானி பற்றி சோ …part-2 )
சோவைப் பொறுத்த வரை அவர் பேசியதாகக்
கூறி இருப்பது சரியே.
ஆனால் மோடி பிரதமர் ஆவது குறித்து –
அத்வானி கூறியதாக சோ சொல்வதில்
கொஞ்சம் வித்தியாசம்
இருக்கிறது என்று நினைக்கிறேன்.
சோ –
மோடி பிரதமர் ஆக அத்வானி முயற்சி எடுக்க
வேண்டும் என்று சொன்னதற்கு
அத்வானி பதில் சொல்லும்போது,
மோடி பிரதமர் ஆவது குறித்த சொல்லையே தவிர்த்தார்.
அத்வானியிடமிருந்து
எந்தவித commitment -உம் வரவில்லை.
மாறாக அந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது
மிகவும் மழுப்பலாக சில வார்த்தைகள் சொன்னார்.
என் நினைவில் இருக்கிற வரையில் –
அத்வானி பேசும்போது –
கிட்டத்தட்ட –
” வீட்டில் விசேஷங்கள் வருகின்றன.
மூத்தவர்கள் நிரம்பிய வீட்டில், இளைஞர்கள்
முக்கிய பொறுப்பு ஏற்றுக்கொண்டு, முனைப்புடன்
செயல்படுவது கண்டு, பெரியவர்கள் மகிழ்ச்சியும்
பெருமிதமும் கொள்வது போல், மோடியின் சாதனைகள்
தமக்கு மகிழ்வு அளிப்பதாக இருக்கின்றன”
-என்கிற வகையில் தான் பேசினார்.
(என் நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு நான்
இதை எழுதுகிறேன். சிறிய அளவில் கொஞ்சம்
வேறுபாடுகள் இருக்கக்கூடும்.பழைய துக்ளக் இதழ்களோ,
அந்த நிகழ்ச்சியின் CD யோ வைத்திருப்பவர்கள்
இதை உறுதி செய்யலாம். அல்லது correct
செய்யலாம்.)
நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று சோ
பேசியதை அத்வானி ரசிக்கவில்லை என்பது அவரது
பேச்சிலிருந்தும், body language-ல் இருந்தும்
தெரியவே செய்தது. மேடையில் இருந்தபோது கூட –
அத்வானியும், மோடியும் சகஜமாகப் பழகவில்லை
என்பது கண்கூடாகத் தெரிந்தது.
“சோ” கூறியது போல், அத்வானி தன் நீண்ட கால
அரசியல் வாழ்வில் – அருண் ஜெய்ட்லி,
சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு,
நரேந்திர மோடி என்று பல அடுத்த தலைமுறையைச்
சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தார் என்பது
உண்மையே. ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக
ஆக்க பாஜக தலைவர்கள் சிலர் மும்முரமாக
இறங்கியதும், மோடியும் இதில் தீவிர ஆர்வம் காட்டியதும்
அத்வானிக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தன.
மோடியின் போட்டியை –
“வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” போன்ற
உணர்வுடன் தான் அவர் எதிர்கொண்டார்.
தான் வளர்த்தவர்கள், தன்னையும் மீறி வளர்ந்து,
தன் வாழ்நாள் கனவாக இருக்கும் ஒரு இடத்தையும்
பறித்துக் கொள்ள முற்படுவார்கள் என்பதை அவர்
எதிர்பார்க்கவில்லை.
அதன் வெளிப்பாடே, கோவாவில் நிகழ்ந்த பாஜக
பார்லிமெண்டரி மற்றும்
பொதுக்குழு கூட்டத்திற்கு போகாததும்,
நரேந்திர மோடியை முன்நிலைப்படுத்தினால்,
NDAவுக்கு இதர கட்சிகளின் ஆதரவைப் பெறுவது
இயலாத காரியம் என்று கூறியதும்…
நிதின் கட்காரியை தேர்தல் குழு தலைவராக
முன் மொழிந்ததும்,
ம.பி.முதல்வர் சௌஹான், மோடியை விடத் திறம்பட
செயலாற்றி யுள்ளார் என்று சொன்னதும் …
இவை எதுவும் பலன் அளிக்காத நிலையில்
இறுதியில் தன் ராஜினாமா முடிவையும் அறிவித்தார்.
ராஜினாமா கடிதத்தை உடனடியாக மீடியாவிற்கும்
வெளியிட்டார்.
ராஜினாமா கடிதத்திலேயே –
பாஜக கட்சி எந்த நோக்கத்திற்காக,
எத்தகைய லட்சியங்களுக்காக, தோற்றுவிக்கப்பட்டதோ –
அந்த திசையிலிருந்து விலகிச் செல்கிறது.
அதன் முக்கியத் தலைவர்கள் பலருக்கும்
அவரவருக்கான சொந்த agenda இருக்கிறது.
அதை நிறைவேற்றிக்
கொள்ளவே கட்சியை பயன்படுத்திக் கொள்கிறார்கள்
என்றெல்லாம் குற்றம் சாட்டினார். இதையெல்லாம்
கூறும்போது, 60 ஆண்டுகளாக தான் வளர்த்த
கட்சியின் image படுபாதாளத்திற்கு போகுமே என்பதை
கவனத்தில் கொள்ளவே இல்லை அவர்.
அதையும், எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகத் தான்-
தான் செய்கிறோம் என்பதை மற்றவர்கள் உணரும்
விதத்தில் – NDA தலைவர், BJP அடிப்படை
உறுப்பினர் ஆகிய பதவிகளை
இருத்திக் கொண்டு மற்ற பதவிகளை மட்டும் ராஜினாமா
செய்தார்.
அத்வானி – உண்மையான தேசபக்தியும்,
பொது வாழ்வில் நேர்மையும் உடைய ஒரு
அற்புதமான தலைவர். இந்த நாட்டின் பிரதமர்
ஆவதற்கு அவருக்கு நிச்சயம் தகுதி உண்டு.
ஆனால் –
unfortunately – நிகழ்காலமும், நாடும் இன்று
அவர் தலைமையை விரும்பி ஏற்கும் நிலையில் இல்லை
என்கிற உண்மையை- யதார்தத்தை – உணர மறுக்கிறார்.
தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை
அரசியலிலேயே கழித்து விட்ட அவரால் –
தான் தொடர்ந்து பிரதமருக்கான போட்டியில் இருந்தால்,
தன் கட்சியினரே தன்னை அலட்சியப்படுத்தி விடுவர்
என்கிற உண்மையை அத்வானி உணர முடியாமல்
போனது தான் அவரது மிகப்பெரிய பலவீனம்.
இப்போதாவது அத்வானி – “பிரதமர் பதவிக்கான
போட்டியில் தான் இல்லை” என்று அறிவித்தால் அவர்
தனது இழந்த மதிப்பையும், சரிந்த செல்வாக்கையும்
மீண்டும் பெறக்கூடும் ..!!
——————–
– என்று நான் கருதுகிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே ..?





காவிரிமைந்தன்,
மிகச் சரியாக எழுதி இருக்கிறீர்கள்.
அத்வானி எவ்வளவு சீக்கிரம் வெளிப்படையாக
இதைக் கூறுகிறாரோ அந்த அளவுக்கு
அவருக்கு நல்லது.
மோடி பிரதமர் ஆக அத்வானி முயற்சி எடுக்க வேண்டும் – என்று தன் விருப்பத்தை திரு சோ கூறினார் அவ்வளவுதான். முதியவர்களுக்கு மதிப்பு கொடுத்து இளைஞர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் வளர்ந்த
திரு அத்வானி இதுவரை பிரச்சினைகளில் அதிகம் சிக்காத தலைவர்களில் ஒருவர் என்பதனையும் கட்சியை வளர்ப்பதற்கு அவர் உழைத்தாரென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.இங்கு திரு பெரியார் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது “முட்டாள்கள் எனக்குத் தொண்டர்களா இருக்கும் வகையில் எனக்குப் பிரச்சினை குறைவு. அவர்கள்தான் நான் என்ன சொன்னாலும் எதிர் கேள்வி கேட்காமல் செயல்படுவார்கள் எனது கொள்கைகள் செயலாக்கம் பெறும்” என்றாராம். அது உண்மை என்பதனை அவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட அறிஞர் திரு அண்ணாதுரை நிரூபித்துவிட்டார் தி க பிளவுபட்டது
திரு மோடிக்கு பகைமை வெளியில் குறைவு ஆனால் உடனிருந்தே கொல்லும் வியாதிகள் அதிகம். அவரளவிற்கு இல்லாவிடினும், பிறர் பேசப்படுகிற அளவிற்கு தலைவர்கள் பாஜகவில் அதிகம். அவர்களுக்கும் பதவி ஆசை உண்டு என்பதைப் பலமுறை வெளிப்படவே காட்டியிருக்கிறார்கள். எனவே கட்சி பிளவுபடக் கூடாதென்றும் திரு அத்வானி நினைக்கலாம் எதேச்சாதிகாரத்தில், திரு மோடி திருமதி இந்திரா காந்திக்குச் சிறிதும் சளைத்தவரில்லை. ஆனால் காலத்தின் கட்டாயத்தால் பிரதமரான அதீத சகிப்புத் தன்மை கொண்ட ஊழலுக்குத் துணை நின்ற திரு மன்மோகன் சிங் இந்தியாவின் மதிப்பைக் குறைக்க காரணமாக இருக்கும் நிலையில் . 2020ல் வல்லரசாக ஆகுமோ இல்லையோ நல்லரசாக இருக்க இன்றைய இந்தியாவிற்கு திரு மோடி போன்ற ஒருவர் தேவை
இன்றைய எதார்த்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கட்சியில்
பலரை அவரவர் திறனுக்கும் திறமைக்கும் தக்கப் பணிகளை அளித்து
உரிய இடத்தில் அமர வழி வகைகளை காட்டிய கட்சியின் மூத்த
தலைவரை, கட்சித் “தலைமை” நடத்தும் முறை அல்லது வகை
சரிதானா?
மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற
அந்த கணமே, அத்வானியின் “இலட்சியம்” அல்லது “நோக்கு” தவிடு
பொடியாயிற்று. அறுபதாண்டு கால அரசியல் அனுபவ பாடங்கள்
இதை அவருக்கு உணர்த்தவில்லை அல்லது அவர் அதை அலட்சியப்
படுத்துகிறார் என்கிற பார்வை சிறு பிள்ளைத்தனமானது இல்லையா?
இவ்விதம் மீடியாக்கள் தங்களது “கருத்தை” வலியவந்து தொடர்ந்து
எழுதுவது எதன் பொருட்டு?
இம்மாதிரியான UNSOLICITED கருத்துகள் ஒரு பழுத்த நேர்மையாளரை
சிறுமைப் படுத்துவது ஆகாதா?
கட்சித் தலைமை ஏன் தனது “நிலைப்பாட்டை” அவருக்கு உரிய
வகையில் தெரியப்படுத்தவில்லை? “வேண்டாதவராகிவிட்ட” அவரை
பலரும் ஏன் PACIFY பண்ண வேண்டும்?
—
நீங்கள் கண்ட அத்வானியின் body language மற்றும் கேட்ட அவரது
உரையை, சோ இன்னமும் “கிட்டேயிருந்து” கண்டிருக்க நிறைய
வாய்ப்பு உள்ளது. ஒரு அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர் என்கிற
வகையில், அவரது PERCEPTION வேறாக இருப்பதில் வியப்பில்லை.
அந்த விழாவில் நீங்கள் “பார்வையாளர்” அவர் “பங்காளர்”.
அத்வானி == தில்லி கருணாநிதி
ஒரு மாதத்திற்கு முன்னர் எழுதப்பட்ட இந்த இடுகை
இன்று பல நண்பர்களால் மீண்டும் எடுத்துப்
பார்க்கப்படுவதாக wordpress -dash board
மூலம் தெரிய வருகிறது.
அன்று எழுதியதை உறுதிப்படுத்துவது போல் தான்
அத்வானி இப்போது மோடி பாஜக வின் பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்ட போதும் நடந்து கொண்டிருக்கிறார்.
வயதும் அனுபவமும் சிலரை பக்குவப்படுத்துகிறது.
சிலரை (பதவிப்) பித்தர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும்,
சுயநலவாதிகளாகவும் ஆக்குகிறது.
அத்வானி இரண்டாவது ரகம் போலும் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்