கம்யூனிசம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா ? அல்லது ……. (கொ.த.கொ.வி. Part-5)

கம்யூனிசம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா ? அல்லது …….

(கொ.த.கொ.வி. Part-5)

——–

shangai city-1
சீனா ஜெயிக்க கம்யூனிசம் காரணம் அல்ல என்றால் –
அடுத்த காரணம் என்னவாக இருக்க முடியும் ?

அவர்களது சர்வாதிகார ஆட்சி முறையா …?

கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால், தனியே
தொழிற்சங்க அமைப்புகள் இல்லை. இருக்கும்
அமைப்புக்கள் எல்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டவையே.

கட்சி என்ன முடிவெடுக்கிறதோ
அது தான் அரசாங்கத்தின் முடிவு.
அரசாங்கம் ஒரு முடிவெடுத்து செயலில் இறங்கி
விட்டால், அதை யாரும் எதிர்க்க முடியாது.

எதிர்க்கட்சிகள் இல்லை. எதிர்ப்புகள் இருந்தால் –
அவை கட்சிக்குள்ளாகவே தீர்க்கப்பட்டு விடும்.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி –
அனைத்தும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவையே.

வலைத்தளம் கூட தணிக்கைக்கு உட்பட்டது தான்.

ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ,
வேலை நிறுத்தமோ –
ஏன் விமரிசனமோ கூட யாரும் செய்ய முடியாது.
எனவே எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல்
திட்டமிட்டதை குறித்த நேரத்தில், குறித்தபடி
செய்ய முடிகிறது.
ஒரே ஒரு முக்கியமான விஷயம் –
திட்டமிடும்போதே அது
நேர்த்தியாகத் திட்டமிடப்பட வேண்டும்.

தவறுகளோ, தோல்விகளோ – அரசால் சகித்துக்
கொள்ளப்படுவதில்லை. அதனால், திட்டமிடலும்,
செயல்படுத்தலும் திறமையாக நடைபெறுகின்றன.

அடுத்தது வேலை செய்ய தேவைப்படும் –
உழைப்பு சக்தி – working force.
இப்போதைக்கு – சீனாவில் இதற்குப் பஞ்சமில்லை.
எங்கெல்லாம் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்களோ –
அந்த இடத்திற்கு அவர்களை கொண்டு செல்வதில் –
(to migrate workers ) எந்தவிதப்
பிரச்சினையும் இருப்பதில்லை. பணியிடத்தில்,
தங்க இடமும், உணவும், கொடுப்பதற்கு
அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு விடுகிறது.

சம்பளமோ, வேலை நேரங்களோ – அரசு சொல்வது
தான் சட்டம். நம் ஊரைப்போல் வாரத்திற்கு
40, 45, 48 மணி நேரம் என்றெல்லாம் கணக்கு
போட்டு உழைக்கும் நேரத்தை கட்டுப்படுத்த முடியாது.

– தொழிற்சங்கங்களின் பொறுப்புகள்
அனைத்தையும் அரசே ஏற்றுக் கொண்டு விடுவதால்,
சம்பளம், வேலை நேரம், விடுமுறைகள்
போன்ற விவகாரங்களில் பேரத்திற்கோ,
பேச்சு வார்த்தைகளுக்கோ இடமில்லை.
இதனால், தேவைப்படும்போது தொழிலாளர்களிடம்
அதிகநேரம் வேலை வாங்குவதில் சிரமம்
ஏற்படுவதில்லை.

தொழிலாளர்களின் உணவு, இருப்பிடம், சுகாதாரம்
போன்றவற்றில், அரசாங்கம் உண்மையான
அக்கரை எடுத்துக் கொள்வதாலும்,
கொஞ்சம் கொஞ்சமாக சீனக் குடிமக்களின் வாழ்க்கைதரம்
மேம்பட்டு வருவதாலும், மக்களின் ஒத்துழைப்பு
கிடைப்பது சுலபமாகிறது. பிரம்மாண்டமான
திட்டங்களின் மூலம் கடந்த 10 வருடங்களில்
15 கோடி வேலை வாய்ப்புக்களை – புதிதாக
உருவாக்கி இருக்கிறார்கள் !!

இதனால் தான் பெரிய பெரிய திட்டங்களை
குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற அவர்களால்
முடிகிறது.

164 கிலோமீட்டர் தூரமுள்ள உலகிலேயே
நீண்ட மேம்பாலத்தைக் கட்ட அவர்கள் எடுத்துக் கொண்ட
காலம் நான்கே ஆண்டுகள் தான் !
(நாமும் சென்னையிலிருந்து – திருச்சி வரையிலான
இரட்டை ரெயில் பாதையையே கடந்த 15 வருடங்களாக
போட்டுக்கொண்டு(டே ?) இருக்கிறோம்.)

கடவுள் நம்பிக்கைக்கோ, மத நம்பிக்கைக்கோ –
அரசு நிர்வாகத்தில் இடமில்லை. “aethist
government” என்று அரசியல் சட்டத்திலேயே
விதியைக் கொண்டு வந்து விட்டதால் – இது குறித்த
விஷயங்களிலும், விவாதங்களிலும் செலவழிக்கப்படும்
நேரமும், சக்தியும், பணமும் மிச்சமாகிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த,
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை தான் என்கிற
சட்டத்தை அரசாங்கம் கடுமையாக, மிகக்கடுமையாக
நிறைவேற்றுகிறது.
கல்வி, சுகாதாரம், பெண்கள் -குழந்தைகள் நலன்,
ஆகியவற்றில் முன்னேற்றம் காண திட்டமிட்டு
அக்கரையுடன் நிறைவேற்றுகிறார்கள்.

சிவில், கிரிமினல் சட்டங்கள் கடுமையாக
நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வழக்குகளின்
விசாரணை விரைவாக நடைபெற்று தாமதமின்றி
தீர்ப்புகள் நிறைவேற்றப்படுகின்றன.

அப்படியானால் பிரச்சினைகளே இல்லையா ?
இருக்கிறது. நிறைய இருக்கிறது.

அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க
வேண்டும் என்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்.
ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்றால் –
உலக அளவில் சந்தைப்போட்டியை சமாளிக்க
உற்பத்திச் செலவை குறைக்க வேண்டும்.
(விளைவு – தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு
அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் .. !
முடிகிறது -சர்வாதிகாரம் காரணமாக கம்யூனிஸ்ட்
ஆட்சியாக இருந்தாலும் அங்கே முடிகிறது.
இங்கே – முடியாது. )

நம்மூர் மார்க்கெட்டுகள் பூராவும் சீனத் தயாரிப்புகள்
நிறைந்திருப்பதைக் காண்கிறோம். சிறுவர்களுக்கான
விளையாட்டு பொருட்கள், பொம்மைகள்,
ஸ்டேஷனரி, ஸ்பூன், கரண்டி கூட விடாமல்
பல்வேறு விதமான சமையலறைப் பொருட்கள்,
கொசுவலை முதற்கொண்டு
கொசு பேட் வரை பற்பல பொருட்கள் எக்கச்சக்கமாக
குவிந்திருக்கின்றன.
விலையோ கொள்ளை மலிவு. இங்கு மட்டுமல்ல.
உலகம் பூராவும் பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு
மலிவு விலையில் சீனத்தயாரிப்புகள்
கிடைக்கின்றன.

உலகச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே
சீன அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது.
அடக்க விலையை விட (raw material
+labour + transportation cost )
குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கிறது. விலை வித்தியாசத்தை சீன அரசே
ஈடுகட்டுகிறது.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது ?

லஞ்ச ஊழல்கள் சீனாவில் இல்லையா ?
இருக்கிறது. ஆனால் உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு குற்றவாளைகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
விசாரணகள் வேகமாக நடக்கின்றன.
கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுவதால் –
குற்றச்செயல்கள் குறைகின்றன.

அரசியலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு
வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட்
கட்சியில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து,
படிப்படியாக உழைத்து மேலே வர வேண்டியது தான்.

ஓரளவு மேல் மட்டத்திற்கு வந்த பிறகு தான் –
வளர்வது பிரச்சினை. அதிகாரப் போட்டிகள்
மேல் மட்டத்தில் நிறைய உண்டு. திறமை,
சாமர்த்தியம் உள்ளவர்கள் -உயர்மட்டத்திற்கு
வருகிறார்கள் – survival of the fittest !

பரம்பரை ஆட்சியை ஊக்குவிப்பதில்லை என்பதால்,
அம்மாவிற்கு பிறகு பிள்ளை, புருஷனுக்குப் பிறகு
பெண்டாட்டி என்று பதவிக்கு வர வாய்ப்பு இல்லை.
தனிப்பட்ட ஒருவரிடம் அதிகாரம் குவிவதற்கு
பதிலாக, இறுதி நிலையில் உயர்மட்டக் குழுக்கள்
ஆட்சி செய்கிறது.

இந்த மட்டத்தில் கூட, ஊழல் செய்பவர்கள் –
(ஓரளவிற்கு மேல் ..? ) பொறுத்துக்
கொள்ளப்படுவதில்லை. ஊழல் சொத்துக்கள்
பறிமுதல் செய்யப்படுகின்றன. தயவுதட்சண்யமின்றி
தண்டிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு குழு
பொறுப்பு ஏற்றுக் கொண்டு செயல்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் போட்டி போட்டுக் கொண்டு –
தன் நாட்டை உலக அரங்கில் முன்கொண்டு செல்ல
திட்டமிட்டு உழைக்கிறது.
அப்படியானால் -சீனா இன்று உலக அரங்கில்
முன்நிலையில் இருப்பதற்கு சர்வாதிகாரம்
தான் காரணம் என்று தோன்றுகிறதா ?
இது சரியா ?

அப்படியானால் சர்வாதிகார ஆட்சி வந்தால்
இந்தியாவும் முன்னுக்கு வந்து விடுமா ?

 

(தொடர்வோமே !)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கம்யூனிசம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா ? அல்லது ……. (கொ.த.கொ.வி. Part-5)

  1. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    To keep some hundreds of people are good , one has to be tough. even at our home if u have too many children (those days) Father will be terror. hence out of Five 4 will be good.One will be bad. Apply liberty to all , only one will be good. Take U.S enormous liberty, brings down the country Gun culture, No Family Values & so many problems

  2. Ramya's avatar Ramya சொல்கிறார்:

    //பரம்பரை ஆட்சியை ஊக்குவிப்பதில்லை என்பதால்,
    அம்மாவிற்கு பிறகு பிள்ளை, புருஷனுக்குப் பிறகு
    பெண்டாட்டி என்று பதவிக்கு வர வாய்ப்பு இல்லை.//
    angeyum ‘Princeling’ kalacharam irukirathae!

  3. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    INDIA requires military rule

    • safi's avatar safi சொல்கிறார்:

      அந்த ஊரு அரசியல்வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதால் அது வளர்கிறது நம்ம ஊரு அரசியல்வாதிகள் வீட்டை பற்றி சிந்திப்பதால் அவர்கள் வளர்கிறார்கள்

  4. Ramya's avatar Ramya சொல்கிறார்:

    dictatorship alone is not sufficient for a nation to be on the road of development. If dictatorship can create wonders then Sub Saharan countries would have been in the list of advanced countries long back.However there are also countries like China,Taiwan,Singapore,South Korea which have fared better economically under one party rule. Whatever be the regime style, be it democratic/dictatorship, it is the commitment and the political will from the leader that helps a nation to make headway economically.
    On a side note, the question of what constitutes development itself is debatable!

  5. senthilkumar's avatar senthilkumar சொல்கிறார்:

    india should be always india.no country in the world enjoy this kind of freedom.i always want to be free indian.china is unfortunate.money will not give real freedom.

  6. senthilkumar's avatar senthilkumar சொல்கிறார்:

    Communism may be good.But it will not be suitable for india.Following communism is picking unripe mango when there is ripe one.earn money and enjoy life.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.