பாஜக வுடன் கூட்டணி சேர திமுக வும்
விருப்பம் …!!!

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் நாட்டில் கூட்டணி
முயற்சிகள் குறித்து ஒரு scoop கிடைத்தது.
அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சி – திமுகவுடன், தேமுதிக வையும்
சேர்த்து ஒரு மெகா கூட்டணி அமைக்க முயற்சி
செய்வது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளி
வந்துள்ளன.
ராஜ்ய சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி
முதலில் நம்பிக்கையூட்டி விட்டு பின்னர் காலை வாரி
விட்டதாலும், திமுக உள்ள கூட்டணியில் சேர
விஜய்காந்திற்கு விருப்பம் இல்லை என்பதாலும்
தேமுதிக இதில் அக்கரை காட்டவில்லை என்றும்
ஏற்கெனவே செய்தி வந்தது.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வேண்டாம் என்று
ஜெ. கூறி விட்டதால் – பாஜக வின் தமிழ்நாட்டு
தலைவர்கள் விஜய்காந்துடன் கூட்டணி சேர்வது
குறித்து ஆர்வமாக உள்ளனர். விஜய்காந்தும் இதில்
மிகவும் விருப்பமாக உள்ளார். விஜய்காந்தே இது
குறித்து பாஜக மேலிடத்தை அணுகி இருப்பதாகவும்
உரிய நேரம் வரும்போது இது குறித்து
பேசலாம் என்று பாஜக மேலிடம் கூறியுள்ளதாம்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை
சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுவதால்,
திமுக, காங்கிரசை கை கழுவிவிட்டு
அடுத்த ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ள
பாஜகவுடன் கூட்டு சேர விரும்புகிறது.
“ஜெ” பாஜக விற்கு பிடிகொடுக்காமல் இருப்பதை
தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் முயற்சியில்
திமுக இறங்கி இருக்கிறது. இதற்காக களத்தில்
இறங்கி இருப்பவர், (யாரும் எதிர்பார்க்காத)
அண்ணன் மாறனாம். இதற்காக, பாஜக தலைமையை
அணுகி இருக்கிறாராம். தேர்தலில் பாஜகவின்
வெற்றிக்கு தன்னால் “இயன்ற”
அனைத்தையும் செய்வதாகக் கூறி இருக்கிறாராம் .
————————-
இந்த செய்தி குறித்து என் கருத்து –
லோக்கல் பாஜக தலைவர்கள் விஜய்காந்துடனான
கூட்டணியை விரும்பினாலும்,
பாஜக மேலிடம் ஜெ.வுக்கு விரோதமாக எதையும்
செய்ய விரும்பாது.
பாஜக மேலிடம் -ஜெ. யிடம் இது குறித்து கலந்து
ஆலோசித்து, அவரே இதற்கு ஒப்புக் கொண்டால்
தேமுதிகவுடன் பாஜக கூட்டணி உருவாகக் கூடும்.
ஆனால் – நிச்சயமாக திமுக வுடனான கூட்டணிக்கு
பாஜக இணங்காது.
பாஜக +தேமுதிக கூட்டணிக்கு ஜெ.
எப்படி ஒப்புக்கொள்வார் என்கிறீர்களா ?
இரண்டு காரணங்கள் –
1)காங்கிரஸ் + விஜய்காந்த் + திமுக கூட்டணி
உருவாகக் கூடிய வாய்ப்பை இது கெடுத்து விடும்.
2)பாஜக+விஜய்காந்த் கூட்டணி அதிமுக வின்
வெற்றி வாய்ப்புகளை பாதிப்பதாக இருக்காது !!
———————-
பின்குறிப்பு – என்னுடைய முந்தைய இடுகை இன்னும்
முடியவில்லை. தொடர்கிறது. இடையே இது
செய்தி முக்கியத்துவம் கருதி உள்ளே புகுந்து விட்டது.
தடங்கலுக்கு மன்னிக்கவும்.



காவிரிமைந்தன் சார்,
மாறன்களோ, சூரன்களோ தலைகீழாக நின்றாலும்
பாஜக – திமுகவை பக்கத்திலேயே சேர்க்காது.
விஜய்காந்த் கூடவும் பாஜக சேராது.
இருதியில்
திமுக+காங்கிரஸ்+வி.சி.+முஸ்லிம் லீக்,
அதிமுக+கம்யூனிஸ்ட்+மதிமுக
பாஜக+ஐஜேகே+கொங்கு
பாமக தனி,
தேமுதிக தனி,
என்று தான் வரும் பாருங்கள்.
யாரும் எதிர்பார்க்காத அண்ணன் மாறன் “இயன்றதை”ச்
செய்து, தேமுதிகவுடன் கூட்டணி அமைய ஏற்பாடு செய்கிறார்
என்பதை காணும் போது சிரிப்பு வருகிறது. அண்ணன் மாறன்
இப்போது செவதை விடுங்கள். முன்னர் அப்பா மாறன் தான்
பிஜேபியுடன் திமுக கூட்டு (உறவு) வைத்துக் கொள்ள
அடிப்படையான வேலைகளைச் செய்து “வெற்றி” கண்டார்
என்பது தங்கள் நினைவில் இல்லையோ?
திமுக அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்குத் தேமுதிக மாற்றோ
இல்லையோ, மாநிலம் தழுவிய அளவில் “எல்லா” தொகுதிகளிலும்
எறக்குறைய பத்து சதவீத வாக்குகளைக் கொண்ட கட்சி. இன்றைய
அளவில், “இந்த” மூன்றாவது இடத்தில் எந்த கட்சியும் தமிழத்தில்
இல்லை. எனவே, அக்கட்சியைத் தவிர்த்துவிட்டு யாராலும் மெகா
அல்ல மஹா கூட்டணியை அமைக்க இயலாது.
எனவே, தேமுதிக யாருடன் இணந்து தேர்தலை சந்திக்கும் என்பது
முற்றிலும் விஜயகாந்த்திடம்தான் இருக்கிறதே தவிர, ஜெயலலிதாவின்
“விருப்பத்தின்” பேரில் கண்டிப்பாக இருக்காது.
விஜயகாந்த் கட்டிய வீட்டுக்கு வெள்ளையடித்துக் குடி போனவர்
இல்லை. சினிமாவில் (வாய்ப்பின்றி) இருந்த காலத்திலும் கூட,
தனக்கென ஒரு அடையளத்தைத் தேடி, அதற்காக உழைத்து வெற்றி
கண்டவர். சொந்த அடையளத்தை தொலைக்க துணிபவர்களைத்
தான் அம்மாவும், கலைஞரும் போற்றுவார்கள். இல்லையெனில்
தூற்றுவார்கள். தொல்லைகள் தருவார்கள்.
ராஜீவ் காலத்திலேயே காங்கிரஸோடு கொண்ட கூட்டுக்காக சபையில்
(EXTRA LUGGAGE) வருந்தினார். சோனியாவை விழுப்புரத்தில் காக்க
வைத்துவிட்டு, இவர் செங்கல்பட்டில் மக்கள் வெள்ளத்தில் நீந்த
முடியாது தவித்தார். அம்மாவின் கூட்டணி காக்கும் அல்லது போற்றும்
கலை, வாஜ்பாய் அத்வானி வரை பிரசித்தம். மோடி வேண்டுமானால்
அறியாதவராய் இருக்காலாம். சேடப்பட்டியார் “கை”தவறி பட்டனை
அழுத்தியதை யாரால் பறக்க முடியும்?
விஜயகாந்த் (எழுவரைத் தவிர்த்து) நன்கு அறிந்து வைத்திருப்பார்.
இவர் யாரோடு சேர வேண்டும் என்பதை அவர் ஒருபோதும் தீர்மானிக்கவே
முடியாது.
—–
கடந்த சனியன்று (ஞயிறு காலை மறு ஒளிபரப்பு) பு.த-வில் வந்த
அக்னிபரீட்சை தமிழருவி மணியன் பேட்டி கண்டீர்களா?
காங்கிரஸா பிஜேபியா என்ற திரிசங்கு நிலை தமிழக கட்சிகளுக்கு
மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்குமே பொருந்தும்.
இரண்டில் ஒன்றோடு இணைந்துதான் வரவிருக்கின்ற பொதுத்
தேர்தலைச் சந்தித்தாக வேண்டும். பேராசையும் முற்றிலும் சுயநலமே
கொண்ட கட்சிகள் சொல்லுவதும், நடைமுறைக்கு ஒத்துவராத
காம்ரேட்டுகள் முன்னிறுத்தும் “மூன்றாவது அணி” ஒரு போதும்
உருவம் பெறாது. காங்கிரஸ் நடத்தும் கல்யாணத்தில் திமுகவுக்கு கடைசி
பந்தியில் தான் இலை. அதிமுகவுக்கு அழைப்பிதழே கிடையாது.
இருவருக்கும் பிஜேபியை விட்டால் வேறு புகலிடம் இல்லை. யார்
முந்திக் கொள்கிறார்கள் என்பது தான் விசேஷம்.
வரவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல். இவ்விரு கட்சிகளும் தாங்கள்
பெற போகும் MP-க்களைக் கொண்டு நாட்டை ஆள வாய்ப்பே
இல்லாததினாலும், யார் வரவேண்டுமென்று தீர்மானிக்கிற நிலையிலும்
கூட இல்லத காரணத்தினால், யாரோடுனாவது “கூட்டு” சேர்ந்து அல்லது
தேர்தலிக்குப் பின்னர் இனைந்துதான் ஆக வேண்டும். பிஜேபியோடு
என பகிரங்கமாக சொல்லித் தேர்தலை சந்திக்க யாருக்குமே சற்று
கூடுதல் துணிவு வேண்டும். காரணம் MINORITY VOTES. இருவருமே
பிஜேபியுடனான தங்கள் முந்தைய உறவு “பிழை”யென உணர்ந்து (?!)
பொது மன்னிப்புக் கேட்டு கங்கையில் குளியலிட்டு கறையைப்
போக்கி கொண்டவர்கள் என்பது பிரசித்தம். ஆனாலும் கூட
அரசியல்கட்சி நடத்துவது “பதவிக்காக” என்கிற காரணத்தினால்
இவர்கள் எதையும் செய்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். நிறைய
நாட்கள் இருக்கின்ற காரணத்தினால், நிறைய தமாஷ்களை எதிர்
நோக்கலாம்.
எனக்கென்னவோ ஜெயலலிதாவுக்கு விஜயகாந்தை காட்டிலும் தி மு கவிடம் பாசம் அதிகம் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ராஜ்யசபை தேர்தலில் கனிமொழி தோற்றுப் போக அவ்வளவு வாய்ப்பிருந்தும் இறுதியில் ஜெயலலிதாவின் கழக பாசத்தால் வென்றது நினைவிருக்கும். சமூகத்தில் இன்றைக்கு கனி மொழியை விட விஜயகாந்த் நிறுத்திய இளங்கோவன் வென்றிருந்தால் அவ்வளவு கேடு செய்திருக்க மாட்டார். ஆனால் ஏதோ விஜயகாந்த் கொலைக் குற்றம் செய்தது போல அப்படி ஒரு வெறி ஜெயலலிதாவுக்கு. கருணாநிதி விஜயகாந்தை விட நல்லவரா? அதற்காக நான் விஜயகாந்த் ஒரு சிறந்த அரசியல் வியாதி என்று சொல்ல வரவில்லை. ஜெயலலிதாவுக்கு எப்படி பட்ட நல்ல எண்ணம் இருக்கிறது என்பதற்காக சொல்கிறேன். கழகங்கள் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். மறுபடியும் லோக் சபா தேர்தலில் ஆணித்தரமாக செய்துகாட்டுவார். இவர்களுக்கு எல்லாம் நாட்டு நலன் முக்கியமில்லை.