திமுக இன்னும் மத்திய அமைச்சரவையில் சேரவில்லையே – கலைஞர் ..!!! ( ஆதங்கம் ? )

திமுக இன்னும் மத்திய அமைச்சரவையில்
சேரவில்லையே – கலைஞர் ..!!!    (   ஆதங்கம் ?  )

kanimozhi and karunanithi

ராஜ்ய சபா தேர்தலில், திருமதி கனிமொழிக்காக
காங்கிரசின் ஆதரவைக் கோரியது குறித்து சிலர்
கண்டனம் தெரிவித்ததற்கு  கலைஞர்
பதில் கூறி இருக்கிறார் -இதோ அவரது
சொற்களிலேயே –

“மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ்
கட்சியிடமிருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவை காங்கிரஸ்
ஆதரித்திருந்தாலும் அந்தக் கட்சியுடன்
இப்போது  (underline ?) கூட்டணி இல்லை.

கனிமொழி ஆதரவிற்காக இலங்கைப் பிரச்சினையை
கைவிடவில்லையே. 13-ஆவது அரசியல் சட்டத்
திருத்தத்தை ரத்து செய்யும் இலங்கை அரசின்
முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று
இப்போதும் தான் திமுக வலியுறுத்துகிறது.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ்
ஆதரவு தெரிவித்த காரணத்தால் திமுகவைச் சேர்ந்த
யாரும் மத்திய அரசில் சேர்ந்துவிடவில்லை என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்”.

இது எப்படி.. ? கலைஞர் கலைஞர் தான் !

அடுத்தபடியாகயாக அதுவும் நடக்கக்கூடும்
என்பதற்கு இந்த பேச்சு அடித்தளமோ ?
பேச்சில்,அநாவசியமாக 6 மத்திய மந்திரிப் பதவிகளை
விட்டு விட்டோமோ என்கிற ஆதங்கம் தெரியவில்லை ?

கலைஞரின்  நடவடிக்கைகளைப் பார்க்கும்போது
அவரைப்பற்றி தமிழருவி மணியன் கூறியவை
நினைவிற்கு வருகிறது.

தமிழருவி மணியன் ஒரு அற்புதமான பேச்சாளர் –
சிந்தனையாளர்.

இவை அவரது எழுத்துக்கள்

————–

“கலைஞர் மீண்டும் காங்கிரஸுடன் கைகோத்து நின்றதன்
மூலம் அவருடைய போலி ஈழ ஆதரவு முகமூடி கழன்று,
சுயநலச் சாயம் படிந்த நிஜ முகம் தெளிவாகத்
தெரிந்து விட்டது.  இனி அவர் எவ்வளவு அடர்த்தியாக
இன அரிதாரம் பூசினாலும், உண்மை முகத்தில் சிறிதும்
ஒட்டாது.  கலைஞரைப் பொறுத்தவரை பொதுவாழ்வில்
தனிப்பட்ட விருப்பம் சார்ந்த படிநிலைகள் உண்டு.
இன்றுவரை தமிழினம் பூரணமாகப் புரிந்துகொள்ளாதது
தான்  பேரவலம்.

முதலில் கலைஞருக்கு முக்கியமானது,
அவரது சொந்த நலன்.
அடுத்தது குடும்ப நலம்.
அதற்கடுத்தது கழக நலன்.
இந்த மூன்றும் எந்த வகையிலும் பாதிக்கப்படாத
நிலையில் மட்டுமே, கொஞ்சம் சமூக நலன்.

ஈழம் எரிந்தபோது, இனம் கரிந்து அழிந்தபோது –
முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த கலைஞர்,
காங்கிரஸ் அரவணைப்பில் அகமகிழ்ந்திருந்தார்.

பதவி பறிபோனதும், கழகத்தின் கட்டுமானம் தகர்ந்து
தரைமட்டமானது, ஈழ உறையில் துருப்பிடித்துக் கிடந்த
இன உணர்வு வாளை உருவி எடுத்தார். காங்கிரஸ்
உறவை வெட்டி முறித்தார். தமிழினத்துக்கு எதிராக
காங்கிரஸ் செயல்படுவதை புதிதாகக் கண்டு பிடித்தார்.

இனத்தைக் காக்கும் புனிதப்பணியிலிருந்து இனி
ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார் !
உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் கூடி –
விவாகரத்துக்கு – வாணவேடிக்கை நடத்தி விழா எடுத்தனர்.

மாநிலங்கள் அவை தேர்தல் வந்தது.
மார்க்சிஸ்டுகள் இணங்கி இருந்தால் –
விஜய்காந்த் வணங்கி இருந்தால் –
கலைஞரின் காங்கிரஸ் எதிர்ப்பு தொடர்ந்து
முரசொலித்திருக்கும் !

மாறாக, மார்க்சிஸ்டுகள் மயங்கவில்லை.
விஜய்காந்த் விரும்பவில்லை.
கனிமொழியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வரை –
கலைஞரின் கண்களில் உறக்கம் இல்லை !

“கழகத்தின் எதிர்கால நன்மைக்காக –
காங்கிரஸ் உறவை முறித்தேன்.
மகள் கனிமொழியின் வருங்கால நன்மைக்காக –
மீண்டும் காங்கிரஸின் உறவை வரித்தேன்” என்பது
கலைஞரின் புதுமொழி.

“குடும்ப நலனே ! உனக்குப் பெயர் தான் தி.மு.கழகமா ?”
என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.”

——————————–

“ஊழல் மலிந்த அரசியல்வாதிகளை நாம் இன்னும்
எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம் ?

ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன
என்னுடைய பாடு எனக்கு என்று
பொறுப்பற்றுக் கிடந்தால் இந்த தேசம் எப்படி உருப்படும் ?

ஜனநாயகத்தில் எதைச்சாதிக்க முடியும் நாம் ?
முழுக்க நன்மை என்பது ஒரு பக்கமும்,
முழுக்க தீமை என்பது மறு பக்கமும் நின்றால் –
இது தீமை என்று தவிர்த்து விடலாம்.
இது நன்மை என்று அணைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அரசியலுக்குள் முழு நன்மையையும் பார்க்க
முடியாது – முழு தீமையையும் பார்க்க முடியாது !
ராவணனுக்குள்ளேயும் ராமன் இருப்பான் –
ராமனுக்குள்ளேயும் ராவணன் இருப்பான்.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள்.100 சதவீதம்
தீமையான மனிதர் என்று புறந்தள்ளி விட முடியுமா ?
முடியாது. கல்லுக்குள் ஈரம் இருப்பது மாதிரி
கருணாநிதிக்குள்ளேயும் ஈரம் இருக்கிறது !
எது பெரிய தீமை – எது சிறிய தீமை என்று ஒப்புநோக்கி,
சிறிய தீமையை சகித்துக் கொண்டு – பெரிய தீமையை
வழியனுப்பி வைக்கிறோம்.

ஆனால் கொடுமை என்னவென்றால் -ஒரு கட்டத்தில்
5 ஆண்டுகள் கருணாநிதி நமக்கு பெரிய தீமையாகத்
தெரிவார். அந்த பெரிய தீமையைப் புறந்தள்ள வேண்டும்
என்று திரும்புகிறபோது – ஜெயலலிதா சிறிய தீமையாகத்
தெரிவார்.

உடனே பெரிய தீமையாகிய கருணாநிதியை
நாற்காலியிலிருந்து அகற்றி விட்டுத்தான் அடுத்த வேலை
என்று கோபத்தோடு வாக்குச்சாவடிக்கு செல்கிறோம்.
இதுவரை தமிழ்ச் சமுதாயம் காணாதது போல்
ஒட்டு மொத்த தமிழகத்தையும் -பட்டா போட்டு விற்று
விடக்கூடிய அளவுக்கு அவர்கள் அரக்கர்களாக மாறிவிட்ட
போது, அவர்களை மன்னிக்க மக்களுக்கு மனம் வரவில்லை.
எனவே தான்  திமுக அவ்வளவு பெரிய தோல்வியைச்
சந்தித்தது. எனவே அவர்களைப் புறம் தள்ளினோம்.
சிறிய தீமைக்கு நாம் இப்போது அரியாசனம் தந்திருக்கிறோம் !

ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள வித்தியாசம்
என்னவென்றால் – கருணாநிதியை ஆட்சியில் உட்கார
வைத்து விட்டால், அகற்றுவதற்கு நாம் ஆயிரம் சிரமங்கள்
பட வேண்டும். அவ்வளவு எளிதாக அவரை நாற்காலியிலிருந்து
இறக்கி விட முடியாது. நாற்காலிக்காகவே பிறந்த மனிதரவர் !
இந்த வயதிலும், மகனுக்கு விட்டுத்தர முடிகிறதா
அந்த நாற்காலியை … ? ஜெயலலிதாவை உட்காரவைத்து
விட்டு நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அவருக்கான
பள்ளத்தை அவரே வெட்டுவார். அவருக்கு இணை சொல்ல
இந்திய அரசியலிலேயே  யாரும் கிடையாது.

கருணாநிதியிடம் இனப்பற்றும், மொழிப்பற்றும் நிச்சயம்
இருக்கிறது. அது செத்து விடவில்லை. கருணாநிதியைப்
போல இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ள மனிதனை
நீங்கள் காணவே முடியாது. எது வரை ?

அவரை நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக வைத்திருக்கும்
வரை !

நீண்ட நெடிய தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி
மாதிரியான எதிர்க்கட்சித் தலைவர் யாருமே கிடையாது.

ஆனால், அவரைப்போன்ற மோசமான முதலமைச்சரும்
யாரும் கிடையாது. அதனால் மறந்தும் கூட கருணாநிதியின்
பக்கம் மீண்டும் உங்கள் பார்வையைத் திருப்பி விடாதீர்கள்.
அதோடு தீர்ந்தது தமிழ்நாடு.

நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது.
1952-ல் இருந்து 2011 வரை நடந்த 15 நாடாளுமன்ற
தேர்தல்களிலும் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின்
தோள்களில் பயணித்தே காங்கிரசார் நாடாளுமன்றம்
சென்றிருக்கிறார்கள்.

ஒரு புதிய வரலாற்றை வருகிற நாடாளுமன்ற தேர்தலில்
தான் தமிழகம் எழுதவிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து –
ஒரு காங்கிரஸ்காரர் கூட நாடாளுமன்றத்திற்குச்
செல்லாமல், தமிழக காங்கிரசைச் சேர்ந்த ஒரு
பிரதிநிதி கூட நாடாளுமன்றத்தில் இல்லாமல் –
ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினால் தான் –
மானம் என்கிற சொல்லுக்கு ஓரளவாவது அர்த்தம்
தெரிந்தவர்கள் தமிழர்கள் என்று கூறுவேன்.”

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to திமுக இன்னும் மத்திய அமைச்சரவையில் சேரவில்லையே – கலைஞர் ..!!! ( ஆதங்கம் ? )

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    எல்லாம் சரிதான் திரு காவிரிமைந்தன் சார்.
    ஆனால் பாருங்கள் 1996 முதல் 2001 வரை திரு முக தலைமையில் நடந்த ஆட்சியில் ஏதாவது தவறு இருந்ததா கூறுங்கள். திமுக கட்சிக்காரர்களே இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று வயிறு எறியும்மாதிரி அல்லவா ஆட்சி நடந்தது. பின் ஏன் 2001-ல் “பெரிய தீமை” இது என்று கூறி அம்மாவை ஆட்சியில் அமர்த்தினோம்? அந்த பாவம்தான் நம்மை இப்படி அலைக்கழிக்கிறது. கலைஞரை ‘கெடுத்த’ பாவம் அனைத்தும் அன்று ஓட்டுபோட்ட நம்மையே சாரும்.

  2. ஜோதிஜி's avatar ஜோதிஜி சொல்கிறார்:

    தமிழ்நாட்டிலிருந்து –
    ஒரு காங்கிரஸ்காரர் கூட நாடாளுமன்றத்திற்குச்
    செல்லாமல், தமிழக காங்கிரசைச் சேர்ந்த ஒரு
    பிரதிநிதி கூட நாடாளுமன்றத்தில் இல்லாமல் –
    ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினால் தான் –

    நாற்பது சீட் காங்கிரஸக்கே கிடைத்தாலும் கூட தமிழ்நாட்டை டெல்லி கண்டு கொள்ளாதது என்பது உண்மையே. காரணம் அங்கே தப்பில்லை. இங்கே ஒவ்வொரு கட்சியிலும்இருக்கின்ற அல்லக்கை, நொல்லக்கை, நொந்தகை போன்ற கேவல ஜந்துகளே

    இதுல ஒரு கவிதைப்படம் இருக்கும் பாருங்க. உங்க கட்டுரையின் சராம்சம்

    http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_5.html

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ஜோதிஜி.

      உங்கள் இடுகையைப் பார்த்தேன்.
      இது போலெல்லாம் யோசிக்கவும்,
      கவலைப்படவும், எவ்வளவு பேர்
      இருக்கிறார்கள் ?

      இப்படி கவலைப்படும் நாம்
      சிறுபான்மையினராகத் தானே இருக்கிறோம் ?

      இந்தச் சிறுபான்மை -பெரும்பான்மையானால்
      தான் இந்த நாடும், சமூகமும் உருப்பட ஆரம்பிக்கும்.

      பாருங்களேன் – நேற்று ஒரு கழிசடை
      Express Mall-ல் மூன்றாம் மாடியிலிருந்து
      குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறது.
      இவனைப் பெற்று வளர்த்து, இவ்வளவு செலவழித்து,
      படிக்க வைத்த அம்மா, அப்பாவைப் பற்றி
      கொஞ்சமாவது கவலைப்பட்டிருந்தால் அவன் இப்படி
      செய்திருப்பானா ?

      இவர்கள் எல்லாம் என்ன படிக்கிறார்கள் ?
      என்ன கற்றுக் கொள்கிறார்கள் ?

      செய்தியைப் படிக்கும்போது – வெறுப்பும்,
      வேதனையும் தான் உருவாகிறது.

      நம்மால் முடிந்ததை தொடர்வோம்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    well written. The tamil society went to rotten state due arrack shop which was introduced by MK during 1970. Tamil society owes more than that since he did a great service
    Family welfare always in his blood

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    நாட்டில் கொள்கை சார்ந்த அரசியல் கட்சிகளும், தலைவர்களும்
    எங்கும் இல்லை. தேவைக்கும், சந்தர்ப்பத்திற்கும் தக்கவாறே
    அரசியல்வாதிகளின் செயல்பாடு அமைந்து பல காலமாகிவிட்டது.
    இதில் அவ்வப்போது, “பொது நலமும்” தென்படும் அவ்வளவுதான்.
    இந்நிலையிலே, கலைஞரையும், காங்கிரஸையும் மையப்படுத்திய
    விமர்சனம் வியப்பளிக்கிறது.

    கலைஞரின் தி.மு.க, செயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க மோதியின்
    பிஜேபி, ராகுலின் காங்கிரஸ் மற்றும் காம்ரேட்டுகள் என்றல்ல; ஈழத்
    தமிழர்களின் நல்வாழ்வே என் வாழ்வு என்று திரியும் செந்தமிழன்
    சீமானின் நாம் தமிழர் கட்சியே நாற்பது சீட்டையும் கைப்பற்றினால்
    கூட “இங்கிருந்து கொண்டு” இலங்கை தமிழர்களுக்காகவோ
    அல்லது தனி ஈழம் அமைவதற்காகவோ “ஒன்றும் செய்ய முடியாது”
    என்பது வெள்ளிடை மலை. வேண்டுமானல், ஆட்சி அதிகாரத்திற்காக
    பிற அரசியல் கட்சிகளைப் “புறம்” தள்ளி வைக்க முடியும் அவ்வளவே.

    இலங்கையில் நடப்பில் உள்ள இன்றைய சூழல் பின்னணி
    காரணமாக மட்டுமல்ல, இன்றைய உலக அரசியல் பின்னணியின்
    காரணாமாகவும் கூட தனி ஈழம் அமைவதென்பது கிஞ்சித்தும்
    “சாத்தியமில்லை” என்பதை ஈழத் தமிழர்களே “நன்கறிவர்”.

    தமிழக அரசியல்வாதிகளும், “தமிழன்” என்கிற உணர்வு
    மேலோங்கிய சிறு குழுவினரும் தான், திமுகவும் காங்கிரஸும்
    தோற்றுப் போனால், ஈழத் தமிழருக்கு “விடிவு” பிறக்கும் என்ற
    மாயைத் தொடர்ந்து முயற்சித்து ஏற்படுத்தி வருகிறார்கள்.
    இவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அரசியல்
    காரணங்கள் உள்ளனவே தவிர்த்து வேறொரு வெங்காயமும்
    இல்லை.

    இதை நீங்களும் அறிவீர்கள். பின் ஏன் விமர்சனம் என்பதுதான்
    (எனக்குப்) புரியவில்லை.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட்ரமணி,

      (1) ரொம்ப simple –
      “பெரிய தீமை” – “சிறிய தீமை”
      இதைவிட சுலபமாக வேறு எப்படி விளக்க முடியும் ?
      இது எப்படி உங்களுக்கு புரியாமல் போகும் ?

      Probably – புரிந்ததாக காட்டிக் கொள்ள
      விருப்பமில்லை …. ?

      (We live in a democracy where
      our choice is restricted to select
      the better amongst the lot –
      that’s all …!
      There is no THE BEST in the lot ..!)

      (2) நான் அரசியல்வாதியல்ல.
      தமிழ் வெறியனும் அல்ல. ஆனால் –
      தமிழன் என்கிற பெருமித உணர்வு உள்ளவன்.

      (3) எதிர்காலத்தில் –
      என்றாவது ஒரு நாள் –
      தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்.
      (அதைப் பார்க்க நான் இருப்பேனோ இல்லையோ
      தெரியாது !)
      அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.
      அதற்கான நியாயங்கள் இருக்கின்றன.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே ரகம்தான்.
        சிறிய தீமை, பெரிய தீமை என்ற்ல்லாம் கிடையவே
        கிடையாது என்பது எனது அபிப்ராயம்.

        அரசியல் அதிகாரம் குறித்தான ஆசை வந்து விட்டால்
        போதும், எந்த மனிதரையும் அது சாய்த்து விடும். படித்தவன்
        படிக்காதவன், தனிப்பட்ட கெளரவமுள்ளவன், அதெல்லாம்
        ஒன்றுமில்லதவன், போஸ்டர் ஒட்டிகள், அரசியல் தான்
        அரிசிக்கு மூலதனம் என்பவன் இப்படி எல்லோருமே ஒரே
        மாதிரிதான்

        இதற்கு மிக சமீபத்திய உதாரணம், திரு மா ஃபா
        பாண்டியராஜன்.

        இவர், தனக்கென உள்ள சகல மரியாதையையும் துறந்து
        அஇஅதிமுக தலைமையிடம் பெட்டிஷன் கொடுக்கப்
        போனது ஊர் நாறிய கதை. இவருக்கு வோட்டு கேட்டு
        விருதுநகர் வீதிகளிலே நாள் கணக்கில் சுற்றிய இளைய
        தலைமுறைக்கு இவர் கற்றுக் கொடுக்க விழைவது
        என்ன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.