கலைஞர் கருணாநிதி -திருமதி சோனியா காந்தி – கெட்டிக்காரர் யார் ?

கலைஞர் கருணாநிதி -திருமதி சோனியா காந்தி –
கெட்டிக்காரர் யார் ?

karunanithi and smt.gandhi

“மாலையில் தான் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து
கொண்டோம். இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு
எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி சில கருத்துக்களை
திமுக தலைமை தெரிவித்தது. காங்கிரஸ் தலைமையிடம்
பேசிவிட்டு, மறுநாள் காலை நிலையைத் தெரிவிக்கிறோம்
என்று சொல்லி விட்டு டெல்லி வந்தோம்.
ஆனால் –
இரவோடு இரவாக கூட்டணியிலிருந்தும்,
அமைச்சரவையிலிருந்தும் வெளியேறுவதாக ஒரு
தலைப்பட்சமாக முடிவை அறிவித்து விட்டார்கள்.
அதற்குள் என்ன நடந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள
முடியவில்லை” – மத்திய அரசிலிருந்தும்,
ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதாக 
கலைஞர் கருணாநிதி மார்ச் மாதம் அறிவித்தபோது, காங்கிரஸ்
சார்பாக திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறிய கருத்து தான் மேலே
இருப்பது.

வேறு பல காரணங்கள் இருந்தாலும்,
ஈழத்தமிழர் பிரச்சினை காரணமாகத்தான் காங்கிரஸ்
கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுவதாக கலைஞர்
ஒரு தோற்றத்தை உருவாக்கினார் (அல்லது உருவாக்க
முயற்சித்தார்.) இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே
திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும்
பதவி விலகுவதாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.
அப்போதே காங்கிரஸ் தலைமை இதை சீரியசாக எடுத்துக்
கொள்ளவில்லை.(பின்னால் என்ன நடக்கும் என்பதை
அவர்களால் யூகித்துக் கொள்ள முடிந்திருக்கிறது !).

இதைத் தொடர்ந்து கலைஞர் பல விஷயங்களில்
மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தார்.டெசோ
சார்பாக பல தீர்மானங்கள், காவிரி பிரச்சினையில் கமிட்டி,
நெய்வேலி விவகாரம், பெட்ரோல், டீசல் உயர்விற்கு
கண்டனங்கள், கடைசியாக
சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றாததைக் குறித்து
கண்டனம்/போராட்டம்.

திடீரென்று ஒரு இக்கட்டான நிலை- கனிமொழியின்
மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் ஆகும் ஆசை. முதலில் –
விஜய்காந்தை எப்படியும் வளைத்து விடலாம் என்கிற
நம்பிக்கையில் தான் –
வேட்பாளர் மனு தாக்கல் செய்யப்பட்டது. விஜய்காந்தை
கூட்டணிக்குள் கொண்டு வர பல முயற்சிகளும்
செய்யப்பட்டன.

இதற்கிடையில், திமுகவை மட்டம் தட்டி வழிக்கு
கொண்டு வர,  திருமதி சோனியா காய்களை
புத்திசாலித்தனமாக நகர்த்தி இருக்கிறார்.தேமுதிக
வேட்பாளரை நிறுத்தினால் –  காங்கிரஸ் ஆதரவு
கிடைக்கலாம் என்று விஜய்காந்திற்கு -ஈவிகேஎஸ்
இளங்கோவன் மூலமும், ஜி.கே.வாசன் மூலமும்
மறைமுகமாக நம்பிக்கை ஊட்டப்பட்டது.

ஏற்கெனவே கலைஞருடன் கூட்டு சேர மிகவும் தயங்கி
வந்த விஜய்காந்திற்கு –
முரட்டுத் துணிச்சல் ஏற்படவே – தேமுதிக சார்பில்
வேட்பாளரை நிறுத்துகிறார்.

விளைவு, 90 வயது முதிர்ச்சியும், 75 ஆண்டுக்கால
அரசியல் அனுபவமும் தராத ஒரு சறுக்கலை
மகளை எப்படியாவது எம்.பி. ஆக்க வேண்டும் என்கிற
ஆசை (அதை விட,குடும்ப அவசியம் என்று தான்
சொல்ல வேண்டும் ) ஏற்படுத்தி விட்டது !

போகாத வீடில்லை – கெஞ்சாத தலைவர்கள் இல்லை.
கம்யூனிஸ்டுகளிலிருந்து, மனித நேய மக்கள்
கட்சியிலிருந்து, டாக்டர் கிருஷ்ணசாமியிலிருந்து,
ஜிகே மணி – அன்புமணி வரை – எல்லாரிடமும் மன்றாடிக்
கெஞ்சியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

இறுதியாக, டி.ஆர்.பாலு – திருமதி சோனியா காந்தியின்
இல்லத்திற்கு சென்று – கலைஞர் கொடுத்த சரணாகதி
கடிதத்தை கொடுத்த பின்னரும் கூட– உடனடி நிம்மதி
கிட்டவில்லை. வியாழக்கிழமை தேர்தலுக்கு, செவ்வாய்
இரவு வரை டென்ஷனில் காக்க வைத்து விட்டு, இறுதியில்
after all (இது அவர்கள் பாஷையில்) ஞானதேசிகன்
மூலம் காங்கிரசின்  முடிவை
அறிவிக்க வைத்தார் அன்னை !

மானம், அவமானம் பற்றி யோசிக்கும் நிலையைக்
கடந்து விட்ட கலைஞர் ஒருவழியாக நிம்மதியைப்
பெறுகிறார். இந்த மட்டில் – டெசோ சார்பாக நிறைவேற்றிய
தீர்மானங்களை எல்லாம் வாபஸ் பெறுங்கள். அந்நிய
தூதரகங்களில்  டிஆர் பாலுவும்,ஸ்டாலினும்
சென்று கொடுத்த மனுக்களை எல்லாம் முதலில்
அவர்களை விட்டே சென்று திரும்பப் பெறச் செய்யுங்கள்
என்றெல்லாம் அன்னை நிபந்தனை போடாமல்
விட்டாரே என்று மகா நிம்மதி !!

இந்த நிம்மதியைக் குலைக்கும் விதமாக
அதற்குள் ஒரு குழப்பமான செய்தி –
தன் ஊரில் போய் இறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமியிடம்,
அவரது கட்சித் துணைவர்கள் சூட்கேஸைத் தேடியதாகவும்,
தான் இதுவரை சூட்கேஸையே பார்த்ததில்லை என்று
டாக்டர் சொன்னதாகவும் – எனவே ஏமாற்றம் கொண்ட
அவரது மந்தையிலிருந்து எதாவது ஆடு காணாமல்
போகலாம்  – திசைமாறிச் செல்லலாம் என்றும்
வந்துள்ள  தகவல் !!

தமிழ்நாட்டில் வெறும் 5 எம்.எல்.ஏ.க்களை
வைத்துக்கொண்டு –
பாராளுமன்றத்தில் 18 எம்.பி.க்களை வைத்துக்
கொண்டுள்ள கலைஞரை தன் வசம் இழுத்தவர்
கெட்டிக்காரரா –

கூட்டணியே வேண்டாம் என்று சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிப்போன திமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு
வந்ததோடு அல்லாமல் – வரப்போகும் நாடாளுமன்ற
தேர்தலிலும் தன் மேலதிகாரத்தை நிலை நிறுத்திக்
கொண்டவர்  கெட்டிக்காரரா –

முலாயம் சிங், மாயாவதி வரிசையில் வெளியிலிருந்தே
ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் –
இன்னொரு கட்சியை சாமர்த்தியமாக வழிக்கு கொண்டு வந்து,
அடுத்த தேர்தல் வரை நிம்மதியாக
ஆட்சியை நடத்திக்கொள்ள வழி செய்தவர்
கெட்டிக்காரரா –

ஆறு மத்திய மந்திரி பதவிகளையும் அசட்டுத் தனமாக
பறி கொடுத்து விட்டு,

ஈழத்தமிழர் மானம் காக்கப் புறப்பட்டவர் என்கிற
இமேஜையும் கெடுத்துக் கொண்டு,

மத்தியில் – அதிகாரம் செய்யும்  நிலையிலிருந்து இறங்கி –
இப்போது அவர்கள் ஆட்டுவிக்கும் விதத்தில் எல்லாம்
ஆடும் நிலைக்கு வந்து விட்டவர் கெட்டிக்காரரா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to கலைஞர் கருணாநிதி -திருமதி சோனியா காந்தி – கெட்டிக்காரர் யார் ?

  1. Rajagopalan .R's avatar Rajagopalan .R சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் !

    தன் அன்பு மகளின் மீண்டும் எம்.பி. ஆக வேண்டும்
    என்கிற சின்னஞ்சிறிய ஆசையை நிறைவேற்றுவதற்காக
    வெட்கம், மானம், ரோசம், சூடு, சொரணை
    ஆகிய அனைத்தையும் தியாகம் செய்த
    ஒரு தந்தையை பாராட்ட மனமில்லையா உங்களுக்கு ?

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இவர்கள் அனைவருமே கெட்டிக்காரர்கள்தான்
    அதில் எந்த ஐயமும் இல்லை.
    இளிச்சவாயர்கள்,
    முட்டாள்கள்,
    வாத்து மடையர்கள்,
    அசடுகள்,
    மண்டூகங்கள்
    எல்லாமே சந்தேகமே இன்றி..
    இந்திய பொது மக்களாகிய
    நாம் தான்..

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    அது ஏதோ “மாங்கோ”….”பனானா”… என்று சொன்னாங்களே, அது உண்மைதாங்கோ! நம்மள, நம்மளைவிட மிகவும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

  4. maniam24's avatar maniam24 சொல்கிறார்:

    vettivittavarkal

  5. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Sonia is extremely brilliant than Karunanidhi. It is being proved once more

  6. வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/5.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் தனபாலன்,

      சுறுசுறுப்பாக எல்லா இடங்களிலும்
      வலம் வருகிறீர்கள்.
      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    Antonia Albina Maino: Raul, Abbiamo appena ricevuto uno slave!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Nanbar ezhil,

      paathi purigirathu – meethi …?

      vaazththukkaludan,
      kavirimainthan

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        கடந்த வாரத்தில் ஒரு நாள் அன்னை, தனையனை அழைத்து நமது அடிமை சிக்கிட்டான் என்று அவர்கள் மொழியில் கூறியிருக்கலாம் எனும் கற்பனை தான் ஐயா! வேறொன்றும் இல்லை. 🙂

        • Ganpat.'s avatar Ganpat. சொல்கிறார்:

          மிகவும் ரசித்தேன்,நண்பர் எழில்!
          ஒருவேளை மகன் இப்படி பதில் சொல்லியிருப்பாரோ?
          Gli schiavi che abbiamo ottenuto sono molto talento.ma sono molto loquace.
          அதாவது..
          “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.
          ஆனால் என்ன ! வாய்தான் சற்று அதிகம்!”
          🙂

  8. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    அரசியல்வாதிகள் கொள்கை கோட்பாடு என்பனவற்றையெல்லம்
    துறந்தும் மறந்தும் பல காலமாகிவிட்டது. பதவி ஒன்றுதான்
    அரசியல் என்றாகிவிட்ட படியால், கட்சிகளுக்கு கொள்கைகள்
    இல்லாமற் போய்விட்டது.

    கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம், எதிர்கால “அரசியல்” நலன்
    கருதியே முடிவுகள் மேற்கொள்ள்படுவது வாடிக்கையாகி
    விட்டது. இதில் யார் சமர்த்தர் என்றால், என்னத்தைச் சொல்ல?

    அரசியலை சாக்கடை என்பார் சிலர். சாக்கடை என்றால் அதில்
    என்ன இருக்கும், என்ன மேயும் என்பதெல்லாம் தெரிந்து
    கொள்ள சூழ்நிலைக் கல்வியில் பட்டமெல்லாம் தேவையில்லை.

    ஸ்தபதிகள் கல்லுக்கும் வலிக்காமல், உளிக்கும் நோகாமல் தான்
    சிலை செதுக்குவார்கள். இந்த வித்தை காங்கிரஸுக்கு “கை”
    வந்த கலை.

    ஒரு சீட்டுக்காக அல்லது மகளுக்காக திமுக வாங்க்கிய காங்கிரஸ்
    ஆதரவு விமரிசனத்திற்கு ஆளானதைப் போல, காம்ரேட்டுகளின்
    பேரம் விமர்சிக்கப் படவில்லையே.

    தமிழகத்தில் நான் அல்லது நீ, இருவரைத் தவிர இன்னொருத்தன்
    வந்துவிடக் கூடாது அல்லது வளர்ந்து விடக் கூடாது என்பதான
    “திராவிட” செயல்பாடு பற்றி பெரிதாக பேசப் படவில்லையே.

    அவர்களின் வாக்களிப்பால், தேமுதிக-விற்கு வெற்றியோ
    தோல்வியோ, ஆளுங்கட்சிக்கு “ஆதரவாகவும்” சொந்த கட்சிக்கு
    எதிர்ப்பாகவும் பகிரங்கமாக செயல்பட்ட “எழுவரை”ப் பற்றி
    எதுவும் எழுதப் படவில்லையே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.