சிவனையே சாய்த்த சிவன் மனைவியின் சீற்றம் ….
கங்கை ஆற்றை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி,
அவளுக்கு சிவனின் துணைவி என்கிற அந்தஸ்தையும்
கொடுத்து, சிவனின் சிரத்திலேயே ஒரு
இடமும் கொடுத்து வைத்திருக்கின்றன புராணங்கள்.
கங்கைக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தோற்றம் !
பளிங்கு போன்ற, சிலீரென்று உடம்பை உறைய வைக்கும்
வேகமாக ஓடும் நீர் – பத்ரிநாத்தில்.
அலெக்நந்தா, மந்தாகினி, பாகீரதி – அனைத்து
உபநதிகளின் நீரையும் ஏற்றுக்கொண்டு படு சீற்றத்துடன்
மலையிலிருந்து இறங்கி வேகமாக பாதாளத்தில் ஓடும்
கங்கையின் தோற்றம் ரிஷிகேஷில் –
அழகும், பிரமிப்பும், பயமும் ஒருசேர உருவாக்குவது.
நான் பலமுறை சென்று ரசித்த இடங்கள் இவை.
எத்தனை தடவை சென்றாலும் அலுக்காத
இடங்கள் !!
நான்கு-ஐந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில்
துவங்கிய காட்சிகள் “இமயத்தின் சுனாமி” என்று
தலைப்பிடப்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டே
இருக்கின்றன.
துவக்க நாட்களில், இவற்றில் ஒரு முக்கியமான,
அதிர்ச்சி தரும் காட்சியை கிட்டத்தட்ட அனைவருமே
பார்த்திருப்பீர்கள். ஆற்றின் குறுக்கே,
மிகப்பெரிய அளவிலான – சிவன் அமர்ந்து
தியானம் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற
தோற்றத்திலான – சிலை ஒன்று. அதன் மீது முட்டி
மோதிக்கொண்டு சிலையையே சாய்த்து விடுவது போல்
படு பயங்கரமான வேகத்தில் ஓடும் கங்கையாற்றின்
வெள்ளம். எந்த நேரத்தில் சிலை தள்ளிச் சாய்க்கப்பட்டு
விடுமோ என்கிற திகிலை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.
அதற்கு மேல் சிலைக்கு என்ன நிகழ்ந்தது
என்பதை எந்த தொலைக்காட்சியும் காட்டவில்லை.
இந்த சிலை அமைக்கப்பட்டிருந்த இடம் -ரிஷிகேஷ்.
பரமார்த் நிகேதன் என்கிற மிக பிரம்மாண்டமான
ஆசிரமம் ஒன்றின் சார்பில் அமைக்கப்பட்ட சிலை இது.
தினமும் மாலையில் இதன் அருகே “கங்கா ஆர்த்தி”
என்கிற – கங்கை ஆற்றிற்கு சூரிய அஸ்தமன சமயத்தில்
பாடல்களுடன் கூடிய – ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
இந்த ஆசிரமத்தின் சார்பில் மிகச்சமீபத்தில் தான்
உலக அளவில், பல நாடுகளிலிருந்து – “யோகா”வில்
ஆர்வமுடைய பலர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான
“international Yoga Festival” நடைபெற்றது.
இதே சிவன் சிலை முன்பாக, விசேஷ மேடைகள்
அமைக்கப்பட்டு, பல யோகா, மற்றும் பாடல் நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. நம்ம ஊர் ட்ரம் “சிவமணி” கூட
ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
அய்யோ – அதே இடம் இன்று எப்படி இருக்கிறது ?
இந்த திகிலூட்டும், பேரழிவுகளுக்கு காரணமென்ன ?
திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுத்தாலும் –
மனித இனம் கற்றுக் கொள்ள மறுக்கிறது.
தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்படும்
துயர நிகழ்வுகள் மனதை வருத்துகின்றன. எத்தனை
எத்தனை உயிர்கள் நாசம். எத்தகைய துன்பங்கள்…
மழையிலும், குளிரிலும், காட்டிலும், மலையிலும்
உணவின்றி, குடிக்க நீரின்றி – பெண்களும்,
குழந்தைகளும், முதியோர்களும் பட்ட அவஸ்தைகள்…
அப்பப்பா – இந்த நிகழ்வுகள் மனதில்
ஏற்படுத்தியுள்ள விளைவுகள், இறுதி வரை மறையாது.
இயற்கையை என்றுமே மனிதனால் வெல்ல முடியாது.
அதைப் புரிந்து கொண்டு, இயற்கையோடு ஒட்டி வாழ,
இயற்கையை அனுசரித்து வாழ – மனிதன்
பழகிக் கொள்ள வேண்டும். இயற்கையை அடக்க
நினைத்தாலோ, வெல்ல நினைத்தாலோ,
துன்புறுத்தினாலோ –
சீற்றம் கொண்ட இயற்கையால் ஏற்படும்
விபரீத விளைவுகளுக்கு இன்னமும் உதாரணம் தேவையா ?
(சிரத்தில் கங்கை என்கிற பெண்ணின் உருவமும்,
கூடவே பிறைச்சந்திரனின் பிம்பமும் சேர்ந்து
அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த சிவன்
சிலையின் பல்வேறு தோற்றங்களும், அதனடியில்
நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளும் உள்ளடங்கிய
புகைப்படங்கள் கீழே -)

















திரு காவிரி மைந்தன்
நானும் இதைப்பற்றி ஒரு பதிவை இப்போதுதான் வெளியிட்டுள்ளேன். மனம் மிகவும் வருத்தமாக உள்ளது.
http://www.saidaiazeez.blogspot.ae/2013/06/blog-post_24.html
ந்ண்பர் சைதை அஜீஸ்,
உங்கள் பதிவைப் பார்த்தேன்.
இயற்கைச் சூழ்நிலையை அழிக்கிறார்கள்.
மரங்களை வெட்டுகிறார்கள்.
ரோடு போடுவதற்காக வெடி வைத்து தகர்க்கிறார்கள்.
சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்துக்களுக்கு விரோதமாக
பாதுகாப்பற்ற இடங்களில் அணைகளைக் கட்டுகிறார்கள்.
பொறுப்பற்ற உத்தராகண்ட் மாநில அரசின் செயல்களினால்
இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கிறார்கள்.
யாரைப் பார்த்தாலும், காணாமல் போன தங்கள் உறவினர்களின்
புகைப்படங்களைக் காட்டிக் கொண்டு கண்ணீருடன் அலையும்
மனிதர்களை டிவியில் காணும்போது, பொறுப்பில்லாத
அரசுகளின் மீதுய் ஆத்திரமும் -கோபமும் வருகிறது..
இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் – மனைவியை, அன்னையை,
பிள்ளைகளை, உறவினர்களைப் பிரிந்து தவிப்பவர்கள்
எத்தனை எத்தனை ஆயிரம் பேர்….
எத்தனை பணம் கொடுத்தாலும் போன உயிர்கள் திரும்ப வருமா ?.
இவர்கள் எல்லாரும் பதில் சொல்ல வேண்டிய நாளும் வருமா ?
-காவிரிமைந்தன்
“இயற்கைச் சூழ்நிலையை அழிக்கிறார்கள்.
மரங்களை வெட்டுகிறார்கள்.
ரோடு போடுவதற்காக வெடி வைத்து தகர்க்கிறார்கள்.
சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்துக்களுக்கு விரோதமாக
பாதுகாப்பற்ற இடங்களில் அணைகளைக் கட்டுகிறார்கள்.”
இவையெல்லாம் செய்திராவிட்டிருந்தால், அங்கு கோயில்களை கட்டியிருந்திருக்க முடியாது; பக்தர்களும் சென்றிருந்திருக்க முடியாது; இமய சுனாமி ஏற்பட்டிருந்ததை நாம் பார்த்து இருந்திருக்க முடியாது. வளர்ச்சி வேண்டுமென்றால் இதையெல்லாம் அனுபவத்தே ஆகவேண்டும்.
இவையெல்லாம் செய்ய எத்தனை உயிர் பலியாகிருந்திருக்க வேண்டும், நினைத்துப்பார்த்தீர்களா?
இயற்கையின் சீற்றத்தின் காரணமான விளைவுகளுக்கு
என்கிற வகையில் உங்கள் தலைப்பு சரிதான்.
ஆனால், சிவத்தை சாய்க்க யாதொன்றும் எங்கும் இல்லை.
அவனே ஊழி முதல்வன். (ஊழி முதல்வ செய செய
போற்றி– மாணிக்கவாசகர்)
யா தே ருத்ர சிவா தனூ: சிவா விஸ்வாஹ பேஷ்ஜீI
சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸேI
(ஆலகாலத்தை உண்ணாமலும் உமிழாமலும் தன் தொண்டைக்
குழிக்குள் அடக்கிய) சிவத்தின் மஹா காருண்யத்தின் பொருட்டே
இப்பிரபஞ்சத்தில் உயிர்கள் ஜீவித்திருக்கின்றன.
(ஸ்ரீ ருத்ரம் பத்தாவது அனுவாகம்)
திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுத்தாலும் –
மனித இனம் கற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஆர்பரித்து வந்த கங்கையை
அவிழ்ந்த கூந்தலில் முடிந்த
அரகர சிவன் பத்ரிநாத்தில்
அதோகதி ஆனானோ?
ஆபத்பாந்தவன்
அங்கேயும் காணவில்லை
அய்யகோ அப்பாவிகல்லவோ
அதோகதி ஆனார்கள்
எல்லாம் “அவன் ” செயல்!