திரு. ப.சிதம்பரம் அவர்கள்
செய்தது …..
மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியாக
அதிகாரமும், செல்வாக்கும் உடையவர் –
காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்திக்கு
மிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு
உரியவர். அவரிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவர்.
ஒரு வேளை 2014 தேர்தலுக்கு முன்னரே,
எந்த காரணத்தை முன்னிட்டாவது ம.மோ.சிங்
பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டால் –
தேர்தல் முடியும் வரையிலான இடைக்காலத்திற்கு
பாரத பிரதமராகவும் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளவர்.
அவரது அரசியல் பின்னணியைப் பார்த்தால் –
25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் பிரதிநிதியாக
பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி – அதாவது
சுமார் 21 ஆண்டுகளுக்கு மேலாக -தமிழகத்தை சேர்ந்த
மத்திய அமைச்சராக பல்வேறு இலாகாக்களுக்கு
பொறுப்பு வகித்திருக்கிறார்.
மத்திய அரசில் இந்த அளவிற்கு செல்வாக்கும்,
அதிகாரமும் உடையவர், ஆளும் கட்சித்தலைவருக்கு
இவ்வளவு நெருக்கமானவர் – தான் சார்ந்துள்ள
தமிழ் நாட்டிற்கு, தமிழ் மக்களுக்கு செய்தது என்ன
என்று யோசித்தால் – மிகப்பெரிய ஏமாற்றமே
பதிலாகக் கிடைக்கிறது.
மத்திய அரசின் சார்பில் –
பெரிய தொழிற்சாலைகள் எதாவது … ?
விசேஷ பொருளாதார மண்டலங்கள் ….?
பெரிய துறைமுகங்கள் …. ?
மின் உற்பத்தி நிலையங்கள் …. ?
சாலைக் கட்டமைப்பு வசதிகள் … ?
பாதுகாபுத் துறை சார்பில் எதாவது தொழிற்சாலைகள் ..?
ரெயில்வே துறை சார்பில் எதாவது தொழிற்சாலகள் .. ?
மத்திய பல்கலைக்கழகங்கள் …. ?
மத்திய அரசின் சார்பில் ஜிப்மர் போன்ற
பெரிய ஆராய்ச்சி மருத்துவ மனைகள் .. ?
– ஒன்றுமே கிடையாது.
சரி தமிழ் நாட்டின் பெரும் தலைவலியாக உள்ள –
காவிரி நதி நீர் விவகாரம் –
முல்லைப் பெரியாறு விவகாரம் –
மத்திய தொகுப்பிலிருந்து மாநிலத்திற்கு
மின்சாரம் கொண்டு வர வழி -வசதி …
ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசிலிருந்து உதவி –
– எதுவுமே இல்லை –
குறைந்த பட்சம் ரேஷனில் ஏழைகளுக்கு விற்கப்படும்
மண்ணெண்ணையாவது மத்திய தொகுப்பிலிருந்து
குறைக்கப்படாமல் சீராகக் கிடைக்க வழி –
உம் ஹூம்.
25 ஆண்டுகள் தமிழ் நாட்டிலிருந்து
பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு,
அதில் 21 ஆண்டுகள் எதாவது ஒரு இலாகாவிற்கு
மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்,
தன்னை அனுப்பிய தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன ?
சிவகங்கை மாவட்டம் முழுவதும்,
வங்கிக் கிளைகளும், ATM centre களும்
நிறையத் துவக்கப்பட்டுள்ளன –இதைத் தவிர … ?
பரம்பரை கோடீஸ்வரர் என்பதால் அரசியலில்
இருந்து கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டிய
அவசியம் இவருக்கு இல்லை.மேலும் இவருக்கு
இருக்கும் புத்திசாலித்தனத்திற்கு, வழக்கறிஞர்
தொழிலில் முழுவதுமாக ஈடுபட்டாலே
எட்டு தலைமுறைகளுக்கு வேண்டிய அளவு
சம்பாதிக்க முடியும்.
ஆனால் – தன்னைத் தேர்ந்தெடுத்த தமிழ் நாட்டிற்கும்,
தன் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கும் செய்ய
வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கின்றனவே !
அவருக்குப் பிடிக்காத/ அவரைப் பிடிக்காத அதிமுக
இப்போது வேண்டுமானால் மாநில அரசில் பதவி
வகிக்கிறது. இவ்வளவு நாட்கள் கூட்டணிக்கட்சியான
திமுக தானே இருந்தது. மாநில அரசின் ஒத்துழைப்புடன்
எவ்வளவோ செய்திருக்கலாமே !
அவரது சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்களிடம்
அளவளாவி, வார இதழ் ஒன்று சர்வே ஒன்று
எடுத்திருக்கிறது. அதன் முடிவுகள் மட்டுமல்ல –
தமிழ் நாட்டிற்கு இவர் ஆற்றி இருக்கும் பணிகளும்
ஏமாற்றம் தான் அளிக்கின்றன.
வார இதழில் வெளிவந்திருக்கும் சர்வே விவரங்கள் கீழே –










மனதில் உள்ள கோபத்தில் வெறியில் ஏதாவது கெட்ட வார்த்தைகள் எழுதி விடுவோனோ என்று பயப்படுகின்றேன். பார்க்கலாம் இன்னும் எத்தனை காலம் இது நீடீக்கும் என்று.
useless,but lucky
ஜோதிஜி, உணர்ச்சிவசப்படாதீர்.
திரு காவிரி மைந்தன் சும்மா சிரிப்பூட்டுகிறார்.
முதல் வரியிலேயே
//பிரதமருக்கு அடுத்தபடியாக
அதிகாரமும், செல்வாக்கும் உடையவர்//
என்று சொல்லிவிட்டு பிறகு இதையெல்லாம் எதிர்ப்பார்ப்பது… கொஞ்சம் ஓவர் இல்லை இல்லை
ரொம்ப ரொம்ப ஓஓஓஓஓஓஓவர்!
ஓவரோ ஓவர்!
இன்றைய தேதிக்கு திரு சிதம்பரம் போன்றே நிரந்தர எம் பிக்களாக
மந்திரிகளாக தமிழகத்தில் பலர் இருக்கின்றனர். இதில் ஆண்ட மற்றும்
ஆளும் கட்சிக்காரர்களும் அடக்கம்.
தொகுதி மக்களுக்கு அல்லது தொகுதிக்கு தி மு க எம் பிக்கள் செய்த
அல்லது செய்ததாக விளம்பரப் படுத்திக் கொண்டது “மிக” அதிகம்.
காரணம் அவர்களின் எண்ணத்தை அல்லது திட்டத்தை செயல்படுத்த
மாநில ஆட்சி அதிகாரம் அவர்கள் கட்சி வசம் இருந்தது. அஇஅதிமுக
எம்பிக்கள் மந்திரியாக இருந்த காலத்திலே அவர்களால் “ஒன்றும்” செய்ய
இயலவில்லை. காரணம் இங்கு அவர்கள் அதிகாரத்தில் இல்லை.
அவர்கள் ஆணையை அதிகாரிகள் புற்க்கணித்தனர்.
திரு சிதம்பரம் மந்திரியாக இருக்கும் இந்த நீண்ட காலத்தின் ஆரம்பத்தில்
சிவகங்கை சின்ன பையன் என்று அன்றைய ஆட்சியாளர்களால் “சற்று”
தள்ளி வைக்கப் பட்டார். நடுவில் ஒரு முறைவிட்டு ஒரு முறை ஆட்சிக்கு
வரும் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியிலே, இவரைக் “கண்டு”
கொண்டதே கிடையாது.
சமீபத்திய உதாரணம். சிவகங்கையில் மாவட்ட ஆட்சியகள் கூட்டத்தைக்
திரு சிதம்பரம் கூட்டியிருந்தார். எந்த ஆட்சியரும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். வங்கிகள் மாநில
அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் அரசின்
கைப்பிடிக்குள் இருக்கிறார்கள்.
ஒரு செய்தி: எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை தமிழகத்தில் தான்,
IAS-ஆக பதவி உயர்வு பெற்ற, திராவிட கட்சிகளின் ஆசிர்வாதம் பெற்ற
நபர்கள் பெருமளவில் மாவட்ட ஆட்சியர்களாக இருக்கிறார்கள். IAS
தேர்வு எழுதி, பயிற்சி பெற்ற, திறன் மிக்க பலரும், செயலர்களாக
இருக்கிறார்கள். இதில் பச்சைத் தமிழர்களும் அடக்கம்.
உங்கள் பட்டியல் படி “சர்வ” வல்லமையும் பலமும், ஆதரவும் கொண்ட
ஒரு மத்திய அமைச்சரை தமிழகம் புறம் தள்ளி வைத்தது போல வேறு
எங்கும் தள்ளி வைத்தது கிடையாது என்றே கருதுகிறேன். மாநில அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல், எந்த மந்திரியால் எந்த மாநிலத்தில் எந்த
திட்டத்தைத் துவக்கி நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்?. அவர்
பிரதமராகவே இருந்தாலும் “இங்கு” அவரது அதிகாரம் நடக்காது.
திரு வெங்கட்ரமணி அவர்களுக்கு,
தெரிந்தே வீம்புக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா அல்லது உண்மையாகவே ஆதரவா ?
“சிவகங்கை சின்னப்பையன்” கதை எல்லாம் 30 வருடத்திற்கு முந்தையது.
கடந்த 5 ஆண்டுகளாக ப.சி.யும், மு.க.வும் 15 நாட்களுக்கு ஒரு முறை
சந்தித்துக் குலாவியது உங்களுக்கு உண்மையாகவே தெரியாதா ?
மேற்கண்ட இடுகையில் வரும் கீழ்க்கண்ட வார்த்தைகளை எப்படி சௌகரியமாக மறக்கிறீர்கள் ?
“//அவருக்குப் பிடிக்காத/ அவரைப் பிடிக்காத அதிமுக
இப்போது வேண்டுமானால் மாநில அரசில் பதவி
வகிக்கிறது. இவ்வளவு நாட்கள் கூட்டணிக்கட்சியான
திமுக தானே இருந்தது. மாநில அரசின் ஒத்துழைப்புடன்
எவ்வளவோ செய்திருக்கலாமே !// ”
திமுக மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தபோது,
அவரை எது தடுத்தது ?
செய்திருக்கிறார் என்பது தான் என் கருத்து. அவர் நிதியமைச்சராக
இருந்த முந்தைய காலத்தில் தி மு க ஆட்சியில் செய்யப்பட்ட
திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு ஆனது.
கக்கூஸ் கட்டி திறந்தால் கூட ஆட்சி தலைமையின் பெயர்
பெரிதாக விளம்பரப் படுத்தப்படும் தமிழகத்தில், காரண கர்த்தாவாக
இருந்தவர்கள் மறைக்கப்படுவது வாடிக்கை. உ.ம்: தமிழகத்தில பல
மாவட்டங்களை இணைக்கும் நான்கு வழி (தேசிய) சாலைகள்
வாஜ்பாய் அரசின் புண்ணியம். ஆனால், அத்திட்டத்தின் “மூலமே”
T R Baalu என்கிற அளவிற்கான விளம்பரங்கள் இப்போதும்
இருக்கின்றன. எங்காவது வாஜ்பாய் அல்லது பிஜேபியினர் பெயர்
இருந்தால் காட்டவும்.
அப்போதைய சாலைப் போக்குவரத்து மந்திரியாக இருந்தவர்
திரு பாலு. ஆனால் திட்டம் மாநில அரசின் திட்டம், முதல்வரின்
கருணை என்கிற அளவிற்கான விளம்பரம்.
“கொல்டி” என்பதான ஆந்திர மக்களின் முகத்தையே மாற்றிக்
காட்டிய, திரு சந்திரபாபு நாயுடு, மாநில மேம்பாட்டிற்காக எடுத்த
முயற்சியில் நான்கில் ஒரு பங்கு முயற்சியை நம் மாநில அரசுகள்
எடுத்து இருக்கின்றனவா? ஆந்திராவுக்கு உதவிட முடியுமென்றால்
தமிழகத்திற்கு உதவிட முடியாதா?
திரு.சிதம்பரத்தை, அவர்து பொருளாதார கொள்கைகளைக்
கடுமையாக விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகளால், மாயாவதியால், முலயாம்
சிங்கால், பிஜேபி-யினரால் அணுகிட முடிகிறது. வேண்டியவற்றைப்
பெற முடிகிறது. ஆனால் இவர்களால் முடியாதா?
அப்படியானால், தவறு யாரிடத்தில்? ஆந்திராவில், கர்நாடகத்தில்,
கேரளத்தில் மத்திய மந்திரிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்
அணுகுவதில்லை. அதிகாரம் யாரிடத்தில் இருந்தாலும், கூட்டாக
போய் மாநிலத்திற்கு வேண்டியவற்றை செய்து கொள்கிறார்கள்.
“இங்கு” தான் தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கம் தொடங்கி காவல்
துறை அதிகாரிகள் வரை திமுக அஇஅதிமுக பிரிவு இருக்கிறது.
ஒருவர் “நிழலைக்” கூட ஒருவர் பார்ப்பதில்லை.
அது சரி. கருணாநிதியை வாரம் தவறாமல் சந்திப்பதால்,
சிதம்பரத்திற்கு விளைந்த நன்மைதான் என்ன?
ஆக மொத்தத்துலே “யாராலும்” ஒண்ணும் பண்ணமுடியாதாம், திரு காவிரி மைந்தன். அதனாலே இந்த பதிவை தூக்கிடுங்க!
வெங்கடரமணி ஸார், காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு போன்றவற்றை நீங்களும் ஞாபகமாக மறந்துட்டீங்க போல! அது போக NLC/கல்பாக்கம் போன்றவற்றிலிருந்து எத்தனை சதவீதம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது? அப்புறம் கூடங்குளத்திலிருந்து இலங்கைக்கும் மின்சாரம் போகப்போகுதாமே?
30 ஆண்டுக்கு முன் சிவகங்கை சின்னப்பையனாக இருந்தவர் இன்னும் வளரவேயில்லையா?
ஆனாலும் பாருங்க, தோத்த எலெக்ஷன்லே ஜெயித்த “ஒரே” எருமை… சிச்சீ… பெருமையுடையவர் இவர் ஒருவரே!
திரு. வெங்கட்ரமணி
நீங்கள் பண்ணுவது முழுதும் விதண்டாவாதம்.
அது உங்களுக்கும் தெரியும்.
“உப்பு இருக்கிறதா” என்று கேட்டால் “பப்பு இருக்கிறது” என்று
சொல்லும் கடைக்காரர் போலத்தான் இருக்கிறது உங்கள் வாதம்.
ப.சி.யும் மு.க.வும் அடிக்கடி சந்தித்துக் கொண்டது உங்களுக்குத் தெரியாதா இல்லை ஏன் சந்தித்துக் கொண்டார்கள் என்பது மட்டும் தெரியவில்லையா ?
“சிவகங்கை”க்கு வக்காலத்து வாங்கும் முதல் நபரை
வலைத்தளத்திலேயே முதல் தடவையாக இங்கு தான் காண்கிறேன்.
இவ்வளவு வாதம் செய்யும் நீங்கள் சிவகங்கை தொகுதி மக்களிடம் எடுத்த சர்வே கருத்துக் கணிப்பைப் பற்றி ஏன் ஒன்றும் கூறவில்லை ?
அதற்கும் ஆந்திரா, கேரளா எங்காவது உதாரணம் தேட வேண்டுமா ?
எனது சிறு வயதில், அதாவது அரசியல் இன்னதென்று அறிந்திராத
காலத்தில், எங்களூரில் ஒரு அரசியல்வாதி இருந்தார். அவர் பழைய
காங்கிரஸ்காரர். தொழில் கள்ளுக்கடை வியாபாரம். ஆனால்,
சித்தாந்த தெளிவுடையவர். பழைய காங்கிரஸ்காரர்கள் ஜ்னதாவில்
ஐக்கியமான போது இவரும் அதில் சேர்ந்தார். தொகுதியில் அவரை
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள எவரும் இல்லை. வலுவான புதிய
காங்கிரஸில் பலரும் முயன்று பல்லை உடைத்துக் கொண்டனர்.
ஒரு முறை கூட்டணி அமைச்சரவையில் ஜனதா சேர்ந்தது. அப்போது
இவர் மந்திரியானார். தான் கொண்ட சித்தாந்த தெளிவின்
காரணமாகவும், POLITICAL VALUES காரணமாகவும் இவரால்
தொகுதிக்கு “ஒன்றும்” செய்ய இயலவில்லை. தொகுதிக்காரர்கள்
பெருத்த ஏமாற்றமடைந்தனர். விளைவு: அடுத்த தேர்தலில் அவரால்
வெற்றி பெற இயலவில்லை.
முன்னதாக இரண்டு முறை (?) அவரிடம் தோற்றுப் போன புதிய காங்கிரஸ்காரர் அவரை தோற்கடித்தார். ஜெயித்தவர் தொடர்ந்து
ஜெயித்துக் கொண்டே போக, தோற்றுப் போனவரால் பின்னர் பல
முறை “முயன்றும்” வெற்றி பெறவே முடியவில்லை. அவர் பெயர் திரு.பெத்தபெருமாள்.
political values-ஐ முழுமையாக கடைப்பிடிப்பவர்களை தொகுதி
மக்கள் விரும்பத்தான் மாட்டார்கள்.
அது சரி: தொகுதி மக்களால் பெரிதும் விரும்பும் அரசியல்வாதி
யாரேனும் தமிழகத்தில் இருக்கிறார்களா? உங்களால் அடையாளம்
காட்ட முடியுமா?
திரு.சிதம்பரம் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்பது உண்மையே.. ஏனெனில் அவர் அரசியலுக்கு வந்தபோது அந்த நிலையில் இல்லை. இன்று அவர் மனைவி மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டும்கூட கடந்த ஆட்சியிலேயே எழுப்பப்பட்டு அமுக்கி வைக்கப்பட்டது தான்.. அவர் மகன் இளவரசரின் தளபதி மீது பல துறைகளிலும் (அறம், பொருள் மட்டும் ) பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அவர் தான் இந்திய பங்குசந்தையையே கட்டுப்படுத்துகிறார் என்றுகூட ஒருவர் வலைதளத்தில் எழுதியிருந்ததை படித்தேன். உண்மையா என்பது எனக்குத் தெரியவில்லை… இவற்றையெல்லாம் தவிர்த்திருந்தாலோ அல்லது சரிசெய்திருந்தாலோ இவர் திரு. சுத்தம்(Mr.Clean) தான். இவரும் திராவிடக்கட்சிகள் போல அரசியல் செய்யமுடியவில்லை என்றாலும் மற்றவற்றை பின்பற்றுகிறார்… வாழிய சனநாயகம்.
திரு. ப.சிதம்பரம் அவர்கள் செய்தது …..ஒன்றுமில்லை
தமிழக வாக்காளர்கள் செய்தது..இந்த “சாதனையாளரை” தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள்
பாராளுமன்ற உறுப்பினராக வாக்களித்து தேர்ந்தெடுத்தது.
முதல் குற்றத்தைக்கூட மன்னிக்கலாம்.இரண்டாவதை?
நம் நாட்டின் அத்தனை குற்றங்களும் வாக்காளர் சம்பந்தப்பட்டது.நாம் அரசியல்வாதிகளை குற்றம் சாடுகிறோம்.
I read this recently..
Jawaharlal Nehru proved that a rich man can become the country’s Prime Minister;
Lal Bahadur Shastri proved that a poor man can become the Prime Minister;
Indira Gandhi proved that a woman can become the Prime Minister;
Morarji Desai proved that an old man can become the Prime Minister;
Rajiv Gandhi proved that a young man can become the Prime Minister;
I.K. Gujral proved that a gentleman can become the Prime Minister;
Deve Gowda proved just about anybody can become the Prime Minister;
Manmohan Singh has proved that India does not need a Prime Minister.
I AM SURPRISED TO SEE VEKATRAMANI’S ARGUEMENTS.
THE QUESTION IS SIMPLE. WHAT HE HAS DONE FOR TAMILNADU?
WHAT HE HAS DONE FOR SIVAGANGAI?
WHETHER HE WANTS TO PUNISH TAMIL PEOPLLE, IF ADMK IS RULING TAMILNADU,
WITHOUT BEATING THE BUSH, MR. RAMANI CAN REPLY.