செய்தியே போதுமே –
இதற்கு விமரிசனம் வேறு தேவையா … ?
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் –
வெளிவந்திருக்கும் செய்தித் துளிகள் —
1) பிரதமர் ம.மோ.சி. 2004 முதல் 2013 வரையான
ஒன்பது ஆண்டுகளில் –
சுற்றிப் பார்த்த/சென்ற நாடுகள் – மொத்தம் – 67
இவற்றில் 63 நாடுகளுக்கான விமானப்பயணத்துக்கு
மட்டும் ஆன செலவு – 642 கோடி ரூபாய்.
(கடைசி 4 பயணங்களுக்கான செலவுத்தொகை இன்னும்
தொகுக்கப்படவில்லை… !)
சாப்பாடு, தங்கல் – வகையிலான செலவுகள் தனி –
விவரம் வெளியிடப்படவில்லை !
இதில் அதிகம் செலவானது – மெக்சிகோ மற்றும் பிரேசில்
பயணத்திற்கானது – 27 கோடி ரூபாய் (மட்டுமே ..!)
2)முன்னாள் (அதாவது காலஞ்சென்ற ) தலைவர்களின்
பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை ஒட்டி
மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின்
மொத்த செலவு – கடந்த 5 ஆண்டுகளில் –
142 கோடி ரூபாய்.
இதில் ராஜீவ் காந்திக்காக மட்டும் ஆனது –
25.4 கோடி ரூபாய்..!!
இந்த செய்திகளுக்கு விமரிசனம் வேறு எழுதி –
எரிச்சலை அதிகப்படுத்துவானேன் என்கிற
நல்லெண்ணத்தால் – நான் ஒன்றும் எழுதவில்லை.. !!




மக்களோட வரிப் பணம் எப்படி எல்லாம் வீணாப் போகுது.
“எங்கேயோ” இருக்கும் சிறங்கை சொல்லவும் முடியாது, காட்டவும் கூடாது என்பது போலத்தான் என் நிலையும். ஸோ, நோ கமெண்ட்ஸ்!
நம்மால் செய்யகூடியதெல்லாம்… சீக்கிரம் பிரதமராகனும்.. அதுக்கு என்ன வழி..?
நானும் தொடக்கத்தில் இவர் கொஞ்சமாவது மனசாட்சிக்கு பயப்படுவார் என்று தான் நம்பியிருந்தேன்.
ம்கும்.
பிரதமரது செயல்பாடுகள் குறித்து அபிப்பிராய பேதங்கள்
இருந்தால், அது குறித்து எழுதலாம். தவறில்லை. மாறாக அவர்
ஏதோ ஊர் சுற்றிப் பார்க்கும் நோக்குடன், நமது அக்கவுண்ட்டில்
இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு போனது போல்
எழுதுவது சரிதானா? யோசிக்கவும்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசு உயர் அதிகாரிகளும்
உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு “ப்யணங்கள்” மேற்கொள்வது
வாடிக்கை தான். இவ்வாறான பயணங்களில், “பலவும்” அழைப்பின்
பேரில் மேற்கொள்வதாகும்.
“அரசு பணம் என் இஷ்டத்திற்கு செலவு செய்யலாம்” என்பது
அவரது எண்ணமும் செயலுமாக இருக்குமேயானால், அவர் ஏன்
தன் இருதயக் கோளறுக்கான வைத்தியத்தை தலைநகரிலேயே
செய்து கொள்ள வேண்டும்? இன்னுமொரு முறை அமெரிக்கா
சென்று வந்திருக்கலாமல்லவா?
பிரயாண செலவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடக் கூடியது.
நம் உறவுக்காரர்களிலேயே, சிலர் first AC-ல், Reserved Coach-ல்
Unreserved-ல், சொந்த காரில், சொந்த கார் வாடகை டிரைவர்,
ஆம்னி பஸ், அரசு பஸ என்றெல்லாம் தன் நிலைக்கு தக்கவாறு
பயணிப்பது வாடிக்கை.
அது போல, நாட்டின் பிரதமர் அவருக்குரிய PROTOCAL-ஐ
மறந்து, துறந்து, “இதோ வந்துவிட்டேன்” எனக் கிளம்பி போய்விட
முடியாது. இதெல்லாம் உங்களுக்கும் தெரியும் என்றே நான்
பெரிதும் நம்புகிறேன்.
அது சரி. பச்சை வண்ண விளம்பர செலவுகளைப் பற்றியெல்லாம்
தகவல் அறிந்து எழுத இயயலுமா?
நண்பர் வெங்கட் ரமணி,
புரிகிறது…..
உங்கள் எண்ணம் புரிகிறது.. !
இதற்கு விளக்கம் கொடுக்கும் அளவிற்கு
எனக்கு பக்குவம் போதாது என்பதும் புரிகிறது…..
நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்