முதலமைச்சரின் கண்டிப்பு ….

முதலமைச்சரின்  கண்டிப்பு ….

அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில்
ஆளும் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் செய்யும்
தவறுகள் பற்றி முதலமைச்சர் மிகக் கடுமையாகப்
பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்திற்கு செய்தியாளர்களோ, வெளி நபர்களோ
அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் – ஒரு
வார இதழில் அதைப்பற்றிய விவரங்கள் வெளி
வந்துள்ளன.

வெளிவந்துள்ள செய்தியின்
சுருக்கம் கீழே –

“ஆளும் கட்சி ஆட்கள் மீதே நில அபகரிப்புப் புகார்கள்
வருகிறது.  சில இடங்களில் பெண்கள் தொடர்பான
புகாரும் வருகிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில்
பார்த்தால் நான் உங்களைக் காப்பாற்றத்தான் வேண்டும்.

ஆனால் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும்
முதலமைச்சராகவும் நான் இருப்பதால் –

நிச்சயம்  தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை
எடுக்கத்தான் செய்வேன்.

தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்.  மக்களின்
தாகத்தை தணிக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை
கட்சியினரே சிதைத்து விட்டனர். ஏதோ ஒப்புக்காக
தண்ணீர் பந்தல் திறந்து விட்டு, அந்த படத்தையும்,
செய்தித்தாளில் வந்த செய்தியையும் அனுப்புகின்றனர்.

ஆனால் – அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை.

சென்னையில் நான் செல்லும் வழியில் –
விவேகாநந்தர் இல்லம் அருகே ஒரு தண்ணீர் பந்தல்
அமைக்கப்பட்டது. நான் அந்த வழியாக செல்லும்போது
கவனித்தேன். முதல் நாள் தர்பூசணி, ஜூஸ், இளநீர்,
மோர் எல்லாம் கொடுத்தனர். அடுத்த நாள் அங்கு
2 தண்ணீர் கேன் மட்டும் வைத்திருந்தனர்.
அதற்கு அடுத்த நாள் அது ஒரு கேனாக குறைந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு அதையும் காணவில்லை.

சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்த பிறகும்,
இரண்டு நாட்கள் தான் கேனைப் பார்க்க முடிந்தது.

சேவை மனப்பான்மையோடு செய்ய வேண்டிய ஒரு
காரியத்தை கடமைக்காக ஏன் செய்கிறீர்கள் ?
நான் உங்களை தர்பூசணி, ஜூஸ், இளநீர் எல்லாம்
கொடுக்கச் சொல்லவே இல்லை. தண்ணீர் மட்டும்
தொடர்ந்து வழங்குங்கள் – போதும்.

உங்களைப் பொறுத்த வரை -பதவி தான் உங்களுக்கு
முக்கியம். அதனால் தான் கட்சியின் நலனை
பார்க்காமல் ஆள் ஆளுக்கு சண்டை போட்டுக்கொண்டு
புகார் மனுக்களாக அனுப்புகிறீர்கள்.

முந்தைய திமுக ஆட்சியின் அட்டூழியங்களால் தான்
மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த
நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும்
உண்டு.”

– சரியான நேரத்தில், மிகச்சரியான அழுத்தம்,
கண்டிப்புடன் பேசி இருக்கும் முதலமைச்சரின் பேச்சு
வரவேற்கத்தக்கது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to முதலமைச்சரின் கண்டிப்பு ….

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //முந்தைய திமுக ஆட்சியின் அட்டூழியங்களால் தான்
    மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த
    நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும்
    உண்டு//
    ராஜீவின் ரத்தத்தால் ஒன்றும் நாங்கள் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்று கூறியவரிடம், இந்த மாற்றமா?
    நம்பமுடியவில்லை…வில்லை…வில்லை!!!

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நம் நாட்டில் ஒரு மாநில முதலவருக்கு அரணாக இருந்தது அவரை காப்பாற்றுபவர்கள் கட்சிக்காரர்கள்,அரசு அதிகாரிகள்,மற்றும் காவல் துறை ..
    இவர்களைத்தாண்டி யாரும் அவரை சந்திக்க முடியாது.எனவே இந்த மூன்று பிரிவினரையும் பகைத்துகொள்ள எந்த அறிவுள்ள முதல்வரும் துணியமாட்டார்கள்..மேலும் தங்கள் சொந்தப்பணத்தை செலவழித்து யாரும் மக்கள்சேவை செய்ய வரமாட்டார்கள்.ஒரு ரூபா போட்டு பத்து ரூபா எடுக்கும் வியாபாரம் இது..இதிலிருந்து விடுதலையே இல்லை..அல்லது நாளை வரும் என்று எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்..

  3. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    சிரிப்பு வருகிறது.
    சேவை செய்யவா அரசியலுக்கு வருகிறார்கள்?
    மகாபலிபுரம் தொடங்கி கிண்டி வரை, திருவான்மியூர் வரை என்று
    வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு கூப்பிய கரங்கள்
    அம்மாவின் காலடிகளை வணங்குவது போல பல வண்ணங்களில்
    டிஜிட்டல் பேனர் வைத்திருக்கிறாரே ஒரு (முக காட்ட விரும்பா)
    மஹானுபாவர் (ஆம் மஹானுபாவர் தான்) கண்டிருக்கிறீர்களா?

    வைத்தவுடன் காணாமல் போன தண்ணீர் பந்தல்கள் போல் இல்லாது,
    அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு வைத்த இந்த டிஜிட்டல் பேனர்கள்
    இன்னமும் இருபுறமும் இருக்கிறது. அந்த பக்கம் போகும் போதும் வரும்
    போதும் பார்த்து ரசிப்பார் போலிருக்கிறது.

    புதிய தலைமுறையில் மைக்கேல் ராயப்ப்னின் பேட்டியைக் கண்டீர்களா?
    கேப்டனின் கட்சிக்காக் “பல” கோடிகளை செலவிட்டதாக சொன்னார். வேர்
    பிடிக்கும் நிலையிலுள்ள கட்சிக்கே செலவு செய்ய வேண்டுமானால், ஆட்சி
    அதிகாரம் கை வசமுள்ள கட்சிக்கு, கேட்கவா வேண்டும்? அரசியலில் சேவையெல்லாம் இல்லை. போட்டதை எடுக்க பல வழிகள். அதில் ஒன்று
    தான் தொண்டர்கள் திறக்கும் தண்ணீர் பந்தல்கள்.

    கோவையில் கங்கோத்திரி டெக்ஸ் நிர்வாகம் கோடையில் ஏறக்குறைய
    இரண்டு மாதங்களுக்கு மேல், தண்ணீரல்ல நீர்மோர், எலுமிச்சை சாறு என்றெல்லாம் வழிப்போக்கர்களை காலை முதல் மாலை வரை
    குளிர்விக்கிறார்கள். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் கோடையில் நீர்மோர் வினியோகிக்கப் படுகிறது.

    இவர்களிடத்திலலே அரசியல் இல்லை. விளம்பரம் இல்லை. மாறாக
    சம்பாதித்த காசை பிறருக்குப் பயன்படும் வகையில் சிறிதளவேனும்
    செலவிட வேண்டும் என்கிற “தயை” இருக்கிறது.

    உங்கள் இடுகை சிரிப்பை தாறுமாறாக வரவழைக்கிறது. ஒரு மாறுதல்
    தேவைதான். இருந்துவிட்டு போகட்டும்.

  4. Rishi's avatar Rishi சொல்கிறார்:

    காவிரி மைந்தன்,
    என்னாச்சு?! மக்களின் தாகத்திற்கு தண்ணீரை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா? கட்சிக்காரர்களுக்கும், சேவைக்கும் என்ன சம்பந்தம்? ஒரு தண்ணீர்ப் பந்தலில் தண்ணீரை கொண்டு வந்து சேர்க்க ஒருவர், அதை வழங்க ஒருவர், கொண்டு வருவதற்கு வேன், அந்த தண்ணீரை சேகரிப்பதற்கு பணியாட்கள் என எவ்வளவு விஷயங்கள் பின்னே உள்ளன? அவ்வளவு பேருக்கும் பிழைப்பு இல்லையா? குடும்பம் இல்லையா? இதற்கு நேரம் ஒதுக்கினால், உழைப்பை ஒதுக்கினால் இதை விட பல மடங்கு எப்படி ரிட்டர்ன் எடுப்பது என யோசிக்க மாட்டார்களா? இது ஒரு உதாரணம்தான். இதை ஒவ்வொரு மட்டத்திலும் யோசித்துப் பாருங்கள். பதிவின் நகைச்சுவையை உணர முடியும்.

  5. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    Good chief minister

  6. kavirimainthan's avatar kavirimainthan சொல்கிறார்:

    நான் இந்த செய்தியை பார்க்கும் கோணம்
    மாறுபடுகிறது.
    பொதுவாக அரசு நிர்வாகத்தை, செயல்பாட்டை –
    பார்க்கும் விமரிசனக் கண்ணோட்டத்தில் நான்
    இதைப் பார்க்கவில்லை.

    அரசையோ, நிர்வாகத்தையோ – நான் இந்த
    இடுகையில் விமரிசிக்கவும் இல்லை.

    என் இடுகை, வெளிவந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட
    செய்தியை அடிப்படையாகக் கொண்டது.

    ஒரு அரசியல் கட்சியின் தலைவர் –
    முக்கியமாக ஆளும் கட்சியின் தலைவர் –
    தன் கட்சியின் முன்னணி உறுப்பினர்களிடம்
    ஒரு கண்டிப்பான ஆசிரியர் தன் மாணவர்களுக்கு
    அறிவுரை கூறுவது போல் பாடம் நடத்துவதையும் –

    மற்றவர்கள் செய்த தவறினால் தான் மக்கள்
    நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் –
    எனவே நீங்களும் அதே தவறைச் செய்யக்கூடாது
    என்று வெளிப்படையாகச் சொல்வதும் –

    அவர்களும் அதை பயபக்தியுடன் ஏற்பதும் –
    இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் ஒரு
    வித்தியாசமான விஷயம் தான்.

    இந்த அளவிற்கு ஒரு தலைவர் ஆளுமை காட்டுவதும்,
    தொண்டர்களும் அதை விருப்பத்துடன்
    ஏற்றுக் கொள்வதும் – வேறு எந்த கட்சியிலும்
    காண முடியாத விஷயம்.

    தமிழக முதல்வரின் ஆளுமையும்,
    தைரியமும், தன் கட்சியை கட்டுக்கோப்பாக
    வைத்திருக்கும் திறனும் நிச்சயமாக
    எனக்கு வியப்பை ஊட்டத்தான் செய்கின்றன.
    இதைத்தான் ( இதை மட்டும் தான்) இந்த
    இடுகையில் நான் சொல்ல விழைந்தேன்.

    – வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  7. கே. ஜி. ஜவர்லால்'s avatar Jawahar சொல்கிறார்:

    முதல்வரின் செயல்பாடுகளில் தொடக்கத்திலிருந்தே இந்த மக்கள் நேசப் போக்கு தெரிகிறது. மின் வெட்டைத் தவிர குறை சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு வேறு விஷயமே அகப்பட மாட்டேனென்கிறது. மின்வெட்டும் இப்போது குறைந்து வருகிறது.

    http://kgjawarlal.wordpress.com

    • c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

      power position improving due to WIND GOD

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக ஜவஹர்,

      குறையைச் சொல்லும்போது நிறையையும்
      சொல்ல வேண்டும் அல்லவா ? அதனால்
      தான் இந்த இடுகை.

      ஆமாம் ஏன் இப்போதெல்லாம் அதிகம்
      எழுதுவதில்லை ?
      எதாவது புத்தகம் தயாராகிறதா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  8. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    oru naal mudalvanaka erundu paarungal

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.