நரேந்திர மோடி – வரலாமா ?
வந்தால் என்ன ஆகும் ?
மோடி பாரதீய ஜனதா கட்சியில் முன்னிலைப்
படுத்தப்பட்டிருக்கிறார். 2014 தேர்தலில் – ஆட்சியைப்
பிடிக்கும் அளவிற்கு பிஜேபி கூட்டணிக்கு பலம் கிடைத்தால் –
மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில் சந்தேகம் இல்லை !
இந்த விஷயம் தெளிவாக்கப்பட்டு விட்டது.
மோடியின் பின்னணி –
வயது 62.
படிப்பு – M.A.(Political Science).
வெஜிடேரியன்.
கடந்த 11 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தின் முதல்வர்.
அண்மையில் தொடர்ந்து 3வது முறையாக
முதல்வராகி இருக்கிறார்.
மாணவப் பருவத்திலிருந்தே தீவிர அரசியல் ஆர்வம் –
அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் தீவிர பங்கு.
RSS அமைப்பில், நாக்பூரில் பயிற்சி பெற்றவர்.
முழு நேர RSS ஊழியராக இருந்தவர்.
கோத்ரா கலவரங்களுக்கும், தொடர்ந்து நிகழ்ந்த
வன்முறை நிகழ்வுகளுக்கும் – இவரும் ஒருவிதத்தில்
பொறுப்பு என்பது தான்
இவரைப்பற்றி கூறப்படும் புகார்களில் முக்கியமானது !
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக குஜராத்தை
மாற்றிக் காட்டியவர் என்கிற புகழும், பெருமையும்,
இவருக்கு உண்டு.
பொதுவாக இவரைப்பற்றி –
மிக எளிய வாழ்வு வாழ்கிறார். மூன்று உதவியாளர்கள்
மட்டுமே இவருடன் இருக்கிறார்கள்.
குடும்பத்தினரையோ, உறவினர்களையோ –
அருகிலேயே அண்ட விடுவதில்லை.
அரசியல்வாதிகளில் இவர் ஒரு விசித்திரம் –
தானும் சாப்பிடுவதில்லை – மற்றவர்களையும்
சாப்பிட விடுவதில்லை !!
workholic – தொடர்ந்து வேலை செய்து
கொண்டிருப்பதில் விருப்பம் உடையவர்.
இந்தியிலும், குஜராத்தியிலும் -நல்ல பேச்சாளர்.
ஆங்கிலத்தில் சுமார் தான்.
விவேகாநந்தர் மீது அளவற்ற பற்று கொண்டவர்.
தேச பக்தியும்,தெய்வ நம்பிக்கையும் -இவர்
ரத்தத்தில் ஊறியவை.
எளியவர்.
ஆனால் -முரடர் (Arrogant).
பிடிவாதக்காரர்.
அகங்காரம் மிக்கவர்.
ஆனால் செயல் வீரர்.
மக்கள் நலனில் உண்மையான அக்கரை உடையவர்.
தன் ஆட்சித் திறமையை குஜராத்தில் நிரூபித்துக்
காட்டியவர். சொத்து சேர்க்காதவர் !
நகரத்து இளைஞர்களுக்கு – மோடியைப் பிடிக்கிறது !
சரி – மோடி பிரதமராக வந்தால் என்ன ஆகும் ?
ஊழல் குறையுமா ?
குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு
தண்டிக்கப்படுவார்களா ?
விலைவாசி ஸ்திரப்படுமா ?
மக்கள் பாதுகாப்புடன் வாழ்வார்களா ?
தனியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு
உணர்வு கிடைக்குமா ?
கல்வியும், சுகாதாரமும் – அனைத்து மக்களுக்கும்
உறுதி செய்யப்படுமா ?
அண்டை நாடுகளுக்கு நம் மீது மதிப்பும், மரியாதையும்,
நல்ல உறவும் ஏற்படுமா ?
உலக அரங்கில் இந்தியாவிற்கு மரியாதை கிடைக்குமா ?
நாட்டின் வளங்கள் சுரண்டப்பட்டு –
தனியாருக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்படுமா ?
நாடு முழுவதும் – மக்களுக்கு நல்ல குடிநீர்,மின்சாரம்,
சாலைப் போக்குவரத்து உறுதி செய்யப்படுமா ?
சிறுபான்மை இனத்தவர் பாதுகாப்புடன் வாழ முடியுமா ?
ஊழல் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தினால் –
தானாகவே விலைவாசி ஸ்திரப்பட்டு விடும்.
முதுகெலும்புள்ள, வலுவான மத்திய அரசு உருவானால் –
அண்டை நாடுகளிலும், உலக அரங்கிலும்
இந்தியாவிற்கு ஒரு மரியாதை தானாகவே ஏற்படும்.
கல்வி, சுகாதாரம் – மாநில, மத்திய அரசுகள்
இரண்டும் சேர்ந்து செயல்பட வேண்டியவை.
சட்டம் ஒழுங்கு – மாநிலத்தின் பொறுப்பு.
ஒரு வலுவான, நேர்மையான மத்திய அரசு ஏற்பட்டால்,
அது – நாடு முழுதும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை
ஏற்பட உதவியாக இருக்கும்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு –
மிக முக்கியமான பிரச்சினை இது. காங்கிரஸ் கட்சி
இதைச் சொல்லித்தான் மோடிக்கு எதிராக சிறுபான்மை
இனத்தவரை பயமுறுத்தி வருகிறது.
2002-ல் நிகழ்ந்த சம்பவங்களுக்கு மோடி பொறுப்பா
இல்லையா என்கிற கேள்வியை தனியே ஒதுக்கி விட்டு
பார்த்தால் – அந்த கால கட்டத்திற்கு பிறகு,
இந்தியாவிலேயே மதக்கலவரங்கள் ஏற்படாத மிகச்சில
மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாக இருக்கிறது.
கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து மோடி சந்திக்க
நேரிடும் குற்றச்சாட்டுக்களே – எதிர்காலத்தில்
தப்பித் தவறி கூட இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டு
விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வை அவரிடம்
தோற்றுவித்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
எனவே சிறுபான்மை இனத்தவர் – தங்கள் பாதுகாப்பு
குறித்து அச்சப்படத் தேவை இருக்காது.
விவசாயம் செழிக்குமா ?
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படுமா ?
உற்பத்தி பெருகுமா ?
அந்நிய இறக்குமதி குறையுமா ?
முக்கியமாக – இந்த நாட்டின்
இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா ?
குஜராத்தில் நிகழ்ந்துள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு
பார்த்தால் -விவசாயம், உற்பத்தி, வேலைவாய்ப்பு
ஆகியவை குறித்து நம்பிக்கை ஏற்படுகிறது.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரை –
கர்னாடகத்துடன் காவிரி –
கேரளத்துடன் முல்லைப் பெரியாறு –
மத்திய அரசுடன் -ரேஷன் மண்ணெண்ணை,
மத்திய தொகுப்பு மூலம் மின்பகிர்வு,
நீர்வளங்களை இணைத்தல் –
மீனவர், கச்சத்தீவு, இலங்கைத் தமிழர் –
ஆகிய பிரச்சினைகளுக்கு நியாயமான,
நேர்மையான – தீர்வுகள் காணப்படுமா ?
எதிலும் தமிழ்நாட்டிற்காக சாதகமாக
செயல்பட வேண்டும் என்கிற கருத்தில் நான்
யோசிக்கவில்லை. மத்திய அரசு, நடுநிலையாக,
நேர்மையான விதத்தில் நடந்து கொண்டாலே போதும்.
பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு
கண்டு விடலாம்.
பொதுவாக ஒரு கணிப்பு இருக்கிறது –
நரேந்திர மோடி பிரதமராக வந்தால் – ஒரு
ஜனநாயகவாதியாக செயல்படமாட்டார்,
தன் விருப்பப்படி தான் செயல்படுவாரென்று.
தொடைநடுங்கிகளையும், பொம்மைகளையும்
பார்த்துப் பழகிவிட்ட நமக்கு
ஒரு சர்வாதிகாரியை – உண்மையான
அதிகாரத்தில் பார்ப்பது ஒரு வித்தியாசமான
அனுபவமாக இருக்கும்.
பொதுவாகப் பார்த்தால் –
எல்லா கேள்விகளுக்கும் சாதகமான
பதில் வராவிட்டாலும் –
பெரும்பாலான கேள்விகளுக்கு சாதகமான
பதில் கிடைக்கிறது.
suppose – ஏதோ காரணத்திற்காக நமக்கு மோடியைப்
பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்த alternative என்ன என்று யோசித்தால் –
பயமாக இருக்கிறது.
மீண்டும் ம.மோ.சிங்கா ?
அன்னை காந்தியா ?
இல்லை பிள்ளை காந்தியா ?
இன்னும் ஐந்து வருடங்களுக்கா ?
இதே கபில் சிபல், சல்மான் குர்ஷித்,வீரப்ப மொய்லி –
ப.சி. கூட்டமா ?
அய்யோ – நினைத்தாலே பயமாக இருக்கிறதே !
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே ..?




மிக நேர்மையாளரான பெருந்தலைவர் ஆட்சியிலேயே ஊழல் இருந்தது. தலைவர்களிடமில்லை. அரசு இயந்திரத்தில் இருந்தது. அப்போது IAS அதிகாரிகள் நேர்மையாளர்களாக இருந்தனர். ஊழல் கீழ்மட்டத்தில் இருந்தது. பா.ஜ.க ஆட்சியில் மேல் மட்டத்தில் இன்று நாறிக்கொண்டிருப்பதுபோல் நாறவில்லை.
எனவே அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். இன்று நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும் (இ) காங்கிரஸைவிட மேலான ஆட்சியை எதிர்பார்க்கலாம்.
மீண்டும் காங்கிரஸ் வந்தால் ஆண்டவன் கூட இந்தியாவை காப்பாற்ற முடியாது.
கட்சியின் கொள்கைகள்/சாதனைகள் எவற்றையும் முன் வைக்காமல் ஒரு தனி மனிதரை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் பா.ஜ.க விற்கு பின்னடைவே!! அன்ன ஹாசாரே ஏன் வீழ்ந்தார் என்பதை பா.ஜ.க சிந்திக்க வேண்டும்,
நாவன்னா மோடி வருவதற்கு முன்னால் பாஜக இவரை முன்னிறுத்துவார்கள் என்றா நீங்களும் நம்புறீங்க. ஒரு நாலஞ்சு டிக்கட்டு உள்ளே இருக்குது. கொல வெறியோடு இவரை கவுக்க காத்திக்கிட்டு இருக்கு. நீங்க அதுக்குள்ள புள்ளைக்கு என்ன பேரு வைக்கலாம்ன்னு கேட்குறிங்க?
மக்களின் ஆதரவு இருப்பவர் யாராயினும் அரசியலில் எந்த
பதவிக்குக் வரலாம்.
ஆனால் மக்கள் ஆதரவு மட்டும் போதுமா? என்றால் சத்தியமாய்
போதாது. பிற யோக்கியதாம்சங்களும் தேவைப்படுகின்றன. மிக
முக்கியமான யோக்கிய்தைகள் திருவாளர் மோடியிடம் இருப்பதாகவே
கருதுகிறேன். பலவற்றை நீங்களே பட்டியல் போட்டு விட்டீர்கள்.
அரசியல் ரீதியிலான கொள்கைகளை “அணுகுவதில்” அரசியல்
வாதிகளிடம் பல வகை முறைகள் இருபபது யாவரும் அறிந்ததே.
திரு.மோடி (மோதி?)யின் அணுகுமுறை பா.ஜ.க-வின் மற்ற
தலைவர்களிடமிருந்தே மாறுபட்டது (வேறுபட்டது) என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தான், அவரால் மீண்டும்
மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
பாரதியால், வகேலாவால், கல்யாண் சிங்கால், வசுந்தராவால்,
எடியூரப்பாவால் “குறிப்பிட்ட அளவு” செல்வாக்கெல்லாம் இருந்த
போதிலும் தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள
முடியவில்லை.
மத ரீதியிலான உணர்வுகளை இவரை விட உமா பாரதியும், கல்யாண்
சிங்கும் தூண்டி விட்டார்கள். அதனால் LARGER THAN LIFE SIZE
என்பார்களே அது போல நாடு முழுவதும் ஒரு இமேஜ் பரப்ப பட்டது.
விளைவு: கட்சி கண்ட பின்னடைவை விட இவர்கள் இருவரும் சந்தித்த்
பின்னடவு பெரிது. அரசியலில் இருவராலும் மீண்டும் எழுந்திருக்கவே
முடியாமல் போய்விட்டது.
ஆனால் திரு மோடி விஷயத்தில் அவ்வாறில்லை என்பது முன்னமே
குஜாரத்தி;ல் நிரூபணமாகிவிட்டது. குஜராத்தைத் தாண்டியும்
அவதூறு பிரச்சாரம் நடந்த போதிலும், அவர் அரசியல் ரீதியிலான
எந்த எதிர் விளைவையும் சந்திக்கவில்லை.
நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்.
இனிமே காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு நாங்களும் நினைக்கிறோம். ஆனா நாம நினைக்கிறது எதுவுமே நடக்க மாட்டேன் என்கிறது. இப்ப நீங்க மோடியினுடைய நிறை, குறை இரண்டையும் நல்லா தெளிவா விளக்கி உள்ளீர்கள். ஆனால் இதை படிப்பவர்கள் உங்களை மதவாதி, இந்துத்துவா என்று சொல்லி கமென்ட் போடுவார்கள். காங்கிரஸ் ஒட்டு மொத்த பிஜேபி பிரமுகர்களையும் ” நீங்கள் மதவாதி , இந்துத்துவா ” என்று சொல்லியே வாயை மூட வைத்து விடுகின்றனர். அதையே மக்களிடம் பரப்பி விட்டு உள்ளனர். அதற்கு கூட பிஜேபி கட்சியை சார்ந்தவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. அவர்களும் இன்னும் திருந்தவில்லை. ராமர் கோவில் கட்டுவோம்னு பஜனை பாடிக்கொண்டு இருக்கின்றனர். நிறைய பேர் இன்று இன்டர்நெட்டில் மோடி ஒரு ஹிந்து வெறியர் என்று பரப்பி கொண்டு உள்ளனர். அவர்களுக்கு நாட்டை பற்றி ஒன்றும் கவலை இல்லை. தங்களை பற்றி மட்டுமே கவலை. இன்று மத்திய அரசு பல துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து விட்டது. மாநில அரசும் அவ்வழியே சென்று கொண்டு இருக்கின்றது. அண்ணா ஹசாரே மாதிரி யாராவது போராட வந்தால் , அவர்களையும் மீடியா சப்போர்ட் செய்யாமல் , அவரை high tech அரசியல்வாதி என்று தவறான பிரசாரத்தை பரப்பி விடுகின்றனர். இவர்களுக்கு நாட்டை பற்றி என்ன கவலை. தங்களை பத்திரிகை வியாபாரமே பெரிதாக உள்ளது. நிறைய மக்களிடம் இன்று அரசியலை பற்றி விழிப்புணர்ச்சி இல்லை. அவர்களுக்கு தேச பற்று கூட சிறிதளவு இல்லை. காய்கறி வியாபாரி முதல் நகை கடை வியாபாரி வரை விலைவாசிக்கு தகுந்தவாறு விலையை ஏற்றாமல் , தங்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு விலையை ஏற்றி விடுகின்றனர். இவர்களுக்கு நாட்டை பற்றி ஒரு கவலையும் இல்லை. இவர்களுக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலை இல்லை. ஒரு சில நல்ல மனிதர்கள் மட்டுமே நாட்டை பற்றி கவலை படுகின்றனர். மோடி வந்தால் கூட நல்லாத்தான் இருக்கும். ஒண்ட வந்த பிடாரியை விட ஊர் பிடாரி எவ்வளவோ தேவலாம்.
மீண்டும் காங்கிரஸ் ? நினைக்கவே பயமா தான் இருக்கு …
மோடி குஜராத்தின் முதல்வராக இருப்பதற்கு மிகப்பெரிய பலம், பிஜேபி!
அதே பிஜேபிதான் அவருக்கு பலவீனம், பிரதமர் பதவி கிட்டாமல் இருப்பதற்கு!!
ஆனாலும் காவிரிமைந்தன் சார், நிச்சயமாக நமக்கு ஒரு செயல்படக்கூடிய பிரதமர் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை.
என்ன பிரகாஷ் பொஸுக்குன்னு இப்படி சொல்லீட்டீங்க? (இதை படிப்பவர்கள் உங்களை மதவாதி, இந்துத்துவா என்று சொல்லி கமென்ட் போடுவார்கள்)
இங்கு வருபவர்கள் அப்படி இல்லை என்பது என் கருத்து.
I agree with Ajis. not every one who reads this blog are like this. Majority of non hindus in india have only indian mind and thinking like hindus in india. Its a Indian psyche and not Hindu Psyche. We are Indians first.
I was talking to one of my chirstian friend yesterday on advani issue, and he was supporting for Modi. If you remove those people who have party affiliations, the rest of the middle class indian psyche is same. They all are waiting for one good person to rule this country. May be we don’t know who is that today. But we want a change. If it is modi also is ok or someone else. Many are really concerned about the current situation I am sure this reflect positively in next election whenever it happens. Let us pray for a good person to lead this great country and we all stay together as Indians first.
I want Mr Modi the next P.M of INDIA
//வெஜிடேரியன்//
Nobody bothers (except some section of the society) whether he is Vegetarian or Non vegetarian. I would like to bring to your notice that after the Delhi student rape incident, one of the ‘Samiji’ said eating Non Veg is one of the main reasons for this kind of behaviour. Do you agree with this stupid Samiji’s argument ?
After Mrs. Gandhi’s assassination, thousands of sikhs (including women, children and old) were slaughtered by Congress goondas. During that time Delhi was governed by the Union Government. Don’t you think the atrocities against the innocent Sikhs could have been avoided if the government took strict action against those goondas. I guess the same is applicable to Modi too. //ஆனால் -முரடர் (Arrogant).பிடிவாதக்காரர்// But ‘adament and arrogant’ Modi failed to control the aggression against Muslims in 2002. I hope you would have read the ‘vakkumoolams’ of many hindu fanatics involved in the 2002 riots in Tehelka.
//suppose – ஏதோ காரணத்திற்காக நமக்கு மோடியைப்
பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்த alternative என்ன என்று யோசித்தால் –
பயமாக இருக்கிறது//
I too share your concern.
அமைப்பு ரீதியில் மாற்றங்களைக் கொண்டு வராமல் தனி மனிதரை மட்டும் நம்பியிருப்பது எவ்வகையில் பலனளிக்கும் என்பது புரியவில்லை. இதுதான் மக்களின் பலவீனம்!! அவர் வந்தால் சரியாயிடும் இவர் வந்தால் சரியாயிடும் அப்படினு டீக்கடை பெஞ்சில உட்கார்ந்து பேசுற மாதிரிதான் பேசுகிறோம்!!
நண்பர் ரிஷி,
இந்தியாவில் கொள்கையின் அடிப்படையிலோ,
லட்சியங்களின் அடிப்படையிலோ மட்டும் –
எந்த கட்சி இயங்குகிறது
சொல்லுங்கள் பார்ப்போம்..
கார்ல் மார்க்ஸை ஏற்று கட்சி அமைத்திருப்பவர்கள்
கூட, 5 -10 சீட்டுக்களுக்காக –
எந்தவித கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாதிகளுடன்
கூட்டு சேருகிறார்களே …!!
மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் –
முதிர்ச்சி பெற இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது.
குறைந்த பட்சம் இன்னும் 50 ஆண்டுகளுக்காவது
இந்திய அரசியல் – தனிப்பட்ட அரசியல்வாதிகளின்
செல்வாக்கின் அடிப்படையில் தான் செயல்படும்
என்பது என் கருத்து.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மக்கள் முதிர்ச்சி பெற இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறதென்னும் வாதத்தை ஏற்கிறேன் கா.மை.
இந்தியாவில் எக்கட்சியும் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கவேயில்லை. காரல் மார்க்ஸ் தத்துவங்களை கொள்கைகளாக கொண்டு கட்சி ஆரம்பித்த கம்யூனிஸ்டுகள் அந்த தத்துவங்களை காற்றில் பறக்க விட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை கம்யூனிஸ்ட் என்று நாம் கருத முடியாது.
கொள்கைகளை கொண்டு இயங்க முடியாது என்ற கருத்தாக்கத்திற்கு மக்களைப் பழக்கி விட்டார்கள். மக்களின் consciousness இன்னும் பல மடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அதுவரை எல்லாம் இப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது. ஹும்ம்…
//இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக குஜராத்தை
மாற்றிக் காட்டியவர் என்கிற புகழும், பெருமையும்,
இவருக்கு உண்டு.//
மோதி குஜராத்தை எதில் முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கிறார்? Can you prove with data? மோதி என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பம். எல்லோரும் தொடர்ந்து ஒரே பொய்யைச் சொல்லி வருகிறீர்கள்.
Please read this article: http://www.thehindu.com/opinion/lead/poverty-amid-prosperity/article4147478.ece