இது என்னவென்று யாருக்காவது புரிகிறதா ?
கீழே இருப்பது ஒரு விளம்பரம் – முதலில், கடைசி வரி மட்டும் இல்லாமல். எதாவது புரிகிறதா ?
இப்போது கீழே இருப்பது அதே விளம்பரத்தின் முழுத் தோற்றம் –
கடைசி வரியையும் சேர்த்து –
இப்போது புரிகிறதா ?
கடந்த சுமார் 10 நாட்களாக இந்து ஆங்கில நாளிதழில் தொடர்ந்து
தினமும் கால் பக்கத்திற்கு ஒரு விளம்பரம் -ஒரே இடத்திலிருந்து வருகிறது.
மேலே காண்பது –
இன்று வந்த ஒரு விளம்பரம். இந்து நாளிதழின் தமிழ்நாட்டின் அனைத்துப்
பதிப்புகளிலும் ! இந்த விளம்பரத்தின் வாசகங்கள் அனைத்தும் இந்தியில் –
தமிழ் நாட்டில் வெளிவரும் ஆங்கில நாளிதழில் அநேகமாக முழுவதுமாக
இந்தி மொழியில் ஒரு விளம்பரம் வெளிவருகிறது. இது எவ்வளவு
பேருக்குப் புரியும் ?
அது விளம்பரதாரர்களின் கவலை – உனக்கென்ன என்று கேட்கலாம் !
விளம்பரம் வெளியிடப்பட்டிருப்பது நம் பணத்தில்.
உங்கள் காசில் – என் காசில் – நம் வரிப்பணத்தில்.
விளம்பரத்தில் உள்ள வாசகங்களின் தமிழ் அர்த்தம் என்ன என்பதை
முதலில் இங்கு சொல்லி விடுகிறேன்.
———————————-
“பல மைல்களை நாம் கடந்து வந்து விட்டோம் –
இன்னும் பல மைல்களை கடக்க வேண்டும்.
சில கனவுகள் பலித்து விட்டன –
இன்னும் சில கனவுகளை பலிக்கச் செய்ய வேண்டும்.”
———————————
அரசுப் பணத்தில் ஏன் இந்த விளம்பரம் ? என்று கேட்டால் மணீஷ் திவாரி
அடிக்க வருவார்.
முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு –
“அரசுக்கு அந்த உரிமை இருக்கிறது” என்பார்.
எனவே அதை நான் கேட்கவில்லை !
முட்டாள்களே – செய்வதை ஒழுங்காகச் செய்யுங்களேன்.
தமிழ் நாட்டில் வெளிவரும் விளம்பரங்கள் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் –
இல்லையேல் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
புரியாத மொழியில் விளம்பரத்தை வெளியிட்டு – ஏன் விளம்பரத்திற்குரிய
பலனைப் பெறாமல் போகிறீர்கள் என்று தான் கேட்கிறேன்.
இந்த ஆலோசனையை – இந்து நாளிதழே சொல்லி ஆங்கிலத்திலோ –
தமிழிலோ விளம்பரத்தை வாங்கிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் – அவர்களுக்கு இதைப்பற்றி என்ன கவலை ?
விளம்பரத்திற்கான காசு வந்தால் சரி ….!!!
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரையில் –
அவர்கள் காட்டில் வேட்டை தான் !!
இந்த விளம்பரங்களைப் பற்றிப் பேச இன்னும்
நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
பிறகென்ன – பேசுவோமே …!





நீங்க எல்லாவற்றையும் தப்பாகவே பார்த்துக் கொண்டுருக்கீங்க.
ஹிந்தி என்பது தேசிய மொழி. இந்த எழுத்தை பார்க்காதவர்கள் இதன் மூலம் பார்த்துக் கொள்ள இந்த விளம்பரம் உதவும்.
பள்ளியில் அறைகுறையாக படித்தவர்கள் எழுத்துக் கூட்டி வாசிக்க இந்த விளம்பரம் உதவும்.
நமக்கு பிரதமர் என்று ஒருத்தர் இருக்கின்றார் என்பதை இந்த விளம்பரம் உறுதிப்படுத்தும்.
Are you sure that Hindi is Our national Language?from where did you collect that information?
Who said its a national language?. India is a country and not a nation
தமிழிலே போட்டு விட்டால் மட்டும் தமிழனுக்குப் புரிந்து விடப்
போகிறதா?
ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? என்பது வேறு விஷயம்.
ஆனால், தேசிய இனங்களால் அல்லாது பெரும்பாண்மை மக்களால்
பேசப்படுகின்ற, பயன்படுத்தப் படுகின்ற மொழி என்பதில்
யாருக்கும் ஐயமிருக்காது. இருக்க வேண்டிய அவசியமுமில்லை.
தென்னாட்டில் மட்டும் தான், குறிப்பாக தமிழகத்திலே மட்டும் தான்
ஹிந்தி அறியாத பொது ஜனங்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு
ஹிந்தி வேண்டாமென்று தார் கொண்டு பூசிய அரசியல்வாதிகள்
அம்மொழியை அறிந்து தான் வைத்திருக்கிறார்கள். குறைந்த பட்சம்
பேசும் அளவிற்காவது தெரிந்துவவைத்திருக்கிறார்கள். இதில் ஒரு
சாரருக்கு “எங்கள் தலைவருக்கு” பத்து மொழி தெரியும் (எனக்கு
ஒன்று கூடத் தெரியாது) என்கிற கர்வம் வேறு.
உலகம் உள்ளங்கையில் இயங்குகின்ற (தமிழனின் வாய்ப்புகள் தள்ளிப்
போன) இந்த காலத்திலே ஹிந்தியா? தமிழ் நாட்டிலா? ஐய்யோ எல்லாம்
இருண்டு விடுமே என்கிற உங்கள் கவலை வியப்பளிக்கிறது.
விளம்பரத்தின் மொழியாக்கம் அருமை. யாரும் குறை சொல்லிவிட
முடியாது. ஹிந்தியை எங்கு கற்றுக் கொண்டீர்கள். கற்றுக்
கொண்டதினால் பலன் ஒன்றும் அடையவில்லையா?
நண்பர் வெங்கட்ரமணி,
சில விளக்கங்கள் –
1) நான் எந்த மொழிக்கும் விரோதியல்ல.
ஆனால் எதுவும் திணிக்கப்படுவதை எதிர்க்கிறேன்.
ஒருவர் விரும்பியோ, தேவை கருதியோ,
எவ்வளவு மொழி வேண்டுமானாலும்,
எந்த மொழியை வேண்டுமானாலும் – கற்றுக் கொள்ளலாம் –
என்பது என் கருத்து.
2) இந்தி மொழி திணிக்கப்பட்டபோது எதிர்த்தேன்.
ஆனால் – நானாக, தேவை என்று தோன்றியபோது,
சுயமாகக் கற்றுக்கொண்டேன்.
பயன் – சில மாநிலங்களில் (மட்டும்) – சுலபமாகப்
பயணம் செய்ய முடிகிறது, பணி புரிய முடிகிறது.
3) இந்தி பெரும்பாலானவர்கள் பேசும் மொழி அல்ல –
அதிகம் பேர் பேசும் ஒரு மொழி. இந்தியாவின் மக்கள் தொகையில்
சுமார் 30 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள்.
(அந்த இந்தியிலும் பல பிரிவுகள் உண்டு !! ) மீதி 70 சதவீதம் பேர்
பிறமொழிக்காரர்கள்.
4)இந்தி மொழிக்கு மற்ற வட மாநில மொழிகளுடன் ஒருவித
நெருக்கமான உறவு உண்டு (தமிழும் – மலையாளமும் போல ).
அதனால் வட இந்தியா முழுவதும் இந்தி மொழிக்காரர்கள்
என்று ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது.
5) நீங்கள் மேற்கு வங்கத்திற்கு சென்றிருக்கிறீர்களா ?
அவர்கள் – தமிழர்களை விட தீவிரமாக இந்தியை எதிர்க்கிறார்கள் !
இந்தியை வைத்துக் கொண்டு – மேற்கு வங்கத்தில்
எதுவும் செய்ய முடியாது.
6)/// ஹிந்தியா? தமிழ் நாட்டிலா? ஐய்யோ எல்லாம்
இருண்டு விடுமே என்கிற உங்கள் கவலை வியப்பளிக்கிறது./// –
மன்னிக்கவும். நான் இந்த தோரணையில் எழுதவில்லை.
நான் எழுதி இருக்கும் வார்த்தையை (கீழே கொடுத்திருக்கிறேன்)
இன்னுமொரு முறை படித்துப் பாருங்கள் –
————————
“முட்டாள்களே – செய்வதை ஒழுங்காகச் செய்யுங்களேன்.
தமிழ் நாட்டில் வெளிவரும் விளம்பரங்கள் ஒன்று தமிழில் இருக்க வேண்டும் –
இல்லையேல் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
புரியாத மொழியில் விளம்பரத்தை வெளியிட்டு – ஏன் விளம்பரத்திற்குரிய
பலனைப் பெறாமல் போகிறீர்கள் என்று தான் கேட்கிறேன்.”
———————
தமிழ் நாட்டிலேயே இருக்கப்போகிறவர்கள் தமிழும், ஆங்கிலமும்
அவசியம் படிக்க வேண்டும். மற்றவை அவரவர் விருப்பம் – தேவை.
தமிழ் நாட்டிற்கு வெளியே – இந்தியாவிற்கு உள்ளே – பிற மாநிலங்களில்
பணி/தொழில்/வியாபாரம் செய்பவர்கள் – தமிழ், ஆங்கிலம் தவிர –
அந்த குறிப்பிட்ட மாநிலமொழியையும் அறிந்திருக்க வேண்டும்.
இந்தியாவிற்கு வெளியே – ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ, சீனாவிலோ
பணி புரியப்போகிறவர்கள் இந்தியை கற்பதால் என்ன பயன் ?
தாங்கள் வசிக்கப் போகும் நாட்டின் மொழியை கற்பது உபயோகமாக
இருக்குமே !
இந்தியாவைப் பொறுத்த வரை – இந்தியுடன் ஆங்கிலமும்
ஆட்சிமொழியாகத் தொடர்வது மிக மிக அவசியம்.
– இவை என் கருத்துக்கள் .
அவரவர் கோணங்களில் யோசிக்கும்போது
மற்றவர்கள் மாறுபடலாம். அது அவரவர் உரிமை !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
whether we understand or not, it doesnt make any difference with the mango people of this banana republic.
artham purindhu, athan nokkam purindhu, congressku vote poduvargala endral, solla mudyiathu.
artham purindhu adhan ulnokkam purindhu, namadhu vari panam eppadi pogiradhe endru congresskku edhirpa vote poduvargala endral, solla mudyiathu,
namadhu makkal oru puriyadha pudhir… adhanal thaan andre nattin marumaganar andre sonnar, naamellam mango people endru…
i feel very bad now for not learning Hindi,of course it is a very very late thought,The dravida
parties were benefited ,