திருமதி சோனியா காந்தியை
பேட்டி கண்டவர் ………
கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்
தலைவராக பதவி வகித்து வருகிறார்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ –
கட்சியில் அவருக்கு எந்தவித போட்டியோ, எதிர்ப்போ – கிடையவே கிடையாது.
கட்சியில் இருப்பவர்களும் சரி,
கட்சியை விட்டு வெளியேறியவர்களும் சரி,
வெளியேற்றப்பட்டவர்களும் சரி – இவரைக் குறைகூற இதுவரை யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை ! ஏன் அப்படி ?
தேசிய ஆலோசனைக் குழுவின் (National Advisory Committee ) தலைவராகவும் இவரே இருந்து வருகிறார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் இவரே தலைவர்.
ஏகப்பட்ட லொள்ளு செய்யும் லாலு யாதவும் சரி,
சொன்ன வார்த்தையை எந்த காலத்திலும் காப்பாற்றாத,
சற்றும் நம்பகத்தன்மை இல்லாத முலாயம் யாதவும் சரி –
இது வரை இவரை நேரடியாகக் குறை கூறியோ,
குற்றம் சாட்டியோ பேசியதில்லை.
மெத்தப் படித்தவர். உலக அளவில் தனது தனிப்பட்ட திறமையால்
பொருளாதார நிபுணர் என்று அறிமுகமானவர்,
80 வயதைக் கடந்த முதியவர்.
உலக வங்கியில் உயர் பதவியில் பணி புரிந்தவர் – டாக்டர் மன் மோகன் சிங்.
பிரதமர் பதவியில் இருக்கும் இவர்,
அன்னை சோனியா காந்தி என்ன சொன்னாலும்,
ஏனென்று கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்- செயல்படுகிறார்.
முதுகெலும்பில்லாதவர்,
கோழை, நைட்வாட்ச் மேன்,
சொரணை இன்றி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் –
என்றெல்லாம் எதிர்க்கட்சியினராலும், பத்திரிகைகளாலும்
விமரிசனம் செய்யப்பட்டாலும் –
சுயமரியாதை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டாலும் கூட கவலைப்படாமல் –
பதவியில் தொடர்கிறார். சொல்வதைச் செய்கிறார்.
நடைபெற்ற ஊழல்களுக்கெல்லாம் சாட்சியாக இருந்தவர், இருப்பவர் –
என்று மீடியாக்கள் தொடர்ந்து குறை கூறுகின்றன. எதிர்க்கட்சிகள்
தொடர்ந்து குரல் கொடுக்கின்றன. தங்கள் எதிர்ப்பை எல்லா விதத்திலும்
காட்டுகின்றன.
அன்னை சொல்வதைத் தான் பிரதமர் செய்கிறார்.
சுயமாக எதையும் செய்யும் சுதந்திரம் அவருக்கு கிடையாது .
பிரதமரின் அனைத்துச் செயல்களின் பின்னாலும் வேறொருவர்
இருக்கிறார் என்பது முக்காலே மூணு வீசம் பேருக்குத் தெரியும் !
இத்தனையும் நடந்தாலும் –
ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம் –
அன்னை சோனியா இதுவரை –
தனிப்பட ஒரு பத்திரிகைப் பேட்டி,
ஒரு தொலைக்காட்சி பேட்டி கூட கொடுத்ததில்லை !
அரசாங்கத்திற்கு முக்கிய கொள்கைகளை தீர்மானித்துக் கொடுக்கும்
இடத்தில் இருப்பவர், எந்தெந்த சட்டங்களை, எப்படி, எப்போது
உருவாக்க வேண்டுமென்று
உத்திரவு போடும் இடத்தில் இருப்பவர் –
சட்ட மாதிரிகளையும் தயாரித்துக் கொடுப்பவர் –
யார் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்,
யாரை அகற்ற வேண்டும், யாரை மாற்ற வேண்டும் –
கட்சியில், ஆட்சியில் –
யார் எந்தப்பதவியை வகிக்க வேண்டும், யார் யாருக்கு கவர்னர் பதவி,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் யார் முதல் அமைச்சர் ஆகவேண்டும்,
என்று அத்தனை முடிவுகளையும் எடுப்பவர் –
ஏன் பிரதமராக இவரே இருக்க வேண்டுமா
மாற்றப்பட வேண்டுமா என்று கூட தீர்மானிப்பவர் –
ஆனால் அன்னை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பேசுவதில்லை –
வெளியேயும் பேசுவதில்லை.
கட்சிக் கூட்டங்களில் என்ன பேசுகிறாரோ – எப்படிப் பேசுகிறாரோ –
கலந்து கொண்டவர்கள் கூட யாரும் அதைப்பற்றி வாயே திறப்பதில்லை.
121 கோடி மக்களைக் கொண்ட இந்த ஜனநாயக குடியரசுக்கு
முன்னோடியாகவும், இந்த மாபெரும் நாட்டை
நடத்திச் செல்லும் தலவராகவும் இருக்கும்
இவர் எப்படி, ஏன் – இப்படி ஒரு மர்ம மனிதராக காட்சி அளிக்கிறார் ?
இவரை ஏன் யாரும் பேட்டி காண்பதில்லை ?
இந்தியாவில் இல்லாத பத்திரிகையாளர்களா ?
இந்தியாவில் இல்லாத தொலைக்காட்சி ஆசிரியர்களா ?
இந்தியாவில் இல்லாத freelance எழுத்தாளர்களா ?
அதெப்படி – சொல்லி வைத்தாற்போல் – யாரும் முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள் ..?
ஒரு வேளை – பேட்டிக்கு முயன்று – தோற்று விட்டார்களா ?
முயன்று தோற்றிருந்தால் கூட – அதுவே ஒரு செய்தி தானே ?
ஏன் அதைக்கூட எழுத மாட்டேன் என்கிறார்கள் ?
ஆனானப்பட்ட ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் – ஆகியோர்களைக்கூட
பேட்டி கண்டு எழுதியவர்கள் உண்டே !
ஏன் இப்படி ? ….. ஆச்சரியமாக இல்லை ?



எனக்கு இதைவிட ஆச்சரியமான ஒன்றுதான் தோன்றுகிறது.ஒரே ஒரு வோட்டை தன் வசம் வைத்திருக்கும் திரு.காவிரிமைந்தனுக்குத் தோன்றும் இந்த நியாயமான கேள்விகள்,116 MPக்களை தன வசம் வைத்திருக்கும் திரு.அத்வானிக்கு தோன்றாமல் இருப்பது ஏன்?
காஞ்சி பெரியவா, மகா பெரியவா முதல் தேவநாதன்… ஏன் போப்பாண்டவர் முதல் போலி பாதிரி வரை, (போப்பாண்டவரே போலியா என்பது வேறு விஷயம்)..துபாய் மன்னர்..(அடியவர்கடியான் என்கிறாராம்.)முதல் உள்ளூர் ஜமாது தலைவர் வரை எல்லா பூசாரிகளையும் பேட்டி கண்டு , ஏன் குற்றம் சாட்டி கூட அறிக்கை விடுகிறார்கள்…
யாராவது ரங்கநாதரையோ, ..சிவனையோ, அல்லாவையோ .. இல்லை ஏசுவையோ.. பேட்டி கண்டதுண்டா ? குறை சொன்னதுண்டா ?
இன்னும் தொடர்கிறேன்..கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது,அம்மா மு.க வை ஊழலின் மொத்த உருவமாக சித்தரித்து அவர் அடித்த கொள்ளைகளை விவரித்தார்.ஆனால் தான் முதல்வராகி இரு ஆண்டுகள் கழிந்த பின்னும் ,இதுவரை மு.க பேரிலோ அல்லது அவரது குடும்பத்தினர் பேரிலோ ஒரு சிவில் வழக்கு கூட போடவில்லை.இது ஆச்சரியமாக இல்லை?
Robert Vadra பற்றி அத்வானி மௌனமாக உள்ளார்..இது ஆச்சரியமாக இல்லை?
ஒரு இட்லி விற்றால்,அரசிற்கு ரூ.1.86 நஷ்டம் ஏற்படுகிறது, என்ற நிலையில் மேலும் பல மாவட்டங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்படுகின்றன.ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான இட்லிகள் மாநிலம் முழுவதும் விற்க திட்டமிடப்படுகிறது.இது ஆச்சரியமாக இல்லை?
நண்பர் கண்பத்,
மற்ற விஷயங்களில் நீங்கள் கூறுவது சரியே.
ஆனால் – மலிவு விலை இட்லி – உணவகங்களைப் பொறுத்தவரை
நான் அதை வரவேற்கிறேன். நிஜமாகவே இவை வறுமையில் வாடும்
பலருக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்கின்றன.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர் காவிரிமைந்தன்,
நான் அறிந்தவரை அம்மா உணவகங்களில் உண்பது அடித்தட்டு மக்கள் /ஆதரவற்றோர் அல்ல.வசதி படைத்தவர்களே!
நான் இதை மையமாக வைத்து எழுதிய ஒரு கவிதை
உங்கள் பார்வைக்கு…..
ஆலந்தூர் “அம்மா உணவக”த்தில்,
ஆறு இட்லி, ஆறு ரூபாய்க்கு உண்டுவிட்டு வெளிவந்த,
ஆட்டோ ஓட்டுனரை அடையாறுக்கு அழைத்தேன்.
ஊக்கூம்..ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு
அதே 150 ரூபா தான் கேட்கிறார்.
அம்மா நீங்கள் உடனே
“அம்மா ஆட்டோ திட்டம்” தொடங்க வேண்டுகிறேன்.
“எல்லார்க்கும் பெய்யும் மழை”
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஆச்சரியம்… ஆனாலும் உண்மை!
திடீரென்று காணாமலும் போய்விடுகிறார்.
எங்கே போகிறார் என்ன செய்கிறார் அல்லது “யாரை” சந்திக்கிறார்? எல்லாம் மர்மமே!
சு சாமி மட்டும் கொஞ்சம் பேசினார். இப்போ அவரும் கப்சிப்…
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது
தனக்கு வாய்த்த அடிமைகள் நன்றாக குரைக்கும் பொது எஜமானி எதற்கு வாய் திறக்க வேண்டும்?
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். ரொம்ப நல்லவராம். மக்களுக்கு எது தேவையோ அதை மட்டும் செய்வாராம். பத்து பைசா கூடதிருடக்கூடாது என்று ஆட்சி நடத்தினாராம். ஆனால் அவரைச் சுற்றியிருந்த அத்தனை பேர்களுக்கும் ராஜாவை பிடிக்கலையாம். எப்படா இவர் சாவார் அல்லது இவர் பதவியில் வேறு எவராவது வந்து அமர்வார் என்று காத்திருந்தார்களாம்.
பக்கத்து ஊரில் மற்றொரு ராஜா இருந்தாராம். கொலை, கொள்ளை தான் அவரின் முக்கிய கொள்கைகளாக இருந்ததாம். மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் வாழ்ந்தனராம். ஆனால் ராஜாவை சுற்றியிருந்த அத்தனை பேர்களும் செல்வ செழிப்போடு நன்றாக இருந்தார்களாம். இந்த ராஜா எப்போதும் இந்த பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம்.
நீதி
திருடனாய் இருந்தால் சுற்றியிருக்கும் அத்தனை பேர்களும் திருடனாக இருப்பார்கள் அல்லது திருடினால் வாழ முடியும் என்று மாற்றிக் கொண்டு வாழ்வார்கள். நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
சரியான உதாரணம் தான் ஜோதிஜி.
திருட்டுப்பசங்க – இல்லை – இது திருடர் கூட்டம் … !!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
சட்டிஸ்கரில் ஒரு கூட்டம்.- அண்மையில் நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்க.
கூட்டுபவர் அந்த மாநில கவர்னர்.
கலந்து கொள்பவர்கள் – திருமதி சோனியா காந்தி, திரு ம.மோ.சிங்
மத்திய அதிகாரிகள் சிலர், மாநில முதல்வர் ராமன் சிங்,
முக்கிய மாநில அதிகாரிகள் சிலர் – ஆகியோர்..
கூட்டத்தில் “அன்னை” – மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சரியான
பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மாநில உயர் அதிகாரிகளை
கண்டபடி சாடுகிறார்.
சில கேள்விகள் எழுகின்றன –
அரசியல் சட்ட விதிகளின்படி –
சட்டம் ஒழுங்கு மாநில வரம்பிற்குள் வருகிறது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் –
கவர்னர் – மாநில முதலமைச்சரிடம் விளக்கங்கள் கோரலாம்.
ஆனால் இத்தகைய கூட்டுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய அவருக்கு
எந்த சட்டம் அதிகாரம் கொடுக்கிறது ?
மாநில அரசின் உயர் அதிகாரிகளை – நேரடியாகச் சாட,
அரசாங்கத்தில் எந்த பதவியிலும் இல்லாத –
“அன்னை”க்கு எந்த சட்டம் அதிகாரம் கொடுக்கிறது ?
ஏன் எந்த ஊடகங்களும்,
கட்சிகளும் கூடத்தான் –
– இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன ?
யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அரசு பொறுப்பில் இல்லாதவர்களுக்கு
கேள்வி கேட்க மட்டும் உரிமை / அதிகாரம் எங்கிருந்து வந்தது ?
Correct, one other thing i noticed probhably every one might have noticed is, the goverment PAID ads in daily news papers, where manguni photo in one side and other side i always see sonia photo…how come ?
sir, may be it is all ellam “petti” mayam sir. may be she is just doing one thing correctly. she shares “petti – suitcase” with everyone without fail.
as human beings we are conditioned to look always for ” what is in it for me”. i think she addressess this question perfectly with everyone. sometimes money sometimes sometyhing else.. for example, PCI chairman katju – i dont think, he would have taken suitcase, but may be even ebefore he thought about it, he was offered ” Mr. Katju, you deserve to be the PCI chariman…” depending on each person level – like maslaw’s hierarchy – she addresses the need for every one surrounding her… – family – party men, opposition party men – and this great people of india
I also see that she is adamant at times and flexible at times – pranab looked for president post- thought she didnt like, she agreed finally for that…also her DNA and genes are not indian – she is not hypocrite like other indians, not having mango people mind from banana republic like her damaat quoted-
she is white skinned and we indians are conditioned for more than 3-4 centuries that white skinned are more intelligent and we are slaves to them – so automatically we agree to her…
an excellent party adminstrator – she is managing things well under the present circumstances – look at some of the major issues – though things went out of control – if it was somebody else, they wd have run away from the scene – how many major issues in the last 9 years – it is all getting managed – whole media is pro to her and family – barkaha or aranab shouting so loud in news channels – never ever even utter a single word against her –
the govt is still surviving many BJP delhi leaders -dont talk anything about her – as native indians – many of our top leaders ahave failed to understand the indian mentality – but being a foreigener and spent first 20 years outside the country – she has understood the caste / religion / state / language / power matrix of this country so well that our top congress leaders are taking tuition under her –
if all these are wrong – then there could be one other reason that her core group advisory team is really a brilliant brilliant one and her personl advisor ahmed patel is really great – another gujarati managing things on her behalf…
whatever be it, we are destined to be ruled by this family – looks like no other option available – only hope is the silver linining thought – இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
Dear Srini,
மிக அருமையான ஆய்வு.
இதில் யோசிக்க வேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Really a wonder
முக்கியமான நபர் தான். மறுப்பதற்கில்லை.
முக்கியமான நபர்களெல்லாம் பேட்டி அளித்துக் கொண்டா
இருக்கிறார்கள்?
தமிழக முதல்வர் இது நாள்வரை எத்தனை முறை பத்திரிகை
அல்லது ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்?
அல்லது பத்திரிகையாளர்கள் அவரை எளிதில் சந்தித்துவிட
முடிகிறதா?
கலைஞர். கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் (கோஷ்டி) தலைவர்கள்
போல முதல்வர் பத்திரிகையாளர்களை விரும்பி சந்திப்பது
உண்டா?
யார் விரும்பினாலும் விலக்க முடியாத அரசியல்வாதியாகிவிட்ட
கேப்டன் விஜயகாந்த் இதுகாறும் ஊடகங்களுக்கு பேட்டி
அளித்து இருக்கிறாரா?
இவர்கள் பேட்டியெல்லாம் இவர்களது தொலைக்காட்சியைத்
தாண்டி ஏன் வருவதில்லை.
இவர்கள் காக்கும் ரகசியத்தைத் தான் அன்னை சோனியாவும்
காக்கிறார்.
உங்கள் கவனத்திற்கு: அவ்வப்போது (ஆண்டுக்கு ஒரு முறையோ
இரு முறையோ) தலைநகரில் பத்திரிகையாளர்களை அன்னை
சந்தித்திக் கொண்டுதானிருக்கிறார்.
குறிப்பிட மறந்து போனேன்.
திருமதி சோனியா காந்தி, Hindustan Times பத்திரிகை
இதுவரை நடத்திய வருடாந்திர SUMMIT-ல் உரை நிகழ்த்தி
இருக்கிறார். அது சேனல்களிலும் பத்திரிகைகளிலும்
வந்திருக்கிறது.
அவர் பேசாமல் இல்லை. பத்திரிகைகளில் வராமல் இல்லை.
நீங்கள் விரும்பும் சிறப்பு (?!) பேட்டி வேண்டுமானால் இதுவரை
வராமல் இருக்கலாம்.
தலைவர்கள் அளிக்கும் எந்த பேட்டியிலும் “நாம்” விரும்பும்
கேள்விகள் கேட்கப் படுவதில்லை. பெரும்பாலும் அவை
“உப்பு சப்பில்லாமல்” இருக்கும். அரசியல், கொள்கை சார்ந்த
விளக்கங்கள் ஒரு போதும் இருக்காது.
உள்ளதை சொல்லிவிட்டு, WRONGLY INTERPRETTED
அல்லது QUOTED OUT OF CONTEXT என பல்டி அடித்த
சுவாரஸ்யங்கள் அவ்வப்போது நடப்பதை எல்லோரும்
அறிவார்கள்.
அது சரி. அன்னையாரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள்
தான் என்ன?