முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் – சென்னை SUPPRESS கிங்க்ஸ்
குருநாத்+சீனிவாசன் பற்றி மகன் அஸ்வின் பேட்டி …..
முதலில் ஒரு செய்தி –
வெள்ளிக்கிழமை மும்பைக்கு க்ரைம் பிராஞ்ச் விசாரணைக்கு போகும் முன்னர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் குருநாத்துக்கும் எந்தவித ஒட்டோ உறவோ இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக அவருக்கு CSK யுடன் இருந்த தொடர்புகளை அழிக்க / நீக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இண்டியா சிமெண்ட்ஸ் நிர்வாகம் – திடீரென்று குருவிற்கு CSK யில் எந்தவித
பொறுப்பும் கிடையாது என்றும் அவர் வெறும் கௌரவ உறுப்பினர் மட்டுமே (hon.member only ) என்று அறிவித்திருக்கிறது. இதுநாள் வரை அவர் CSK யின் CEO என்றும் டீம் ப்ரின்சிபல் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
குரு கைது செய்யப்பட்டால், CSK தடை செய்யப்படலாமென்ற யூகத்தால் –
வெள்ளிக்கிழமை மாலை குருவின் ட்விட்டர் விவரங்களில் அவருக்கும் CSK க்கும் உள்ள தொடர்புகள் நீக்கப்பட்டன. அவரது முன்னர் இருந்த மற்றும் இப்போதைய ட்விட்டர் பக்கம் கீழே –
தன்னை மட்டைவாரியத் தலைவர் பதவியிலிருந்து கீழே இறக்க
சிலர் செய்யும் சூழ்ச்சி இது. இதற்கெல்லாம் நான் மசிய மாட்டேன்
என்கிறார் மட்டையடித் தலைவர்.
இதற்கிடையில் மகன் அஸ்வின் கொடுத்த பேட்டி ஒன்று சில செய்தித்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் முக்கியமான சில பகுதிகள் கீழே –
————————————
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓவுக்கு -சென்னை, துபாயில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட
தரகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பு இருந்தது என்று அவரது மைத்துனரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு
வாரிய தலைவர் சீனிவாசனின் மகனுமான அஸ்வின் தெரிவித்துள்ளார்.
– கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள பார் ஒன்றில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட அஸ்வின் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மச்சான் மெய்யப்பன் குறித்து அஸ்வின் கூறுகையில்,
குரு சென்னை மற்றும் துபாயைச் சேர்ந்த பல்வேறு பிரபல தரகர்ளுடன் தொடர்பில் இருந்தார்.
இந்த தொடர்பு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பில்
இருந்தே இருந்தது. சைட் பிசினஸாக துவங்கியது ஆண்டுகள் செல்ல செல்ல பெரிய வியாபாரமாகவிட்டது.
குரு எனது தந்தையின் வியாபாரத்தில் நிலையான இடத்தைப் பிடித்து
வருகிறார். அவரது மனைவியும், எனது சகோதரியுமான ரூபா
என் தந்தையின் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸின் எக்சிகியூட்டிவ் டைரக்டராக உள்ளார்.
குரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருக்க சம்மதித்தார்.
எனது தந்தை சீனிவாசன் தனது விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப
துபாயில் 4 மணிநேரம் செலவிடுவது வித்தியாசமாக இல்லை?
அது ஏன் அவர் குவைத், ஷார்ஜா அல்லது வேறு எங்காவது எரிபொருள்
நிரப்புவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனக்கும் என் தந்தைக்கும் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்க
குரு எனது பெற்றோரின் மனதை கெடுத்து வருகிறார்.
—————————————–
இத்தனை நடந்தும், ரசிகர்களின் போக்கில் எந்த மாறுதலும் இல்லை.
இந்த சூழ்ச்சிகளில் ரசிகர்கள் சிக்கப்போவதில்லை.
ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரங்களை மைதானத்திற்கு
வந்து பாருங்கள் என்று சவால் விடுகிறார் மட்டையடித் தலைவர்.




ஏற்கனவே ட்வீடரில் யாரோ ஒரு புண்ணிவான் எழுதினது போல, “நாளை மட்டையடி தலைவர், குருநாத் என் மருமகன் அல்ல என் மகள் குடும்பத்தின் கௌரவ உறுப்பினர் என்று சொன்னாலும் சொல்லலாம்”.
ஆறு பந்துகள் (?1) கொண்ட ஒரு ஓவரை வீச அறுபது
இலட்சமென்றால், 40 ஓவர்கள் அடங்கிய ஒரு பந்தயத்திற்கு
சூதாடிகளின் பங்களிப்பு மட்டும் இரண்டு கோடியே நாற்பது
இலட்சம்.
சூதில் ஈடுபடுவோர் செய்த முதலீடு, அவர்கள் எதிர்பார்த்த
லாபம், சூது நடத்துபவர், இடைத்தரகர் மற்றும் கடைத்தரகர்
ஆகியோருக்கு கிடைக்கும் (அல்லது எதிர்பார்க்கும்) லாபம்
எவ்வளவு?
அது சரி. இவ்வளவு பணத்தைக் கொண்டு “இவர்கள்” என்ன
செவார்கள்?
பெரும் பணக்கார குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வேறுபாடுகள்
இருப்பின் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வீசுவது புதிதல்ல.
அம்பானிகள் தொடங்கி எல்லோரும் செய்வதுதான். நாம், நெருப்பு
இல்லாது புகையாது என எடுத்துக் கொள்ள வேண்டும். அஸ்வின்
கருத்துகளுக்கு அவ்வளவு தான் மதிப்பு.
பாராட்டோ செருப்படியோ யாரிடமிருந்து கிடைக்கிறது என்பதில்
இருக்கிறது விஷயம். “என்ன ரொம்ப நல்லவன்னு சொன்னம்மா”..
என்கிற வடிவேலுவின் காமெடியை·நீங்கள் எல்லோரும் கேட்டிருக்க
கூடும்.