இந்தியாவின் – பொறுக்கிகளின் லீக் –
சிமெண்ட் மூட்டையின் சூதாட்ட கூடாரம்……
தலைப்பைப் பார்த்ததும் சிலர் புருவத்தை உயர்த்தலாம் !
இது தவிர்க்க முடியாதது. அந்த அளவிற்கு கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறது.
குடி-கூத்து, விலைமாதர் உறவு, சூதாட்டம், கள்ளப்பணம், கறுப்புப்பணம்,
மோசடி, ஏமாற்றுதல் –
இத்தனையையும் செய்பவர்களை வேறு எப்படி அழைக்க முடியும் ?
சிமெண்ட் வர்த்தகத்தில் கூட்டணி போட்டு கொள்ளை அடித்த
பெருமகனுக்கு இப்போது கிரிக்கெட்டில் கூடுதல் வருமானம் !
அதை இது மிஞ்சுமா இல்லை இதை அது மிஞ்சுமா – அவர்களுக்கே
வெளிச்சம். நம்மால் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாத
அளவு பணம்.
இரண்டு பத்து வருடங்கள் – மராட்டிக்காரர் –
சர்க்கரை ஆலைகளின் அசல் சொந்தக்காரர் –
அஜீரணம் ஏற்படும் அளவிற்கு சாப்பிட்ட பிறகு,
இவ்வளவு வருடங்களாக ஒத்துழைப்பு தந்ததற்காக,
இப்போது தமிழ்நாட்டு சிமெண்டு மூட்டைக்கு சான்ஸ்
கிடைத்திருக்கிறது.
விஷயம் ஏற்கெனவே, பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது தான் என்றாலும்,
3 மட்டையடி வீரர்கள் கைதுக்குப் பிறகு பல புதிய பரிமாணங்கள்.
முதலில் இந்த சூதாட்டம் பற்றி சுருக்கமாக ஒரு விஷயம் –
முதல் மட்டத்தில் பெட்டிங் கம்பெனி –
(இதன் பொறுப்பாளர் – சிமெண்ட் மாப்பிள்ளை. )
அதையடுத்து –அவர்களுக்கு ரிப்போர்ட் செய்யும் புக்கிகள் –
(பாதி பேர் ஏற்கெனவே துபாய்க்கு ஓடி விட்டார்கள் ! )
அவர்களுக்கு கீழே ஏஜெண்டுகள் என்று செயல்படுகிறார்கள்.
(அவர்களில் ஒருவர் தான் பாவம் – தாராசிங்கின் மகன் விந்தூ சிங் ! )
பல ஆண்டுகளாக, பல்வேறு விதங்களில் பெட்டிங் கட்டிப் பழக்கப்பட்டவர்கள்
ஏஜெண்டுகளை அணுகுகிறார்கள். ஏஜெண்டுகளை ஒருங்கிணைக்கும் புக்கி,
அவர்களிடம் ஒரு பட்டியலைக் கொடுப்பார்.
அதில் பல்வேறு options / choices இருக்கும்-
குறிப்பிட்ட மேட்சில் எந்த அணி வெல்லும் அல்லது தோற்கும் –
இத்தனாவது ஒவரில் இத்தனை ரன் களைத் தாண்டுமா – தாண்டாதா –
என்கிற மாதிரியெல்லாம் !
அவை ஒவ்வொன்றிற்குமான தொகையும்( பர்செண்டேஜ் ) நிச்சயிக்கப்பட்டிருக்கும்.
அதை சூதாடுபவர்களிடம் காட்டி அவர்களின் விருப்பப்படி தேர்வு செய்ய
சொல்வார்கள். அதற்கான பணம் வசூல் செய்யப்படும்
அப்படிக் கிடைத்த மொத்த தொகையும் புக்கிகளின் மூலமாக
பெட்டிங் கம்பெனிக்குப் போகும். அதே போல், மேட்ச் முடிந்ததும்,
கம்பெனி புக்கியிடமும், புக்கி ஏஜெண்டிடமும் பணம் கொடுத்து –
இறுதியில் பணம் பெட் கட்டியவர்களுக்குப் போய்ச்சேரும்.
ஏஜெண்டுகளுக்கும், புக்கிகளுக்கும் – இரண்டரை சதவீதம் கமிஷன்.
அதாவது 10 லட்சம் வசூல் செய்தால் 25,000 ரூபாய் கமிஷன் !
இவர்கள் எல்லாருமே சூதாடுபவர்களும், அதற்கு ஒத்துழைப்பவர்களும் மட்டுமே.
இது எதுவுமே மேட்ச் பிக்சிங் அல்லது ஸ்பாட் பிக்சிங் அல்ல.
அதைச் செய்பவர்கள் தான் அசல் சூத்ரதாரிகள்.
மட்டை வீரர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு –
அவர்களுக்கு வேண்டியதை, பிடித்தமானவற்றை – சப்ளை செய்து
வழிக்குக் கொண்டு வருவது. பின்னர் தாங்கள் சொல்லும் நேரங்களில்
தாங்கள் விரும்பும் வகையில் அவர்களை விளையாடச்செய்வது.
25-30 வயதிற்குள் விண்ணளாவும் புகழ், பத்திரிகைகளில் – தொலைக்காட்சிகளில்
மணிக்கணக்கில் போட்டி போட்டுக் கொண்டு பேட்டிகள், உலகம் பூராவும்
விமானப்பயணம், நட்சத்திர ஓட்டல்களில் ராஜமரியாதையுடன் சகல
வசதிகளையும் அனுபவித்தல் இத்தனையும் கொடுத்தும் போதவில்லை –
இந்த நாய்களுக்கு.
விளையாட்டு சங்கம் கொடுக்காத சில வசதிகள் – அழகிய பெண்களின் சகவாசம், மேற்கொண்டு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கள்ளப்பணம் – இவற்றிற்காக சோரம் போகிறார்கள்.
இதற்கு காரணம் விளையாட்டு வீரர்களின் பலவீனங்கள் மட்டுமா ?
கோடிக்கணக்கிலும் – அதற்கு மேலும் மேலும் – கணக்கில் வராத
கள்ளப்பணம், கருப்புப்பணம் சம்பாதிக்க நினைக்கும் சர்க்கரை /
சிமெண்ட்டு மூட்டைகளும் – அவர்கள் மூலம் பணம் பண்ணும்
பின்னணி அரசியல்வாதிகளும் – மட்டுமா ?
இந்த நாட்டின் கிரிக்கெட் மோகம் பிடித்த லட்சக்கணக்கான இளைஞர்களும்
கூடத்தான். அசலுக்கும், நகலுக்கும் வித்தியாசம் காண முடியாத
இந்த இளைஞர்கள் – கிரிக்கெட் வீரர்களை ஹீரோக்களாக
கொண்டாடுவதும், தொலைக்காட்சி விளம்பரங்கள் அவர்களை
கிரிக்கெட் வெறியராக மாற்ற அனுமதிப்பதும் கூடத்தான்.
ஒரு தனிப்பட்ட மட்டையடி வீரருக்கு வருடத்திற்கு 40 கோடி ரூபாய் தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலம் மட்டும் வருகிறதென்றால் என்ன அர்த்தம் ?
அந்த அளவிற்கு நம் இளைஞர்களில் பலர் –
இந்த விளையாட்டின் மீது வெறியாக இருக்கிறார்கள் என்று தானே ?
3 மட்டையடிகள் பிடிபட்டவுடன், மட்டை சங்கத்தலைவர் கூறுகிறார் –
மட்டை சங்கத்திடம் சூதாட்டங்களை கண்டுபிடிக்கும் வசதிகள் இல்லை.
நாங்கள் போலீஸ்காரர்களைப் போல் போன்களை ஒட்டுக் கேட்க முடியாது.
மட்டை வீரர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு ஒற்றரை நியமிக்க
முடியாது – என்று.
கேரள மட்டை கைது செய்யப்பட்டவுடன் –
திருவனந்தபுரத்தின் பெயரில் ஒரு டீமை தன் 50 வயது காதலிக்காக
வாங்க முற்பட்டு மத்திய மந்திரி பதவியை இழக்க நேர்ந்த —
(வழக்கம் போல் 6 மாதங்களில் மக்கள் விஷயத்தை மறந்தவுடன்
அவர் ஜாம் ஜாமென்று மீண்டும் மத்திய மந்தி ஆகி விட்டது
அவர் சாமர்த்தியம் ! )
….. ரூர் சொன்னார் – இப்போது போலீசார் சொல்வது மட்டும் தான் தெரியும்.
அதை வைத்து கேரள மட்டையை யாரும்
மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது. சட்ட விதிகளின்படி,
குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்
நிரபராதியாகவே கருதப்பட வேண்டும் – என்று.
ஜீரோ லாஸ் மந்திரி( அவர் தானே இப்போது சட்டத்திற்கு பொறுப்பு )
சொன்னார் – மட்டை வாரியத்துடன் கலந்தாலோசித்து மட்டை சூதாட்டத்திற்கு எதிராக கூடிய விரைவில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும் ! – என்று.
(அப்படியென்றால் என்ன அர்த்தம் ? சட்டமே சொல்கிறதாம் – இப்போது
இருக்கும் சட்டங்களின் கீழ் மேற்படி சூதாட்டத்திற்கு வழக்கு தொடுக்க
முடியாது என்று – அப்படித் தானே அர்த்தம் ? )
இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 420 என்று ஒன்று இருப்பதை
சட்ட மந்திரியே மறைத்து விட்டால் – மன்னிக்கவும் மறந்து விட்டால் –
அப்புறம் இந்த வழக்கு எங்கு போய் முடியும் ?
போகாத ஊருக்கு வழி சொல்ல என்றே மத்தியில் பல மந்திகள்
இருக்கின்றன போலும் !
கடைசியாக வந்த செய்தி – சிமெண்ட் மாப்பிள்ளைக்கு புலன் விசாரணை
அமைப்பு விசாரணைக்காக வரச்சொல்லி சம்மன் அனுப்பியதாகவும்,
அதற்கு ” தான் முக்கியமான வேலைகளில் பிஸியாக இருப்பதாகாவும்,
முடிந்தால் அடுத்த வாரம் பார்க்கலாம்” என்றும் பதில் கூறி விட்டதாகவும்
செய்தி வந்திருக்கிறது.
இவர்களுக்கெல்லாம் எந்த அளவிற்கு-
அரசியல் செல்வாக்கும், ஆள்பலமும்,
பணபலமும் இருந்தால் இப்படி எல்லாம் ஆட்டம் போட முடியும் ?
பி.கு. – இதைப்பற்றி எழுத இன்னும் பல விஷயங்கள், தகவல்கள்
இருக்கின்றன. கோபமும், எரிச்சலும், இயலாமையும் என்னை எழுத விடாமல் செய்கின்றன. சரி – அதான் இவ்வளவு நண்பர்கள் இருக்கிறீர்களே
உங்கள் பங்குக்கு பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.



யாரும் சிக்க மாட்டார்கள்.!
கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூட்டணி அது.
எல்லா இடங்களிலும், எல்லாரிடத்தும் பணத்தைப் பொழியும் மாயம்
அவர்களிடம் உண்டு.
இது சும்மா – பாவ்லா.. கொஞ்ச நாள் பரபரப்பாக செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்கும்.2ஜி மாதிரி.
இவங்களை நம்பி பைத்தியக்காரத்தனமாக 1500 /2000 ரூபாய் கொடுத்து
டிக்கெட் வாங்கி ஸ்டேடியம் போகிறார்களே. அத்தகைய மக்கள் இருக்கும் வரை
இவர்களை யாரும் அசைக்கக் கூட முடியாது.
கோவம் தணிந்த பிறகு மீதி இருப்பதையும் எழுதுங்கள் சார்.
ஜீரோ லாஸ், zuzu பேசியுடன் பல கோடிகள் கை மாற்றியதாகவும், அன்னைக்கு ஏற்கனவே இரு மந்திகள் பதவி போய் கட்சி துர்நாற்றம் எடுக்கும் தருணத்தில் மேலும் ஒரு மந்தியை இழக்க தயாரில்லை.எனும் நிலையில், திட்டமிட்டே இந்த பூதத்தை கிளப்பி நம்மை போன்ற இ-வாயர்களை திசை திருப்புபது போல் தெரிகிறது. சி பி ஐ யே யாருடையதோ எடுபிடிகள் போல் செயல் படுகிறது என உச்ச நீதி மன்றமே சொல்லும் போது டெல்லி போலீசு எம்மாத்திரம்.
//..திட்டமிட்டே இந்த பூதத்தை கிளப்பி நம்மை போன்ற இ-வாயர்களை திசை திருப்புபது போல் தெரிகிறது…//
இந்த மரண மொக்கை காமெடிய விடுத்து மறு பிறவி பற்றிய Many Master Many Lives புத்தகதையும் அதையொட்டிய மற்ற புத்தகங்களையும் விவாதியுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்கள் கருத்து வாசகர் கருத்து என எழுதினால் உங்களூக்கும் வாசகர்களாகிய எங்களுக்கும் மறு பிறவிக்கும் பயன்படும்.. போகும் வழிக்கு புண்ணியமும் கிடைக்கும். அதை விடுத்து சாக்கடை பற்றி எழுதி என்ன பயம் ?
எதுக்கு ஸார் இவ்வளவு கோபம்!
இப்போ பிடிபட்டது சும்மா கண் துடைப்புதான்.
நாம பிடிப்பது போல பிடிப்போம்… நீங்க செய்வதை செய்துகொண்டே இருங்க என்பது போல ஒரு சிக்னல்.
ஆனாலும் அந்த போலீஸ் அதிகாரியும் அவரின் குடும்பத்தினரும்தான் பாவம். கிட்டத்தட்ட 100 மணி நேர பதிவுகள் மற்றும் எஃப் ஐ ஆர் என்று மெனக்கெட்டு தன் வாழ்க்கையையே முடித்துக்கொண்ட… “பிழைக்கத்தெரியாத அதிகாரி”
வாழ்க கிரிக்கெட்!!!
FB
இந்தியா சிமென்ட்ஸின் அணிதான் சென்னை அணி. அதன் உரிமையாளர் சீனிவாசன். அவருடைய அணி சென்னை அணி. அதே சீனிவாசன் பிசிசிஐ தலைவர். நலன்களின் முரண்பாடு (Conflict of Interest) என்பது பற்றியெல்லாம் இங்கே எந்தக் கவலையும் இல்லை.
மும்பை அணியின் உரிமையாளர் ரிலையன்ஸ். இமாசலப்பிரதேசத்தில் அனுமதிக்கப்பட்ட ஆலைகளை ஏன் இன்னும் இயக்கவில்லை என்று ஐந்து சிமென்ட் ஆலைகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்புகிறது. அதே வேகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு புதிய ஆலைக்கு அனுமதியும் அளிக்கிறது. அவ்வளவு செல்வாக்கு ரிலையன்ஸுக்கு.
சரி, செல்வாக்கு மிக்க இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இங்கே என்ன உடன்பாடு சாத்தியமாகியிருக்கும்…
இந்தியா சிமென்ட் வடக்கே கால் பதிக்காமல்தான் இருந்தது. இப்போது வடக்கிலும் முயற்சி செய்தது. ராஜஸ்தானில் ஓர் ஆலையை வாங்கியது. டீலர்கள்கூட முன்வரவில்லை. அப்போது ஒரு யோசனை செய்தது. சிமென்ட் மூட்டைகளின்மீது சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்தை போட்டது. சென்னை அணி ஆடும் ஆட்டங்களுக்கு இலவச டிக்கெட்டும் அளித்தது. அவ்வளவுதான். 10 சதவிகித சந்தையைப் பிடித்துவிட்டது. தென்மாநிலங்களில் இருக்கும் இந்தியா சிமென்ட்டின் இலக்கு ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேம்.
புதிதாக சிமென்ட் துறையில் இறங்கிய ரிலையன்ஸ், பின்வரும் மாநிலங்களுக்குள் நுழையும் வகையில் மாநில எல்லைகளில் ஆலைகளை அமைத்துள்ளது – மகாராஷ்டிராவில் உள்ளது சத்திஸ்கர், ஒடிஷாவுக்கு. மத்தியப்பிரதேத்தில் உள்ளது உத்திரப்பிரதேசம், பிகாருக்கு. இமாசலப்பிரதேசத்தில் கட்டப்போவது ஜம்மு கஷ்மீர், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு.
ஆக, இரண்டு நிறுவனங்களும் தமக்குள் இந்தியாவைப் பங்குபோட்டுக்கொண்டுள்ளன. அது மட்டுமில்லை. தெற்கே கால்பதிக்க தீவிரமாகத் திட்டமிட்டது ரிலையன்ஸ். ஆந்திரத்தில் நெருக்கடியில் இருந்த சிமென்ட் ஆலையை வாங்கவும் திட்டமிட்டது. 2000 கோடியில் வாங்கும் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு ஸ்ரீராம் குழுமம் கடனுதவியுடன் அந்த ஆலை இயங்குகிறது. இப்போது மார்ச் மாதம் மீண்டும் அந்த ஆலையின் பங்குகள் வேறொரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் ஆலை திட்டத்தை ரிலையன்ஸ் இழுத்துக்கொண்டே இருக்கிறது.
ஆக, தெற்கே நுழைய முனையும் ரிலையன்ஸ், வடக்கே நுழையும் இந்தியா சிமென்ட்ஸ் இரண்டுக்கும் என்ன ஒப்பந்தம் ஆகியிருக்க முடியும்…. தெற்கே இனிய நுழைய மாட்டேன் என்று ரிலையன்ஸ் ஒப்புக்கொண்டிருக்கலாம். ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களுடன் நிறுத்திக்கொள்வதாக இந்தியா சிமென்ட்ஸ் ஒப்புக்கொண்டிருக்கலாம்.
இணையத்தில் இதுகுறித்து தேடிக்கொண்டிருக்கையில் கிடைத்த பொன்மொழி இது – “Corporates have not invested in IPL for fun. They mean serious business,” says Prasoon Joshi, CEO & chief creative officer of McCann World Group India.
ஐபிஎல்-லும் கிரிக்கெட்தான் என்று நாம் மயங்கிக் கிடக்கும் வரை, இவர்கள் வியாபாரத்தை நடத்திக்கொண்டுதான் இருப்பார்கள். நீங்களும் நானும் வேலைகளைவிட்டுவிட்டு அரங்கத்திலோ வரவேற்பறையிலோ ஏமாந்து கொண்டிருப்போம்.
நிறையத் தகவல்கள் !
நன்றி ஜோதிஜி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
யாரோ விளையாடினான் –
அல்லது விளையாடவில்லை.
எவனோ பெட் கட்டினான்.
எவனோ பணம் பண்ணினான் –
எவனோ கோட்டை விட்டான்..
இதில் நமக்கென்ன நஷ்டம் ? என்று பொதுமக்கள் indifferent ஆக இருக்கும் வரை நிலை இப்படித் தான் இருக்கும்.
விளையாட்டரங்கத்திலும்,
வெளியிலும், டிவி யிலும் செய்யப்படும்
விளம்பரங்கள் எத்தனை கோடி ?
அந்த செலவுகள் indirect ஆக விளம்பரம் செய்யப்படும் – அன்றாடம் நாம் உபயோகப்படுத்தும் – பொருட்களின் மீது தானே சுமத்தப்படுகின்றன ? கடைசியில் அந்தப்பணம் நம்மிடமிருந்து
பிடுங்கப்பட்டது தானே ?
இத்தனைக்குப் பிறகும், இது போன்ற சூதாட்டங்களை தங்களால்
தடுக்க இயலாது. அதற்கான சக்தியோ, வசதியோ எங்களிடம் இல்லையென்று
இந்திய மட்டையடி வாரியத் தலைவர் சொல்லும்போது –
முக்கியமாக அவரது மருமகனே இதில் முக்கிய புள்ளியாக
அடையாளம் காட்டப்படும்போது – ரத்தம் கொதிக்க வேண்டாமா ?
ஆட்டத்தின் மூலம் கோடி கோடியாக பணம் பண்ணுவோம் –
ஆனால் அதில் தவறு நிகழ்ந்தால்
அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று
சூடு சொரணை இல்லாமல் சொல்பவர்களை
மத்திய அரசாங்கம் எப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறது?
கிரிக்கெட் வாரியத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றோ-
கிரிக்கெட் வாரியம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் ( RTI act )
கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றோ – மத்திய அரசோ, ஆளும் காங்கிரசைச் சேர்ந்தவர்களோ ஏன் குரல் கொடுக்கவில்லை ?
அவர்களில் சிலருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்ற தோற்றம் உருவாகி இருப்பதையும் பொருட்படுத்தாமல் இருப்பதன் பின்னணி என்ன ?
மூடி மறைக்கும் வேலை தானே நடக்கிறது ?
சீறி எழ வேண்டிய மக்கள் — முக்கியமாக கிரிக்கெட்டை ரசிக்கும் இளைஞர்கள் – இவை எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இருக்கும் வரை –
இவர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள்.
காவிரிமைந்தன்
பாரத தேசத்தில் தற்பொழுது நிகழும் ஊழல்களை A முதல் Z வரை பட்டியலிட்டால்,(A மிகப்பெரிய ஊழல்;Z மிக சிறிய ஊழல்) IPL K யைத்தாண்டி இருக்கும்.அறுபத்தைந்து ஆண்டுகளாக பொதுதேர்தல்கள் என்ற பெயரில் சூதாட்டம் ஆடி ஆடி ருசி கண்ட நம் மக்களுக்கு இது ஒரு பெரிய சூதாட்டமாகவும் தெரியவில்லை.
மக்களுக்கு இப்பொழுது தேவை …பணம்,கேளிக்கைகள்,இலவசங்கள்,சாராயம்.
இதைகொடுப்பவர்களே ஆட்சியை பிடிப்பார்கள்.
தேர்தல் இருக்கும்வரை நாடு உருப்படாது.
.
இந்தியாவில் கிரிக்கெட் GENTLEMAN GAME என்கிற நிலை தவறி
பல காலமாகி விட்டது.
ஏதோ சிமெண்ட்டுக்கு மட்டும் தான் சிண்டிகேட் இருப்பது போல
நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். வியப்பாக இருக்கிறது.
தமிழ் நாட்டு முத்தையாவுக்கு DALMIYA வைரி. டால்மியாவிற்கு
பவார் வைரி. பவாருக்கு இருவரும் வைரிகள். பவாரின்
செய்கைகளுக்கு ஒப்ப “பணி”யாற்றி வந்த லலித் மோடி இப்போது
எங்கு இருக்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. இந்த மோடி
தான் KAPIL DEV-ன் ICL-க்கு போட்டியாக IPL-ஐக் கொணர்ந்தவர்.
இவர்களின் பணபலம் மற்றும் கூட்டணி இன்னும் பல
காரணங்களினால் ICL கலைந்து காணாமல் போய்விட்டது.
பவாரின் பார்வை வேறுவிதமாக போனதால், மோடி நாடு
கடந்து போய் விட்டார். பவாரின் கடாக்ஷத்தால் சீனுவாசன்
இந்தியாவில் கிரிக்கெட்டைக் கண்ட்ரோல் செய்து கொண்டு
வருகிறார்.
இந்திய அரசுக்கும் BCCI-க்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை
என வேறு விதமான பிரச்சனைகள் வரும்போதெல்லாம்
இவர்கள் எக குரலில் பாடுவார்கள். கோர்ட்டுகளில் அபிடவிட்
தாக்கல் செய்வார்கள். அரசும் எந்த தீவிர நடவடிக்கையும்
எடுக்காது. அவ்வப்போது மிரட்டுவார்கள். எதற்காகவோ?
எல்லா மாவட்ட கிரிக்கெட் சங்கத்திலும், பெரும் பணக்காரர்களும்
அரசியல்வாதிகளும் முக்கிய பொறுப்புகளுக்கு வந்து, சங்க்கத்தின்
பிரதான இலக்கை மாற்றியமைத்து விட்டார்கள்.
இவர்களின் இலக்கு “பணம்” ஒன்றைத் தவிர வேறு என்னவாக
இருக்க முடியும்.
நிற்க, இந்த அமைப்புகளுக்கு அடங்கியும், சில நேரங்களில்
அடங்காமலும் CRICKET WRITERS’ SYNDICATE-ம் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது. ஆட்டக்காரர்கள் குறித்தான இவர்களது
விமரிசனங்க்களை வாசிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். ஒரே
ஆட்டக்காரரைக் குறித்து கடுமையாக விமர்சித்தும், எல்லா
வகையிலும் ஆதரித்தும் “ஒரே” ஆள் எழுதுவார். விளைவாக
ஒருவனின் ஆட்டம் ஆட்டம் கண்டுவிடும். அல்லது மீள் நீட்சிப்
பெறும். பல நேரங்களில் “இருந்துவிட்டுப் போகட்டும்” என்பதாக
எழுதுவார்கள்.
இதுவும் பணத்துக்குத் தான்.
அருமை. தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.
i have a serious doubt. Yes all are corrupt in cricket. But there is some background game going on to bring down srinivasan. May be it is sarath pawar, lalit modi… if there is a corruption then for sure DMK and kedi brothers needs to be there… y their names are not appearing.. y not probe sachin.. how many games he lost in 99 runs… is that one run to make it 100 is fixed…looks like every game is fixed….also the hwo media is now focusing on IPL corruption… indians with short term memory loss forgot all other govt scams…. is there a sonia hand behind this whole issue to cover up congress scams… peoples attention diverted totally….and BJP is very busy with in fighting… that old man advani has sweared on GODs name to bring down the whole party.. he is going to die only after that…
Srini is a curd rice thats why he is supporting another curd rice India Cements Srinivasan.
We do not have caste leanings. Srinivasan and his son-in-law are corrupt and arrogant. One is arrested. Another will loose his post.
Whole Indian politicians are corrupt – KK, Maran and your caste JJ.
Hello AAR, all i said was that there is something more to the game. You immediately gave judgement and brought one whole community in to the discussion. luckily, you didnt include my family, my grand father and fore fathers.. what an arrogance… anyways, GOD Bless you.
Dear AAR,
Normally I see matured “pinnoottangal” in this blog.
I am proud of those people who are visiting this blog regularly and also
making value additions by offering informative and interesting responses.
However, I am sorry to say that your “pinnoottam” is disappointing.
please avoid this sort of comments.
I will be happy if negative comments on any caste, community or
religion is avoided.
Let us have fruitful and interesting discussions.
-with all best wishes,
Kavirimainthan
All teams involved in IPL are dangerous and corrupt.
1. Deccan Chargers – Deccan Chronicles – Default Bank loans. Bad Corporate Governance.
2. Sunrisers Hyderabad – Suntv – Involved in 2G scam.
3. Mumbai Indians – RIL – Involved in all bad practices – latest swindling our money in gas basins in Krishna-Godavari delta.
4. CSK – India Cements – six major Cements companies fined 6000rs for cartel and price fixing including ACC, Birla, India Cements.
5. Kochi Tuskers – Sashi Tharoor – Corrupt money invested for his new wife.
6. Pune Warriors – Sahara group – SEBI fighting for last 5 years to return investors 25000 crore money back to them.
7. Rajasthan Royals – Modi – His benamy team – with investment from shady people from Dubai.
8. Punjab XI – Ness Wadia for his girl friend Preity Zinda – Bombay Dyeing group – grandson of Jinnah – investments from ISI.
9. Delhi Daredevils – GMR – Kicked out from Maldives for cheating in Maldives Airport but they are still cheating Indians in Delhi Airport. 2000 crore land got for just 5 crores.
10. Royal Challengers – Vijay Mallya – Bank Default – bad corporate governance.
Missed out Kolkata Night Riders – Shah Rukh and his friend from Dubai – Chotta Shakeel.
Dear Kavirimainthan sir,
if you see the latest news today, you can clearly see conflict of interest between sarath pawar, jagmohan dalmiya, rajeev shukla and one of the bCCI ex-treasurer…. Yes. BCCI srinivasan is corrupt, but there is clearly a big team behind this whole episode trying to bring him down… may be they didnt get their share from him… who is going to win depends on how much money will move from one side to another. better this IPL gets banned for gods sake.
regards
srini
Yes Srini.
I agree with you.
It is no more gentlemen”s play.
It is an assembly of scoundrels and frauds.
Better IPL itself is banned.
And also too much of importance given to
the cricket players – should be avoided.
with all best wishes,
Kavirimainthan
//.. y their names are not appearing.. y not probe sachin.. how many games he lost in 99 runs… is that one run to make it 100 is fixed…looks like every game is fixed….also the hwo media is now focusing on IPL corruption… indians with short term memory loss forgot all other govt scams…. is there a sonia hand behind this whole issue to cover up congress scams… peoples attention diverted totally….and BJP is very busy with in fighting…//
//..All teams involved in IPL are dangerous and corrupt.
1. Deccan Chargers – D…//
Srini, AAR, ur both commetns are vaulble and eye opener for those who belives cricketers.
Even thou AAR, i cant accept your previous comment based on community, he is revealing more.. than what was done in this post. i cant understand how u arrived to the, conclusion that he is supporting to India cement srinivasan.
if so then he should talk in an another language like, .. ” There are some 1 or 2 doing mistake, but till cricket is good, we have to see the good side and try not to support bad..”
but here.. he is telling about … sachin’s match also fixed one.. then there is no cause to tell he is supporting india cement srinivasan.
thanks vinoth and kaverimainthan sir…
dear AAR, let us be friends… i am sure if you are a southindian , you would have eaten curd rice atleast once in your life time, or will be eating in the future, when you next time eat curd rice, DONT remember this Srini. I am saying “don’t” because, when you say dont, human mind will ensure that you remember me…by the way, eating curd rice has many benefits, i googled and i am giving you just two links. its interesting read….you may find more in the web
http://indiapulse.sulekha.com/forums/health_curd-rice-myth-or-truth
http://www.indiaparenting.com/health/324_2859/health-benefits-of-curd.html
what is your favourite food? if you would like to share in this blog, then please tell. you can continue call me as curd rice srini…i dont mind, i know what i am. Also, for your info, i dont like curd rice, many people dont eat these days…we all have changed to roti, naan and tandoori items long back…
please continue sharing your thoughts and comments in this blog. its a healthy way to exchange information. I agree with you totally that Indian cements curd rice srinivasan, and his son in law gurunath meyyapan ( not curd rice, may be biriyani rice 🙂 ), KK, Maran, and JJ all are corrupt.
stay in touch through this blog.
warm regards
Curd rice srini