மறுபிறப்பு நிஜந்தானா … ? ( பகுதி-3 )
ஒரு நண்பர் கேட்டிருக்கிறார் – இதைப்பற்றி எல்லாம் பேச வேண்டியது
அவசியமா ? இதை எல்லாம் ஆராய்ந்து என்ன ஆகப்போகிறது ?
உருப்படியாக நேரத்தை செலவழிக்கும் வழியைப் பாருங்கள் என்று.
வாழ்க்கையின் பல அரிய உண்மைகள் நமக்குப் புரிய வரும்போது
அனேகமாக நாம் வாழ்க்கைப் பயணத்தின் முடிவைத் தொட்டு விடுகிறோம்.
பிறப்பின் அர்த்தம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்வின் கடைசி பகுதியில் தான் தெரிய வருகிறது.
சிலருக்கு அது கடைசி வரையில்
புரியாமலேயும் போய் விடுகிறது !
முதுமையில் வரக்கூடிய எண்ண முதிர்ச்சி, மனப்பக்குவம் –
ஓரளவு இளைய வயதிலேயே – வாழ்வில் மிக முக்கியமான –
மத்திய வயதிலேயே வந்தால் ?
வாழ்க்கையை சரியாக
புரிந்துகொள்ளும் பக்குவம் வந்து விட்டால்–
– மிஞ்சி இருக்கும் வாழ்நாளை நமக்கும், பிறர்க்கும் பயனுள்ள வகையில்
செலவிடலாமே. இந்த வாழ்வு அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக
இருக்குமே என்பதே என் கருத்து.
கர்மா என்று சொன்னால் – சிலர் பிற்போக்குவாதம் – பத்தாம்பசலித்தனம்
என்றெண்ணி ஒதுங்கி / ஒதுக்கி விட்டுப் போய் விடுகிறார்கள்.
இதைப்பற்றி எல்லாம் எழுதுவதும், பேசுவதும் waste என்று சொல்லிவிட்டுப்
போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்வின் உண்மைகள் இவை.
மிகச் சாதாரணமாகச் சொன்னல் சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடிய
விஷயம் தான் இது. ஒரே ஒரு கண்டிஷன் – திறந்த மனதுடன்
இதுபற்றிப் படிக்க வேண்டும் – யோசிக்க வேண்டும்.
ஒருவர் செய்யும் செயல் ( நல்லதாகினும் சரி, கெட்டதாயினும் சரி )
தான் “கர்மா” எனப்படுகிறது. திருவள்ளுவர் சொன்ன அதே
“எண்ணித் துணிக கருமம்” தான் !
நல்லது செய்தால் நல்ல கர்மா –
கெட்டது செய்தால் கெட்ட கர்மா – அவ்வளவு தானே என்று கேட்கலாம்.
இதில் 3வது வகை ஒன்று இருக்கிறது. நமக்கு நல்லதாக இருக்கும் –
ஆனால் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும்.
மறுபிறப்பு என்று ஒன்று இல்லை என்றே உலகில் ஒருத்தர் பாக்கி இல்லாமல் அனைவரும் நம்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
என்ன நடக்கும் ?
ஒவ்வொருவனும் – தானும், தன் குடும்பத்தினரும்,
தனக்கு வேண்டியவர்களும்
சகல வசதிகளுடன் –
ஆயுசுக்கும் சுகமாக வாழ வேண்டுமென்று தான் விரும்புவான்.
இன்றைய உலகில் அதற்கு என்ன தேவை ?
கோடிக்கணக்கில் பணம். அளவிட முடியாத அதிகாரம்,
ஆள் பலம், செல்வாக்கு.
இதற்காக அவன் எதையும் செய்யத் துணிவான்.
மறுபிறவியோ கிடையாது. சொர்க்கம் நரகம் என்கிற பேச்சும் இல்லை.
இதில் பாவ புண்ணியத்திற்கு இடமுமில்லை.
அவன் பயப்பட வேண்டியது சட்டம் ஒன்றிற்கு தான்.
அதிகாரமும், பணமும், செல்வாக்கும் உடையவர்களை சட்டம் என்ன
செய்து விட முடியும் என்பதை நடைமுறை உலகில் பார்த்து தானே
வருகிறோம்.
வசதியுள்ளவருக்கு சட்டம் செல்லாக்காசு.
சம்பந்தப்பட்டவர்களை விலைக்கு வாங்கலாம்.
பயமுறுத்தி அடக்கி வைக்கலாம்.
அதையும் மீறி வரும் வழக்குகளை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கலாம்.
நீதிபதிகளையே மாற்றலாம், விலைக்கு வாங்கலாம்.
மீண்டும் அதிகாரம் கைக்கு வரும்போது –
தனக்கு எதிரான வழக்குகளை தானே ரத்தும் செய்யலாம்.
இவர்களிடையே மாட்டிக்கொள்ளும் சாதாரண மக்களின் வாழ்வு
என்ன ஆகும் ? எப்படி இருக்கும் ? இப்படிப்பட்ட ஒரு உலகம் தான்
நமக்குத் தேவையா ?
மனிதன் உருவாக்கிய –
மனிதனால் நிர்வகிக்கப்படக்கூடிய –
சட்ட திட்டங்களைத் தாண்டியும் –
இயற்கை விதி ஒன்று இருக்கிறது –
அது யாருக்கும் தயவு காட்டாது.
தயவு தாட்சண்யம் இன்றி செயல்படும்.
தவறு செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் –
“கர்ம விதி”யிலிருந்து தப்ப முடியாது.
இந்த ஜென்மத்தில் தண்டனையிலிருந்து தப்பி விட்டாலும் –
அவன் செய்யும் தவறுகளுக்கான தண்டனை அடுத்தடுத்த பிறப்புகளிலும்
தொடரும் என்று ஒரு விதிமுறை இருந்தால் …… ?
மறுபிறப்பு தத்துவப்படி –
அவரவர் செய்யும் கர்ம விதிகளின்படியே அவரவர் பிறப்பு நிகழ்கிறது.
ஒவ்வொரு பிறப்பிலும் மனிதன்
செய்யும் நல்ல செயல்களும், கெட்ட செயல்களும்
அவன் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன !
ஒருவர் வங்கியில் பணத்தைச் சேமித்துக்கொண்டே போனால் –
ஆபத்துக் காலத்தில் –
தேவைப்படும் காலத்தில், அந்தப் பணம் அவனுக்கு உதவுகிறது.
அவன் கஷ்டத்தைத் தீர்க்க அவனது சேமிப்பு தான் உதவுகிறது.
அவனது நற்பழக்கங்கள் – அவனை நலமாக வாழ வைக்கின்றன.
மாறாக, கடன் வாங்கி, பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகச்
செலவழித்துக் கொண்டே போகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு கட்டம் வந்ததும்-
மேற்கொண்டு அவனுக்கு கடன் கிடைப்பதில்லை.
வாங்கிய கடனை திரும்பக் கொடுக்கும்படி நிர்பந்தம் வருகிறது.
திண்டாடுகிறான். தவிக்கிறான். அவனது செயலே அவனுக்குத்
துன்பம் ஏற்படக் காரணமாகிறது.
எளிமையான இந்த உதாரணமே நம் பிறப்பின் மர்மத்தை அறிவதற்கும் உதவுகிறது.
முன்பிறப்புகளில் நம் செயல்கள் நல்லபடி அமைந்தால் –
அடுத்த பிறவி செவ்வனே அமைகிறது –
வங்கிச் சேமிப்பு உதவுவது போல.
முற்பிறப்புகளில் நாம் செய்யும் நல்லன அல்லாதவையே
மறுபிறப்பில் நம் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.
இதை எல்லாம் கவனித்து நிர்வகிப்பது எப்படி சாத்தியம்.
உலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதர் ஒவ்வொருவரும் செய்யும்
பாவ, புண்ணியங்களைக் கவனித்து,
கணக்கெடுத்து பலன்களைக் கொடுப்பது தான் கடவுளின் வேலையா ?
இது நடைமுறை சாத்தியமானதா ?
என்று கேட்கலாம் !
நியாயமான கேள்வி தான்.
ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் –
சின்னஞ்சிறிய ஒரு சாப்ட்வேர் புரோகிராம் மூலம்
(software programme)
லட்சக்கணக்கான வங்கி உபயோகிப்பாளர்களின்
கணக்குகள் நிர்வகிக்கப்படுவதில்லையா ?
கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லையா ?
தினமும் லட்சக்கணக்கான ரயில் பயணிகளின், விமான பயணிகளின்
முன்பதிவுகள் உறுதி செய்யப்படுவதில்லையா ?
மனிதன் கண்டுபிடித்த ஒரு சாதாரண கணிணியின் மூலமே இவ்வளவு
செய்ய முடியும் என்றால் –
இந்த பிரம்மாண்டமான
பிரபஞ்சத்தையே
படைத்த சக்திக்கு,
இதற்கேற்ற ஒரு
நடைமுறையை உருவாக்குவது தானா
பெரிய காரியம் ?
For every action there is an equal and opposite reaction-
இது நியூட்டனின் விதி.
நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் உண்டு
என்பதை விளக்குவது தான் கர்ம வினை தியரி.
உங்களுக்குத் தோன்றலாம் –
சிலர் 90 வயது ஆனாலும் கூட, அனைத்து வித அயோக்கியத்தனங்களையும்
செய்தும் –
எந்தவித தண்டனையும் அனுபவிக்காமல் –
சுகமாக தொடர்ந்து செய்து கொண்டே போகிறார்களே என்று ஒரு கேள்வி.
நமது செயலின் எதிர்வினைகள் மரணத்திற்குள் முடிந்து விடுவதில்லை
என்கிற பதில் தான் ஆறுதலைத் தரும்.
மறுபிறவி என்கிற ஒன்று இல்லாமல் போனால் –
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் 100 % சுயநலவாதியாகி விடுவான்.
வாழ்வே நரகமாகி விடும்.
இன்று மனிதர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்களாக இல்லை என்கிற
உண்மையே -மரணத்திற்குப் பின்பும்
இந்த வாழ்வின் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை
வலுப்படுத்துகிறது.
வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து விடவில்லை.
மரணத்திற்கு அப்பாலும் தொடர்கிறது. ஒவ்வொரு செயலின்
எதிர்வினயையும் நாம் அனுபவித்தேயாக வேண்டும்.
தப்பித்துக் கொள்ளவே முடியாது என்னும் கருத்தை பலப்படுத்துகிறது.
வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் –
விளைவு, எதிர் வினை குறித்த பயத்துடன் அணுக வேண்டும் என்கிற
பொறுப்புணர்ச்சியை மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை சமுதாயத்தில்
ஏற்படுத்துகிறது.
இதுவரை நான் எழுதியது – தர்க்கபூர்வமான வாதம்.
சில கேள்விகள் எழுகின்றன –
“தூங்கி விழிப்பது போல் தான் மறுபிறப்பு
என்றால் – நாம் தூங்கி எழுந்தால் எதையும்
மறப்பதில்லையே – பின் மறுபிறப்பில் மட்டும்
ஏன் மறக்க வேண்டும் ? ”
(அடுத்த பகுதியுடன் இந்த இடுகையை முடித்துக் கொள்ளலாம் !)




As you said the creator keeps an account for all good & bad things. Based on that balance sheet present life is fixed. However keep trying will do fetch some result for if it is for good cause. Man’s hardwork & God’s blessings bring fortune in everyone’s life. Fortune definition here is peaceful , decent , clean & less hurdles life, not a luxurious one. Thiruvalluvar also insisted karma & hardwork in poems
“Kun Fa Ya Kun” has its reference in the Quran cited as a Symbol / Sign of God’s Mystical Creative Power. The verse is from the Quranic Chapter, Surah Ya-Sin. The context in which the verse Kun Fa Ya Kun appears in the 36th Chapter, verse number 77–83:
Does man not consider that We created him from a [mere] sperm-drop – then at once he is an open disputant? And he presents an (argument of) likeness for Us and forgets his own creation. He asks (in confusion): “Who will give life to the bones when they are disintegrated?” Say: “He will give life to them Who brought them into existence at first, and He is cognizant of all creation.” He Who has made for you, from the green tree, fire. and then from it you kindle (fire). Is not He Who created the heavens and the earth able to create the like of them? Yes Indeed! and He is the Superb Creator (of all), the Ever-Knowing. Surely His Command, when He wills a thing, is only to say to it: Be! and it is!” Therefore glory be to Him in Whose hand is the Kingdom of all things, and to Him you shall be brought back…..http://en.wikipedia.org/wiki/Kun_(Islamic_term)
குன் ஃபய குன் என்பதின் அர்த்தம்…
“ஆகு எனில் அது ஆகிவிடும்”
எனவே இறைவனுக்கு, இறந்தவர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது சிரமமான காரியமே அல்ல!
திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கு,
நான் உங்கள் தளத்தில் எழுதுவது இதுவே முதல் முறை.
நல்ல பல கருத்துக்களை அயராமல் எழுதிக்கொண்டே
இருக்கிறீர்கள். மிகவும் சாதாரண எளிய நடையில்
ஆனால் கருத்தோட்டமும், சொல்லோட்டமும் உடையதாக
இருக்கிறது உங்கள் எழுத்து. நீங்களே சொல்லி இருப்பது போல்
அரசியல் மட்டும் தான் என்றில்லாமல், சமூகத்திற்கு உபயோகமான
எந்த தலைப்பாக இருந்தாலும் எழுதுங்கள். இதை நான் சொல்லத்
தேவை இல்லை காரணம் நீங்கள் எது குறித்து எழுதினாலும்
அதில் சமுதாயத்திற்கு தேவையான செய்திகள் நிறைய இருக்கின்றன.
இருந்தாலும், பின்னூட்டங்களால் உங்களுக்கு எதுவும்
தயக்கம் வேண்டாம். பின்னூட்டம் எழுதுபவர்களைததவிர
எதுவும் எழுதாமல், மவுனமாக இன்னும் பல நூறு பேர்கள் இந்த
வலைத்தளத்தை விரும்பிப் படிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து,
என் நண்பர்கள் பலரும் படிக்கிறார்கள். உங்கள் பணியைத்
தொடர அவர்களது வாழ்த்துக்கள் உங்களுடன் வருகின்றன.
நன்றி.
ஊக்கமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு
நன்றி வேல்முருகன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மனித ஊனத்திற்கு பாவத்தை சுட்டிக்காட்டும் மதம், அப்படி பிறந்தவர்களை எப்படி அரவணைக்க வேண்டும் என்று சொல்கிறதா? மேற்கில், பொது இடங்களோ, கட்டிடங்களோ ஊனமுற்றவர்களை கருத்திலிருத்தி அமைக்க வேண்டும் என்பது சட்டம். நாம் சமுதாயமாக, இந்த வகையான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோமா?
மற்றும் மதம் மட்டும் தான் என்னை நல்வழிப் படுத்த முடியுமா?
மனிதர்கள், சக மனிதர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இயற்றும் சட்டங்களே போதும். நிறுவப்பட்ட மதங்கள் சுரண்டலுக்கு துணை போயிருக்கிறது.
தத்து எடுத்து, நாம் குழந்தை வளர்ப்போமா? மேற்கில் இந்த பழக்கமுண்டு.
உறுப்பு தானம் கூடாதாம். கர்ம வினைகளை ஏற்போமாம்? என்ன தெரிவு?
We can also nurture children to become caring considerate adults.
//These are the things I learned (in Kindergarten):
1. Share everything.
2. Play fair.
3. Don’t hit people.
4. Put thngs back where you found them.
5. CLEAN UP YOUR OWN MESS.
6. Don’t take things that aren’t yours.
7. Say you’re SORRY when you HURT somebody.
8. Wash your hands before you eat.
9. Flush.
10. Warm cookies and cold milk are good for you.
11. Live a balanced life – learn some and drink some and draw some and paint some and sing and dance and play and work everyday some.
12. Take a nap every afternoon.
13. When you go out into the world, watch out for traffic, hold hands, and stick together.
14. Be aware of wonder. Remember the little seed in the Stryrofoam cup: The roots go down and the plant goes up and nobody really knows how or why, but we are all like that.
15. Goldfish and hamster and white mice and even the little seed in the Styrofoam cup – they all die. So do we.
16. And then remember the Dick-and-Jane books and the first workd you learned – the biggest word of all – LOOK.”
― Robert Fulghum, All I Really Need to Know I Learned in Kindergarten
மிஸ்டர் பீஸ்,
நீங்கள் கேள்விகளை கேட்டுக்கொண்டே போகிறீர்களே தவிர,
கட்டுரையில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் ஒன்றிற்கு கூட
விளக்கம் இல்லையே உங்களிடம்.
தப்பு செய்தால் சட்டம் மட்டும் தண்டிக்கும் என்பதால், சட்டத்தை
பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தொடர்ந்து அக்கிரமங்கள் செய்து
வருகிறார்களே அவர்களை யார் தண்டிப்பது ?
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் – தர்மம், செய்த கருமத்தின்
விளைவிலிருந்து தப்ப விடாது என்பது தானே சொல்லப்படுகிறது.
இதில் என்ன தவறு ?
மறுபிறப்பை ஏற்கா விட்டாலும்,
இஸ்லாமும், க்றிஸ்தவமும் கூட பாவத்திற்கான தண்டனையை
ஒருவன் அனுபவித்தே தீர வேண்டி இருக்கும் என்று சொல்கின்றனவே..
பாவம் செய்யக்கூடாது, நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. அனைத்து மதங்களும்
நல்ல வழியத்தான் போதிக்கின்றன.
நான் நல் வழியில் நடக்க மதமோ, கடவுள் நம்பிக்கையோ
எதற்கு ? என் மனசாட்சியே எனக்கு போதுமே என்பது தான்
நாத்திகர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் இவர்களில்
எவ்வளவு பேருக்கு அந்த மனசாட்சி வேலை செய்கிறது ?
நாத்திகர்களிலும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள் – ஆனால்
எவ்வளவு பேர் ?
இன்று தமிழ்னாட்டில் இருக்கும் புகழ் பெற்ற நாத்திகர்கள் –
தன்மானத் தலைவர் வீரமணி, கலைஞர் கருணானிதி,
ஆகியோர் கடைந்தெடுத்த சுயநலவாதிகள் என்பதை மறுக்க முடியுமா < ?
ஆமாம் – அப்படியென்ன உசத்தியைக் கண்டு விட்டீர்கள்
வெஸ்டர்ன் னாடுகளில் ? 5 வயது பையன் 2 வயது தங்கையை
துப்பாக்கியால் சுடுவதையா ?
இல்லை "உன் குழந்தையும், என் குழந்தையும் – னம் குழந்தைகளுடன்
விளையாடுகின்றன" என்பது போன்ர உதாரணங்களிலா ?
இல்லை கல்யாணம் கட்டிக்கொள்ளாமலே குடித்தனம் பண்ணுவதிலா ?
உலகம் தட்டை என்று நம்பிக்கொண்டிருந்த மூடர்கள் வாழ்ந்து
கொண்டிருந்த உலகத்தில், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகம்
உருண்டை என்று சொன்னது மட்டும் அல்லாமல், கோள்களின்
எண்ணிக்கை, அவற்றின் போக்கு, அமாவாசை, கிரகணம் அனைத்தையும் கணித்தவர்கள் – மேதைகள் நம் முன்னோர்கள்.
கணிதத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்தது நாம்.
னூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்ததால்,
நம்மில் பல பேர் தன்னம்பிக்கை இன்றி வாழ்கிறோம். நம்மை நாமே
மட்டம் தட்டிக் கொள்கிறோம்.
தத்து எடுப்பதை எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை.
உறுப்பு தானம் கடந்த 40-50 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றம்.
இன்னும் பழைய கண்ணோட்டத்தில் சிலர் இருக்கலாம். இன்றைய
தலைமுறை அவ்விதம் இல்லை. கண்தானம், ரத்த தானம்
என்று உதவிட ஓடி வரும் மக்களை நீங்கள் பார்த்ததில்லையா ?
கிண்டர்கார்டனில் சொல்லிக்கொடுப்பது நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அவை குழந்தைகளாக இருந்தபோது சொன்னதோடு சரி. வளர்ந்த பிறகு அதை மறக்கடிக்க, மாற்ற எவ்வளவோ
அட்றாக்க்ஷங்கள் வருகின்றனவே. உங்கள் மனசாட்சியைத் தொட்டு
சொல்லுங்கள் இவற்றில் எவ்வளவு விஷயங்களை னிங்கள்
இன்று கடைபிடிக்கிறீர்கள் ?
யாராவது னல்ல விஷயம் சொன்னால் ஏன் தடங்கல்
செய்கிறீர்கள் ?
நண்பரே – வருக.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
(உங்கள் தட்டெழுத்தில் ‘ந’ இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம்
‘ன’ வருகிறது.)
ஆமாம் அதென்ன “chicago” ?
“peace” க்கு போட்டியா ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மிக தெளிவான தர்க்க ரீதியான வாதங்கள். அவரவர் செய்த செயலுக்கான விளைவுகளை அனுபவித்தே தீரவேண்டும் என்பது எல்லாவற்றையும் எளிதாக விளக்கும் கருத்து. more than anything , ஏன் நல்லது செய்யவேண்டும் என்பதற்கு மிகப்பெரிய கேடலிஸ்ட்!
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
விணைக்கு எதிர் விணையுண்டு என்பதை பட்டிணத்தார் கூட
சொல்லியிருக்கிறார். “தன் விணை தன்னைச் சுடும்….”
நல்லது செய்தால் நல்லது இன்றில்லாவிட்டாலும் நாளை (அடுத்த
தலைமுறை எனக் கொள்க) நடக்கும் என்பதே தர்ம சாஸ்திரம்
சொல்லும் பாடம்.
மதம் மனிதனை நல்வழிப் படுத்துமா? என்றால் நிச்சயம் நல்வழிப்
படுத்தும். இல்லாது போனாலும் “தீய வழிக்கு இட்டுச் செல்லாது”
என அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
நீங்கள் எடுத்துக் கொண்ட இரண்டு குறள்களும் பொருத்தமானது
இல்லை. முதலாவது வாழ்வு நிலையானதல்ல என்பதையும்,
இரண்டாவது ஒரு செயலை ஆரம்பித்த பின் அது குறித்த சாதக
பாதக ஆராய்ச்சி பயனற்றது என்பதையும் சொல்வதாக பரிமேலழகர்
சொல்லியிருக்கிறார்.
வள்ளுவர் “இறை”பற்றி “கர்மா” பற்றி வேறு குறள்களில் சொல்லி
யிருக்கிறார். அவரது கருத்துக்கள், “கீதை” சொல்லும் கருத்துக்களுக்கு
ஒப்பானதாக், மேலானதாக இருப்பதாக ஓங்க்ரானந்தா ஆராய்ந்து
சொல்லியிருக்கிறார்.
நன்றி நண்பர் வெங்கட் ரமணி –
நான் சொல்ல வந்தது-நினைத்தது எல்லாம் “கர்மா” என்கிற சொல்
தீண்டத்தகாத சொல் அல்ல – வள்ளுவர் கூட அதை “செயல்” என்கிற
பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைத்தான்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
I never doubted or questioned the UTILITY of the subject but only expreesed my opinion about
its FUTILITY.It appears that my views have been misconstrued.Sorry for the same.
Mr.Ganpat,
It is quite ok. just ignore.
with all best wishes,
kavirimainthan
// யாராவது னல்ல விஷயம் சொன்னால் ஏன் தடங்கல்
செய்கிறீர்கள் ?//
I am truly sorry. இது என்னுடைய நோக்கமல்ல. காவிரி மைந்தனின் அரசியல் கட்டுரைகளால் கவரப்பட்டு அவரது தளத்திற்கு வந்தேன். எல்லோரும் ஒத்த கருத்துடையவர்கள் என்றால் அங்கே விவாதத்திற்கு இடமில்லை .
மதம் தன் வேலையைச் செய்திருந்தால் நாமெல்லோரும் முக்தி அடைந்திருப்போம். இது கலி காலம். பல பிறவி எடுக்க வேண்டும் என்று இந்த விவாதம் தொடரலாம். நான் இறந்தவுடன் அந்தக் கடவுளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாம் என்றிருக்கிறேன். அப்பொழுது நானே கடவுள் என்பதையும் உணரலாம் !
நண்பரே,
உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாக இங்கே சொல்லலாம்.
ஏற்றுக்கொள்வதோ – மறுப்பதோ – அவரவர் உரிமை !
எல்லாவற்றையும் – தெரிந்து கொள்வோமே !
ஆமாம் அதென்ன “peace” ?
உங்கள் பெயர்த் தேர்வின் பின்னணியை நான் தெரிந்து கொள்ளலாமா ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஒன்றுமில்லை 🙂 உங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.
யோசிக்க வைக்கும் அருமையான பதிவு. நன்றி.
different thinking & discussion. Well done.