முன்னாள் போராளியான ஒரு ஈழப் பெண்மணியின்
இன்றைய நிலை குறித்து அவரே கொடுத்த ஒரு
பேட்டியைப் படிக்க நேர்ந்தது.
அவரைப் போன்றவர்களின் இன்றைய நிலையை எண்ணி
தாங்கவொண்ணாத மன வருத்தமும்,
நம் கையாலாகாத்தனத்தையும், நம் தலைவர்களின்
சுயநலத்தையும் நினைத்து வேதனையும்,வெறுப்பும்
ஏற்படுகிறது.
ஊரும், பெயரும் நமக்கு எதற்கு ? அவரது அனுபவங்கள்
குறித்து அவரே கூறுவதிலிருந்து சில பகுதிகள் மட்டும் கீழே –
1995 ஜூலை மாதம் என் 2 வயது தம்பி வான் தாக்குதலில்
உடல் இரு துண்டுகளாகி இறந்தான். தம்பியோடு என் தாயும்
அதே தாக்குதலில் போய் விட்டாள். எனக்கென்று வேறு யாரும்
இல்லாததால், அடுத்த சந்ததியையாவது காக்கும் கடமையை
ஏற்போம் என்று பெண்கள் படையணியில் சேர்ந்தேன்.
இயக்கத்தில் இருக்கும்போது, சக போராளி ஒருவரை
மணந்து கொண்டேன். இரண்டு குழந்தைகளும் பிறந்தன.
இறுதிப் போரின்போது என் கணவர் கொல்லப்பட்டார்.
என் இரண்டு குழந்தைகளை எண்ணி உயிர்வாழ விரும்பினேன்.,
வவுனியாவில் மெனிக் பார்ம் முகாமில் தங்கியிருந்தபோது
ராணுவ புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்.
என் குழந்தைகள் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.
முதல்நாளே விசாரண என்கிற பெயரில் ராணுவத்தினரால்
கூட்டாகக் கற்பழிக்கக்ப்பட்டேன். காலை, மாலை, இரவு
என்று ஒரு நாளைக்கு 3 முறையாவது கற்பழிக்கப்பட்டேன்.
என் கண்களுக்கு முன்னால், சுமார் 50க்கும் மேற்பட்ட
பெண் போராளிகள் கற்பழிக்கப்பட்டனர்………
(மிகவும் கொடூரமாக இருக்கின்ற மற்ற விவரங்களை நான்
இங்கு தரவில்லை )
இதனைத் தாங்க முடியாத நிறைய பெண்கள் தற்கொலை
செய்து கொண்டனர்.
என் குழந்தைகளுக்காக நான் உயிரைப் பிடித்துவைத்துக்
கொண்டிருந்தேன்.
சிறிது காலம் கழித்து அவர்களாகவே விடுவித்தனர்.
மீள் குடியேற்றம் என்று கூறி முல்லைத்தீவு காடுகளுக்கிடையே
கொண்டு போய் விட்டனர். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு
நான் பட்ட அவலத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது.
ஒரு வழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன்.
யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு யாருமே உதவவில்லை.
முன்னாள் போராளி எனத்தெரிந்ததும் யாரும் பேசக்கூட
அஞ்சினார்கள். தீண்டத்தகாதவர்களைப் போல் நடத்தினார்கள்.
எங்களிடம் பேசினால், அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வரலாம்
என்று அஞ்சினர்.
நானும் என் இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம்.
பசியால் பிஞ்சுக்குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம் தான்
சகித்துக் கொண்டு இருப்பது ?பால் சுரக்காத முலையைக்கூட
சப்பியவாறு ‘பால்- பால்’ என சிறு குழந்தை அழுவதை
எப்படி சகித்துக் கொண்டிருப்பது ?
வேலை கேட்ட இடங்களில் உள்ளே விடவே மறுத்தனர்.
பிச்சை எடுத்தேன்.
எங்களுக்கு பிச்சை போடக்கூட பயந்தனர்.
எனக்கு எந்த வழியுமே இல்லை.
யாழ்ப்பாணம் பழைய ரயில் நிலையத்தில் பசியால் சுருண்டு
படுத்திருந்தபோது – அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன்.
அவர் என்னை படுக்க அழைத்தார். சென்றேன்.
அவர் வேலை முடிந்ததும் எனக்கும் என் குழந்தைகளுக்கும்
உணவு வாங்கிக் கொடுத்தார்.
அன்றிலிருந்து நான் பாலியல் தொழிலாளி ஆனேன்.
பெரும்பாலும் வயதானவர்கள் தான் என் வாடிக்கையாளர்கள்.
சில சமயம் சிங்கள யாத்ரிகர்களும் வருவார்கள்.
இந்த இடத்தில் பேட்டி காண்பவர் கேட்கிறார் –
“(ஈழ ) தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ
வரவில்லையா ?”
“அவர்கள் வெறும் பேச்சுக்கு தான் தமிழ் அரசியல் கட்சிகள்.
அவர்களும் சிங்கள பேரினவாத அரசின் ஏஜெண்ட் போலவே
செயல்படுகின்றார்கள் ”
“இந்தியாவில் இருந்து கொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும்
எந்த தலைவர்களும் உங்களைப் போன்ற பெண்களுக்கு
உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா ?”
இந்தியாவில் இருந்து கொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச்
சொல்லும் எந்த தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான
நேர்மையான புரிந்துணர்வே இல்லை. ஈழத்தமிழர்களாகிய
நாங்கள் தோற்று விட்டோம் என்கிற நிர்வாணக் கசப்பான
உண்மையைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக
இருக்கிறார்கள்……..
எமது போராட்டம் ஈழத்தில் இருந்து, சர்வதேசிய சதியால்
வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.
எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல்
பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து
“எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?” என்று கேட்டால் – ?
….. விளக்குமாறால் அடிப்பேன்.
(அவருடைய உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள
முடிகிறது )
(அழுதுகொண்டே கூறுகிறார் ) ..இந்தியத் தலைவர்களே
எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது
நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததியாவது வாழ வேண்டும்.
கல்வி கற்க வேண்டும்.
நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே –
உங்களுக்கு போர் எத்தனை வலியானது என்று தெரியுமா ?
கண் எதிரே ஷெல் வெடித்து இறந்து போன பெற்றோரின்
உடல்களைக் கூட தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு பயந்து
ஓடிய எம்மவர்களின் வாழ்க்கை பற்றி தெரியுமா ?
தாய் இறந்ததை கூட அறியாமல் தாயிடம் முலைப்பால்
குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா ?
கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத
சிசுவும் அருகிலேயே கணவரும் துடி துடித்த அவலத்தை
நீங்கள் கண்டது உண்டா ? கண்டிருந்தால், நீங்கள்
ஈழத்தில் மட்டுமல்ல. உலகில் எந்த மூலையில் போர்
நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள் “
————–
எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் தமிழ் ஈழம்
மலரும் என்பது ஒரு பக்கமிருக்கட்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் –
ஏன் இன்றைய ஈழத்தமிழர்கள் படும் அவலத்தைப்
போக்க எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல்
இருக்கிறார்கள் ?
ஈழத்துக்கான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும்
ஒருபுறம் ஒதுக்கி விட்டு –
இன்றைய தினம் ஈழத்தில்
வாடும் தமிழர்கள் உண்ண உணவும், உடுக்க உடையும்,
இருக்க ஒரு சிறு இடமுமாவது
கௌரவமான முறையில் பெற்று வாழ உருப்படியாக ஏதாவது
செய்யக்கூடாதா?
இதற்கான நிதியுதவியைச் செய்ய இரக்கமுள்ள
தமிழ் மனங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஒரு
மதிக்கப்படும் தொண்டு நிறுவனத்தின் மூலம்
இத்தகைய உதவிகளை அவர்களுக்குச் செய்யலாமே !
இதைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து
முன்னெடுத்துச்செல்ல – மக்கள் நம்பும் தலைவர்
(அல்லது தொண்டு நிறுவனம்)
யாராவது முன்வர வேண்டும்.



விகடனில் படித்தேன். மிகவும் வேதனையாக இருக்கிறது.
மனதை பிசையக்கூடிய யதார்த்தமான வார்த்தைகள் படித்து கண்ணீர் மட்டுமே சிந்தமுடிந்தது!
இவர்களிலிருந்தே ஒருவர் நீங்கள் கூறிய ாந்த பணியை தொடர்ந்தால் சரியானவர்களுக்கு பயன் சென்று சேரும். ஆனால் அதற்காக மிக அதிக துயரங்களை சந்திக்கவும் தயாராக ைருக்க வேண்டும்.
நண்பர் காவிரிமைந்தன்.
இந்த விஷயம் உங்களால் மிகவும் அக்கரையுடனும்,
பொறுப்புடனும் கையாளப்பட்டுள்ளது.
நானும் கூட விகடனில் படித்தேன்.
மிக கொடூரமான வார்த்தைகளை வடிகட்டி விட்டு
ஓரளவிற்கு தாங்கக்கூடிய விஷயங்களை மட்டும்
கொடுத்திருக்கிறீர்கள்.
இந்தப் பணிக்கு அரசியல்வாதிகள் தோதுப்பட மாட்டார்கள்.
மக்களும் நம்ப மாட்டார்கள். இலங்கை அரசும்
ஒத்துழைக்காது.
செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ராமகிருஷ்ணா மடம்
அல்லது எதாவது கிறித்தவ தொண்டு நிறுவனங்கள்
இந்தப் பணியே மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.
நீங்கள் சொல்வது போல், நம்பகமானவர்கள் முன்வந்தால்
நிதியுதவி செய்ய தமிழ்மக்கள் நிச்சயம் முன்வருவார்கள்.
வித்தியா ராணி – இது ஒரு ஆனந்தவிகடன் புலிகளின் கூட்டு கற்பனை தயாரிப்பு பிரசார பேட்டி.
ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்கள், ஜெயசிக்குறு எதிர் சமர் இவற்றில் ஈடுபட்ட புலிகள் எவரும் விடுதலை செய்யபடவில்லை .புனர்வாழ்வு முகாமில் தொழில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலையான புலிகள் உதவி இல்லாமல் துன்பபடுவது உண்மை.
வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம், ஊடகவியலாளர் செயலாளர், ந.பொன்ராசா தெரிவித்த கருத்து.
நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத்
தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.
INDHA KATTURAI UNMAI ENDRAAL, THAMIZHANAGA PIRANDHADHIRKKE VETKAMUM, VEDHANAIYUM ADAIGIREN. BUT, THANMANAMULLA ENDHA PENNUM THANNAI MAAITHTHUKKOLVALE THAVIRA THANNAI VIRKKA MATTAAL ENBHADHEY NIDHARSANAMANA UNMAI. VEDHANAIYUDAN, G. VARADHARAJAN. CHENNAI.
மேற்படி கட்டுரை தொடர்பான சில கேள்விகள் இந்த வலைப்பூவில் http://rste.org/2012/11/04/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/
இது கதையா ? அல்லது உண்மை சம்பவமா ? அல்லது கட்டுக்கதையா ?