உலகத் தமிழர்களின் – ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!!

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!!

இந்த இடுகையில்  தலைப்பைத் தவிர வேறு எதையுமே
நான் எழுதவில்லை ….

இது சில  செய்திகளின் தொகுப்புகள் -(மட்டுமே !)-
——————————–

15 நாட்கள் முன்பு  கலைஞர் கேள்வி-பதில்.

டெசோ மாநாடு ஏன் ?

“என் வாழ்வில் தமிழ் ஈழம் காண விரும்புகிறேன்.
தமிழ் ஈழத்தைக் காணாமல் என் வாழ்வு முடியாது.”

——————————–
 “தினமணி செய்திகள்” -இன்று காலைப் பதிப்பு –

கருணாநிதி – ப. சிதம்பரம் திடீர் சந்திப்பு

First Published : 16 Jul 2012
01:08:00 AM IST

சென்னை, ஜூலை 15: திமுக தலைவர்
கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை
சந்தித்துப் பேசினார்.
————————————
நேற்று மாலை ஞானதேசிகன் பேட்டி –

சென்னை, ஜூலை 15: திமுக நடத்தும் டெசோ
மாநாட்டுக்கு காங்கிரஸின் ஆதரவு இல்லை என்று
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

டெசோ மாநாடு: டெசோ மாநாடு தமிழீழ ஆதரவு
மாநாடு. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைவது நிரந்தரத்
தீர்வாக அமையாது.
————————————

நக்கீரன் செய்திகள் – 16/07/2012

தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று (16/07/2012)
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்தார்.

“இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதை வலியுறுத்தி
டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

இப்போது அதுபற்றி எந்த முடிவும் எடுப்பதாக
உத்தேசம் இல்லை.”

————
“என் வாழ்நாளுக்குள் தனி ஈழம் காண்பேன் என்று
கூறினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி
தீர்மானமே போடப்போவதில்லை என்கிறீர்களே?

அதை எப்போதும் சொல்வேன்”.

——————–
“தனி ஈழ ஆதரவு தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது
என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததா?

எந்த நெருக்கடியும் இல்லை.

கே.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனி ஈழம்
பற்றி பேசினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில்
அதுபற்றி பேசமாட்டோம் என்கிறீர்களே?

டெசோ மாநாட்டுக்கு பல தரப்பினரும் வருகிறார்கள்.
அவர்களின் கருத்து அறிந்து முடிவு செய்வதுதான்
சரியான ஜனநாயக அணுகுமுறை”.

————-
“தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்தை மீண்டும்
வலியுறுத்துவீர்களா?

தனி ஈழம் வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால்
எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.

மாநாட்டில் ஐ.நா. சபை நடவடிக்கை குறித்து
தீர்மானம் வருமா?

அதுபற்றி எல்லாம் மாநாட்டுக்கு வருபவர்களை
கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம்”.

————–

“காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனி ஈழத்தில்
உடன்பாடு இல்லை. ஒருங்கிணைந்த இலங்கையில்
தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று
கூறியிருக்கிறாரே?

மாநாட்டின் நோக்கம் பற்றி என்னிடம் கலந்து பேசி விட்டு
கருத்து தெரிவித்து இருக்கலாம். அவசரப்பட்டு அறிக்கை
வெளியிட்டு உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.”

——————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to உலகத் தமிழர்களின் – ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!!

  1. உண்மைத் தமிழன்'s avatar உண்மைத் தமிழன் சொல்கிறார்:

    தூ …

    தொடை நடுங்கி…கோழை…

    உலக மகா கோழைத் தலைவர்..

  2. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    தில்லை நடராஜன் நமக்குளிருந்து ஆடும்/ஆட்டுவிக்கும்
    ஆட்டம்தான் நம் செயல்கள். அதற்கு சக்தி கொடுப்பவள்
    தில்லை காளி. அதனால் தான் எல்லாம் அவன் செயல்
    என்கிற சொல் வழக்கு.

    உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் சாயம் வெளுக்க
    ஆரம்பித்து பல காலம் ஆகிறது. சில உடன்பிறப்புகளைத்
    தவிர எல்லோருக்கும் இது தெரியும்.

    டெசோ மாநாடு குறித்த அவரது திட்டம் வெளியான இரண்டொரு
    தினங்களில், மத்திய உள்துறை அமைச்சகம், ஏன் மீண்டும்
    தடை? என்பது குறித்த ஒரு நீண்ட (!) செய்தி விளம்பரத்தைத்
    தமிழிலும் பத்திரிக்கைகளில் வெளியிட்டது. அவ்விளம்பரம்
    வெளியான பின், பி டி ஐ செய்தி வெளியானது. அது வானொலி,
    தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் “செய்தியாக”
    வந்தது. இதன் பின் தான், தமிழ காங். (?!) தலைவர் ஓர் அறிக்கை
    வெளியிடுகிறார். உள்துறை அமைச்சர், தலைவர் கலைஞரை
    சந்தித்துவிட்டு போகிறார். (இந்த சந்திப்பும் சி ஐ டி நகரில் தான்).

    மரியாதை நிமித்தமாக அவர் வந்து (வென்று) சென்ற பின், மறுதினம்
    தலைவர் கலைஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிதான்
    நீங்கள் குறிப்பிட்டுள்ளது.

    இது குறித்து, பாண்டியனும், நெடுமாறனும், (நாம்) தமிழர் சீமானும்,
    பா ம க இராமதாசரும் இன்னும் சில சில்லறை ஆதரவாளர்களும்
    (திராவிட இனமான காவலர், வீரமணி இன்னமும் தன் கருத்தை
    சொல்லவில்லை என்பது கவனத்திற்குரியது) “பலமாக” விமர்சித்து
    விட்டார்கள். ஈழ ஆதரவு தீர்மானம் (கூட) இல்லாத ஈழ ஆதரவு
    மாநாடு ஏன் என்பது அவர்கள் வாதம்.

    டெசோ உலக அரங்கில் அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பு போலவும்,
    அமைப்பின் மாநாடு ஒன்றில் போடும் தீர்மானம் தான் ஈழத்தை
    நிர்மாணிக்கவும் தீர்மானிக்கவும் செய்யும் என்பது போல எழுதுவதும்,
    பேசுவதும் சரியா? இத்தகைய விமர்சனங்கள் ஏற்கனவே கரைந்து
    கொண்டிருக்கும் அவரது செல்வாக்கை மேலும் கரைக்கும் என்பதைத்
    தவிர வேறென்ன செய்யும்?

    நொயெல் நடேசனின் பிளாக்கில் வந்துள்ள “அரசியல் பிழைத்தோர்க்கு
    அறம் கூற்றாகும்” வாசித்துப் பார்க்கவும்

  3. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    கேள்வி பதில் கேள்வி –ஜெயலலிதா விலையில்லா அரிசி அனைவருக்கும் கொடுக்கிறாரே?பதில்–நான் அனைவருக்கும் தொலை காட்சி பெட்டி கொடுத்தேனே.கேள்வி-ஜெயலலிதா சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோரை திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று கூறியுள்ளரே?பதில்– போராட்டத்தில் கடைசி நபராக நான் இருப்பேன் என்று கூறியுள்ளே கவனிக்கவில்லையா?கேள்வி–ஜெயலலிதா சிறுதாவூரில் நிலம் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறதே?பதில்–எனது உடன் பிறப்புகள் ஏழை மக்களுக்கு கொடுப்பதற்கு வேண்டி கொஞ்சம் நிலங்களை கையகபடுத்தினார்கள். அதை பொறுக்காமல் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் கேள்வி–ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு பற்றி?பதில்–சர்காரியா கமிஷன் அறிக்கையே ஒன்றுமில்லாமல் செய்தவன் நான். என்னைப்போல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது.கேள்வி–ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சம்பாதித்ததாக கூறப்படுகிறதே?பதில்–2-ஜீயில் எனக்கில்லாத வருமானமா?கேள்வி–20- சதவீத பங்குதாரரை திகாருக்கு அனுப்பிவிட்டார்களே?பதில்–60- சதவீத பங்குதாரரை என்னால்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை.தெரியுமா?கேள்வி–டெசோ வாணத்தை விட போகிறார்களாமே?பதில்–அது புஸவாணமாக்கும். விபரம் தெரியாமல் சொல்லாதீர்கள்.

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    பல மாதங்களுக்கு முன் நான் கருணாவை பற்றிய என் கருத்தை உண்மைத்தமிழன் வலைதளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன்.அதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்,,..

    =======================================================================
    கருணாநிதி…

    ஒரு ஆத்திகவாதியும் இல்லை
    நாத்திகவாதியும் இல்லை

    சனாதனவாதியும் இல்லை
    பகுத்தறிவு வாதியும் இல்லை

    பிராமண விரும்பியும் இல்லை
    பார்பன துவேஷியும் இல்லை

    ராஜாஜியும் இல்லை
    காமராஜரும் இல்லை
    பெரியாரும் இல்லை

    ஜனநாயகவாதியும் இல்லை
    சர்வாதிகாரியும் இல்லை

    பின் யார்தான் அவர்?

    அரசியலை வியாபாரமாக்கி
    தந்திரமாக மக்களை ஏமாற்றி
    ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
    அவர்களிடமே மூலதனம் பெற்று
    வியாபாரம் செய்து
    பணம் சேர்க்கும்
    ஒரு கைதேர்ந்த வியாபாரி.

    இருக்கும்பொழுது வாழ நினைப்பவர்!
    இறந்தபின் வாழ அவருக்கு ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை!!.

    90வயதில் அவர் நிகழ்த்தும் சாகசங்களை முறியடிக்க,
    நம்மிடம் 45 வயதில் கூட போட்டியாளர் இல்லை என்பதுதான் நிதர்சனம்

    ஒருவன் எல்லோரையும் சில காலங்களுக்கும், சிலரை எப்பொழுதும் ஏமாற்ற முடியலாம்;ஆனால் அவனால்
    எல்லோரையும்,எப்பொழுதும்,ஏமாற்ற
    இயலாது!!… என்றார் ஆப்ரஹாம் லிங்கன்

    ஒருவன் எல்லோரையும் சில காலங்களுக்கும், சிலரை எப்பொழுதும் ஏமாற்ற முடிந்தால் அதுவே போதுமானது !!… என்கிறார் நம் மு.க.

    நாம் விரும்பியது நிகழும் போது நாம் மகிழலாம்

    ஆனால்

    நாம் விரும்பாதது நிகழும் போது நாம் சிந்திக்க வேண்டும்

    வருத்தப்படுவதிலோ,
    கோபப்படுவதிலோ
    பயனில்லை
    =============================
    2016 தேர்தலில் ஜெயா ஆட்சி பிடிக்கவில்லை என்றால்,அவருக்கு ஒட்டு போடக்கூடாது..”அதே சமயம் கருணாவிற்கும் ஓட்டளிக்க கூடாது” இதை நாம் கடைபிடித்தால் தமிழகம் பிழைக்கும்.

  5. senthilkumar's avatar senthilkumar சொல்கிறார்:

    Karunanithi alla kayamainithi

  6. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //90வயதில் அவர் நிகழ்த்தும் சாகசங்களை முறியடிக்க,
    நம்மிடம் 45 வயதில் கூட போட்டியாளர் இல்லை என்பதுதான் நிதர்சனம்//
    மிகவும் வருந்தவேண்டிய கசப்பான உண்மையைதான் நண்பர் கண்பத் கூறியுள்ளார்.
    காவிரிமைந்தன் சார், சரியான படத்தைதான் பயன்படுத்தியுள்ளீர்கள். இந்த படமே தாத்தாவைப் பற்றி ஆயிரம் விஷ(ம)யங்களை பேசிவிடுகிறது.
    பொதுவாக, மனிதர்கள் வயதாகதாக பாவச்செயல்களை குறைத்துக்கொண்டு நற்செயல்களை செய்வர். இல்லையென்றாலும் “சும்மா” இருந்துவிடுவார்கள்.
    ஆனால் நம் தாத்தாவோ…..
    ஹ்ஹீம்….
    ஐந்தில் வளையாதது ஐம்பதிலேயே வளையாது
    இப்போதோ தொன்னூறு.
    உடைந்தால்தான் உண்டு

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      மன்னிக்கவும் அஜீஸ் ஸார்..
      உடைந்தால் இரண்டாகும் கழி(ஞர்) இவர்!!!
      ஆபத்து இன்னும் அதிகம்..
      🙂

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        மன்னிக்கவும் கண்பத் –
        உடைந்தால் – இரண்டா அல்லது மூன்றா ?

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    நடத்துவது TESO (Tamil Eelam Supporters’ Organisation). மாநாடு. ஆனா தனி தமிழ் ஈழ கோரிக்கை இப்போதைக்கு இல்லை. அப்போ யாரை Support பண்ண மாநாடு?

    இதைவிட ஒரு பித்தலாட்டம் பண்ண இவரால் மட்டுமே முடியும். இப்படியும் ஒரு பிறவி!

  8. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    Here is another article I found in web portraying similar sentiments of KM Sir on Karunanithi. He really is an epitome of deceit.

    http://www.tamilleader.in/news/2060-2012-07-13-07-28-13.html

  9. ilatchiyakudumbami's avatar ilatchiyakudumbami சொல்கிறார்:

    தமிழருவி போன்றோர் கேட்கும் கேள்விகளுக்கு கலைஞர் நாக்கை பிடுங்கி கொண்டு சாகலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.