மன்மோகன் சிங் – ஒரு விதிவிலக்கு !
நான் பணியில் இருந்த போது எனக்கு சீக்கிய நண்பர்கள்
பலர் இருந்தனர். இப்போது தொடர்பு விட்டுப் போய்
விட்டது. பொதுவாக சீக்கியர்களைப் பற்றி எனக்கு
ஓரளவு நன்றாகவே தெரியும்.
சீக்கியர்கள் உடல் பலத்தை நம்புபவர்களாக இருந்தார்கள்.
கூட்டுக் குடும்பத்தில் நம்பிக்கை உடையவர்கள்.
தீவிர மத நம்பிக்கை உடையவர்கள்.
பெரியவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர்கள்.
நேர்மையானவர்கள். உழைப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்.
சீக்கிய சமுதாயத்தில் ஒரு பிச்சைக்காரரைக் கூட
நம்மால் காண முடியாது. அதே போல் சிகரெட் பிடிக்கும்
சர்தார்ஜி ஒருவரைக் கூட காண முடியாது.
ஆனால் புத்தியை அதிகம் பயன்படுத்தாதவர்கள் !
முன்பெல்லாம், சீக்கியர்களின் மந்த புத்தியை கேலி செய்து
பல ஜோக்குகள் வரும்.
மதியம் 12 மணிக்கு கடிகாரக் கடைக்கு போய் கடிகாரம்
வாங்கிய ஒரு சீக்கியர், ஒரு முள் மட்டும் உள்ள
கடிகாரத்தை தனக்கு கொடுத்து விட்டதாகக் கூறி
கடைக்காரரிடம் சண்டை போட்டது போல்
எல்லாம்…
இன்னும் பல. முதுபெரும் சீக்கிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்
தன் சக சீக்கியர்களைப் பற்றி எழுதியுள்ள ஜோக் குகள்
மிகப் பிரசித்தம். அவர்களைப் பற்றிய ஜோக்குகளை
கோபப்படாமல் சீக்கியர்களே மிகவும் ரசிப்பார்கள் !
இதெல்லாம் சில வருடங்கள் முன்பு வரை.
இப்போது … ?
சீக்கியர்களிடையே விதிவிலக்காக –
மான்டெக் சிங் அலுவாலியா, மன்மோகன் சிங்
போன்றவர்கள் எல்லாம் வந்த பிறகு,
சீக்கியர்களைப் பற்றிய இமேஜ் முற்றிலும்
மாறி விட்டது.
அண்மையில் மன்மோகன் சிங் பற்றி படித்த
ஒரு ஜோக்கை
இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கையாலாகாத பிரதமர் என்பதை இதைவிட
சிறப்பாக யாராலும் நக்கலடிக்க இயலாது.
—————————–
வங்கி ஒன்றில் பணமெடுக்கச் சென்றார் பிரதமர்
மன்மோகன் சிங். அவரை அடையாள அட்டை
கேட்டிருக்கிறார் வங்கி ஊழியர்.
“அடையாள அட்டை கொண்டு வரவில்லை.
ஆனால் நான் தான் பிரதமர்
மன்மோகன் சிங் என்று உங்களுக்குத் தெரியுமே”
என்றாராம் பிரதமர்.
“சாரி சார். அமிதாப் பச்சன் அடையாள அட்டை
இல்லாமல் வந்தார். “ஷோலே” பட வசனம்
பேசிக்காட்டினார். ஒப்புக்கொண்டோம்.
சச்சின் டெண்டுல்கர் வந்தார். ஒரு பந்தை
எறியச் சொல்லி பேட் செய்து காண்பித்தார்.
ஒப்புக்கொண்டோம். அது போல் நீங்கள்
மன்மோகன் சிங தான் என்று நிரூபிக்க எதாவது
செய்யுங்கள். பணம் தருகிறோம்” என்றாராம்
வங்கி ஊழியர்.
“சாரி. என்னால்(அது போல எல்லாம்)
எதுவுமே செய்ய இயலாது” என்றாராம்
மன்மோகன் சிங்.
உடனே “தேங்க் யூ சார். இது போதுமே !
நீங்கள் தான் மன்மோகன் சிங்
என்பதை ஒப்புக்கொண்டு விட்டோம் ! உங்களுக்கு
பணம் ஆயிரம் ரூபாய் நோட்டாக வேண்டுமா –
500 ரூபாய் நோட்டாக வேண்டுமா ? ”
என்றாராம் வங்கி ஊழியர் !
—————————-
(கீழே உள்ள புகைப்பட-கார்ட்டூனை ஒரு இந்தி
செய்தித்தளத்தில் பார்த்தேன்.இந்த அளவிற்கு
சுயமரியாதையை பலி கொடுத்து இந்த பதவியில்
என்ன சுகம் காண்கிறார் இவர் ?)
Neekkappatta cartoon ithu dhaan –



இதில் பயங்கர கடுப்பாவது, இவர் ரொம்ப நேர்மையானவர். அப்பழுக்கில்லாதவர். பாவம். என்று எவராவது எழுதும்போது! யாருக்கு வேணும் இப்படி ஒரு கபட வேஷக்காரர்?
என்னை பற்றி லஞ்ச ஊழல் புகார் கூறுபவர்களுக்கு ஓன்று கூறிக்கொள்கிறேன் அதனை நிரூபித்தால் பொது வாழ்விலிருந்தே ஒதுங்கிக் கொள்கிறேன். மன்மோகன் சிங்க் அவர்களே நிறை குடம் தளும்பாது ஒத்துகொள்கிறேன். ஆனால் வெ த்து க்குடவும் தளும்பாது என்பதை நீங்களும் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்.
கா.மை.ஜி
இந்த ஜோக்கை வைத்து நான் கற்பனை செய்த ஜோக் இதோ…
டெல்லியில் ஒரு SBI கிளை..
மன்மோகன் சிங் உள்ளே வருகிறார்.
அந்த இடமே பரபரப்பாகி விடுகிறது..
ஒரு ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலையை அவர்
வங்கி மேலாளரிடம் கொடுத்து பணம் கேட்கிறார்.
அவரும் “PM ஜி உங்களுக்கு
பணம் ஆயிரம் ரூபாய் நோட்டாக வேண்டுமா –
500 ரூபாய் நோட்டாக வேண்டுமா ? “
என்று வினவ , உடனே “இரண்டிலும் பாதி பாதி கொடுங்கள்!”
என வந்தவர் சொல்கிறார்.அவரை காத்திருக்க சொல்லி விட்டு மேலாளர்
வெளியே செல்கிறார..சிறிது நேரம் கழித்து போலீஸ் படை அங்கு நுழைகிறது மன்மோகன் கைது செய்யப்படுகிறார்.அவர் உண்மையான மன்மோகன் இல்லை வேடதாரி என தெரிகிறது.
வங்கி மேலாளருக்கு பாராட்டு மழை !
media நிருபர் ஒருவர் வினவுகிறார்..
“ஸார்.நீங்க, அவர் போலி என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?”
“ரொம்ப சிம்பிள் ..நான் கேட்ட கேள்விக்கு அவர் உண்மையான மன்மோகனாக
இருந்திருந்தால்,உடனே சோனியா காந்திக்கு போன செய்து என்ன சொல்லட்டும் என கேட்டிருப்பார்!”
கண்பத் -மற்றும் நண்பர்களே,
எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம்
ஏற்பட்டிருக்கிறது. இந்த இடுகையின் கடைசியில்
ஒரு இந்தி செய்தித்தளத்தில் பார்த்தேன் என்று
சொல்லி இருக்கிறேன் அல்லவா – அந்த
போட்டோ-கார்ட்டூனையும் அங்கே பிரசுரம்
செய்திருந்தேன். காலை சுமார் 9 மணிக்கு
இதை அப்லோடு செய்திருந்தேன்.
இப்போது சுமார் 11.45 மணிக்கு பார்க்கிறேன் –
என் இடுகையிலிருந்து அந்த கார்ட்டூன்
நீக்கப்பட்டிருக்கிறது !
நான் அல்லாமல் வேறு யாரும் இதை எடிட் செய்ய
வசதி இல்லை. அப்படி என்றால் ? –
இந்த வலைத்தள இடுகைகள் எல்லாம் சென்சார்
செய்யப்படுகின்றனவா ? திருமதி சோனியா
சம்பந்தப்பட்ட கார்ட்டூன்கள் தடை செய்யப்படுகின்றனவா?
புரியவில்லை.
இப்போது மீண்டும் அதே கார்ட்டூனை அப்லோடு
செய்திருக்கிறேன்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் –
காலை 9 மணிக்கு மேல் – 11.45 க்குள் இந்த
இடுகையை படித்த நண்பர்கள் யாராவது
இந்த கார்ட்டூனை அங்கே பார்த்தீர்களா ?
(இது எப்போது, எப்படி, யாரால் நீக்கப்பட்டது
என்பதை தெரிந்து கொள்ளவே இந்த தகவல்)
தயவு செய்து பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கவும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
காலை சுமார் 10:45 க்கு இந்த கார்ட்டூனை நான் பார்த்தேன்!
The picture is not again displayed now (1.52pm).. May be, a team of member(Congress ?!?!) are working on this…
இது அதிகாரபூர்வமான சென்சாரா –
அல்லது எதாவது குழு செயல்படுகிறதா –
தெரியவில்லை !
நான் மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டே
இருக்கிறேன்.
அவர்கள் எவ்வளவு முறை தான்
நீக்குகிறார்கள் பார்ப்போம் !
-கார்ட்டூனை எடுப்பவர்களுக்கும் சேர்த்து –
வாழ்த்துக்களுடன்-
காவிரிமைந்தன்
I have stopped uploading the cartoon.
I will be happy if someone who has got the technical know-how
to let me know and explain if possible –
whether anybody else who has no access to do it through my editorial board –
can interfere with the article like this ?
with best wishes,
kavirimainthan
அதில் ஏதாவது வைரஸ் இருக்கிறதா? சில சமயம் வோர்ட் பிரெஸ் ஜாவா ஸ்க்ரிப்ட் போன்றவற்றை தானாகவே நீக்கி விடும். அது போன்ற ஏதாவது உள்ளதா? பேசாமல் நீங்கள் அந்த லிங்கை பின்னூட்டமாகத் தரலாமே!
எனக்கென்னவோ யாரும் இதுமாதிரி எல்லாம் “எடிட்” செய்வார்கள் என்பதை நம்ப முடியவில்லை. இது ஏதாவது டெக்னிகல் ரிபேர் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.
இன்னும் ஒரு விஷயம். அடல்ட் கண்டெண்ட்ஸ் போல சில குறிப்பிடததக்க விஷயங்கள் (நாட்டின் பாதுகாப்பு, பிரதமர் etc etc… ) அப்லோட் ஆனால் வேர்ட் பிரஸ் அதனை தானாகவே நீக்கி விடும் செட்டிங்க்ஸ் அதில் உள்ளது என நினைக்கிறேன்.
அப்படி உண்மையிலேயே யாராவது ’சென்சார்’ செய்கிறார்கள் என்றால் இந்த வலைப்பூவே நமக்குத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து.
டெகனிகலாக ஏதேனும் குறைபாடு இருக்கலாமோ என சந்தேகிக்கிறேன்.
எனக்குத் தெரிந்த வரை பரிசோதனை செய்து
பார்த்து விட்டேன். டெக்னிகலாக எதுவும்
பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை.
நான் 9 மணிக்கு போட்டதை நண்பர் கண்பத்
அவர்கள் 10.45 மணிக்குப் பார்த்ததாகச்
சொல்கிறார். அதற்குப் பின்னர் தான்
காணாமல் போயிருக்கிறது. அதன் பின்னர்
2 முறை நான் அப்லோடு செய்தேன். சில நிமிடங்கள்
இருந்து – பின் மீண்டும் காணாமல் போய் விட்டது !
Anyway – கார்ட்டூன் முக்கியம் அல்ல –
அது காணாமல் போன விதம் தான் ….
இதற்கு முன் விமரிசனம் வலைத்தளத்தில் இதுபோல்
நிகழ்ந்ததில்லை.
சில மாதங்கள் முன்பாக – அபிஷேக் சிங்வி விவகாரம்
வெளிவந்தபோது இது போல் சில முயற்சிகள்
நடைபெற்றதாக வலைத்தளத்தில் செய்திகள் உலவின.
ஆனால் – அது ஒரு டீம் திட்டமிட்டு வேலை செய்தது.
இதில் அப்படி எல்லாம் இருப்பது போல் தோன்றவில்லை.
அந்த கார்ட்டூன் திருமதி சோனியா காந்தி மற்றும்
மன்மோகன் சிங் ஆகியோரின் புகைப்படங்களை
வைத்து கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது.
மன்மோகன் சிங்கைப் பற்றி யாரும்
கவலைப்பட மாட்டார்கள்.
நண்பர் ரமணன் சொன்னது போல் – ஒரு வேளை
திருமதி சோனியா சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் வந்தால்-
அவற்றை நீக்குமாறு வோர்டுப்ரஸ் அமைப்பில்
ஸெட்டிங்ஸ் எதாவது செய்யப்பட்டிருக்கலாம்.
கொஞ்ச நாட்கள் சென்றால் இன்னும் எதாவது
தகவல் கிடைக்கலாம்.பொறுத்துப் பார்ப்போம்.
நம் பணியை தொடர்ந்து கொண்டே இருப்போம்.
உங்கள் அக்கரைக்கும் ஒத்துழைப்புக்கும்
நன்றி நண்பர்களே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பிரதமர் குறித்தான (அல்லது) திருவாளர்.மன்மோகன் சிங்
குறித்தான இடுகை எனக்கு ஏற்புடையயதல்ல.
அவர் ஆற்றல் மிகுந்த சிறந்த நிர்வாகி என்பதை யாராலும்
மறுக்க முடியாது. அதனால் தான் நரசிம்மராவும் அவரை
நிதியமைச்சராக்கினார். அவரது செயல்பாடுகள்தான்
இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது. அவருடைய
போறாத காலம் அல்லது இந்தியனின் தலையெழுத்து,
அவராக செயல்பட, அவரது விருப்பத்தை நடைமுறைப்படுத்த,
செயல்படுத்த இயலாத ஒரு சூழலில் அவர் பிரதமராகி
விட்டார்.
யுபிஎ ஒன்று மற்றும் இரண்டு கூட்டாளிகளின்
அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் களமாகவே அமைந்து
விட்டது.அன்னை சோனியவின் வழிகாட்டுதல்கள் எல்லாம்
இரண்டாம் நிலையில்தான்.
நிற்க. தங்களின் இணைப்பான இந்தி செய்தித்தாளில் வெளி
வந்த கார்ட்டூன் (நானும் கூட பார்த்தேன்) மாதிரியான
படங்கள் தங்களின் பிளாக் என்றில்லை எதில் வந்தாலும்
யார் அப்லோடு செய்தாலும் “விரைவில்” அல்லது “உடன்”
நீக்கப்படும். அதற்கும் அன்னை சோனியாவுக்கும் பிறருக்கும்
யாதொரு சம்மந்தமும் இல்லை. இது வோர்ட்பிரஸின்
ஏற்பாடே.
நன்றி நண்பர் வெங்கட்ரமணி,
பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றல் நிறைந்தவராக
(ஒரு காலத்தில்) இருந்தார் – மறுக்கவில்லை.
ஆனால் -எப்போது செயலாற்ற சுதந்திரம்
இல்லையோ, அப்போதே பதவியை உதறிவிட்டு
வெளியேறி இருக்க வேண்டும். அப்படிச்
செய்திருந்தால் உங்களுடன் சேர்ந்து கொண்டு
நானும் பாராட்டுவேன்.
இப்போது பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டு
விடாப்பிடியாக உட்கார்ந்து கொண்டு இருப்பது
ஒரு வடிகட்டிய சுயநலவாதி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்