கவுஹாத்தியில் சிறுமி துன்புறுத்தப்பட்ட விவகாரம் – மீடியாக்கள் செய்வது …

கவுஹாத்தியில் சிறுமி துன்புறுத்தப்பட்ட
விவகாரம் – மீடியாக்கள் செய்வது …

கடந்த 2 நாட்களாக, தேசிய தொலைக்காட்சி சானல்கள்
அனைத்திற்கும் வேறு வேலையே இல்லை.
வேறு விஷயமும் கிடைக்கவில்லை.
திரும்பத் திரும்ப அதே காட்சியைக் காட்டுகிறார்கள்.
அந்தப் பெண்ணின் முகமோ, உடலின் மூடப்படாத
பாகங்களோ எப்படியாவது தெரியுமா என்று காமிரா
மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களில் –
க்ளோசப்பில் – லாங் ஷாட்டில் –
முயற்சி செய்து பார்க்கிறது !

என்ன அக்கிரமம் இது ? குப்பைத் தொட்டியில்
எதையாவது கொட்டப்போனால், நாய் துரத்திக்
கொண்டு வந்து எதாவது கிடைக்குமா என்று நோண்டி
நோண்டிப் பார்க்குமே அதே போல் !

அந்த பெண்ணின் மீதோ, அல்லது ஒட்டுமொத்த
பெண் குலத்தின் மீதோ உள்ள அனுதாபமோ,
அக்கரையோவா காரணம் ?
அத்தனையும் வியாபாரம் !

இந்த விஷயம் கையாளப்பட்ட விதம்  சரியா ?
மிகவும் வேதனையாக இருக்கிறது.
எல்லாமே வியாபாரமாகி விட்டது.
தொலைக்காட்சி சானல்களுக்கு –
அரசியல்வாதிகளுக்கு –
so called சமூக சேவகிகளுக்கு !

அந்தப் பெண் – இரவு நேரத்தில்,
மதுவருந்தும் “பார்” ஒன்றிலிருந்து
வெளியே வந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

17 வயது சிறுமியை, 11வது வகுப்பு மாணவியை,
அந்த மது அருந்தும் விடுதியில் எப்படி அனுமதித்தார்கள்?

அந்தப் பெண்ணுக்கும் மது கொடுக்கப்பட்டதா ?

அந்தப் பெண் அங்கு தனியாக வந்தாரா அல்லது
வேறு யாராவது அழைத்து வந்தனரா ?

அந்தப் பெண்ணை அங்கே யார் அழைத்து வந்தது ?
கூட வந்தவர் என்ன ஆனார் ?
அவர் விசாரிக்கப்பட்டாரா? அவர் மீது என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

அந்த “பார்” நிர்வாகியை யாராவது விசாரித்தார்களா ?
மைனர் பெண்ணை மது விடுதிக்குள் அனுமதித்ததற்காக
அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா ?

“பார்” க்கு என்று செக்யூரிடி எப்போதும் இருக்குமே ?
“பார்”க்கு நேர் எதிரே தானே இந்த சம்பவம்
நடந்திருக்கிறது. அவர்கள் இதில் ஏன் தலையிடவில்லை ?
அவர்கள் விசாரிக்கப்பட்டார்களா ?

சொல்லி வைத்தாற்போல் அந்த நேரத்தில் அங்கு வந்து –
சுழன்று சுழன்று வீடியோ எடுத்திருக்கிறாரே யாரோ
ஒரு “கில்லி” – உடனடியாக அதை டிவி சானல்களுக்கு
விற்று காசும் பார்த்திருக்கிறாரே – அவர் உடனடியாக
போலீசுக்கு தகவல் சொல்லாதது ஏன்? போலீசார் அவரை
விசாரித்தார்களா ?

இவை எல்லாம் முறையாக விசாரிக்கப்பட்டிருக்க
வேண்டாமா ? ஒரு வேளை விசாரித்திருந்தால் சரியான
தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டாமா ?
அகில இந்திய டிவிக்களின் ‘ரிபீட் ரிலே’தவிர்க்கப்பட
வேண்டாமா ?

அகில இந்திய பெண்கள் சங்கத்திலிருந்து உள்ளூர்
சமூக சேவகிகள் வரை உடனடியாக தொலைக்காட்சி
நிலையத்திற்கு நேரடியாக வந்து வம்பு பண்ணியவர்களுக்கு
“ஆயுள் தண்டனை” கொடுக்கப்பட வேண்டும் என்று
தீர்ப்பு கூறி தங்கள் “காஸ்டியூமை” விளம்பரப்படுத்தி
விட்டு போய் விட்டார்கள்.

இதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டதா ?
அந்தப் பெண்ணின் படிப்பு – எதிர்காலம் எல்லாம்
என்ன ஆகும் ? அந்த பெண்ணுக்கு உடனடியாக
“கவுன்சலிங்” ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டாமா ?

இப்போதே இப்படி என்றால், நாளை வழக்கு என்று வந்தால் –
அந்த சிறுமி போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும்
வர நேரிடும்போது -இந்த டிவி சானல்கள் எல்லாம்
சும்மா விடுமா ? அகில இந்திய அளவில் “லைவ் ரிலே”
அல்லவா செய்யும் ?

இந்த  நாட்டில் அரசியல்வாதிகள் தான் இப்படி என்றால் –
மீடியாவும் அவர்களுடன் போட்டி போடுகின்றனவே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கவுஹாத்தியில் சிறுமி துன்புறுத்தப்பட்ட விவகாரம் – மீடியாக்கள் செய்வது …

  1. devadass's avatar devadass சொல்கிறார்:

    அசாமில் நடந்த சம்பவம்.
    ஊடகங்கள் செய்தது சரியா? தவறா?
    ஆனால் ஊடகங்களினால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.நன்மைக்கும் தீமைக்கும் ஒரு மெல்லிய லட்சுமணன் கோடுதான் உள்ளது.அதை தீர்மானிப்பதில் அவரவா் மனசாட்சிதான் முக்கியமானதாக இருக்க வேண்டும்.இப்போது இந்தியாவில் பிணம் திண்ணும் ஆட்சியில் கழுகுகள்தான் சாட்சியாக உள்ளது.
    தேவதாஸ்

  2. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    பொதுவாக பெண்கள் தொடர்பான வன்கொடுமைகள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டே இருக்கிறது . இதுமட்டுமல்ல குழந்தை தொழிலாளர் சட்டங்கள் இருந்தும பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கும்
    குறைவில்லை வீட்டு .வேலைக்கு பெண் குழந்தைகளை கொண்டுவந்து வீட்டில் பூட்டி வைத்து செல்லுவதும்
    சிகரட்டால் உடல் முழுவதும் சூடு வைப்பதும் கற்பழிப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது . பத்திரிகைகள் வியாபார
    ரீதியாக தரங்கெட்ட செய்திகளை வெளியிடுவதும் சானல்கள் அரசியல் தலைவர்களை கைது செய்யும்போது
    கொல்றாங்கப்பா என இடை செருகல் செய்து திரும்ப திரும்ப காட்டுவதும் நித்தியானந்தா தொடர்பான செக்ஸ்
    காட்சிகளை மீண்டும் ஒளிபரப்புவதும் காசுக்காக மட்டுமே செய்யப்படும் ஒரு விபச்சாரம்தான். மனித தன்மை
    எல்லா மட்டத்திலும் மறைந்துவருகிறது. மனிதர்கள் தாய், மகள், சகோதரி , மனைவி என்ற உறவுகளை மறந்து
    வருகிறார்கள் பெயரளவில் சட்டங்கள் இருந்தாலும் அவைகளும் செயலிழந்து கிடக்கிறது. திருடனாக பார்த்து
    திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் மனிதர்களாக பார்த்து மனித தன்மையுடன் நடக்க வேண்டும்.

  3. srini's avatar srini சொல்கிறார்:

    KM sir,

    Its a dog-eat-dog world. Media is another version of politics. thats how it has changed in the recent past. rendu peru kittayum mattuna, avaluvu thaan… most of the days, ndtv website open panninaal, oru nalla news kooda kidayathu… they have one dedicated column in the website specially menat for women rape. every day one new rape story and they make it highly sensational. manasuku rmonba kastama irruku…but

    sometimes when i think about this, i also feel that… all this will be there, it was there in the past also and will continue in the future. sarvathikaram, courrption, kaatumirandithanam, kodungol aatchi…pen adimai…all these were there even 1000-2000 years ago. namma raajkal adikaatha kootha… ulaga varalaru kooda ipaadi thaan irukku. May be..

    i think we need to accept it, live with a hope that it will change tomorrow, but not worry if doesnt .. because it will be there in future also…

    Neenga enna solringa..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மாறும் நண்பர்களே- அனைத்தும் மாறும்.
      முதலில் மக்கள் மாற வேண்டும்.

      மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று
      முதலில் மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள
      வேண்டும்.

      நம்மை விட மிக மிக மோசமான நிலையில்
      தான் இருந்தது “ஹாங்காங்”.

      எல்லாம் முற்றாக மாறி விட்டதே !
      லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத நாடுகளில்
      உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்து
      விட்டதே !

      அற்புதமான பாரம்பரியத்தை உடையவர்கள் நாம்.
      இன்று ஏன் இந்த நிலை -ஏன் இந்த கேவலமான கதி ?
      இந்த நாடு முன்னேறத் தடையாக
      குறுக்கே உள்ள அனைத்தையும் தகர்த்தெரிய,
      உடைத்தெரிய –
      மக்கள் தான் முன்வர வேண்டும்.

      முதலில் மக்களைத் தான்
      தயார் செய்ய வேண்டும்.அவர்கள் மனநிலை தான்
      மேம்பட வேண்டும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        கறுப்பு பணம் என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதியபாடல்..

        எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
        இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
        வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை – நீங்கி
        வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

        இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் – சிலர்
        கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
        நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் – அந்த
        நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்

        பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் – பசுங்
        கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
        தாயகம் காப்போரின் தாள் பணிவோம் – யாவும்
        தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

        இதை அனைவரும் தினந்தோறும் மனமுருகி பாடினால்
        நல்ல மாற்றம் ஏற்படும்..

  4. நித்தில்'s avatar நித்தில் சொல்கிறார்:

    ”……….. இந்த நாட்டின் சாபக்கேடு அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஜனநாயகத்தின் தூன் என்று சவடால்விடும் மீடியாக்களும்தான். என்ன அரசியல்வாதிகள்மாதிரி 99.99 சதவிகிதம் அல்ல. அதற்கு சற்று குறைவு.”

    தங்களின் ‘வரப்போகும் ஜனாதிபதியின் யோக்கியதைகள்’ என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டத்தில் மேற்கண்டவாறு எழுதியிருந்தேன். என்னுடைய இந்த கருத்தை ஒத்து இந்த பதிவு அமைந்தள்ளது. பணத்திற்காக முதலாளிகள் ஏதும் செய்வார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த மீடியாக்கள்.

  5. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    தேசிய தொலைக்காட்சிகளில் இம்மாதிரி விஷயங்கள்
    திரும்ப திரும்பக் காட்டப்படுவது இது முதன்முறையல்ல.
    பதின்பருவ பெண்க்ள் பாலியல் வன்முறைகளுக்கு
    ஆளாவதும் வடக்கில் புதிதல்ல.

    தொலைக்காட்சி/ஊடகங்கள் இத்தகைய செய்திகளைக்
    கையாளும் விதம் வேண்டுமானால் கேள்விக்குரியதாக
    இருக்கலாம். சி என் என் ஐபிஎன்/எண்டிடிவி/ஆஜ்டாக்/
    டைம்ஸ் நவ் கையிலெடுத்துக் கொண்டபின் நிச்சயம்
    “குறிப்பிட்ட” விஷயத்திற்கு “தீர்வு” கிடைக்கிறதென்பதே
    (குறைந்த பட்சம் போலிஸ் கேஸ் ரிஜிஸ்டரர்கிறது, கைது
    நடக்கிறது. நிவாரணமும் கிடைக்கிறது) உண்மை.

    ஆனால், தமிழ் தொலைக்காட்சிகளில், தமிழ் நாட்டில்
    நடைபெறும் இத்தகைய/இதனினும் கொடிய செய்திகள்
    ஒரு போதும் இடம் பெறுவதில்லை. செய்திகள்
    இருட்டடிப்பு செய்ய படுகின்றன. மாறாக, சாலை
    விபத்துகளை, சிதறி உறைந்த ரத்தத்தை, உடல்களை
    அச்சம் ஏற்படும் வண்ணம் குளோஸ்-அப் செய்கின்றன.
    மற்ற நேரங்களில் “உலக தொலைக்காட்சி வரலாற்றில்
    முதன் முறையாக” தமிழனை உற்சாகப் படுத்துகின்றன.

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    வரவிருக்கும் தேர்தலில் புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கப்போகும்
    சுமார் 4900 MP க்களில் சுமார் 1500 பேர் கிரிமினல்கள் என்ற புள்ளிவிவரத்தைவிட,

    ஒரு வரலாறு காணாத ஊழல செய்யப்பட்டு முடிந்தபிறகு,சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது ..ஏனெனில் அதுவே கூட்டணி தர்மம்.
    என்று சொல்லும் பிரதமரை விட,

    தன் பேத்தியைவிட சிறிய வயதுள்ள ஒரு பெண்ணிடம் தன் அலுவலகத்திலேயே
    உறவுகொண்ட ஒரு எண்பது வயது ஆன மாநில ஆளுனரைவிட,

    ஒரு பாவமும் அறியாத மூன்று கல்லூரி மாணவிகளை பஸ்ஸில் வைத்து எரித்த
    தன் கட்சி நிர்வாகிகளை கண்டிக்கவும் இல்லாமல் ,அந்த சம்பவத்திற்கு அனுதாபம் கூட தெரிவிக்காத ஒரு முதலமைச்சரை விட,

    வறுமை காரணமாக தன் வீட்டில் வீட்டு வேலைக்கு விடப்பட்ட ஒரு 15 வயது பிஞ்சை கற்பழித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மலர்ந்த முகத்துடன் போலீஸ் வேனில் ஏறும ஒரு முன்னாள MLA ஐ விட,

    பல கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை செய்யப்படும் ஒரு மாநில அமைச்சருக்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சட்டவிரோதமாக ஜாமீன் வழங்கிய நீதிபதிகளைவிட,

    தன் மகளின் பதினாறு வயது தோழியை கற்பழித்து அவளை பிறகு தறகொலைக்குத்தூண்டி.அவள் குடும்பத்தையே தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிர்மூலம் ஆக்கிய ஒரு DIG of Police ஐ விட,
    அந்த DIG சார்பாக கோர்ட்டில் வாதாடும் அவர் மனைவியும் வக்கீலுமான ஒரு பெண்ணைவிட,

    வீட்டு வேலைக்கு வைத்துள்ள ஒரு சிறுமியை சொல்லொண்ணா கொடுமைக்கு ஆளாக்கிய இந்திய தூதரகத்தில்,அமெரிக்காவில் பணியாற்றும்,IFS ஆன ஒரு இந்திய உயர் அதிகாரியைவிட,

    கவுஹாத்தி நிகழ்வு கொடுமையானதாகவோ,கவுஹாத்தி குற்றவாளிகள் கொடியவர்களாகவோ எனக்குத்தோன்றவில்லை..

    உங்களுக்கு?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நிச்சயமாக – எனக்கும் தான் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.