“எழுதாதே – அநாவசியமான பிரச்சினைகள்
உண்டாகும்” என்கிறார் நலம் விரும்பி … !
“நலம் விரும்பி” என்கிற பெயரில் எனக்கு ஒரு
மின்னஞ்சல் வந்திருக்கிறது.
———————–
“நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவது அவசியமா ?
பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி இப்படி
எழுதுவதால் உங்களுக்கு அநாவசியமான
பிரச்சினைகள் உண்டாகக்கூடும். அவற்றை
தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.
நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். அரசியலைத்
தவிர்த்து விட்டு கலை, இலக்கியம், சினிமா,
மொழி, பண்பாடு பற்றி எல்லாம் எழுதலாமே.
உங்கள் நல்லதிற்காக சொல்கிறேன். இப்படி
எல்லாம் எழுதுவதை விட்டு விடுங்கள்.”
——————————–
அவருக்கு என்னுடைய பதில் –
அன்புள்ள நண்பர் நலம் விரும்பி,
நீங்கள் எழுதி இருப்பது ஒரு விதத்தில்
என்னை பயமுறுத்துவது போல் இருந்தாலும்,
என் நலனில் அக்கரை கொண்டு நீங்கள் எனக்கு
அறிவுரை கூறுவதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
நாம் வாழ்வது ஒரு ஜனநாயக நாட்டில்.
இந்த நாட்டில் எழுதப்பட்ட அரசியல் சட்டம் என்று
ஒன்று இருக்கிறது.
அதில் இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும்
அடிப்படை உரிமைகள் என்று சில உரிமைகள் உறுதி
செய்யப்பட்டிருக்கின்றன.(இவை தான் 1976ல்
எமெர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட போது
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தன ) இவற்றில்
நமது பேச்சுரிமையும், எழுத்துரிமையும் அடக்கம்.
சட்டத்திற்கு விரோதமாக இல்லாத வரையில் – பொது
வாழ்வில் ஈடுபட்டுள்ள எவரையும் நாம் விமரிசனம்
செய்யலாம். அவர்களது நடவடிக்கைகளை, செயல்களை
குறை கூறலாம். இதில் அரசியல் தலைவர்களுக்கோ,
அமைச்சர்களுக்கோ விதிவிலக்கு எதுவும் இல்லை.
நான் சட்ட விரோதமாக எதையும் எழுதவில்லை.
ஆபாசமாகவோ, ஆதாரம் இல்லாமலோ
எதையும் எழுதவில்லை.
நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பும் நமது
பிரதிநிதிகள் சரிவர இயங்கவில்லை என்றால், அவர்களை
கண்டிக்க, குறைகூற, நமக்கு அனைத்து
உரிமைகளும் இருக்கின்றன.
நம் நாட்டில் இன்று நிலைமை இவ்வளவு சீர்கேடு
அடைந்திருப்பதற்கும், லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து
ஆடுவதற்கும் முக்கிய காரணமே நம்மில் பெரும்பாலானவர்கள்
வாய்மூடி மௌனியாக இதை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருப்பது தான்.
பொது வாழ்வில் நிகழும் அக்கிரமங்களை
கண்டும் ஒன்று –நம்மால் என்ன செய்ய முடியும்
என்கிற இயலாமை – அல்லது நமக்கேன் வம்பு
என்கிற பயம் – காரணமாக மௌனமாக இருக்கிறோம்.
நம்முடைய பலவீனம் அவர்களை, அவர்கள் செய்யும்
தவறுகளை மேலும் மேலும் பலப்படுத்துகிறது.
விழிப்புணர்வு இல்லாத மக்களைக் கொண்ட நாட்டில்
ஜனநாயகம் நீடித்திருக்க முடியாது.
நான் எழுதுவதன் காரணமே – இவற்றை எல்லாம் பார்த்துக்
கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை என்பது தான்.
நான் தனி ஆள் இல்லை – என்னைப்போல் இன்னும்
பலர் எண்ணுகின்றனர் என்பதற்கு இந்த வலைத்தளத்தில்
வரும் பின்னூட்டங்களே சாட்சி.
தெருவில் இறங்கி, மக்களைத் திரட்டி,
போராடக்கூடிய சக்தியும், வயதும்
எனக்கு இல்லை.
ஆனால் – என் எதிர்ப்பை பதிவு செய்ய என்னால் முடியும்.
எனக்குத் தெரிய வந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல
என்னால் இயலும். அதைத்தான் இந்த வலைத்தளம்
மூலமாகச் செய்கிறேன்.
விளைவுகளைப் பற்றி எச்சரித்திருக்கிறீர்கள் -நன்றி.
சட்ட விரோதமாக நான் எதையும் செய்வதில்லை என்பதால்,
சட்டபூர்வமான எந்த நடவடிக்கைக்கும் நான் அஞ்சவில்லை.
ஆனால் – வேறு விதங்களில் எதாவது நிகழ்ந்தால்
என்று கேட்கிறீர்களா …?
என் குடும்பத்தைப் பொறுத்த வரை -என் கடமைகளை,
பொறுப்புகளை நான் நிறைவேற்றி விட்டேன்.
இனி, நான் இல்லா விட்டாலும் கூட அவர்களால்
சமாளித்துக் கொள்ள முடியும்.
பெரிதாக எதிர்பார்ப்புகள் எதுவும் வாழ்க்கையில்
எனக்கில்லை. முடிவு என்பது எப்போது வேண்டுமானாலும்
வரலாம் – சில மாதங்களிலோ, சில வருடங்களிலோ !
அது நம் கையிலும் இல்லை.
எனவே – என்னைப் பொறுத்த வரை –
I AM PREPARED FOR A HAPPY TAKE OFF
FOR THE FINAL JOURNEY AT ANY TIME !!
மற்றபடி – என் மனதில் இருப்பதை வெளியே சொல்ல
ஒரு வாய்ப்பு அளித்தமைக்காக உங்களுக்கு என் நன்றிகள் –
நண்பர் நலம் விரும்பி !



நண்பர் கா.மை,
மிக சரியான, தெளிவான, ஸ்திரமான உங்கள் பதில் நிச்சயம் நலம் விரும்பியின் மனதையும் திருப்பும் உங்கள் பாதையை நோக்கி.
வாழ்க வளமுடன்,
செந்தில் குமார்,
கத்தார்.
nalam virumbi enn thonnoda peyarai kodukavillai?
romba virumbararo?…. vaarthai jodanayai paarthaal, chidu allathu mk uravu maathiri irruku…. they are dare devils. they will do anything sir….
தங்களுக்கு ஈமெயில் அனுப்பிய அநாமதேய நண்பர் தனது பெயரை சொல்ல அஞ்சுவதிலிருந்து அவரும் பயப்படுகிறார் என தெரிகிறது. அநாமதேய நண்பரே நீங்களும் பொதுவாழ்வில் நாட்டம் உள்ளவர் என தெரிவதால் பயப்படாமல் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நம்மை போலுள்ளவர்கள் ஒதுங்கி விடகூடாது. சரியோ தவறோ நமது கருத்துக்களை கூறுவோம் வாருங்கள். பாரத நிர்மாணத்தில் பங்குகொள்வோம்.
ஒரு கட்சி தலைவர்,,
ஆண்,பெண் அல்லது திருநங்கையாக இருக்கலாம்
இளைஞர்,நடுத்தரவயது அல்லது முதியவராக இருக்கலாம்.
ஹிந்து,முஸ்லிம்,அல்லது கிருத்துவராக இருக்கலாம்..
பார்பனர்,தேவர் அல்லது தலித்தாக இருக்கலாம்.
வட,தென்,கிழக்கு,அல்லது மேற்கு இந்தியாவில் பிறந்தவராக இருக்கலாம்.
கிராமம் அல்லது நகர வாசியாக இருக்கலாம்.
ஏழை,மத்திய அல்லது செல்வந்தராக இருக்கலாம்.
மிகப்படித்தவராகவோ அல்லது பாமரராகவோ இருக்கலாம்.
அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை.
ஆனால் அவர்
நேர்மையாளராகவும் ,திறமைசாலியாகவும்,தேசபக்தி மிகுந்தவராகவும் இருக்க வேண்டும்
அவரையே நான் ஆட்சியாளராக தேர்ந்தெடுப்பேன்,
என்று எப்பொழுது ஒவ்வொரு இந்திய வாக்காளனும் உறுதி பூணுகிறானோ
அன்றே நமக்கு விடியும்..
அதுவரை நாம்
சோனியா,அத்வானி,கருணா,ஜெயா,எட்யுரப்பா,யாதவ்,சிதம்பரம்,
போன்றோரை சகித்துகொண்டிருக்கவேண்டியதுதான்..
இதை நம்மால் முடிந்த அளவு பிறருக்கு புரியவைப்பதே
பாரத நிர்மாணம்..
ஜுரவேகத்தை தேவையான அளவிற்கு மேலேயே அளவிட்டாகிவிட்டது..
இனி Paracetemol கொடுக்கும் வழியைப்பற்றி யோசிப்போம்….
தாங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டீா்கள் என எண்ணுகிறேன்.எனது பெயரை தெரிவிப்பதில் எந்த பயமோ,தயக்கமோ என்னிடம் சிறிதும் இல்லை.
என்னுடைய மெயில் ஐடியில் இருந்து எனது அறிமுகம் தங்களுக்கு ஏற்படும் என நினைத்தேன்.
மன்னிக்கவும்.
எனது பெயர் தேவதாஸ் அனைவரும் அழைக்கும் பெயர் SNR.மணி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்.வயது 56.எனது தந்தை சுதந்திர
போரட்ட நிகழ்வுகளில் முழுமையாக பங்கெடுத்துக்கொண்டவர்.காமராஜருக்கு
எனது தந்தையை ஒட்டன்சத்திரம் செட்டியார் என்று சொன்னால் போதும்.எனது தந்தையின் ஜாதகத்தையே சொல்லக்கூடிய அளவுக்கு அறிமுகம் உள்ளவர். 1977 ல் நடந்த தேர்தலில் கைக்காசை செலவழித்து ஜனநாயகம் மீட்க போராடியவனில் நானும் ஒருவன்.
என்னைப் பற்றி தங்களுக்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பு தந்தைமைக்கு மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்.
My friend continue your comments
அன்பு நண்பரே,
ஒரு காலத்தில் முழு அர்ப்பணிப்புடன் போராடியவர்கள் இன்று காலச் சிக்கலில் சிக்கி அமைதியுடன் ஒதுங்கியிருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே! இது இனி நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாதையில் எத்தகைய மன வலிமையுடன் செல்ல வேண்டியிருக்கும் என்ற ஒரு அவதானிப்பை ஏற்படுத்த உதவுகிறது. தங்களது பகிர்தலுக்கு நன்றி.
உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமையானது… என்னால் பின்னொட்டம் இட முடியவில்லை என்றாலும் நான் என் நண்பர்களுக்கு MAIL செய்து விடுவேன்…
அருமையான பதிப்புகள் நீங்கள் சொல்வது அத்தணையும் உண்மை….
கருத்துக்கைளை கூறுவதர்க்கே இப்படியா
இவர்கள் தானும் வரமாட்டார்கள் வந்தவர்களையும் நன்றாக இருக்க விடமாட்டார்கள். இப்படியே சொல்லிக்கொண்டு இந்த நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள். அன்று எங்கே போவீர்கள் Mr. நலம் விரும்பி….
“அவற்றை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்” – நலம் விரும்பி, நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் அவர்களின் கைகூலிகளாக தான இருக்க வேண்டும்
Dear Kavirimainthan,
உங்கள் பதில் நான் எதிர்பார்த்தது போல தெளிவாக உள்ளது.உங்கள நேர்மைக்கும் தேச பக்திக்கும் நான் தலைவணங்குகிறேன்.அதேசமயம் “I AM PREPARED FOR A HAPPY TAKE OFF FOR THE FINAL JOURNEY AT ANY TIME !!” என்ற உங்கள் கருத்திலிருந்து நான் சிறிது மாறுபடுகிறேன்.
எனக்கு இந்த தேசத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லை.அதாவது நம் Constitution,IPC, இவைகளை மாற்றாமல் நம்மால் எதையும் சாதிக்க முடியாது.இங்கு நம் பலவீனமே ஜனநாயகம்தான்..எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல்தான் தொடரும்.எனவே நாம் நபர்களை குறைக்கூறுவதை நிறுத்தி விட்டு வழிமுறைகளில் உள்ள சீர்கேட்டை களைந்தால் ஒரு தீர்வு கிடைக்கும்.
மேலும் வரப்போகும் 2014 தேர்தல் ஊழலின் உச்ச கட்டமாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.அதற்கான அறிகுறிகள் இப்பொழுது ஜனாதிபதி தேர்தலிலிருந்தே தெரிகிறது.யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று நமக்கு இன்று வரை தெரியாது.
எனவே இந்த பிரச்சினையை அவ்வளவு எளிதாகவோ,சீக்கிரமாகவோ தீர்த்துவிட முடியாது.எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் நம் மக்களுக்கு எதைத்தியாகம் செய்தாலும் பயனில்லை.
அன்புடன்,
Ganpat
வழிமொழிகிறேன்..
கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்.
இதுதான் யதார்த்தம்.
ஆனாலும், அழுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க அந்த நிலை ஒருநாள் வந்து சேரும் – நம் காலத்திலோ அல்லது அதற்குப் பின்னோ!
அதெல்லாம் சும்மா சார். தங்களை விட கடுமையான வார்த்தைகளை உபயோகித்து இனையத்தில் எழுதுபவர்கள் நிறையபேர். கதர் சட்டை களவானிகளைப் பற்றி எழுதுவதற்கு சற்றும் தயக்கம் காட்ட வேண்டாம். நாடும் மக்களும் எக்கேடாவது கெட்டு போகட்டும் என்ற ஒரே குறிக்கோளோடு ஆட்சி புரியும் இந்த களவானிகளின் அல்லக்கைகள் நலம் விரும்பி என்ற போர்வைக்குள் அனுப்புகின்ற ஈமெயில்களை குப்பையிலே வீசிவிட்டு தொடர்ந்து எழுதுங்கள்.
நாட்டை பிளவுபடுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தேசத்தின் நிம்மதியை, மக்களின் நிம்மதியை குலைப்பதற்கு தேச விரோத கருத்துகளை எழுதி குவிப்பவர்களே – சட்டத்துக்கு பயப்படாமல் இருக்கும்போது, “இந்த மக்களும், இந்த நாடும் நல்லா இருக்கணும்” என்கிற ஒரே நோக்கத்துக்காக எழுதும் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
அன்புடையீர்.வணக்கம்.தங்களுக்கு வந்த மிரட்டலுக்கு தாங்கள் கொடுத்துள்ள பதில் மிகவும் பொருத்தமானதே.
கடைசி வரிகள் மனதை பாதித்தது.இருந்தாலும் பக்குவப்பட்டு இருந்தால்தான் இந்த வரிகளை எழுத முடியும்.
கவலை கொள்ள வேண்டாம்.எது நடந்தாலும் நன்மைக்கே.
வாழ்க வளமுடன்.
தங்கள் பதிவுகளை மிகவும் வரவேற்பவன் நான்.
Nice reply.. Your posts are very eagar to read and feel to step forward.
thanks a lot..