ஜனாதிபதி தேர்தல் – பரிசோ பரிசு !!
முதலில் வந்தார் மாயாவதி –
காத்திருப்போர் பட்டியலில் போட்டியோ போட்டி !!
ஜனாதிபதி தேர்தல் வந்தாலும் வந்தது.
அடுத்து அடுத்து அரசியல் தலைவர்களில்
பலர் பெரும் பரிசுகளை எதிர்நோக்கி
காத்திருக்கிறார்கள்.
அதில் முந்திக் கொண்டவர் முன்னாள் உ.பி.
முதலமைச்சர் மாயாவதி. இவர் மீது அளவிற்கு
அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ போட்ட
வழக்கு அடிப்படையே சரியில்லை என்று
இன்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. !
அடிப்படை சரியாக இருக்கும் என்று யார் எதிர்பார்த்தது ?
மாயாவதி பிரனாப் முகர்ஜிக்கு ஆதரவு தருவதாக
ஏற்கெனவே சொல்லி விட்டார் என்பது நமக்கு
மறந்து விடுமா என்ன !
(இந்த வழக்கு தொடுக்கப்பட்ட பிறகு கூட 2007ல்
52 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு
2012ல் ராஜ்ய சபா உறுப்பினராக ஆகும்போது
111 கோடியாக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட
மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் !
அப்படி என்ன வேலை செய்தாரோ –
எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தால் நாட்டில்
அனைவரும் முன்னேறலாம் அல்லவா !!)
இதையடுத்து ஒரு பெரிய காத்திருப்போர்
பட்டியல் தயாராக இருக்கிறதாம் …
முலாயம் சிங் யாதவ்,
லாலு பிரசாத் யாதவ்,
அமர் சிங்,
கவிஞர் கனிமொழி,
ஆ.ராசா …..
– காலம் தாழ்ந்தாலும், பரிசு அனைவருக்கும் உண்டு.
கவலை வேண்டாம் என்று சொல்லப்பட்டிருந்தால்
தேவலை !
இல்லையேல் பாவம் – தள்ளு முள்ளு போட்டியால்,
அநாவசியமான கலக்கங்களும்,
கிலேசங்களும் வாட்டி வதைக்கும்.
பி.கு –
என்ன காவிரிமைந்தன் இப்படி ஒன்றும் புரியாதபடி
எழுதுகிறீர்கள் என்று யாரும் கேட்க மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்.
நான் எழுதித் தானா உங்களுக்கு தெரிய வேண்டும் ?
இது சும்மா – ஒரு வென்டிலேஷன் – அவ்வளவு தான் !




மாமாதாவுக்கு கூட ஒரு பரிசு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்பதை பிரணாப் பேச்சிலிருந்தே அறியலாம். உலகத்திலே எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்று சும்மாவா சொன்னார்கள்?!
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவிப்போர்களுக்கான பட்டியலில் நான்கு பெயர்கள் மட்டுமே தெரிவித்துள்ளீர்கள்.
விடுபட்டவர்கள் பெயர்களை வேண்டுமென்றே விட்டு விட்டீர்களா? பல்வேறு மாநிலங்களிலும் பயனை எதிர் நோக்கும் அரசியல் கட்சிகள் உள்ளதே?(சிவசேனா போன்ற கட்சிகள்) அதிலும் சங்க்மா கேட்டால் பெரிய அளவில் சலுகை
கிடைக்கும்.மேலும் கவிஞ்சர் என்ற அடைமொழி இல்லாமல் கனிமொழி பெயர் மட்டும போதுமே? கவிஞ்சர் என்ற
சொல்லின் மதிப்பை ஏன் குறைக்க வேண்டும்.?
உடனடியாக நம் தேசீய கீதத்தை “ஜன கண மண” விலிருந்து யேசுதாஸ் முதன் முதலில் பாடிய கீழ்கண்ட திரைப்படப்பாடலுக்கு மாற்றி விடுவதாக காங். உறுதி அளித்தால் என் ஓட்டும் பிராணாபிற்கே!(பாடல், நாட்டு நிலைமையை கருதி, சற்றே 😉 மாற்றப்பட்டுள்ளது).
இதோ அந்த பாடல்..
“நீயும் கொள்ளை
நானும் கொள்ளை
நெனச்சு பார்த்தா
எல்லாம் கொள்ளை
பொறக்கும்போது ஆஸ்பத்திரி கொள்ளை
படிக்கும்போது பள்ளியில் கொள்ளை
வேலைக்கு சேர்ந்தா எஜமானன் கொள்ளை
வூட்டுக்கு வந்தா பொண்டாட்டி கொள்ளை
நீயும் கொள்ளை
நானும் கொள்ளை
நெனச்சு பார்த்தா
எல்லாம் கொள்ளை
அறுபதுக்கு மேலே ஆன்மீக கொள்ளை
மடத்துக்கு போனால் சாமியார் கொள்ளை
மனசொடிஞ்சு மண்டைய போட்டா,
அங்கேயும் இருக்கு ,வெட்டியான் கொள்ளை
நீயும் கொள்ளை
நானும் கொள்ளை
நெனச்சு பார்த்தா
எல்லாம் கொள்ளை”
நன்றி கண்பத்.
இதையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் –
“நெஞ்சு பொறுக்குதில்லையே –
இந்த நிலை கெட்ட மனிதரை
நினைத்து விட்டால் …”
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Nice lyrics
Mr.Ganpat, Super padusuper Song.
என்ன கொடுமை சார் இது!!!
ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் சரியான மாஃபியா கேங்கா இருக்கும்போலிருக்கே!
இன்று காலையில் இந்த செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கும்போது கடுப்பாகிவிட்டது.
சாதாரண பள்ளி ஆசிரியையாக தனது வாழ்வைத்
தொடங்கிய போது, இந்த ஆதி இந்தியரின் (ஆதி திராவிடர்
மாதிரி) சொத்து மதிப்பு சில நூறுகள்தான். பின்னர், ஆதி
இந்தியர்களின் வாழ்வை மேம்படுத்துவதே தனது
“முதல்” இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த
கன்ஷிராமின் அறிமுகத்திற்குப் பின் இலட்சங்களாகி,
இலட்சியம் மறந்து பதவியொன்றே இறுதி
இலட்சியமானவுடன் கோடிகளைத் தாண்டியது.
பி ஜே பியுடனும் காங்கிரஸுடனுமான அரசியல்
பேரங்களின் விளைவாகவும், உ பியில் இரண்டு முறை
கோலோட்சியதாலும் கிடைத்ததுதான் கணக்கில்
கொண்டு வரப்பட்ட இந்த 111 (என்ன பொருத்தம்)
கோடிகள்.
லிஸ்ட்டில் ஜெகனும் இருக்கிறார். திருமதி ஒய் எஸ் ஆருடன்
பிரணப் பேசியிருக்கிறார். “ஆதரவு” உறுதியானது போல்தான்
தெரிகிறது.
வழக்குகள் உரிய ஆதாரங்களுடன் பதியப்பட்டாலும், அரசியல்
காரண்களுக்காக “சில” புனைவுகளும் செய்யப்படுகின்றன.
அவற்றை உரிய நேரத்தில் உரியவாறு பயன்படுத்துவதில்
காங்கிரஸ் தலைமை கில்லாடிகள். சுதந்திர இந்தியாவை
பல ஆண்டுகள் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த அனுபவம்
கை கொடுக்கிறது.
உண்மையான விசயம்.ஜனாதிபதி மக்களுக்கு நல்லது செய்யப்போகிறாரோ இல்லையோ இவா்களுக்கு மட்டும் நல்லது நடக்கிறது. வாழ்க இந்தியா?