ஆமீர்கானின் மது – மித வாதம்..!!

“சத்யமேவ ஜெயதே” -உங்களில் எவ்வளவு பேர்
தொடர்ந்து பார்த்து வருகிறீர்களோ தெரியாது.
நான் நிறைய எதிர்பார்ப்புகளுடன் தான் இந்த தொடரை
துவக்கத்திலிருந்தே பார்த்து வருகிறேன். இந்தியா
முழுவதும் பயணம் செய்து விவரங்கள் தயார் செய்ய
அருமையான டீம் ஒன்று. பின்னணியில் இருந்து
ஊக்குவிக்க இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்
ரிலயன்ஸ் முகேஷ் அம்பானி, முக்கியமான
தொலைக்காட்சிகளில் விடுமுறை நாளில் வெளிவருவதால் –
நிறைய விளம்பரதாரர்கள். இன்றைய நிலையில்
அகில இந்திய அளவில் (TRP) 3வது ரேங்க்கில்
வெளிவரும் நிகழ்ச்சி இது.
இத்தகைய வசதிகள், பின்னணி – இருந்தும்,
ஏனோ நிகழ்ச்சிகளில் போதிய அழுத்தம் இல்லை.
தீவிரம் இல்லை.
எடுத்துக் கொள்ளும் தலைப்புகளில் –
பிரச்சினையின் அடிப்படைக் காரணம் என்ன ?
இந்த பிரச்சினையை தீர்க்க /போக்க வழி என்ன
என்று சொல்வதில் அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை.
யாருக்கோ வலித்து விடப்போகிறதே என்று
கவலைப்படுவது போல் தோன்றுகிறது !
சமுதாயப் பிரச்சினைகளை அலசும்போது,
யாருக்காக பயப்பட வேண்டும் ? அரசாங்கத்தின்
பங்கைப்பற்றி ஆமீர்கான் பேசுவதே இல்லை.
அவர் எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் அனைத்திலும்,
அரசாங்கம் செய்யக்கூடியது என்ன என்பதை
தொடாமலே போகிறார். அரசாங்கத்தின்
விரோதம் வந்து விடப்போகிறதே என்கிற பயமா
அல்லது இவரும் அதே பக்கம் தானா ?
– தெரியவில்லை.
கடந்த ஞாயிறு அன்று எடுத்துக் கொண்ட தலைப்பு
“குடி” ! துவக்கத்திலேயே –
படுசீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டிய
ஒரு விஷயத்தை, குடித்தே தன் வாழ்க்கையில்
பல வருடங்களைத் தொலைத்த ஒருவரின் பேட்டியை
சிரிக்க சிரிக்க போட்டு காமெடியாக்கி விட்டார்கள்.
நிகழ்ச்சியை முடித்து வைக்கும்போது,
இறுதியில் அவர் சொன்னது தான் நான் எரிச்சலாவதன்
முக்கிய காரணம்.
“குடித்து விட்டு காரை ஓட்டாதே –
விபத்து ஏற்படும். உனக்கு எதாவது நிகழ்ந்தாலும்
பரவாயில்லை – அடுத்தவர் உயிரை எடுப்பதற்கு
உனக்கு உரிமை இல்லை !”
முத்தாய்ப்பாக –
“குடிக்காமல் இருப்பது
நல்லது. ஆனால் நம்மில் பலபேர் குடிப்பவர்கள்.
எனவே குடிப்பதை ஒரு அளவோடு வைத்துக் கொள்ள
வேண்டும். முக்கியமாக குடித்து விட்டு வண்டியை
ஓட்டக்கூடாது. குடித்தவர் ஓட்டும் வண்டியில்
பயணம் செய்வது இல்லை என்று நாம் யாவரும்
உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் ”
என்று கூறி முடித்து விட்டார்.
ஆமீர்கான் ஒரு ஹீரோ – சூப்பர் ஸ்டார்.
ஆமீர்கானின் நிகழ்ச்சியை பார்ப்பவர்களில் பல பேர்
இளைஞர்கள். அவர்களிடம் இது எத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தும் ?
“குடிப்பது தவறில்லை.ஆனால் குடித்து விட்டு
வண்டியை ஓட்டினால் – விபத்து நிகழக்கூடும்.
எனவே குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது ”
அவ்வளவு தானே ?
குடிப்பதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி
கடுமையாக எச்சரித்து,
“குடிப்பழக்கம் இருப்பவர்கள்
அதை உடனடியாக கைவிட வேண்டும். அதற்கான
சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் இந்த பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ளக்கூடாது. ஒரு தடவை குடித்துப் பழகி
விட்டால், பின்னர் அதிலிருந்து வெளிவருவது
மிக மிகக் கடினம்”
-என்று அல்லவா சொல்லி
இருக்க வேண்டும் ?
மக்களின் நல்வாழ்வைப் பற்றி கவலைப்படாமல்,
வருமானத்துக்காக மதுக்கடைகளை திறந்து
வைத்திருப்பதோடு,
தானே வியாபாரமும் செய்து வரும் அரசுகளை
கண்டித்திருக்க வேண்டாமா ?
இந்தியா முழுவதும் மதுவிலக்கை
கடுமையாக அமுல்படுத்த வேண்டும்
என்று வலியுறுத்தி இருக்க வேண்டாமா ?
மது அருந்துவதில் அளவு எங்கிருந்து வருகிறது ?
துவக்கத்தில் எல்லாரும் கொஞ்சத்தில் தான்
ஆரம்பிக்கிறார்கள். ஆனால் போகப் போக …?
மது அருந்தினால் என்ன ஆகிறது ?
முதலில் நேராக சிறுமூளையை பாதிக்கிறது.
உடனடி விளைவு ?
மூளையின் கட்டுப்பாட்டில் இருந்து நமது உடல்
உறுப்புகளின் செயல்பாடு விடுபட்டு விடுகிறது.
நேராக நிற்க முடியவில்லை.
நினைப்பதை பேச முடியவில்லை.
கால்கள் பின்னிக் கொள்கின்றன.
கட்டுப்பாடற்ற செயல்களில் ஈடுபடுகிறோம்.
ஏன் இப்படி ?
பொதுவாக மது எப்படி தயாரிக்கப்படுகிறது ?
ரஷ்யாவில் “வோட்கா” உருளைக்கிழங்கில் –
சீனாவில் “மவுத்தாய்”யும்,
ஜப்பானில் “சாக்கே”யும் – அரிசியில்,
ஸ்காட்லாந்தின் “ஸ்காட்ச்” கோதுமை மற்றும்
மக்காச்சோளத்திலிருந்து –
பிரான்ஸின் “ஷாம்பெயின்” திராட்சையிலிருந்து –
அரபுநாடுகளில் “பேரீச்சம்பழ”த்திலிருந்து –
இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா
போன்ற நாடுகளில் “தென்னை,
பனைப்” பொருட்களிலிருந்து –
ஆனால் இங்கு நம் நாட்டில் ?
பொதுவாக கரும்பு ஆலையின் கழிவுப்பொருளான
மொலாஸிஸ் -லிருந்து !!
ஆனால் வெறும் மொலாஸ்ஸிஸில் வரும் போதை
போதவில்லையே ! ஆகவே கூட உபபொருட்களாக
போதை தரும் பொருட்களை சேர்க்கிறார்கள் !
எத்தகைய போதைப்பொருள் சேர்க்கப்படுகிறது ?
“மீத்தெயில் ஆல்கஹால்” என்பது டாய்லெட் கழுவும்
ஆசிட். பெயிண்ட், வார்னிஷ் போன்ற பொருட்களில்
பயன்படுத்தப்படும் ரசாயனம்.
“ஈத்தெயில் ஆல்கஹால்” என்பது மதுபானங்களில்
போதைக்காக கலக்கப்படும் ரசாயனம். இவை இரண்டும்
அண்ணன் தம்பி போன்றவை தான்.
இரண்டுக்கும் ஒரே வாசனை -ஒரே கலவை !
அண்ணனை(மீத்தெயில் ஆல்கஹால்) குடித்தால்
ஐந்தே நிமிடங்களில் பார்வை பறி போகும்.
பதினைந்து நிமிடங்களில் மூளை செயலிழக்கும்.
முப்பது நிமிடங்களில் உயிர் போய் விடும்.
அடிக்கடி “விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு”
என்று கேள்விப்படுகிறோமே – இது தான் அது !
இதே வேலையைத் தான் தம்பி(ஈத்தெயில் ஆல்கஹால்)
சற்றே மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாகச்
செய்கிறார். அண்ணனுக்கு சில நிமிடங்கள் என்றால்
தம்பிக்கு சில வருடங்கள் – அவ்வளவு தான் வித்தியாசம் !
இதை எக்காரணம் கொண்டும் நாம் ஊக்குவிக்கலாமா ?
ஒரு ஜனநாயக நாட்டில் –
அரசாங்கமே அதற்கு காரணமாக இருக்கலாமா ?
தன் நிகழ்ச்சியின் மூலம், மதுவிற்கு எதிராக
பலமான ஒரு பொதுக்கருத்தை உருவாக்கவும்,
மதுவிலக்கை நாடுமுழுவதும் கடுமையாக
அமுல்படுத்தக்கோரி அரசாங்கத்தை
வலியுறுத்தவும் அல்லவா ஆமீர்கான்
முயற்சித்திருக்க வேண்டும் ?
இதைச் செய்ய முடியவில்லை என்றால்
ஆமீர்கான் இந்த சப்ஜெக்டையே
தொட்டிருக்க வேண்டாமே !



சத்யமேவ ஜெயதே. தலைப்பு நல்ல வெயிட்டாக உள்ளது. அந்த அளவுக்கு பேசப்படும் விஷயங்களில் சத்து
இருப்பதாக தெரியவில்லை.
எல்லாருமே திருடங்கதான்…
சொல்லபோனால் குருடங்கதான்…
அமீர்கான் இந்த தொடரை துவக்கும் போது இது ஒளிபரப்பப்படும் நேரத்தில் எந்த விளம்பரமும் அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார்.
ஆனால் எல்லாம் பண விவகாரமே!
எல்லோருக்கும் பணம் சம்பாதிப்பதே குறிக்கோள்.
அது எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்பது இப்போது யாருக்கும் ஒருபொருட்டல்ல.
கேட்டால் நாய் வித்த காசு குறைக்குமா
மீன் வித்த காசு வீசுமான்னு குதர்க்கம் பேசுவார்கள்
இவர்களால் ‘முழு சத்தோடு’ எதையும் படைக்க முடியாது. ‘இமேஜ்’ பாதிக்கக்கூடிய வகையிலானவற்றை செய்ய மாட்டார்கள்.
அரசாங்கமே காண்டம் அணிந்து பாதுகாப்பாக உடலுறவு கொள்ளுங்கள் என்று சொல்வதில்லையா. மனைவியுடன் மட்டும் உறவு வச்சிக்கறவனுக்கு எதுக்கு காண்டம்னு யாரும் கேட்கறதில்லை!!!
எல்லாத்தையுமே ஒரு மேம்போக்கான பார்வையில சொல்றது எவ்வித அதிர்வையும் ஏற்படுத்தாது.
படித்த இளைஞர்க்ளைக் கொண்டு அரசாங்கமே
சாராயம் விற்கும் காலத்தில், ஆண்-பெண் வித்தியாசமின்றி
காலையில் கடை திறக்கும் முன்பே காத்திருந்து
சரக்கடிக்கிறார்கள்.
சினிமாக்காரர்களும், ரியாலிட்டி ஷோக்களில் தனது
நடனத் திறமையைக் காட்டும் நடிக-நடிகைகளும்
சாராயத்தை “ஊக்கியாக”க் கையாள்கிறார்கள்.
சரக்கோடு சம்மந்தமில்லாத சினிமாக்காரர் யாரேனும்
(சிவக்குமார் மாதிரி) இருப்பதாக சொன்னால், ஆகாஷ்
இங்குபேட்டரில் உள்ள சிசு கூட சிரிக்கும்.
பாலிவுட் நடிகர்களுக்கும் போதை வழக்குகளுக்கும்
எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. போதையில்
வாகனம் ஓட்டி பலருடைய உயிரோடு கூட விளையாடி
இருக்கிறார்கள்.
இம்மாதிரியான ஆசாமிகளிடமிருந்து எம்மாதிரியான
உபதேசம் வரும்?
கண்ணதாசன், “நரகத்தின் கண்ணைக்கட்டி நகரத்தில்
ஆடவிட்டு….” என்கிற திரைப்பாடலில் “ராமனைப் போலே
உள்ள ராவணன் இங்கே உண்டு” என எழுதியதுதான்
நினைவுக்கு வருகிறது.
பதின் பருவம் தாண்டிய பிள்ளைகளிடமெல்லாம்
கணக்கில்லாமல் ஆயிரங்கள் புரளுகின்ற காரணத்தால்,
பணம் பாருக்கும் பப்புக்கும் போகிறது. யுவதிகளும்
பெருமளவில் போதையில் கரைகின்ற காலத்தில்,
“கள்ளுண்ணமை” பற்றி வள்ளுவரே வந்து
உபதேசித்தாலும் யார் காதிலும் ஏறாது.
நிர்வானமான ஊரில் கோவணம் கட்டியவன்
பைத்தியக்காரன் என ஒரு சொல் வழக்கு உண்டு.
ஆனாலும் உங்கள் மன வருத்தமும் அக்கறையும்
புரிகிறது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது. ஆமீர்கான்
ராகுல் காந்தி ஆட்சி அமைய ஓட்டு கேட்கப்போகிறார்.
அப்படி இருக்கையில், அவர் எப்படி அரசை விமர்சித்து
பேசுவார்.
இல்லாவிட்டால், தூர்தர்ஷன் அவரது நிகழ்ச்சியை
அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்புமா ?
யாரும் வெளிப்படை இல்லை. ஆளுக்கு ஒரு முகமூடி
அணிந்து கொண்டிருக்கிறார்கள்.
பார்த்து உணர்ச்சி வசப்படுகிறவர்கள் தான் மடையர்கள்.
நல்ல இடுகை . நன்றி காவிரிமைந்தன்.
யாரையாவது நல்லவர் என்று நினைத்தாலே அவர் சாயம் சீக்கிரம் வெளுத்துவிடுகிறது! இவ்வளவு அசுர பலம் கிடைத்தவுடன் எவ்வளவெல்லாம் செய்யலாம்? இவர் என்னவோ மறுபடியும் வெறும் பணத்தின் பின்னாலே போவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது, நம்மை நினைத்து!
உலகின் மிக பெரிய போலிகள்(hypocrites) இந்தியர்கள் என்பதுதான் அனைவரும் அறிந்ததே!! அதற்கு அமீர்கான் ஒரு நல்ல உதாரணம்..அந்த நிகழ்ச்சியே ஒரு fake..
இருதினங்களுக்கு முன் சமூக ஆர்வலர் ஒருவர் திருவண்ணாமலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்..இதற்கு அந்த ஊரே அதிர்ந்திருக்கவேண்டும்.அன்று வியாபாரிகள் தாங்களே முன்வந்து bandh நடத்தியிருக்கவேண்டும்..அதையெல்லாம் விடுங்கள்…அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் உள்ளூர்வாசிகள் அனைவரும் கலந்து கொண்டிருக்கவேண்டும்..
இவை நடந்ததா??
In democracy, people get, only what they deserve!
In democracy, people get, only what they deserve!
100% Fact
Hope you will permit me to make a small correction….
In democracy people get only what ” MAJORITY OF THEM” deserve !!!
( Because atleast “we ” definitely do not deserve this !)
with all best wishes,
kavirimainthan
Excellent!
Agree in toto with a small exception..
We are minority as far as curses are concerned..
But for boons ,we are treated as majority
Regards,
Ganpat
In India the democracy is abused to the core. It is done both by the political parties / governments and the electorate. The electorate is divided, uneducated (majority), unconcerned etc. This is the strength of our politicians. They will never let the electorate to get united or well informed. Revolutions like Egypt / Tunisia will never happen in India due to these factors.
South Korea which was ruined by the occupation and then the Korean war had progressed well with the good governance by governments elected in a democratic way. The corrupted politicians were punished by the electorate and then sent to jail after recovering the looted money from them. A few years back an ex-president ( Roh Moo Hyun) committed suicide because his relatives were involved in some scam during his presidency. Also, many prominent business leaders were brought before the law for unethical business practices and punished by the judiciary.
Nithil