கனிமொழி இல்லத்திலிருந்து ஜனாதிபதி தேர்தல்
பிரச்சாரத்தை துவக்கிய பிரனாப் முகர்ஜி …. !!
இன்றைய மாலைச் செய்திகளிலிருந்து ஒரு தொகுப்பு –


Mukherjee met UPA’s key partner DMK
President M Karunanidhi –
at his CIT Nagar residence here,
(கனிமொழியின் சிஐடி காலனி இல்லம் )
formally kickstarting the campaign.
Karunanidhi residence has reverberated
to the sounds of ‘Chenda melam’ and ‘
Naiyandi melam’ from afternoon onwards.
Earlier Mr.Mukherjee landed at
tambaram airforce station in special plane.
தமிழில் –
பிரனாப் முகர்ஜி கலைஞரை சிஐடி காலனி இல்லத்தில்
(கனிமொழி/ராஜாத்தி அம்மாள் இல்லம் ) சந்தித்து
முறைப்படி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை
துவக்கி வைத்தார்.
கலைஞரின் இருப்பிடம் மதியத்திலிருந்தே செண்டை மேளம்,
நையாண்டி மேளம் சப்தங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது.
முன்னதாக பிரனாப், தனி விமானத்தில், தாம்பரம்
விமானப்படைக்கு சொந்தமான தளத்தில் வந்திறங்கினார்.
——————
தனது தேர்தல் பிரச்சாரத்தை பொருத்தமான இடத்தில்
துவக்கிய பிரனாப் முகர்ஜியின் முன் யோசனைக்கு
நமது வாழ்த்துக்கள் !
ஒரு சின்ன கேள்வி – காங்கிரஸ் தலைவர்கள் யாராவது
விளக்கினால் தேவலை !
தாம்பரம் விமானப்படை தளத்தை – தேர்தல்
பிரச்சாரத்திற்காக வரும் – இன்றைய தினத்தில்
எந்த பதவியிலும் இல்லாத – ஒருவர் பயன்படுத்துவது
முறையா ?
தனி விமானத்திற்கான செலவை ஏற்பது யார் ?
இன்றிரவு அடையாறில் 5 நட்சத்திர ஓட்டலில்
அனைத்து MP, MLA க்களுக்கும் அளிக்கப்படும்
விசேஷ விருந்தில், முன்னாள் மத்திய அமைச்சர்
ராஜாவும் கலந்து கொள்வார் என்றே நம்புகிறோம்.
(செலவை ஏற்கப்போவதும் அவரே தானோ ?)
ஜனநாயகத்தில் நல்ல முதிர்ச்சி பெற்று விட்ட
நம் மக்கள் வழக்கம் போல் இவை எல்லாவற்றையும்
பார்த்து,ரசித்துக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறோம் !



definetly pranab da got his share of 2G money. Now we will have a president who is also corrupt. this is worst than having a cook as president. its very sad to see that BJP didnt play their cards well. they are expectgin some miracle to happen. Mk scored some brownie points by supporting Pranabda and making him to start from his daughter house.
புத்தி கெட்டு விட்டது மூனா கானாவுக்கு.
நட்சத்ததிர ஓட்டல் பார்ட்டியில் கள்ள நோட்டு பேர்வழி
முகர்ஜியை விவேகாநந்தருடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
இந்த அயோக்கிய கூட்டத்தை எல்லாம் எவ்வளவு காலம் மக்கள்
பார்த்துக் கொண்டு இருக்கப்போகிறார்கள் ?
அவ்வளவு ஏன் சார்… இந்திய சட்ட புத்தகங்களின் படி polygamy எனும் ஒருவருக்கு மேற்பட்டவரை மணத்தல் குற்றமாக கருதப்படும் நிலையில், நம்ப வருங்கால முதல் குடிமகன்*, தமிழில் மனைவி துணைவி என்று வார்த்தைகளால் விளையாடும் ஒருவரின் ‘சின்ன’ வீட்டில் இருந்து தான் பிரச்சாரத்தை தொடங்குகிறாராம். என்னத்த சொல்ல…
* ஒரு மரியாதை நிமிர்த்தம் சின்ன வீடு என்று குறிப்பிட்டு உள்ளேன். உண்மையில் அது கள்ள காதலி (இன்னொருவரின் மனைவியை ‘வைத்திருந்தால்’ வேறு எப்படி அழைப்பது?) வீடு என்பதே சரியான வார்த்தை ஆக அமையும்.
பிரணாப் முக்கர்ஜி ஜனாதிபதி தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார் எனவே எந்த சட்ட
திட்டங்களும் பார்க்க வேண்டியதில்லை. அனைத்து செலவுகளும் மத்திய அரசே ஜனாதிபதி கணக்கில்
எழுதி கொள்ளும். ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் இரண்டு தியாகிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளன இவருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தை துவக்கி வைப்பது பொருத்தமே?
யு பி ஐ-ன் நம்பிக்கைக்குரிய கூட்டாளியை, அவரது
நம்பிக்கைக்குரிய இடத்தில் வைத்துத்தானே ஐயா சந்திக்க
முடியும்.
இந்திய நாட்டின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் (யார்
வரக்கூடாது என்றல்ல) என தீர்மானிக்கின்ற பொறுப்பில்
தலைவர் கலைஞர் இருக்கிறார் என்பது அவர்து தொண்டரடி
போடிகளின் வாதம். (அதனால் அதிமுக ஆட்சியைக்
கலைத்துவிடச் சொல்லி கேட்கமாட்டோம்–துரைமுருகன்).
அதைத் தமிழ்நாட்டுமக்களுக்கு (இந்திய மக்களுக்கல்ல)
நிரூபணம் செய்ய வேண்டாமா?
நையாண்டி மேளம் சரி. அது தமிழனின் ஆதி வாத்தியம்.
செண்டை கேரள பாரம்பரிய வாத்தியமல்லவா? அதனை
ஒப்பாரும் மிக்காருமற்ற தமிழினத் தலைவரின் (வீட்டின்)
முன்னர் வாசித்திருக்கிறார்களே.? தலைவர் தமிழின
விரோதமான எந்த செயலையும் ஒருபோதும் விரும்ப
மாட்டாரே?!.
முகர்ஜி வென்று ஜனாதிபதி மாளிகையை அல்ங்கரித்த
பின்னர், கனிமொழியின் தமிழ் மையத்தின் ஆஸ்தான
வித்வத்துக்களைக் கொண்டு தலைநகரில் ஒரு தமிழ்
பாரம்பரிய கலாச்சார இசை நடன விழாவை நடத்தட்டும்.
பாவம் தமிழ் மையக் கலைஞர்களும் கடந்த ஓராண்டாக
கலைச்சேவையின்றி தவிக்கிறார்கள்.
அது சரி. அம்மாவின் ஆதரவு பெற்ற சங்மா எதிபார்க்கும்
அதிசயம் நிகழ வாய்ப்பிருக்கிறதா?
கா மை அவர்களே, கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி சொன்னது உண்மையாகி விடும் போல் இருக்கிறதே!
(பதிவுக்கு சம்பந்தமில்லா பின்னூட்டதிற்கு மன்னிக்கவும்)
தாம்பரம் விமானப்படை தளத்தை —தனி விமானத்திற்கான செலவை ஏற்பது யார் -? இது…எல்லமாகேட்பது-?மாட்டுக்கரி சா ப்டும்சோனியா கச்சியி டம்