ராட்சதர் உரிமை நலம் காக்க….

மஹாராஷ்டிராவில் மூன்று வெவ்வேறு வங்கிகளில்
துப்பாக்கி முனையில் கொள்ளைகள் –
மலாத் போலீஸ் ஸ்டேஷன் –ஜூன் 21,2010
போரிவில்லி போலீஸ் ஸ்டேஷன் –
அக்டோபர் 17,2010
சார்கோப் போலீஸ் ஸ்டேஷன் –நவம்பர் 10,2010
கொள்ளை அடிக்கப்பட்ட மொத்தப்பணம்
சுமார் 87 லட்சம். மும்பை போலீஸ்
ஒன்றரை ஆண்டுகளாகத் இவனைத் தேடி வருகிறது.
சட்டீஸ்கரில் ஒரு வங்கிக் கொள்ளை -மற்றும்
பீகாரில் ஒரு வங்கிக் கொள்ளை –
ஆக மொத்தம் கொள்ளை அடிக்கப்பட்ட
பணம் சுமார் 2 கோடி.
இவனைப் பிடிக்க உதவும்படி பீகார் அரசு எல்லா
மாநிலங்களுக்கும் வேண்டுகோள் அனுப்பி இருக்கிறது.
சில வருடங்கள் முன்பு,
சொந்தமாக வெடிகுண்டு தயாரிக்கும்போது விபத்தில்
சிக்கி இடது கையில் 2 விரல்களை இழந்தான்.
தன் சொந்த சகோதரனையும், அண்ணியையும்
கொன்றதாக இரட்டைக் கொலை வழக்கு ஒன்று,
பீகார் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இவன் தங்கியிருந்த வீட்டில்
7 துப்பாக்கிகள் – ஒரு எஸ் எல் ஆர் (self
loading rifle -10 தடவை தொடர்ந்து
தானாகவே சுடக்கூடியது ) மற்றும்
5 செல்போன்களும் – 12 சிம் கார்டுகளும்
கைப்பற்றப்பட்டு உள்ளன.
“என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நேரம்
அந்த 10 நிமிடங்கள். வலது கையில் பிஸ்டலுடன்
உள்ளே நுழைந்த அவன் என் தோள்பட்டையில்
துப்பாக்கியை வைத்து அழுத்தி, ட்ரிகரைப் பிடித்துக்
கொண்டு, அவனது கூட்டாளியிடம் பணத்தைக்
கொடுக்கச் சொல்லி கத்தினான்.
அவன் கூட்டாளி 19.73 லட்சம் பணத்தை
அள்ளி ஒரு பையில் போட்டுக் கொண்ட பிறகு,
லாக்கர்-பாதுகாப்பு அறையைத்
திறக்கச் சொன்னான். என்னிடம் அதற்கான சாவி
இல்லை என்று நான் சொன்னபோது,
துப்பாக்கியாலேயே என் முதுகில் அடித்து என்னை
ஒருக் கணம் முறைத்துப் பார்த்தான். அவன் கண்களில்
தென்பட்ட கோபத்தைப் பார்த்தவுடன் பயந்து போன
நான், பாதுகாப்பு அறையையும் திறந்து விட்டேன்”.
-இதைச் சொல்வது பேங்க் ஆப் பரோடா வங்கியின்
பெருங்குடி கிளையின் காசாளர் D.ஆனந்தன்.
இத்தனையையும் செய்தவன் ஒரு சாதாரண
மனிதனாக இருக்க முடியுமா ?
மனித உரிமை நலன்களுக்காகப் போராடும்
சமூக நல ஆர்வலர்களே – கொஞ்சம் யோசியுங்கள்.
மனிதனின் உரிமைக்காக –
போராட வேண்டியது அவசியம் தான்.
ஆனால்- இந்த ராட்சதர்களுக்காக
போராட வேண்டுமா ?
நாட்டுக்குள் அலைந்து கொண்டிருக்கும் காட்டு
மிருகங்கள் இவர்கள்.
அடித்துக் கொல்லப்பட வேண்டிய மிருகங்கள்
தான் இவர்கள்.
இவர்கள் உரிமை பறிபோனதில் நமக்கு என்ன
வருத்தம் இருக்க முடியும் ?
அந்த வங்கி காசாளருக்கு நேர்ந்த அனுபவம் –
எனக்கு நேர்ந்திருந்தால் – ஏன் உங்களுக்கு
நேர்ந்திருந்தால் கூட –
அந்த மிருகத்தை அழிக்கக்கூடிய வாய்ப்பு
கிடைத்திருந்தால் -நிச்சயம் கதையை
முடித்திருப்போம்.
சட்டம் – சம்பிரதாயம், பின்விளைவுகள்
எல்லாம் அப்புறம் தான்.
இதைப் போய் குற்றம் சொல்ல இவ்வளவு
அவசரப்பட வேண்டுமா ?
ஆவேசப்பட வேண்டுமா ?
முழு விவரங்களும் வரட்டுமே –
கொஞ்சம் பொறுத்தால் தான் என்ன ?
போராட்டம் தேவைப்படும் இடங்கள் நிறைய உள்ளன.
அங்கு போராடலாம்.
ஆனால் இந்த மாதிரி மிருகங்களுக்கு வக்காலத்து
வாங்குவதை …..
பொதுமக்கள் –பெரும்பாலும் – விரும்பவில்லை.



எந்த ஒரு நடவடிக்கைக்கும் நன்மையும் தீமையும் உண்டு.நாட்டு நலனை கருத்தில் கொண்டு நன்மையை மட்டும்
எடுத்து கொள்வதே புத்திசாலித்தனம். காவல்துறையை சார்ந்த ஒரு விழாவில் போலீசார் பொதுமக்களுக்கு
நண்பனாகவும் அதேநேரத்தில் தீமையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கூறியுள்ளதை தீர்க்கதரிசனத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்
Only if something like this happens to themselves people will not know the agony of being cornered by a thief or dacoit with a gun —
தவறு செய்தவர்கள் தண்டிக்கபட்டால் தான் நீதி நிலைக்கும், இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால் போலிசும் ஆளும் வர்க்கமும் தங்களின் சுயநலத்திற்காக மக்களை கொன்று குவிப்பதை ஏற்றுகொள்கிறிர்கள ?
முல்லை பெரியாரை மிக பெரிய பிரச்சன்னையாக திடீர் என்று மாற்றினார்கள்.
இப்போ அதை பற்றி யாரும் அதிகம் பேசுவது இல்லை … என்?
ஏன் எனில் ஆளும் கட்சி பஸ், பால் விலைகளை இரண்டு மடங்கு உயர்த்தி இருந்தனர் ,
மக்களின் கோபம் தன பக்கம் திரும்பாமல் ஒரு மாதம் ஒட்டினால் விலை உயர்வை மக்கள் மறந்து விடுவர் என கணக்கிட்டு
முல்லை பெரியாரை கிளறினார். அதேபோல் நடந்தது .. இப்போ முல்லை பெரியார் போராட்டம் பண்ணி என்ன சாதித்தனர் ?
ஒன்றும் இல்லை. எல்லையில் இருக்கும் கொஞ்சம் கிராம மக்கள் பாதிக்கப்பட்டதும் சில பெண்களின் கற்பு பறிபோனதும் தான் மிச்சம்
இப்போதும் நீங்கள் சொல்வது போல் சில அப்பாவிகள் இறந்தாலும் குற்றவாளிகள் தப்ப கூடாது என நினைக்கும் ஆட்சி தமிழகத்தில் எப்போதும் நடந்தது இல்லை. மணல் குவாரி, அரசு சாராயம், கள்ள சாராயம் என பல விஷயத்தில் அரசு இப்படியே நடக்கிறது?
நிங்கள் கண்ணை கட்டிக்கொண்டு அரசை ஆதரித்தல் கண்ணை திறந்துகொண்டு கிணற்றில் விழுவதற்கு சமம்..
நண்பர் வினோத்,
காவிரிமைந்தன் தன் முதல் இடுகையிலேயே
இது அத்துமீறல் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு அவசியமான அத்துமீறல் என்று தான்
கூறி இருக்கிறார்.
சில சமயங்களில் அத்துமீறல்கள் தேவைப்படத்தான்
செய்கின்றன. ஏன் – நீங்கள் அத்துமீறலில்
எப்போதும் ஈடுபட்டதே இல்லையா ?
அத்துமீறல்கள் சுயநலம் காரணமாக நடந்திருந்தால்,
தீவிரமாக கண்டிக்கப்படத்தக்கவையெ.
ஆனால் பொது நலத்திற்காக ஒரு அத்துமீறல்
நடந்தால், அதை எதிர்த்து இவ்வளவு கூக்குரல்
தேவை இல்லை.
அதனால் தான் நேற்று மார்க்ஸ் குழுவினர் சென்றபோது
அங்கிருந்த பொதுமக்களே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
மக்களுக்காகத் தான் போராட்டம்.
மக்களே விரும்பாத போது எதற்கு போராட்டம் ?
சுய விளம்பரத்திற்காகவா ?
கொல்லப்பட்ட மிருகங்களுக்காக குரல் கொடுப்பவர்கள்
போலீஸ் மீதோ அரசின் மீதோ உள்ள தனிப்பட்ட
விரோதம் காரணமாகவே அதைச் செய்கிறார்கள்.
மனித உரிமை கமிஷன் இருக்கிறது.
நீதிமன்ரங்கள் இருக்கின்றன.
அதை விட்டு விட்டு இப்படி கூச்சல் போடுவது ஏன் ?
மனித உரிமையாவது மண்ணாங்கட்டியாவது… எல்லாம் சும்மா பம்மாத்து..
மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்களே அப்போது எங்கே போனது இந்த மனித உரிமை?
தா.கிருட்டிணன், ஆலடி அருணா என்று வரிசையாகக் கொல்லப்பட்ட போது எங்கே போனது மனித உரிமை?
உயிரோடு மூன்று கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்ப்பட்டபோது எங்கே போனது உரிமை?
கொலை, கொள்ளை என பல வன் செயல்களில் அப்பாவி பொது ஜனங்கள் பாதிக்கப்படும் போது ஏன் மனித உரிமைக்காரர்கள் வெகுண்டெழுவதில்லை? அவர்களுக்கு ஆதரவாக எதுவும் செய்ய முன்வருவதில்லை?
காவல்துறையினர் என்கவுண்டர் மாதிரி ஏதாவது (கவனிக்க: காவலர்கள் செய்யும் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை) செய்தால் .மட்டும் ஓடி வருவது ஏன்?
இந்த மாதிரி செயல்படுவர்கள் அநேகமாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதை விட தங்கள் / தங்கள் நிறுவனம் ஆகியவற்றின் சுயலாபங்களையே பெரிதாகக் கொண்டிருப்பார்கள். அல்லது எதிர்க்ட்சிகளின் கைக்கூலிகளாக இருப்பார்கள்.
”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதை இவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவோம்.
மன்னிக்கவும் நண்பர் சைதை அஜிஸ் –
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தளத்திற்கு இந்த
வலைத்தளத்தில் விளம்பரம் கொடுக்கப்படுவதை
நான் ஏற்கவில்லை.
நீங்கள் எதாவது கருத்து சொல்ல விரும்பினால் –
அதை தாராளமாகச் சொல்லலாம்.
வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
வருக நண்பர் ரமணன்,
மிகச் சரியாக சொன்னீர்கள்.
நான் சொல்ல வந்ததும் கிட்டத்தட்ட
இதையே தான்.
நான் இடுகையில் என் கருத்தை ஒளிவு
மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே சொல்லி
இருக்கிறேன். இது அத்துமீறல் தான் –
ஆனால் அவசியமான அத்துமீறல்.
காவல்துறையினர் ஒவ்வொரு முறையும்
இப்படிச் செய்வதை நாம் நிச்சயம்
ஆதரிக்கவில்லை/ வரவேற்கவில்லை.
ஆனால் – அவசியம் ஏற்படும்போது
இத்தகைய அத்துமீறல்கள்
அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்த என்கவுண்டரின் முக்கிய பலனாக நாம்
எதிர்பார்ப்பது – அயோக்கியரிடையே ஒரு
பய உணர்வு- அவ்வளவு தான்.
இதை மனித உரிமை மீறல் பிரச்சினையாகப்
பார்ப்பவர்கள், அதற்காகவே அமைக்கப்பட்டிருக்கும்
தேசிய மனித உரிமை கமிஷனிடம்
புகார் கொடுத்து விட்டு – தங்கள்
வேலையைப் பார்க்கப் போகலாம்.
சம்பவம் நடந்த இடத்துக்குப் போய்
inspection செய்ய அவர்களுக்கு எந்த வித
விசேஷ அதிகாரமும் இல்லை.
அவர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல.
நியமிக்கப்பட்டவர்களும் அல்ல.
தாங்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்கும்
ஒரு அமைப்பினர் தான்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
எல்லாரும் ஒரு விஷயத்தை வசதியா மறந்துட்டு பேசுறீங்க..
அது என்னன்னா .. என்கவுண்டர் அப்படின்னா .. நேருக்கு நேர் சந்தித்தால் தான் பொருள்.
அதாவது யாரவது ஆயுதத்துடன், தாக்கும் நோக்கத்துடன் இருக்கும்போது / தாக்கும்போது
நேருக்கு நேர் எதிர்கொண்டு தாக்குதல் நடத்துதல்.
உண்மையை சொல்லுங்க .. இப்ப அப்படியா நடக்குது…?
சம்பந்தபட்டவங்க எல்லாரும் சரணடஞ்சுட்டாங்க …
அப்புறம் மேலிட உத்தரவு படி சுட்டு கொல்லபட்டு இருக்காங்க..
சட்டப்படி இப்படி கொலை பண்ண முடியாது . அதனால
இதுக்கு கதை பின்னல் வேற.. ஜன்னல் வழியா சுட்டங்களம் வெட்டினங்கலம்..
போலீஸ் நடந்து சட்டப்படி தான.. இதுதான் மேட்டர்.
இதில் இன்னொரு விஷயம் இருக்கு.
என்னன்னா .. போலீஸ் தப்பு பண்ணி இருந்தாலும் அதை தெரிவிக்கும் சாட்சி
கொல்லபவர்கள் தான் இப்போ போலீஸ் என்ன பண்ணினங்கனு தெரிஞ்சுக்கவே முடியாம போயிடுது.
இது தான் போலீஸ் எதிர் பார்த்தது.
உண்மையாகவே திருட்டு கொலைன்னு எந்த தப்பும் சமுதாயத்தில் நடக்க கூடதுனு போலீஸ் வேலை செய்யுரங்கலன்னு உங்கக்க்குகே தெரியும். திருடன் யாருக்கும் கட்டுபட்டவன் இல்லை. போலீஸ் சமுதயத்க்கு மக்கள்கு பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கு.
ஒரே ஒரு நிமிஷம் யோசிங்க.. இறந்த பேரில் எல்லாரும் திருடன் தான்னு யார்ரும் உறுதியா சொல்ல முடியுமா?
பக்கத்துக்கு வீட்டில், இருப்பவர்களுக்கே அவர்கள் யார்ர்னு தெரியாது. நண்பர் இல்ல உறவினர்னு யாராவது அன்றைக்கு அந்த அறையில் தங்கி இருந்தால் அவர்களும் திருடர்னு கொல்லப்பட்டு இருப்பர்கள இல்லயலய..?
திருட்டு , கொலை கொள்ளை எல்லாவற்றிகும் தண்டனை கொடுக்கவேண்டும் தான்.
ஆனால் தீர விசாரித்து கொடுக்க வேண்டும்…
போலீஸ் என்கவுண்டர்னு பண்ணும் கொலையை ஆதரிக்கும் பதிவர்கள் எல்லாம்.. ஒரு கேள்வி..
திருடன்ன்னு சந்தேகப்பட்டவுடன் கொள்ளபடவேண்டுன்னா …
குற்றம் நிருபணம் ஆகி.. சிறையில் இருக்கும் கைதிகளுக்கு
அரசு சிக்கன் விருந்து கொடுகிறதே அதை ஏற்று கொள்கிறீர்களா ?
தண்டனை காலம் முடியும் முன்னரே ஏதாவது காரணம் சொல்லி விடுதலை செய்கிறார்களே அதை ஏற்று கொள்கிறீர்களா ?
மதுரை லீலாவதி கொலையில் சம்பந்தபட்டவன்க்க கட்சிகாறாக்கள் என்பதால் .. எலக்சன் வேலை செய்ய அவர்கள் வேண்டும் என்பதால்
7 வருஷம் உள்ள இருந்தா விடுதலை செய்யவேண்டும்னு செய்தார்களே .. அதை ?
நிங்கள் நினைப்பது போல் இல்லை .. போலிசும் அரசும் , அரசு மக்களுக்காக இல்லை..
மக்கள் பெயரளவில் தேவைப்படும்போது பயன்படுத்த மட்டும் தான்.
நண்பர் காவிரிமைந்தன் அவர்களே
நான் பதிவு செய்ய நினைத்தது அந்த தளத்தில் வந்த கருத்துக்களையே அன்றி வலைத்தளத்தை அல்ல. ஒரு தளத்தில் வந்த கருத்துக்களை என் கருத்தாக நான் எப்படி உரிமைகொண்டாட முடியும்? எனவேதான் அப்படி செய்தேன்.
i completely agree what ramanan said, and i dont know who are all those Human rights persons making this as big issue and kept silent in real problems.
But supporting or even worst appreciating these kind of killings(killing or justice, yet i cant conclude) will give brute force to police, which may back fire on common citizen too.
முழு விவரங்களும் வரட்டுமே –
கொஞ்சம் பொறுத்தால் தான் என்ன,
Adharkul yen encounter nadanthathai ngayapatduthukirergal.