ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் …

ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் …

ஏர் இந்தியா பலத்த நஷ்டத்தில் இயங்கிக்
கொண்டிருக்கிறதே – ஏன் இப்படி என்று பலரும்
வியந்து கொண்டிருக்கிறார்கள். நஷ்டத்திற்கான
சில காரணங்கள் இப்போது தெரிகின்றன.

அண்மையில் –
பிரபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து –
ஹெவி இண்டஸ்ட்ரீஸ் துறை அமைச்சராக
மாற்றம் பெற்றார். அவர், 2004 முதல்
2011 வரை  7 வருட காலம் ஏர் இந்தியாவை
எப்படி எல்லாம் கவனித்துக் கொண்டார் என்பது
குறித்து சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தகவல் -மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
சுபாஷ் அகர்வால் என்பவரால் பெறப்பட்டு  இன்று
வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு வெளியாகி இருக்கும் செய்தியின்படி –
தன் மகள் அவ்னி படேலுக்காக, பிரபுல் படேல்
செய்து கொடுத்த வசதிகள் –

விமான போக்குவரத்து துறை அமைச்சராக
பிரபுல் படேல்
இருந்த நேரத்தில் -அதாவது, ஏப்ரல் 2010ல்,

அவரது மகள் அவ்னி படேல் தன் கணவர் ப்ரசாந்த்
தேஷ்பாண்டே மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த
5 பேர்களுடன் –
பங்களூரிலிருந்து – மாலே தீவிற்கு உல்லாசப் பயணம்
போக விரும்பினார்கள்.

இந்த வழியில் சாதாரணமாகச் செலுத்தப்படும்
ஏ-310 ரக விமானத்தில் போதுமான
அளவு பிசினஸ் வகுப்பு இருக்கைகள் இல்லாததால்,
அவர்கள் பயணம் செய்யும் பொருட்டு
இதைவிடப் பெரிய ஏ-320 ரக விமானம் விடப்பட்டது.
25 ஏப்ரல் 2010 அன்று பங்களூரிலிருந்து மாலே க்கும்,
28 ஏப்ரல் 2010 மாலே யிலிருந்து பங்களூருக்கும்
(திரும்ப வர ) இந்த உயர்ரக விமானம் இவர்களுக்காக
சுமார் 50 காலி இருக்கைகளுடன்
அனுப்பப்பட்டு இருக்கிறது.

இது அண்மையில்  திருமணம் செய்த
அவரது மகள் அவ்னிக்காக செய்யப்பட்ட சீர் -சிறப்பு.

அவருக்கு இன்னொரு மகள் இருக்கிறாரே
– பூர்ணா படேல்.
ஒருவருக்கு செய்து விட்டு மற்றொருவரை கவனிக்காமல்
இருக்க முடியுமா ?

பூர்ணா படேல் ஐபிஎல் கிரிக்கெட் ஏலப்போட்டிகளில்
கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் சார்பாக தீவிர பங்கு
ஏற்று நடத்துபவர்.(ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மெண்ட் )

கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடந்த சமயம்,
பூர்ணா படேல் தனக்கு  வேண்டிய
சில ஐபிஎல் விளையாட்டு வீரர்களுடன்
சண்டிகரிலிருந்து சென்னை வர விரும்பினார்.
விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.
மந்திரி மகளாயிற்றே – சும்மா விடுவார்களா ?

பூர்ணா படெலின் சௌகரியத்திற்காக,
ஏப்ரல் 20, 2010  தினத்தன்று –
டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் போக வேண்டிய
விமானம் IC-7603 கடைசி நேரத்தில்
ரத்து செய்யப்பட்டு
சண்டிகருக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ஏர் இந்தியா விமான விதிமுறைகளுக்கு
முரணாக அது -சண்டிகரிலிருந்து சென்னை செல்லும்
சார்டர்ட் விமானமாக மாற்றம் செய்யப்பட்டது.

ஏற்கெனவே டெல்லியிலிருந்து கோவை செல்ல புக்
செய்திருந்த 75 பயணிகள், பலத்த அலைச்சலுக்குப்
பிறகு, மும்பை வழியாக கோவைக்கு  செல்லும்
வேறொறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார்கள்.
சாதாரண பயணிகளை விட
மந்திரி குமாரி  முக்கியம் இல்லையா ?

அண்மையில், பிரபுல் படேல் இன்னொரு
குற்றச்சாட்டுக்கும் உள்ளானார். ராயல் கனடியன்
போலீஸ், பிரபுல் படேல் விமான போக்குவரத்து துறை
அமைச்சராக இருந்த காலத்தில், ஒட்டாவா(கனடா)வை
சேர்ந்த ஒரு பிஸினஸ்மேனிடமிருந்து 250,000 டாலர்
லஞ்சப் பணம் பெற்றதாக ஒரு குற்றச்சாட்டை சுமத்தி
உள்ளது. 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு
காண்ட்ராக்டை அந்த பிஸினஸ்மேனுக்கு ஒதுக்குவதற்காக
அந்தப் பணம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு !

மேலே கூறியுள்ள விமானங்கள் ஒதுக்கியது தொடர்பான
விவரங்கள்  தனக்கு எதுவும் தெரியாது என்றும்,
தான் அது குறித்து எந்த உத்திரவையும்
பிறப்பிக்கவில்லை என்றும் –

லஞ்சப் பணம் குறித்த குற்றச்சாட்டு முற்றிலும்
பொய்யானது என்றும்,
அது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்
உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் –

பிரபுல் படேல் கூறியுள்ளார் !

மன்மோகன் சிங் அரசு உடனடியாக, விரைவில்,
இது குறித்து விரிவான விசாரணை நடத்தி –

ஒரு வேளை தவறு இழைக்கப்பட்டிருந்தால் –
சம்பந்தப்பட்டவர் மீது தவறாமல் நடவடிக்கை எடுப்பார்
என்று குடிமக்கள் அனைவரும் உறுதியாக –
நம்பிக்கையோடு இருக்கலாம் !

கூட்டணி கட்சியான NCP யைச் சேர்ந்த
பிரபுல் படேல் மீது நடவடிக்கை எடுத்தால்,
சரத் பவார் தொடர்ந்து மத்திய  காங்கிரஸ் அரசுக்கு
ஆதரவு கொடுப்பாரா இல்லை ஆதரவை
விலக்கிக் கொள்வாரா என்றெல்லாம்
காங்கிரஸ் தலைமை சற்றும் கவலைப்படாமல் –
உண்மை வெளிவர உறுதியாகப்  பாடுபடும் என்றும்
நம் மக்கள் வழக்கம் போல்  உறுதியாக நம்பலாம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஏர் இந்தியாவும் – மந்திரி குமாரிகளும் …

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டான் என்பது தமிழர்களின் அசைக்க முடியாத “ஏற்றுக்கொள்ளப்பட்ட” ஒரு சொல்லடை. இதனாலேயே நாம் உருப்படாமல் போவது!

  2. லால்குடி நாராயணன்'s avatar லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    Nationalist Congress Party யின் தலைவர்
    சரத் பவார் செய்த பாவங்களின் கூலியாகத் தான்
    அவருக்கு வாயில் புற்று நோய் வந்தது.
    அதே வாயில் ஒரு சிங் கையால் அறையும்
    வாங்கினார்.

    அடுத்தது இப்போது இவர் டர்ன் போலிருக்கிறது.
    நேற்று மானம் போகிற மாதிரி டிவியில்
    தலைப்பு போட்டார்கள்.
    “My Daddy is Minister –
    Airlines is Mine” என்று. இவர்களுக்கெல்லாம்
    வெட்கமே கிடையாது.
    எல்லாத்தையும் துடைத்துப் போட்டு விட்டு
    போய்க்கொண்டே இருப்பார்கள்.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    >>Nationalist Congress Party யின் தலைவர்
    சரத் பவார் செய்த பாவங்களின் கூலியாகத் தான்
    அவருக்கு வாயில் புற்று நோய் வந்தது.
    அதே வாயில் ஒரு சிங் கையால் அறையும்
    வாங்கினார்.<<
    நிச்சயமாக இவருக்கும் (பிரபுல் படேல் ) தண்டனை உண்டு..
    இன்னும் இருபது வருடங்களில் இவர் இடது கால சுண்டு விரல் நகம பாதி உடைந்து இவர் அவஸ்தைப்படப்போவதை நாம் காணத்தான் போகிறோம்…

  4. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    This not new. Some years back when Jaffer Sheriff was Rly.Minister, he has ordered Lalbagh express to stop at Katpadi (originally there is no stop) to enable his daughter to attend her medical college. Even now the train stops at Katpadi. But this is an advantage to general public. Mr.M.K.I saw a news yestersay that Mr.Swamy has asked PM to initiate action against Mr.Palani Manickam, Min. of State(Fin) who is threatening the witnesses of 2G witnesses. Can you throw some light on that?
    state

    st

  5. Sabesan's avatar Sabesan சொல்கிறார்:

    A-320 விமானத்தைவிட A-310 விமானம் அளவில் பெரியது. அதிக ஆசனங்களையும் உடையது. உங்கள் பதிவு தலைகீழாக உளளதே!

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் சபேசன் / வாசகர்கள் எல்லாருக்குமே –

    நான் எழுதியதன் அடிப்படை ஆதாரம் இது –

    (source – http://en.wikipedia.org/wiki/Praful_Patel )

    அதில் இருந்த ஒரு பாரா இது –

    Allegations of Corruption

    Praful Patel has been associated with numerous corruption investigations, within India and abroad. A response by Air India to a petition filed under the Right to Information Act, 2005 revealed that Praful Patel made the debt-ridden airline switch aircrafts from an Airbus A310 to an Airbus A320 on an unpopular domestic route in 2010 to ensure business class travel for his family. [6][7]

    —————————–

    அடிப்படை ஆதாரம் தேவை என்று,
    நான் இதை அப்படியே
    copy எடுத்து save செய்திருந்தேன்.

    வேடிக்கை என்னவென்றால், நான் இந்த இடுகையை
    எழுதும்போது இருந்த பாரா, இப்போது
    காணப்படவில்லை. எடிட் பகுதியில் போய்
    பார்த்தபோது, இந்த பகுதி நீக்கப்பட்டிருப்பது
    தெரிகிறது. 2 நாட்களுக்குள்ளாக நீக்கி இருக்கிறார்கள் !

    அவ்வளவு அவசரமாக தடயத்தை அழிக்கிறார்கள் !

    பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே
    இருண்டு போனதாக கருதிக் கொள்ளுமாம்.
    இங்கிருந்து நீக்கி விட்டால் என்ன ?

    RTI கீழ் பெறப்பட்டுள்ள இந்த தகவல் கீழ்க்கண்ட
    இடங்களில் இன்னமும் உள்ளது.

    http://indiatoday.intoday.in/story/praful-patel-air-india-plane-change-allegations/1/174668.html

    மக்கள் எப்படி எல்லாம் வேலை செய்கிறார்கள் –
    பாருங்கள் !!

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.