இதை எல்லாம் எங்கே பத்திரிகைகளில்
போடுகிறார்கள் ?
அரசியல் அரங்கில், சுவையான,வித்தியாசமான
நிகழ்வுகள் நிறைய நடக்கின்றன.
ஆனால் பல விஷயங்கள் பத்திரிகைகளில்
வருவதே இல்லை !
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி முற்றிலும்
வித்தியாசமான மனிதர். அவர் பேட்டிகளை
தொலைக்காட்சிகளில் நிறைய பார்த்திருப்பீர்கள்.
ஆனால் – தொலைக்காட்சி பேட்டிகளை விட,
கூட்டங்களில் பேசும்போது தான்
அவரது முழு இயல்புகளும் வெளிவருகின்றன.
நான் அவரது சில கூட்டங்களில் கலந்து
கொண்டது உண்டு.
நான் அவரது ரசிகன்.
(தயவு செய்து கவனிக்கவும் – நான் அவரது பல
விஷயங்களை ஏற்றுக் கொள்பவன் இல்லை –
ஆனாலும் ரசிகன் !)
நம்மூர் அரசியல்வாதிகள் பொதுக்கூட்டங்களில்
பேசும்போது –
உணர்ச்சி கொந்தளிக்க,
ஆவேசத்தோடும்,
சவால் விட்டுக் கொண்டும் பேசுவது போல எல்லாம்
அவர் பேசுவதில்லை.
கூலாக, சிரித்துக்கொண்டே –
எப்போது சீரியசாகப் பேசுகிறார்,
எப்போது ஜோக் அடிக்கிறார் – என்றே தெரியாதபடி
சரளமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்.
சாம்பிளுக்கு –
கடந்த வாரம் மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில்,
டாக்டர் சுவாமி பேசிய பேச்சில் ஒரு பகுதி –
(பேச்சில் எவ்வளவு கிண்டல் பாருங்கள் )
“நான் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை
3 வருடங்களுக்கு முன்னர்,
முதன் முதலில் கையில் எடுத்தபோது –
“இதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை”-
என்று தான் எல்லாரும் சொன்னார்கள்.
ஆனால் – முதலில் ராஜா ஜெயிலுக்குப் போனார்
பிறகு – கனிமொழி உள்ளே போனார்
பிறகு சிதம்பரம் – மயிரிழையில் உயிர் தப்பினார் !.
திகார் சிறையின் ஜெயிலர்(சிறை நிர்வாக அதிகாரி)
புகார் கொடுத்திருக்கிறாராம் -“சுப்ரமணியன் சுவாமியால்
எனக்கு பெருத்த தொல்லை” என்று !
அவரிடம் “எந்த விதத்தில் ?” என்று கேட்டதற்கு –
ஜெயிலர் சொன்னாராம் -“ஜெயில் சமையல்காரர்
என்னிடம் அலுத்துக் கொள்கிறார் – “சுப்ரமணியன் சுவாமி
மீண்டும் மீண்டும் மதராசிகளையே (தமிழர்களையே)
உள்ளே அனுப்பிக் கொண்டு இருக்கிறார்.அவர்களுக்கு
“மசால் தோசை” பண்ணிப் போட்டு மாளவில்லை”-என்று.
சுவாமி இடைவெளி கொடுக்காமல் தொடருகிறார் –
” சமையல்காரர் இதற்கே அலுத்துக் கொண்டால் எப்படி ?
கூடிய சீக்கிரம் அவர் இத்தாலிய உணவு வேறு
தயாரிக்க வேண்டி இருக்குமே !”
துக்ளக் ஆசிரியர் “சோ” கூறினார் –
“சுப்ரமணியன் சுவாமி – கட்சியைத் தேடிக்கொண்டு
இருக்கும் ஒரு பிறவித் தலைவர். அவருக்கேற்ற
கட்சி எதுவும் இன்னும் உருவாகவில்லை.அவர்
எந்த கட்சியின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வர மாட்டார்.
அவரை யாருடனும் ஒப்பிட்டுப் பேச முடியாது.
வித்தியாசமான, சுதந்திரமான மனிதர்” –
“என்னைப்போல(!)” என்றார்.




சுதந்திரமான மனிதரா
இல்லை
ஸ்ஸ்ஸ்ஸூ!… தந்திரமான மனிதரா?
Doctor Subramania Swamy is an one man ARMY.
ஐயா, கடந்த வாரம் இலங்கையில் வைத்து சு சுவாமி அளித்த பேட்டி ஒன்றில் “ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததை உங்களால் ரசிக்க முடிந்ததா?
Please do not propogate such things as already that is being done well by their magazines. Yedhayo yethirkka poi yethrko bali aggavendaam.
Iam still having a better view about you please.
@எழில்
“ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்”
இது என்று,எந்த ஊடகத்தில்,வந்தது என சொல்ல முடியுமா?
நன்றி.
@Ganpat
எந்த ஊடகத்தை சொல்வது… googleக்கு சென்று “Rajapakse for Bharat ratna” என்று தட்டி பாருங்கள்.
http://zeenews.india.com/news/nation/give-rajapaksa-bharat-ratna-for-wiping-out-ltte_757861.html
நிச்சயமாக அவரைப்போல் ஒரு நல்ல மனிதரைக் காண்பது அரிது தான்.
@எழில் & VG
நன்றி.
இந்த செய்தியை தமிழகத்தின் முக்கிய ஊடகங்கள் லட்சியமே செய்யவில்லை போல தோன்றுகிறது.
தன் பெயரைத் தானே கெடுத்துக்கொள்வதில் சு.சு.விற்கும் ஜெயா விற்கும் ஈடு இணை கிடையாது
நண்பர்களே,
நான் ஏற்கெனவே இடுகையில் குறிப்பிட்டிருந்தேன்-
டாக்டர் சுவாமியை நான் அப்படியே ஏற்பவன் அல்ல என்று.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சுவாமியின்
நிலைப்பாடு -100க்கு 100 நிராகரிக்கப்பட வேண்டிய
ஒன்று மட்டுமல்ல கண்டிக்கத்தக்கது கூட.
“ஹிட்லருக்கு அடுத்த மிகப்பெரிய கொலைகாரன்”
என்கிற பட்டத்திற்கு தான் ராஜபக்சே என்கிற
அந்த காட்டுமிராண்டி பொருத்தமானவன்.
அந்த செய்தி என் கண்களில் படவில்லை.
பட்டிருந்தால்,
முன்னரே இதுகுறித்து எழுதி இருப்பேன்.
இது விஷயத்தில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
முன்னரே நிறைய தடவை இதுகுறித்து எழுதி இருக்கிறேன்.
சமயத்தில் கவனத்திற்கு கொண்டு வந்த
நண்பர்களுக்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
காவிரி மைந்தன் ஐயா,
தங்கள் நிலைப்பாடை நான் நன்கு அறிவேன். அதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம்.
மேற்கூறிய செய்தியை எடுத்து நோக்கின், அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் உள்ள பகைமை நாடு அறியும். தனது பகைவனை ஒழித்ததற்காக, ஆயிர கணக்கில் அப்பாவி தமிழரை ஈவு இரக்கமின்றி கொன்ற ஒருவனை, கான் அப்துல் கபார் கான் மற்றும் நெல்சன் மண்டேலா மட்டுமே பெற்ற ஒரு உயரிய விருதை பரிந்துரைக்கும் அயோக்கிய, சுயநலவாதி என்ன நல்லது கூறினாலும் என்னால் ரசிக்க முடியவில்லை ஐயா.
குறை இருப்பின் மன்னிக்கவும்!