(இப்போதைக்கு) இந்த வருடத்தின் மிகச் சிறந்த “ஜோக்” !

(இப்போதைக்கு) இந்த வருடத்தின்
மிகச் சிறந்த “ஜோக்” !

“லோக்பால்” பற்றி அனைத்துக் கட்சிகளின்
கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக –

இன்று அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்கை
சந்தித்த சிபிஐ  டைரக்டர் ஏ.பீ.சிங்  –

சிபிஐ  தற்போது சுதந்திரமாகப் பணியாற்றி
வருகிறது என்றும்

சிபிஐ லோக்பால் அமைப்பின் கீழ் வந்தால்
அதன் சுதந்திரம் பறிபோய் விடும்

எனவே அதனை தான் விரும்பவில்லை

என்றும் சொல்லி விட்டு வந்தார் !

இதற்கு கொஞ்சம் முன்னதாக பிரதமரை சந்தித்த
மத்திய விஜிலன்ஸ் கமிஷனின் டைரக்டர்
பிரதீப் குமாரும் இதே போன்ற கருத்தைச் சொல்லி
விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு – இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ள
பிடிஐ நிறுவனம் இந்த இரண்டு பேரும் எப்போது
சோனியா காந்தியை   சந்தித்து,   இப்படிச் சொல்வதற்கான
உத்திரவைப் பெற்றார்கள் என்கிற செய்திய
மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to (இப்போதைக்கு) இந்த வருடத்தின் மிகச் சிறந்த “ஜோக்” !

  1. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    இறைவா –
    நீ மிகப் பெரியவன் –
    பரந்த மனது கொண்டவன் !

    தாங்கள் என்ன செய்கிறோம்
    என்பதை நன்கு அறிந்தே செய்யும்
    இந்த “அடிமைகளை”
    மன்னித்து விட்டு விடு.
    இதற்காக,
    அவர்கள் “அனுபவிக்க”வேண்டியதை
    இங்கேயே நிச்சயம் அனுபவித்து விடுவார்கள்.

  2. poongulali's avatar poongulali சொல்கிறார்:

    சரிதான் ..சொல்லாம இருப்பது அவங்க சுதந்திரமோ என்னவோ ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.