அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைகள்
அண்மையில் கூடன்குளம் வந்த அணுவிஞ்ஞானியும்,
முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் APJ அப்துல் கலாம்
அவர்கள் அணுமின் நிலையம் சார்ந்த அனைத்து
விஷயங்களையும் ஆராய்ந்து, மத்திய அரசுக்கு
40 பக்கங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை
அளித்திருக்கிறார்.
மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் தயாரிக்கப்பட்டுள்ள
அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்க வாய்ப்பு
இல்லாதவர்களுக்காக – நான் முக்கியம் என்று கருதும்
சில பகுதிகளை கீழே தந்திருக்கிறேன்.
அறிக்கையிலிருந்து ……
அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு
காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக
குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய
தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான்
கட்டுப்படுத்தப்பட வேண்டும், …..
பூகம்பமோ, சுனாமியோ, அல்லது ஜப்பானில் நடந்தது
போல் சுனாமியும், பூகம்பமும் சேர்ந்து வருவதற்கு
வாய்ப்பில்லை என்றாலும், அப்படியே வந்தாலும்,
கூடங்குளம் அணுஉலை பாதிப்படையவோ,
விபத்து ஏற்படவோ எவ்வித வாய்ப்பும் இல்லை
என்பது தான் உண்மை.
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது,
அச்சம் வேண்டாம்……..
....இன்றைக்கு 2011லே உலகிலே, 29 நாடுகள்,
529 அணுஉலைகள் மூலம் கிட்டத்தட்ட 3,78,910
மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது.
அணுமின் உலையின் மூலம் மின்சார உற்பத்தியில்
# 14000 வருட அணுஉலை முன் அனுபவம் உள்ளது.
(#அதாவது உலகத்தில் எப்பொழுது அணுமின்சாரம்
உற்பத்தி செய்ப்பட்டதோ அப்போது இருந்து இன்று
வரை எத்தன மனித நாட்கள் அதில் ஆராய்சி,
பாதுகாப்பு மற்றும் உற்பத்தியில் அனுபவப்பட்டுள்ளதோ
அத்தனை முன் அனுபவம்) எவ்வித ஆபத்தையும்
சமாளிக்கும் திறன் உள்ளது. உலகஅளவில்
பிரான்ஸ் 74 % மும், ஸ்லோவேக்யா 51%மும்,
பெல்ஜியம் 51% மும், சுவீடன் 39 % மும்,
ஜப்பான் 29 % மும், ஜெர்மனி 28% மும்,
அமெரிக்கா 19 % மும், இந்தியா 2.85 % மும்
தான் அணுமின் சார உற்பத்தி செய்கிறது.
இதில் 2022 க்குள் ஜெர்மனி அதனுடைய அணுசக்தி
மூலம் மின் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியில்
வரும் முடிவு என்பது, அந்த நாட்டில் இருக்கும்
யுரேனியத்தின் அளவு 2022க்குள் முடிந்துவிடும்
என்ற இயற்கையான காரணத்தினாலே தவிர வேறு
ஒன்றும் இல்லை. அதாவது, 2006 முதல் 2008
வரை மொத்த தேவையான 3332 டன் யுரேனியத்திற்கு
பதிலாக, மொத்தமே 68 டன் யுரேனியம் தான்
ஜெர்மனியில் இருந்து எடுக்க முடிந்தது, மீதி
பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருந்தது.
…. இனிமேல் அது விபத்து ஏற்படும் என்ற பயத்தாலோ,
அல்ல கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படும் என்ற
எண்ணத்தாலோ ஏற்படுத்தப்பட்ட முடிவல்ல.
ஒரு ஒப்பீட்டிற்காக நாம் பார்ப்போமேயானால்,
மின்சார உற்பத்தி செலவு சூரிய ஒளிமூலம் Rs 20/kWh,
காற்றாலை மூலம் Rs 10/kWh நமக்கு கிடைக்கிறது.
இந்திய அணுசக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரம்
தாராப்பூரில் இருந்து Rs 1/kWh க்கும், கைகாவில்
இருந்து Rs 3/kWh க்கும், கூடங்குளத்தில் இருந்து
Rs 3/kWh க்கும் குறைவாக கிடைக்கும்.
இன்றைக்கு இந்தியாவின் 40 ஆண்டுகால வரலாற்றில்
அணுஉலை மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டு
எவ்வித அழிவும், கதிர்வீச்சு பாதிப்பும் இல்லாமல்
அமைக்கப்பட்டு 5000 மெகாவாட் மின்சார உற்பத்தியை
20 அணுஉலைகள் மூலம் இந்தியா உற்பத்தி செய்து
கொண்டு இருக்கிறது. பூகம்பம், சுனாமியால் கூட
பாதிக்காதவண்ணம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன்
எவ்வித விபத்திற்கும் வாய்ப்பில்லாமல்,
கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலையால்
6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய
வாய்ப்புள்ளது, இன்றைக்கு 2000 மெகாவாட் உற்பத்தி
செய்ய தயார் நிலையில் இருக்கிறது.
….எனவே அணுசக்தி ஆராய்ச்சியில் அதன் தொடர்
பயன்பாட்டில், மின்சார உற்பத்தியில், ஆராய்ச்சியில்
நாம் தொடர்ந்து ஈடுபட்டால் தான், இன்னும் 10 முதல்
20 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் கிடைக்கும்
தோரியத்தை உபயோகித்து யுரேனியத்தின் மூலமும்
புளுடோனித்தின் மூலமும் ஒரு சுத்தமான,
கதிரியக்கம் குறைந்த, யுரேனியத்தைக்காட்டிலும்
15 சதவிகதம் வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்ட
தோரியத்தைக்கொண்டு, யுரேனியம் டை
ஆக்ஸைடைக்காட்டிலும் 500 டிகிரி அதிகமான
வெப்பத்தில் உருகும் தன்மை கொண்ட தோரியத்தை,
குறைந்த அளவு கதிரியக்க கழிவை கொடுக்கும் தோரியத்தை,
– அணுஆயுதம் செய்ய இயலாத தோரியத்தை வைத்து,
அமைதிப்பாதையில் இந்தியா அணுசக்தி துறையில்
மின்சாரத்துறையில் தன்னிறைவை அடைய முடியும்.
அப்படி நடந்தால், இந்தியா 2030க்குள் அணுசக்தி
துறையிலும் உலகத்திலேயே மிகுந்த பாதுகாப்பான
அணுமின்சாரத்தை உருவாக்கும் நாடுகளில்
முதல் நாடாக மாறும்,
… எனவே அணுசக்தி மூலம் மின்சாரம் வேண்டாம்
என்று பல காரணங்களை அறிவார்ந்த சிந்தனைக்கு
ஒவ்வாத கருத்துக்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கும்,
அதன் தேசபாதுகாப்புக்கும் எதிரான கருத்துக்களாத்தான்
அமையும்.
பூகம்பமும், சுனாமியும் பேரழிவை உண்டாக்கும் என்று
மக்களை பயமுறுத்தப்படுகிறார்கள். ஆமாம்
உண்டாக்கும்தான், பூகம்பத்தையும் நாம்
பார்த்திருக்கிறோம், சுனாமியையும் 2004லே நாம்
பார்த்திருக்கிறோம். கடந்த 1000 ஆண்டுகால
வரலாற்றை எடுத்துக்கொண்டேமேயானால், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலும், தஞ்சாவூர் ராஜ ராஜ
சோழன் கட்டிய பெரிய கோபுரமும் காலம் கடந்து
பூகம்பத்தால் பாதிக்கப்படாமல் நம் கண்முன்னே
சாட்சியாக நிற்கிறதே. பலநூற்றாண்டுகளுக்கு
முன்பே கட்டிய பல கோவில்கள் பூகம்பத்தால்
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பாதிக்கப்பட
வில்லையே.
… ஏன் சுனாமி கூடங்குளத்தை பாதிக்காது
என்ற கேள்வி எழலாம். நாகபட்டினம் மாவட்டத்தில்
அமைந்துள்ள காவேரி பூம்பட்டினம் என்ற பூம்புகார்,
வரலாற்று பெருமை கொண்ட ஊர், சோழர் காலத்திற்கு
பின்பு கடல் கொண்டாதால் அழிவைச்சந்தித்தது.
2004ல் அதே மாதிரி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட
பூகம்பம் சுனாமியை தோற்றுவித்து அதே
நாகபட்டினத்தில்தான் அதிக அளவு சேதத்தை
ஏற்படுத்தியது. சென்னையிலும், கல்பாக்கத்திலும்,
கன்னியாகுமரியிலும் அதன் தாக்கம் வலிமை குறைந்தது,
இராமேஸ்வரத்தை தாக்கவில்லை, தூத்துக்குடியை
தாக்கவில்லை. ஏன் அப்படி நடந்தது.
2004 ல் ஏற்பட்ட சுனாமி 1300 கிலோமீட்டருக்கு
மேல் நாகபட்டினத்திற்கு கிழக்கே (SUNDA ARC)
சுந்தா ஆர்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அதாவது
அது பசிபிக் ரிங்க ஆப் பயர் என்று சொல்லப்படுகிற
பூகம்பகத்தை ஏற்படுத்தும் பிளவின் கோட்டின் மேற்கே
அமைந்திருக்கிறது. அந்த பசிபிக் ரிங் ஆப் பயர் தான்
இந்தோனோஷியா, ஜப்பான், அமெரிக்கா, பெரு,
சிலி நாடுகளை சுற்றி அமைந்துள்ளது. அதனால் தான்
இந்த பகுதிகளில் அடிக்கடி பூகம்பமும், சுனாமியும்
ஏற்படுகிறது. நாம் பார்க்காத நாட்களில் அழிந்த
பூம்புகாருக்கு பின், நாம் கண்ட 2004 சுனாமி
நாகபட்டினத்தை தாக்கியதும், இந்த சுந்தா ஆர்க்
என்ற பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் தான்.
கூடங்குளத்தை பொருத்தவரை, அணுமின் நிலையம்
அமைந்துள்ள பகுதி கிட்டத்தட்ட சுனாமிஜெனிக் பால்ட்
(tsunamigenic fault)என்று சொல்லப்படுகிற
சுனாமியை எழுப்பக்கூடிய பூமி பிளவு ஏற்படக்கூடிய
பூகம்ப பகுதி 1500 கிலோமீட்டர்க்கு அப்பால்
சாகோஸ் ரிட்ஜ் (Chagos Ridge) என்று
கன்னியாகுமரிக்கு கீழே தென் மேற்கே அமைந்துள்ளது.
எனவே மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிற
திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள கூடங்குளத்தில்
சுனாமியால் பாதிப்பு ஏற்படும் என்ற கூற்றில் எள்ளளவும்
உண்மையில்லை.
…எனவே, அந்த இலக்கை அடைவதற்கு திட்டங்கள்
தீட்டினால் மட்டும் போதாது. அந்த திட்டங்கள்
சிறப்பாக குறித்த காலத்திற்குள் நடைபெறவேண்டுமானால்,
முதன் முறையாக அந்த திட்டப்பகுதியிலும்,
அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் வசிக்கும் மக்களின்
அடிப்படைத்தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டும்,
போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள்
செய்து தரப்படவேண்டும், கல்வி, சுகாதாரம்,
மருத்துவம், தொழில்சாலைகள், மற்றும் தொழில்கள்
மூலமாக வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்,
அந்த பகுதியே வளர்ச்சி பகுதியாக மாறவேண்டும்.
மக்களை இந்த வளர்ச்சியில் பங்கு தாராக சேர்க்க
வேண்டும்.
எனவே கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கு
முதலில் அப்பகுதி மக்களுக்கு அணுமின்சாரத்தின்
பாதுகாப்பைப்பற்றியும், அவர்களது நியாயமான
அச்சத்தை போக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள்
அமைத்துள்ள ஆய்வுக்குழுக்கள் நாட்டின் நலனைக்கருத்தில்
கொண்டு விவாதித்து, கூடங்குளத்தையும் அதனைச்சார்ந்த
பகுதிகளின் வளர்ச்சியைப்பற்றி தீர விவாதித்து மக்கள்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கு வரவேண்டும்.
எனவே என்னுடைய பரிந்துரை என்ன வென்றால்
கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டம்
உடனடி தேவை.
கூடங்குளத்திற்கான தொலைநோக்குத்திட்டம்-
2015 க்குள் மத்திய அரசு கூடங்குளம் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளுக்கும், அப்பகுதி கடல்கரையோரம்
உள்ள கிராமப்புர மக்களை உள்ளடக்கிய, கிட்டத்தட்ட
50 ? 60 கிராமங்களை ஒருங்கிணைத்த,
குறைந்தது 1 லட்சம் மக்கள் தொகையை கணக்கில்
கொண்டு, ஒரு சிறப்புத்திட்டத்தை,
கூடங்குளம் புரா திட்டத்தை [Koodankulam PURA
(Providing Urban Amenities in
Rural Areas)] ரூ200 கோடியில் மதிப்பீட்டில்
அமுல் படுத்த வேண்டும். அந்த சிறப்பு திட்டத்தின்
மூலம், கீழ்கண்ட வளர்ச்சி திட்டங்களை அமுல்படுத்தலாம்.
1. கூடங்குளத்தில் இருந்தும் மற்றும் 30 கிலோமீட்டர்
சுற்றளவு கொண்ட கிராமங்களிலில் இருந்தும்
திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும்,
மதுரைக்கும் செல்லும் 4 வழிச்சாலைக்கு செல்ல
4 வழித்தடம் கொண்ட சாலைகள் அமைக்கவேண்டும்.
2. 10000 மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை
உருவாக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள்
30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 60 கிலோமீட்டர்
சுற்றளவில் அமைக்கபட வேண்டும். இளைஞர்களுக்கு
வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து, 25 சதவீகிதம்
மானியத்துடன் சுய தொழில் தொடங்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
3. அந்த பகுதியில் 500 படுக்கை கொண்ட
உலக தரம் வாயந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க
வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும்
தொலைத்தொடரபு மருத்துவ மனைகளும், 2 மொபைல்
மெடிக்கல் டயகனாஸ்டிக் வசதி கொண்ட நடமாடும்
மருத்துவமனையை ஏற்படுத்தவேண்டும்.
4. CBSE மற்றும் தமிழகஅரசின் பாடத்திட்டம் கொண்ட
பள்ளிகள் ஐந்தை அங்கே தரமான கல்வியை கொடுக்கும்
வகையில், விடுதி வசதியுடன் அமைக்க வேண்டும்.
5. எல்லா கிராமங்களுக்கும், பிராட்பேண்ட் இன்டெர்நெட்
வசதி செய்து தரப்படவேண்டும்.
6. மக்களுக்கு உடனடியாக பேரிடர் பாதுகாப்பு
மேலாண்மை நிலையம் ஒன்றை ஏற்பாடு செய்து
தரவேண்டும். அங்கு அனைந்து பாதுகாப்பு விழிப்புணர்வும்,
பேறிடர் மேலாண்மையைப்பற்றிய பயிற்சியையும் செய்து
தர வழி வகை செய்ய வேண்டும்.
மக்களுக்கும் அணுமின் நிலையத்திற்குமான தொடர்பை
ஏற்படுத்த மக்கள் குழுக்களை அமைத்து, அவர்கள் மூலமாக
ஒரு சமூக நல்லிணக்கத்தையும், பொருளாதார
மேம்பாட்டை அடையவும், அமைதியை ஏற்படுத்தவும்,
பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளை
செய்யவும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான
நிவாரணங்களை உடனடியாக கிடைக்கச்செய்யவும்
அந்த குழுக்கள் மூலம் ஆலோசனை பெற்று செயல்
படுத்தவேண்டும்.
7. ஓவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட
தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து,
மேற்படிப்பு படிக்க வைத்து அவர்களுக்கு நிரந்தர வேலை
வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.
இந்த 10 அம்ச திட்டங்களும், மேற்கொண்டு மக்களுக்கு
தேவையான திட்டங்களும் மக்களுடன் கலந்தாலோசித்து
அவர்களுக்கு ஏற்ற முறையில் உடனடியாக கிடைத்திட
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே சமயம் மக்களின் பயத்தை முறையாக போக்கி,
அவர்களது அச்சத்தை தவிர்த்து, அவர்களுக்கு தேவையான
தகவல்களை முறைப்படி வழங்கி, அவர்களின் பூரண
ஒத்துழைப்போடு இந்தியாவின் அணுமின்சார உற்பத்தியை,
உலகிலேயே பாதுகாப்பான முறையில்,
சுத்தமான 1000 மெகாவாட் மின்சாரத்தை,
குறைந்த விலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கி,
இந்தியாவும் பயன் பெறும் வகையில் குறித்த காலத்தில்
அணுமின்சார உற்பத்தியை தொடங்க மத்திய அரசு,
மாநில அரசோடு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
—————————————-
இதையொட்டி –
நான் டாக்டர் கலாம் அவர்களுக்கு
அனுப்பியுள்ள ஒரு மின்மடல் –
kavirimainthanPosted OnNov 08 2011
21:50:43
kavirimainthan@gmail.com
மதிப்பிற்குரிய திரு கலாம் அவர்களுக்கு, வணக்கம்.
சுயநலவாதிகளின் குறுக்கீட்டால், இந்த திட்டத்தில்
பின்னடைவு ஏற்பட்டிருக்கிற நிலையில் உங்கள்
கூடன்குளம் வருகையும், அதையொட்டிய சந்தேக
விளக்க அறிக்கையும் மிக மிக வரவேற்கத்தகுந்தவை.
இன்று அணுசக்தியைப் பற்றி – உங்களை விட
அறிந்த நபர் இந்தியாவில் யாரும் இல்லை
என்கிற நிலையில் – உங்கள் அறிக்கை சூழ்நிலையை
மாற்றிட பெரிதும் உதவி செய்யும். மத்திய அரசாங்கம்
கூடன்குளத்தைச் சுற்றி உள்ள மக்களின் நல்வாழ்வுத்
திட்டங்களை விரைவுடன் நிறைவேற்ற நீங்கள் உங்கள்
நல்லெண்ணத்தையும், செல்வாக்கையும்
பயன்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நீங்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்து
நம் நாடு முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று
இறைவனை வேண்டுகிறேன். அன்புடனும்,
நல்லெண்ணங்களுடனும் – காவிரிமைந்தன்





மிக நேர்த்தியான அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்.
இரண்டு பூனைகளும் (J & K) மதில மேல் இருப்பதுதான் சற்று கலக்கத்தை ஏற்படுத்துகிறது.மற்றபடி கூடன்குளம் is all set to take off!!
respected sir,
Iam very proud of my sir, your openion but our village peeople is very mind was
very critical then that village people move place and short period home alotment.
then your openionsir!
pls reply
Thank you very much
yours faithful
nmcc student
நண்பர் பத்மா,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு
சரியாகப் புரியவில்லை.
தயவுசெய்து புரியும்படி தமிழில் எழுதவும்.
தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை என்றால் –
அதையே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் –
நான் புரிந்து கொள்வேன்.
உதாரனம் – உங்களுக்கு நன்றி – ungalukku nanri –
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்