ஆனந்த் ஜானை அமெரிக்க சிறையிலிருந்து
வெளியே கொண்டு வர ….
(திருமதி சுஹாசினி….கடைசி பகுதி-3)
ஆடம் என்கிற 18 வயது பெண் கோர்ட்டில்
சாட்சி சொல்லும்போது, தனக்கு 14 வயதாகும்
போதே தான் எப்படி ஆனந்த் ஜானால்
ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டார் என்பதை
உணர்ச்சி வசப்பட்டு அழுது கொண்டே சொல்லி
இருக்கிறார். “அந்த நிகழ்வுக்குப் பிறகு என்
வாழ்க்கைப் பாதையே மாறி விட்டது.
புகழ் பெற்ற மாடல் ஆக வேண்டும் என்கிற ஆசை
அடியோடு என்னை விட்டுப் போய் விட்டது.
அவ்வளவு சிறிய பெண்ணான என்னை இவ்வளவு
பெரிய மனிதன் அப்படி சிக்கவைத்து சீரழிக்க முடியும்
என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத
ஒரு பயங்கர கனவாகி விட்டது அந்த நிகழ்ச்சி”.
இந்தப் பெண்ணின் சாட்சி ஆனந்த் ஜானின் வழக்கில்
தீர்ப்பு வழங்க மிகவும் முக்கியமான காரணமாக
இருந்தது.வழக்கு நடக்கும்போது இந்தப் பெண்,
ஆனந்த் ஜான் தரப்பிலிருந்து பெரும்
தொல்லைகளுக்கு உள்ளானாள்.
எதிரே குற்றவாளிக் கூண்டிலிருந்த ஆனந்த் ஜானை
சாட்சிக் கூண்டிலிருந்து பார்த்தபடியே
இந்தப் பெண் சீறி இருக்கிறாள்.”உன்னைப் போன்ற
ஒரு நோயாளியால் இனிமேலும் எந்தப்
பெண்ணும் பாதிக்கப்படாமல் இருக்க நான் எவ்வளவு
துன்பத்தையும் சகித்துக் கொள்வேன்”
(குறிப்பு – இந்த விவரங்கள் அனைத்தும்,
அமெரிக்காவின் ABC news மற்றும்
கலிபோர்னியா டைம்ஸ் -ஆகியவற்றில் இருந்து
சேகரித்து தொகுக்கப்பட்டவை.அமெரிக்காவிலேயே
வசிப்பவர்களுக்கு இன்னும் அதிகம் தெரிந்திருக்கும்.)

ஆனந்த ஜான் சிறை சென்ற பிறகு, அவரது
சகோதரி சஞ்ஜனா ஜானும்,
அம்மா சசி அப்ரஹாமும் –
நியூ யார்க், துபாய் போன்ற இடங்களுக்கு
சென்று கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து,
ஆனந்த ஜானின் ஆதரவாளர்களையும்,
உலகம் பூராவும் உள்ள மலையாளிகளையும்
ஆனந்த ஜான் அமெரிக்க சிறையிலிருந்து
வெளிக்கொண்டு வரப்பட உதவும்படி
வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்கள் தரப்பு வாதம் –
அமெரிக்க நீதி நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக
நடந்து கொண்டது.அவர்களுக்கு சரியான
நீதியை அளிக்கத் தவறி விட்டது.
ஆனந்த் ஜான் குற்றமற்றவர் –
ஒரு பாவமும் அறியாதவர்.
இது போட்டி கார்பரேட் நிர்வாகங்களின் சதி.
ஆனந்த் ஜான் விடுதலை பெற –
அவர் தாயும், சகோதரியும் – தங்களால் ஆன
அனைத்தையும் செய்வார்கள்.
மும்பையிலும், நியூயார்க்கிலும் உள்ள
பேஷன் இண்டஸ்ட்ரீ தங்களுக்கு முழு
ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க
உறுதி அளித்துள்ளது.
அவர்கள் மத்திய அமைச்சர் வயலார் ரவி மூலம்
இந்திய அரசுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.
கே.ஜே.ஏசுதாஸ் மத்தியில் உள்ள கேரளத்தைச்
சேர்ந்த அமைச்சர்களுடன்
சேர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
இவற்றிற்கு இன்னும் பலன் கிட்டவில்லை.
சசி அப்ரஹாம் துபாயில்
பத்திரிகையாளரிடையே கூறுகிறார் –
தான் ஆனந்த் ஜானுக்கு அன்னை மட்டுமல்ல.
அவருடன் சேர்ந்து பங்குதாரராக அமெரிக்க
பேஷன் இண்டஸ்ட்ரீயில் பல வருடங்கள்
பணியாற்றி இருக்கிறார். அமெரிக்க நிர்வாகம்,
போலீஸ் துறை, நீதித்துறை அனைத்துமே –
நிறவெறி காரணமாக
அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டது.
நிர்வாகமே அவர்களுக்கு எதிராக போலி சாட்சிகளை
உருவாக்கியது. அவர்களது வக்கீல்களே
அவர்களுக்கு எதிராக இருந்தார்கள்.
(ஆனந்த் ஜானின் சகோதரி சஞ்ஜனா,
கற்பழிப்பு ரிப்போர்ட்டை(படங்களுடன்
கூடியது) கூட்டத்தில் காட்டி, காயம்
எங்கே இருக்கிறது சொல்லுங்கள் –
என்று வாதாடுகிறார் !)
பொறாமை காரணமாக வேண்டுமென்றே
ஆனந்த் ஜான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பலவந்தப்படுத்தியதற்கான ஆதாரமே இல்லை.
விருப்பப்பட்டு உறவு கொண்டு விட்டு,
பின்னர் கற்பழித்ததாக குற்றமும் சாட்டினார்கள்.
அந்தப் பெண்கள், விரும்பித்தான்
உறவு கொண்டார்கள் என்பதை
எப்படி நிரூபிக்க முடியும் ?
இதை எல்லாம் சாட்சி வைத்துக்கொண்டா
செய்வார்கள் ?
அந்த பெண்களின் தொடையையும்,
மற்ற பகுதிகளையும் தொட்டதாக குற்றச்சாட்டு.
பேஷன் துறையில்
இருப்பவர்கள் தொடாமல் வேலை செய்ய முடியுமா?
தன் மகனுக்கு பன்றி மாமிசம் பிடிக்காது.
அமெரிக்க சிறையில் பன்றி மாமிசம் கொடுத்து
சாப்பிட வற்புறுத்துகிறார்கள்.
தன்னால் சும்மா இருக்க முடியாது என்றும்
தன் மகனை வெளியே கொண்டு வர
அவர் தன்னால் இயன்ற
அனைத்தையும் செய்வார் என்றும் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக,
கடந்த வாரம் சென்னையில் ஆனந்த் ஜான்
குடும்பம் மற்றும் சென்னையிலுள்ள மலையாளிகள்
சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பாக ஒரு நிகழ்ச்சி
நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் –
“ஆனந்த் ஜான் – நியூ யார்க்கிலும்
மற்ற ஊர்களிலும், மீதி இருக்கும் இதர
வழக்குகளை சந்திக்க வேண்டும்.
நடந்து முடிந்த வழக்கில் அப்பீல் செய்து
வாதாட வேண்டும். அமெரிக்காவில்
வழக்கு நடத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.
பணம் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது.
எங்களிடம் இருந்த பணம் அனைத்தையும்
செலவழித்து விட்டோம். எனவே,
ஆனந்த் ஜானுக்கு நியாயம் கிடைக்க –
(justice for anand jon)
ஒரு வலைத்தளத்தை உருவாக்குகிறோம்.
ஒரு ட்ரஸ்டையும் உருவாக்குகிறோம்.
என் மகன் எப்படியாவது வெளியே வர வேண்டும்.
அதற்கு பொருளுதவி தேவை.
பண உதவி செய்பவர்கள் இந்த வலைத்தளத்தின்
மூலம் செய்யலாம்” –
என்று ஆனந்த் ஜானின் அம்மா
கூறி இருக்கிறார்.
இதற்காக –
“justice for Anand Jon Trust”
என்கிற பெயரில் ஒரு அறக்(?)கட்டளையும்,
சென்னை, பெசண்ட் நகர் ஸ்டேட் பாங்க்
கிளையில் அதன் சார்பில் ஒரு வங்கிக் கணக்கும்
உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும்
நிர்வாகக் குழுவில் – கே.ஜே.ஏசுதாஸ்,
அவர் மகன் விஜய் ஏசுதாஸ், ஆனந்த் ஜானின்
அம்மா சசி அப்ரஹாம்,
மற்றும் சில மலையாளிகளுடன் –
சுஹாசினியும்
ஒரு உறுப்பினராக இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில், இந்த இயக்கத்திற்கான
வலைத்தளைத்தை திருமதி சுஹாசினி துவக்கி
வைத்து பேசும்போது, ஆனந்த் ஜான்
முன்னதாக இந்தியா வந்திருந்தபோது,
தான் அவருக்காக ஒரு விருந்து வைத்ததாகவும்,
அவர் “கருணை உள்ளம் கொண்ட
ஒரு ஆன்மிகவாதி” (“kind” and
“philosophical” person )என்றும்,
ஆனந்த் ஜான் எப்படியாவது வெளியே
வர வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
திருமதி சுஹாசினி – ஒரு நடிகை மட்டுமல்ல.
ஒரு கதாசிரியர்,
வசனகர்த்தா,
ஒளிப்பதிவாளர்,
திரைப்படத்தயாரிப்பாளர்,
இயக்குநர்,
பல சமூக நிகழ்ச்சிகளில் தீவிர பங்கு ஏற்பவர் –
எல்லாவற்றிற்கும் மேலாக அவரே ஒரு விமரிசகர் !
எனவே தான் பொறுக்க முடியாமல் கேட்கிறேன் –
திருமதி சுஹாசினி – உங்களுக்கே
இது கேவலமாகத் தெரியவில்லையா ?






//திருமதி சுஹாசினி – உங்களுக்கே
இது கேவலமாகத் தெரியவில்லையா ?//
“கலை” எனும் பெயரில் துட்டுக்காக சதைகளைக் காட்டி வியாபாரம் நடத்தும் ஒரு வணிக ஊடகத்தின் பிரதிநிதியைப் பார்த்து இப்படிக் கேட்குறீங்களே கா.மை.!! “கேவலமாகத் தெரியவில்லை” என்றுதான் பதில் வரும்!
ஜேசுதாஸின் மேல் எனக்கு நன்மதிப்பு இருந்தது. இந்தப் பதிவைப் படித்தவுடன் அது காணாமல் போய்விட்டது.
தூக்கு தண்டனை பெற்று –
சாவை எதிர்நோக்கி
20 வருடங்களாகச் சிறையில்
வாழும் 3 தமிழர்களுக்காக
சுஹாசினி ஏதேனும் செய்வாரா ?
//அவர் “கருணை உள்ளம் கொண்ட
ஒரு ஆன்மிகவாதி” (“kind” and
“philosophical” person )என்றும்,
ஆனந்த் ஜான் எப்படியாவது வெளியே
வர வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.//
முந்தைய மறுமொழியை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். இதற்கு மேல் என்னத்தை எழுத. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவ்வளவுதான். கேவலமாக இருக்கிறது.
– முந்தைய பதிவின் மறுமொழியை – என்று வாசிக்கவும்.
Oorukkuthan upathesam pola. Ivanga ellam thirunthuvaangalanu theriyala. Unmai sudugirathu Sago.
அன்பின் கா.மை.,
ஆனந்த் ஜான் இளமையும் செல்வ செழிப்பும் நிறைந்தவர்.மேல்தட்டு வர்க்கம்.அமெரிக்க கலாசாரம்.
இவரை பெற்றோர்:இதெல்லாம் சகஜம் எனும் மனப்போக்கு கொண்டவர்கள்.
சுஹாசினி:ஆசாபாசங்கள்,போலித்தனம் நிறைந்த ஒரு சாதாரண மேல்தட்டு வர்க்கம்.
இவர்கள் யாவரும் பொது வாழ்வில் இல்லை.
குற்றம் நடந்திருப்பது அயல் நாட்டில்;.தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.மீண்டும் அப்பீல் செய்ய விழைகிறார்கள்.அதற்கு அவர்கள் குழாமில் ஆதரவும் நிதியும் சேர்க்கிறார்கள்.இம்மாதிரி புத்திர ரத்னங்களை பெற்ற மற்ற பெற்றோர்கள்,எதிர்காலத்தில் தமக்கும் உதவும் என்ற எதிர்பார்ப்பில்,உதவவும் செய்வர்.
அம்புட்டுதான் விஷயம்.
இதில் நாம் மண்டையை உடைத்துக்கொள்ள எதுவும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
அதுவும் நம் தீரா தலைவலிகள் கருணா,மற்றும் ஜெயா வற்றா நதியாக நாம் அடுத்த ஏழு ஜன்மங்களுக்கு மண்டையை உடைத்துக்கொள்ள விஷய தானம் செய்திருக்கும்போது!!
நன்றி வணக்கம்.
சுகாசினியே இயக்கி பெண் இயக்குனரால் இயக்குனரல் இயக்கபட்ட படம் என பெயர்பெற்ற இந்திரா திரையத்தில்.. ஓட்ட காது மாரிமுத்து .. என ஒரு பாடவருமே .. கேட்டிருக்கின்றிரா? … பெண்களை பெருமை படுத்து பாடலா அது? பணம் குறியாக இருக்கும் ஒரு சராசரி பிறவி.. அவ்வளவு தன்…
ஒரு ஆண்.. இயற்கையில் பெண்ணை, பெண்களை நிர்வாணமக பார்க்க விரும்புவான்.. (விதி விலக்குகள் சில இருக்கலாம் ) ஆனால் பெண்.. தன்னை யாரும் அப்படி பார்ப்பதை விரும்புவதில்லை.. கணவனேயாயினும் பல கட்டுபாடுகளுக்குட்பட்டல் தான் தன்னை அனுபவிக்க சம்மதிப்பள்..
பெண்ணின் உணர்ச்சியை புரிந்த பெண்ணானகிய சுகாசினி…
இன்னொரு பெண்ணை கேலிசெய்யும் நிர்வாணனத்தை ரசிக்க உதவும் படத்தை தர காரணம்??? பணம்.. இது பல வருடமாக எல்லரும் அறிந்த ஒன்று..
இதற்கு இவ்வளவு பெரிய பில்டப்.. 3 பதிவு ..எல்லாம் தேவையா… உங்களின் பதிவு தகவல்களுடன் உள்ளது என்றுதான் இமெயில் சப்ஸ்கிரிப்சன் செய்துள்ளேன்…
ஒரே வரியில் உங்களின் 3 பதிவு சுருக்கம்..
ஒரு பொம்பள பொருக்கி அமரிக்க சிறையில்…,
இன.. தொழில் அடிப்படயில் நெருக்கத்தால் …
சுகாசினி.. உதவ துடிக்க்றார்..
சப்ப மேட்டரு…
நடிகைகளுக்கு பணம்மட்டுமே பிரதானம் .அவர்கள் வாழ்க்கையில் இது போன்ற அவலங்கள் பல நடை பெற்று இருந்தாலும் கடைசியில் வெற்றிபெற்றது பணமே என்ற அனுபவ உண்மையாலும் ,நட்பு அழுத்ததிலும் இக்கூட்டத்தில் சேரந்திருப்பார் என நம்புகிறேன்
உங்கள் கருத்தில் உடன் பாடில்லை.. சுகாசினியை தாக்குவதற்கான காரணம் புரியவில்லை… இந்திய நாட்டைச் சேர்ந்தவன் அமெரிக்காவில் தண்டனை பெற்றிருக்கிறான்.. அவனைக் காக்க அவன் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார்கள். அதில் தவறென்ன… பாதிக்கப பட்ட பெண் முத்தழகியோ முத்தரசியோ இல்லை.. வெளிநாட்டுப் பெண்… இதைப் போல குற்றச்சாட்டு அசாஞ்சே மீதும் உள்ளது. தண்டனையும் பெற்று விட்டார்.. அந்த தேசப் பெண்கள் கற்பை எப்படி பார்ப்பார்கள் என்பதை நம் கண் கொண்டு பார்கக முடியாது… நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது… நான் சொல்வதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.. அமெரிக்க அரசானது ஒரு வெள்ளை அமெரிக்கனையும் ஒரு ஆசிய நாட்டு இந்தியனையும் ஓரு சேர பார்க்குமா என்பதை விசயம் அறிந்தவர்கள் கூறட்டும்… நீங்கள் சந்தில் சிந்து பாடுவதும் சுகாசினியை திட்டுவதும் தேவையற்றது என்றே தோன்றுகிறது.
வருக நண்பர் நாகராஜ்,
தயவு செய்து,
எந்தவித முன் அபிப்பிராயமும் இல்லாமல்
இந்த இடுகையை துவக்கம் முதல் இறுதி வரை
இன்னொரு முறையும் படிக்கவும்.
உங்கள் சந்தேகங்களுக்கான விடை
அதிலேயே கிடைத்து விடும்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்