அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2)

அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் !
(திருமதி சுஹாசினி …பகுதி.2)

ஆம் அந்த இந்தியரின் பெயர் ஆனந்த் ஜான்.
1973-ல் கேரளாவில் பிறந்தவர்.
10வது வகுப்பு வரை சென்னையில் படித்தவர்.
16 வயதில் அமெரிக்கா சென்றார் –
Parsons the new school for designs-ல்
fashion designing course படிக்க.

அங்கே அவருக்கு செல்வாக்கு மிக்க உறவினர்கள்
துணைக்கு  இருந்தனர்.
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் –
அவரது மனைவி திருமதி பிரபா.

பிரபாவின்   சகோதரி  சசி அப்ரஹாமின்
மகன் தான் ஆனந்த் ஜான்.  
அவரது சகோதரி -சஞ்சனா ஜான்.
சசி அப்ரஹாம் ஏற்கெனவே –
“my fair lady”என்கிற பெயரில்
பியூடி பார்லர் ஒன்றை நடத்தி வந்தார்.

அமெரிக்காவில், ஆடை வடிவமைப்பு படித்த
உடனேயே தீவிரமாக தொழிலில் ஈடுபட்டார்
ஆனந்த் ஜான். குறுகிய காலத்திலேயே
தனது வித்தியாசமான அணுகுமுறைகளால்-
உச்சத்தை அடைந்தார்.
“அமெரிக்காவின் அடுத்த டாப் மாடல்”
என்னும் டெலிவிஷன் நிகழ்ச்சியில் சிறந்த
மாடல்களை தேர்ந்தெடுக்கும் ஜட்ஜ்
ஆகும் அளவிற்கு உயர்ந்தார்.
தானே ஒரு டெலிவிஷன்  “டாக் ஷோ”வும்
நிகழ்த்தினார்.
அவரைப் பற்றிய அமெரிக்க மீடியாவின்
வர்ணனை –

“ஜான் நீண்ட சுருள் சுருளான கறுப்பு முடியும்,
அடாவடியான,ஒரு வித மர்மமான, செக்ஸியான
தோற்றமும் கொண்டவர்.
குறைவாக உடையணிந்த, செக்ஸியான,
இளம் பெண்களின் கூட்டம் ஒன்று எப்போதும்
அவருடன் இருக்கும்.”

“ஆனந்த் ஜான் கம்பெனி” அவருடையது.
அவரது சகோதரி சஞ்சனா ஜானும்,
அம்மா சசி அப்ரஹாமும் அவரது கம்பெனியில்
தீவிரப் பணியில் ஈடுபட்ட பிற பங்குதாரர்கள்.
(ஆனந்தின் தந்தையைப் பற்றி தகவல்
ஏதும் இல்லை )

சரி என்ன நிகழ்ந்தது ?

தான் கற்பழிக்கக்ப்பட்டதாக போலீசில் புகார்
கொடுத்து ஆனந்த் ஜான்  சிறைத்தண்டனை
பெற முதல் காரணமாக இருந்தவர்
பதினெட்டே வயதான ஜெஸ்ஸி.

ஜெஸ்ஸி தன் வாக்குமூலத்தில் கூறியவற்றின்
சாராம்சம் கீழே –(முழுவதையும் இங்கு விவரிப்பதை
நான் விரும்பவில்லை )

“மை ஸ்பேஸ்” என்கிற வலைத்தளத்தின்
மூலம் ஆனந்த் ஜான் – ஜெஸ்ஸியைத் தொடர்பு
கொண்டு, ஜெஸ்ஸியின் அழகைப் பாராட்டி
இருக்கிறார்.
ஜெஸ்ஸியுடன் தான் ஒரு போட்டோ செஷன்
வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், தன்
லாஸ் ஏஞ்சலீஸ்  இருப்பிடத்திற்கு வரும்படி
ஈமெயில் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்.

புகழ்பெற்ற மாடல் டிசைனர் தனக்கு இப்படி
அழைப்பு விடுத்ததை பெரும் பேறாகக் கருதி,
ஜெஸ்ஸி – ஆனந்த் ஜானை அவரது
பெவர்லி ஹில்ஸ் விடுதியில் சந்தித்திருக்கிறார்.

ஆனந்த ஜான் -ஜெஸ்ஸியை தன் படுக்கை
அறை வரை அழைத்துச் சென்று அங்கு தன்
விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக உறவு
கொண்டார் என்று  மறு நாள் காலையில்
நேராக போலீஸ் நிலையம் சென்று ஜெஸ்ஸி
புகார் கொடுக்கிறார்.

இதன்  தொடர்ச்சியாக ஆனந்த் ஜான் கைது
செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ்  நீதிமன்றத்தில்
கற்பழிப்பு வழக்கு தொடரப்படுகிறது.

வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏகப்பட்ட
பெண்கள் – தங்களுக்கும் கிட்டத்தட்ட அதே
போன்ற அனுபவம் – இன்டர்னெட் அறிமுகம்,
மாடல் ஆக்க அழைப்பு, கற்பழிப்பு அனுபவம்
ஆகியவை நிகழ்ந்ததாக புகார் கூறினர்.

ஆனந்த் ஜானின் கம்ப்யூட்டரில் பதிந்திருந்த
தகவல்கள் இந்த வழக்கில் முக்கிய சாட்சி.

மேலும் ஆனந்த் ஜானின் இருப்பிடத்திலிருந்து
கைப்பற்றப்பட்ட அவரது வீடியோக்களில் –
பல மாடல்கள்,
அரை குறை ஆடைகளுடனும்,
ஆடை இல்லாமலும்,
ஆனந்த் ஜான் கொடுக்கும்  ஆலோசனைகளுக்கு
ஏற்ப ஆபாசமாக “போஸ்”கொடுக்க – அவற்றை
ஜான் படம் பிடித்திருப்பது தெரிய வந்தது.

வழக்கில் ஆனந்த ஜான் தரப்பில்
சொல்லப்பட்டது –

இது ஒரு சதி. தான் அடைந்த புகழைப் பொறுக்க
முடியாமல், தன் தொழில் விரோதிகள்,
தன்னிடம் பணிபுரிந்த ஹாலி என்கிற பெண்ணை
வசப்படுத்தி – அவள் மூலம் சதிவலை பின்னி,
தன்னை மாட்டி விட்டார்கள்.
தான் எந்த தவறையும் செய்யவில்லை.
எந்த பெண்ணையும் பலவந்தப்படுத்தவில்லை.
தன்னுடன் படுத்தவர்கள் எல்லாருமே
தானாக விரும்பி உறவு கொண்டவர்களே !

இந்த வழக்கில் புகார் கொடுத்த மற்ற பெண்கள்
அனைவரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும்
மலிவான பெண்கள்.போதைக்கு அடிமையானவர்கள்.
போர்னோகிராபி படங்களில் நடிப்பவர்கள்.
தன் எதிரிகளிடம் பணம்
பெற்றுக் கொண்டு தனக்கு எதிராக புகார்/சாட்சி
சொல்கிறார்கள் – என்பது ஜானின் வாதம்.

ஆனந்த ஜானுக்கு  ஆதரவாக அவரது சகோதரி
சஞ்ஜனா ஜானும், அவரது தோழர்களும் –
லாஸ் ஏஞ்சலீசிலும், நியூயார்க்கிலும்,
இந்தியாவிலும், தீவிரமாக பிரச்சாரம்
செய்தனர். ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆனந்த் ஜானின் நிரபராதத்தன்மையை நிரூபிக்க
சஞ்சனா  ஜான் முன்வைத்த ஆதாரங்கள் இரண்டு.

ஒன்று – ஜெஸ்ஸியை பரிசோதித்த மருத்துவர்கள்
அவரது உடலில் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான
அறிகுறிகள் இல்லை என்று கொடுத்த ரிப்போர்ட்.

இரண்டு – ஆனந்த் ஜானுக்கு செய்யப்பட்ட
“போலிகிராப்” (பொய் சொல்வதை கண்டு பிடிக்கும்
சோதனை ) அவருக்கு ஆதரவாக இருப்பது.

எதிர்த்தரப்பில் இதற்கு எதிராக வைக்கப்பட்ட
வாதங்கள் –

1) ஜெஸ்ஸியின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை
என்றாலும், அவரது பிறப்பு உறுப்பில் காணப்பட்ட
“ஸ்பர்ம்” ஆனந்த் ஜானுடையது என்று
DNA matching மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2) “போலிகிராப்” சோதனையை ஆதாரங்களாக
அமெரிக்க சட்டங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
போலிகிராப்  சோதனை போலீசால் செய்யப்படவும்
இல்லை. எனவே அவை சாட்சியமாக ஏற்றுக்
கொள்ளப்படவே இல்லை.
“போலிகிராப்” சோதனை ஆனந்த் ஜான்
தரப்பினரால், அவரது மருத்துவர்களால்- அவர்கள்
வசதிக்கு நிகழ்த்தப்பட்டது. அதில் அவருக்கு
சௌகரியமான கேள்விகளை மட்டும் கேட்டு,
பதில் பெறப்பட்டு,
ரிப்போர்ட்  தயாரிக்கப்பட்டுள்ளது.

புகார் கொடுத்த மொத்தம் 20 பெண்களில்,
அரசு தரப்பு உறுதியான 9 பெண்களை மட்டுமே
சாட்சியத்திற்கு அழைத்தது. இந்த பெண்கள்
அனைவருமே – ஆனந்த ஜான் தங்களுக்கு இழைத்த
கொடுமையை உறுதிப் படுத்தி விவரித்தார்கள்.

இந்த வழக்கில் 6 ஆண்களும், 6 பெண்களுமாக
மொத்தம் 12 ஜூரர்கள் இருந்தனர்.
நவம்பர் 13, 2008-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

14லிருந்து 21 வயதிற்கு
உட்பட்ட 7 பெண்களை கற்பழித்தது, மற்றும்
சிறு வயதுப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்
காட்சிகளைக் கொண்ட வீடியோ படங்களை
தயாரித்தது போன்ற குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு,
ஆனந்த் ஜானுக்கு லாஸ் ஏஞ்ஜலீஸ் நீதிமன்றம்
59 வருட சிறைத்தண்டனையை விதித்தது.

இதனைத் தவிர நியூ யார்க்,  டெக்சாஸ்,
மசாச்சுசெட்ஸ் நீதிமன்றங்களில் காத்திருக்கும்
புகார்களுக்காக,
அவர் மீது அந்த நீதிமன்றங்களில் தனித்தனியே
வழக்குகள்  தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கதை இன்னும் முடியவில்லை.
இடுகையை இன்னும் தொடர வேண்டி இருக்கிறது.
ஆனாலும், சில நண்பர்கள் இதில்
திருமதி சுஹாசினி எங்கே வருகிறார் என்று
கேட்டிருந்தார்கள். எனவே அதைச்சொல்லி விட்டு,
பிறகு நாளை இடுகையைத் தொடருகிறேன்.


இந்த மனிதர்குல மாணிக்கத்தை
அமெரிக்க சிறையில் இருந்து வெளியே கொண்டு வர,
ஒரு இயக்கம் துவக்கப்பட்டிருக்கிறது.
சென்ற வாரம்  அதைத் துவக்கி வைத்திருப்பவர் –
திருமதி சுஹாசினி அவர்கள்  !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அந்த மனிதரின் பெயர் ஆனந்த் ஜான் ! (திருமதி சுஹாசினி …பகுதி.2)

  1. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    தலையில் அடித்துக்கொள்ள இரண்டு
    கைகள் போதாது

  2. vijayan's avatar vijayan சொல்கிறார்:

    திருமதி.சுகாசினியின் மகன் பொதுஉடைமை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர் எனக்கேள்வி.அவர் தன் தாயின் செயல் பற்றி என்ன சொல்கிறார்.

  3. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    சுஹாசினி, இந்த விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்து, தெரிந்து கொண்டுதான் இதைத் துவக்கி வைத்தாரா அல்லது யாரேனும் நண்பர்களின் வேண்டுகோள் (அ) வலியுறுத்தலால் இதைச் செய்தாரா என்பது முக்கியமானது. சுஹாசினி ஃபேஸ் புக்கில் ஆக்டிவாகத் தான் இருக்கிறார். இந்த விஷயம் அவரது கவனத்துக்குச் சென்றால், அவர் விளக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள இயலும். பார்ப்போம்.

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    நான் பார்த்த வரையில் தமிழகத்தில் ஒரு குடும்பம் உண்டு. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களை வித்தியாசமாக காட்டி கொள்ள என்ன வேண்டும் ஆனாலும் செய்வார்கள். நாத்திகம், பொதுவுடைமை முதல் கொண்டு கோழிக்கு விளம்பரம் செய்வது வரை இது பொருந்தும். அந்த குடும்பத்தில் ஒரு அங்கம் தான் திருமதி சுகாசினி. வேறு என்னத்த சொல்ல.

  5. kmaiyuran's avatar kmaiyuran சொல்கிறார்:

    he is cousin of K.J.Jesudas

  6. GANESH's avatar GANESH சொல்கிறார்:

    She think herself like very big person but she is waste……

  7. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    சுஹாசினி என்ன காரணங்களைக் காட்டி இந்த இயக்கத்தைத் துவக்கியிருக்கிறார் என்பதை அறிந்தபின்னரே, தொடர்பதிவினை படித்த பின்பே கருத்து சொல்ல இயலும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.