திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ?

திருமதி சுஹாசினி – உங்களுக்கே
இது கேவலமாகத் தெரியவில்லை ?

(பாலியல் வன்முறை பற்றிய சில செய்திகளை
கூறியாக வேண்டிய கட்டாயம் இந்த இடுகையில்
இருக்கிறது. எனவே சில வார்த்தைப்
பிரயோகங்களை நான் விரும்பா விட்டாலும்
பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது-
ஆனால் இவற்றில் ஆபாசம் நிச்சயம் இருக்காது.)

அள்ளி அள்ளிக் கொடுக்கும் பணம்,
அளவில்லாத போதை தரும் புகழ் –
அனைவரும் பின்னால் அலையும் நிலை –

இவற்றை அனுபவிக்கும் ஆசையில்,
பெண்களில் ஒரு சிலர்  திரைப்படத் துறையில்
ஒரு நல்ல இடத்தைப்
பிடிக்க  துடித்துக் கொண்டிருப்பதையும்,
அதற்காக அவர்கள் எதையும் தியாகம் செய்யத்  
தயாராக இருப்பதையும் நம் சமூகத்தில்
நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

கிராமங்களிலிருந்தும், சிறு நகரங்களிலிருந்தும்
சினிமா ஆசையால் சென்னைக்கு படையெடுத்த
பல பேரை நமக்குத் தெரியும். அவர்களில்
வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர்களும்
உண்டு – சிக்கி சின்னாபின்னமானவர்களும் உண்டு.

இது நம் தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல –
இந்தியாவிற்கு மட்டும் அல்ல –
எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு உண்மை.

திரைப்படத் துறையில் நுழைவதற்கான
ஒரு நல்ல வழி – விளம்பர மாடல் உலகம்.

ஓரளவு அழகாக இருக்கும் பெண்களுக்கு,
நளினமான அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து,
விதம் விதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளில்,
வித்தியாசமான தோற்றங்களில் பெண்களை
அறிமுகம் செய்பவர்கள் எப்போதுமே
இத்தகைய பெண்களிடம்
மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குகிறார்கள்.

உலகம் முழுவதும் இதே நிலை தான்.
இந்தியாவை விட, மேற்கத்திய நாடுகளில்
ஆடை வடிவமைப்பாளர்களுக்கு (costume
designers ) மவுசு  இன்னும் அதிகம்.

அதுவும் ஓரளவு வெற்றிகரமான
மாடல்களை  உருவாக்குபவர் என்று ஒருவர்
புகழ் பெற்று விட்டால் –
அந்த நபருக்கு உள்ள மவுசே தனி. அவர் மூலம்
மாடல் துறையில் அறிமுகம் ஆவதற்கு
பெண்கள் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு ஓரளவு புகழ் பெற்ற  ஒரு
ஆடை வடிவமைப்பாளர்,
முப்பதுக்கும் கீழே வயதுடையவர்  –
அவர் புகழ் பெற்ற விதமே கொஞ்சம்
வித்தியாசமாகத் திட்டமிட்டு செய்யப்பட்ட
ஒரு செயல்.

புகழ் பெற்ற மனிதர்களுடன் வலியச்சென்று
அறிமுகம் செய்து கொள்வார்.
தான் வடிவமைத்த வித்தியாசமான ஆடைகளை
அவர்கள் உடுக்கச்செய்து, அவர்களுடன் சேர்ந்து
புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார். அதை தன்
விளம்பரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்.

ஏழ்மை நிலையில் உள்ள,
வாளிப்பான உடலமைப்பு உள்ள
பெண்களை தேடி, தேர்ந்தெடுத்து

அவர்கள் அங்கங்கள் அறைகுறையாக
வெளியே தெரியும்
விதத்தில் ஆடைகளை வடிவமைத்து
அணியச் செய்து, பிரபலப்படுத்துவார்.

பெண் பித்தர்.
விளம்பர உலகில் அறிமுகம் பெறத் துடித்துக்
கொண்டிருக்கும் இளம் பெண்களை –
கணினித் தொடர்புகளின்
மூலம் கண்டறிந்து,

அவர்களுடன் வலியத் தொடர்பு கொண்டு,
அவர்களை புகழ் பெற்ற மாடல்களாக
உருவாக்குவதாக ஆசை காட்டி வரவழைத்து,
ஒரு கட்டத்தில் அவர்களது இந்த ஆசையை
பயன்படுத்தியே அந்த பெண்களைச் சீரழித்தவர்.

14 முதல் 30 வயது வரையுள்ள
பல தரப்பட்ட பெண்கள் அவரது வலையில்
வீழ்ந்தனர். பெரும்பாலானோர் இதை விரும்பா
விட்டாலும்,தொழில் முறை ஆசை காரணமாக,
அவருக்கு உடன்பட நேர்ந்தது.

தனக்கு என்று ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை
உருவாக்கிக் கொண்டு –
விளம்பர உலகில் பெரும் பரபரப்பை
உண்டு பண்ணிய அந்த மனிதரை திடீரென்று
ஒரு நாள் போலீஸ்  ஒரு இளம் பெண் கொடுத்த
புகாரின் பேரில் கற்பழிப்பு குற்றத்திற்காக
கைது செய்தது.

ஒரே ஒரு புகாரில் அவர் கைது செய்யப்பட்ட
செய்தி வெளிவந்தவுடன் – புற்றீசல் போல் மேலும்
மேலும் பல புகார்கள் வந்தன. அவரால் பாதிக்கப்பட்ட
பெண்களில் பல பேர் இப்போது வெளிப்படையாக
புகார் கொடுக்கவும் சாட்சி சொல்லவும்
முன் வந்தனர்.

மாடல் உலகம் முழுவதும்  பரபரப்பாக
பேசப்பட்ட இந்த வழக்கின்  இறுதியில் –
35 வயது நிரம்பிய அந்த மனிதருக்கு
நவம்பர் 2008 -ல்  
59 ஆண்டுகள் சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த இடம் கலிபோர்னியா,
அமெரிக்கா என்றாலும் –
சம்பந்தப்பட்ட  அந்த நபர் ஒரு இந்தியர் !

  –   மீண்டும் சந்திப்போம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to திருமதி சுஹாசினி – உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை ?

  1. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    Title talks of Suhasini. Contents about costume-designer. Any Part II connecting Suhasini?

  2. Robin's avatar Robin சொல்கிறார்:

    தலைப்புக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர்களே,

      பதிவு தொடர்கிறது.
      அடுத்த பதிவில் மற்ற விவரங்கள்
      வருகின்றன.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    (மன்னிக்கவும் என் முந்தய பின்னூட்டம் தவறுதலாக என் இயற்பெயரில் பதிவாகி விட்டது.அதை நீக்கி விடவும்
    நன்றி.)
    அன்பின் கா.மை.,
    நீங்கள் எந்த நிகழ்வை கூற வந்துள்ளீர்கள் என்பது புரிகிறது.
    மேலும் இரு தரப்பு வாதங்களையும் நன்கு ஆராய்ந்த பின்னர் தான் ஒரு முடிவிற்கு வருவீர்கள் எனும் நம்பிக்கையும் உள்ளது.
    எனவே நிதானமாக செயல்படவும்.
    வாழ்த்துக்கள்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் கண்பத்,

      done.

      இயன்ற வரை அனைத்து தகவல்களையும்
      திரட்டி, ஆராய்ந்து விட்டு தான் இதை எழுத
      ஆரம்பித்தேன்.
      தவறு ஏற்பட வாய்ப்பில்லை.

      இருந்தாலும், முழு இடுகையும் வெளியான
      பிறகு – தவறு ஏதேனும் இருந்தால்
      சொல்லுங்கள். இருந்தால், அவசியம் திருத்திக்
      கொள்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. Cpede Live's avatar Cpede Live சொல்கிறார்:

    ரெளத்திரம் பழக காத்திருக்கின்றோம்.. உங்கள் எழுத்துக்கள் மூலம் ஏமாற்றும் மூடவர்களிடம் இருந்து விளிப்புணர்வுடன் பெண்கள் செயல்பட வேண்டும்…

    அது சரி.. தன்னை பிரபலம் ஆக்கிடுவேன் என்றதுமே பெண்கள் சிலர் அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் இணங்கிவிடுவார்களா..? அவர்களுக்கும் வித்யாசம் இல்லாமல் போகின்றதே..? ஆசை.. போதை….

  5. Siva's avatar Siva சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அப்படித்தான். ஆசை பேராசை இல்லாத மனிதன் இந்த பூ உலகில் இருப்பவர் குறைவே. பெண்கள் இணங்குவது அவன் ஆணாக இருப்பதால் தான். இது ஒரு வகை exploitation தான். ஆணுக்கும் உண்டு இந்த exploitation. அது வேறு விதம் அவ்வளவு தான். நமது மனம் நிதானமாக நமது கையில் இல்லையேல் இது தான் நடக்கும்

  6. sumoraja's avatar sumoraja சொல்கிறார்:

    நண்பா,

    நீங்கள் சொல்லவருவது பிரபல பின்னனி பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் சகோதரியின் மகனைப்பற்றிய செய்தி என்று எண்ணுகிறேன்..மிகவும் பழைய செய்தி ஒன்றிற்கு நீங்கள் பில்டப் கொடுத்து எழுதியுள்ளது ரசிக்கும்படி இல்லை…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் சுமோராஜா,

      ஆனந்த் ஜான் சிறையில் தள்ளப்பட்டது
      பழைய செய்தி தான். நானே தேதி
      கொடுத்திருக்கிறேனே. ஆனால் அதில்
      திருமதி சுஹாசினி சம்பந்தப்பட்டது
      புதிய செய்தி. கடந்த வாரம் நடந்த
      நிகழ்ச்சி.

      திருமதி சுஹாசினி சம்பந்தப்பட்டதால்
      தான் இந்த இடுகையை எழுத வேண்டிய
      அவசியமே நேர்ந்தது.

      இப்போது சரி தானே நண்பரே ?

      – வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  7. r v ramani's avatar r v ramani சொல்கிறார்:

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா
    மூன்று தமிழர்களுக்காக, நடந்த குற்றத்தில் அவர்களின் பங்கு என்னவென்று தெரிந்தும், தன்மானமிக்க தலைவர்கள் எல்லாம் (?!) ஒன்று கூடி வீர வசனமும், முழக்கமும், வாத-பிரதிவாதங்களும் செய்து கொண்டு திரிகையில், மலையாளி ஒருவனுக்கு, அதுவும் பெயர் போன மலையாளி ஒருவனுக்குக்காக, அவர்கள் அணிதிரள்வதிலும், ஆதரவு திரட்டுவதிலும் என்ன தப்பு கண்டீர் எனப் புரியவில்லை.
    தமிழர்கள் விஷயத்தில் நமக்கு உள்ள உரிமை, அவர்களுக்கும் உண்டு தானே? நாம் இவர்களை ஆதரிக்கின்றோம், சுஹாசினி அவர்களை ஆதரிக்கின்றார். அவ்வளவுதான். ஒரு வேளை, சுஹாசினியும் தமிழர்களை ஆதரிக்க வேண்டுமோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.