நம் எண்ணங்களை பிரதிபலிக்கும்
இந்த வார துக்ளக் தலையங்கம் …
நான் எனக்குத் தோன்றும் –
பல கருத்துக்களை,
ஆதங்கங்களை,
இந்த வலைத்தளத்தில் அவ்வப்போது
வெளியிட்டு வருகிறேன்.
சில நண்பர்கள் என்னிடம் கூறுவதுண்டு.
வலைத்தளத்தின் வீச்சு குறைவானது.
இதே கருத்துக்களை சர்குலேஷன் அதிகமுள்ள
பத்திரிகைகளில் வெளியிட்டால் அது
அதிக அளவு மக்களை சென்றடையுமே என்று.
நான் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதில்லை.
அதற்கான சில காரணங்கள் –
என் எழுத்தும், நடையும் பத்திரிகைகளில்
வெளியிடும் பக்குவத்தில் இல்லை !
நான் இந்த வலைத்தளத்தில் தான்
எழுதவே கற்றுக்கொண்டேன். பத்திரிகையில்
எழுத இந்த அனுபவம் போதாது.
இந்த வலைத்தளத்தில் கிடைக்கும் மட்டற்ற
சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்காது.
என்ன எழுத வேண்டும்,
எப்படி எழுத வேண்டும்
எவ்வளவு எழுத வேண்டும்,
யாரை/எதை ஆதரிக்க வேண்டும்
அல்லது யாரை/எதை எதிர்த்து எழுதக்கூடாது –
போன்ற எத்தகைய
கட்டுப்பாடுகளும் இங்கு இல்லை.
இந்த வலையில் என்னைப் பொருத்த வரை
எனக்குள்ள கட்டுப்பாடு இவ்வளவு தான் –
எதை எழுதினாலும் –
அது என் மனதுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும்.
அது பொது நலனுக்கு
உகந்ததாக இருக்க வேண்டும்.
படிப்பவர்கள் ரசிக்கும் விதத்தில்
இருக்க வேண்டும்.
எழுத்தில் – உண்மையும், வசீகரமும் இருந்தால்-
வீச்சின் விஸ்தீரணம் தானாகவே அதிகரிக்கும்.
மேலும் -இந்த வலைத்தளத்தில் – இதைப்
படிப்பவர்களின் எண்ண ஓட்டங்களும்,
மாறுப்ட்ட சிந்தனைகளும் உடனுக்குடனே
மறுமொழியில் கிடைக்கின்றன. எதையும்
விரிவாக கருத்துப் பரிமாற்றம், விவாதம்
செய்ய முடிகிறது.
இதை விடுங்கள். தலைப்பிற்கு வருவோம் –
நாம் இந்த தளத்தில் அடிக்கடி வலியுறுத்தி
வருவதையும்,
கடந்த 3 இடுகைகளின் அடிப்படைக்
கருத்துக்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் –
இந்த வார “துக்ளக்”
இதழில் ஆசிரியர் “சோ” ஒரு தலையங்கம்
எழுதி இருக்கிறார்.
அது தான் –
அனைத்துச் செல்வங்களும் ஒரு சிலரிடம்
சென்று குவிவது போல் அமைந்துள்ள
நமது பொருளாதார கட்டமைப்பு –
பெரும்பாலான மக்கள் எந்தவித வசதியும்
இன்றி வாடுவ்து –
பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டிய
அவசியம் – போன்றவை
நம் எண்ணங்கள்
இப்போது அதிக வீச்சைப் பெறும்
என்கிற வகையில் நான் மகிழ்வடைகிறேன்.
“துக்ளக்” தலையங்கத்திலிருந்து சில பகுதிகள் –
“பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள
தாக்கம் என்ன என்பதை நம் நாட்டில் உள்ள
அரசியல் கட்சிகளும்,
கொள்கைகளை வகுக்கிறவர்களும்,
அவற்றை நடைமுறைப்படுத்துகிறவர்களும்,
திட்டக் கமிஷன் போன்ற அமைப்புகளும்
கவனிப்பது நல்லது.
போரட்டக்காரர்களின் கோரிக்கை என்ன ?
பெரும் கம்பெனிகளின் இஷ்டப்படி
அரசு நடக்கிறது.
அக்கம்பெனிகளின் உயர் அதிகாரிகளுக்கு
மிகப்பெரிய சம்பளமும்,
வசதிகளும் தரப்படுகின்றன.
…..பெரும் பணக்காரர்களுக்கு கடுமையான
வரிகளை விதித்து, அதன் மூலம்
கிடைக்கும் நிதியை, வசதியற்றவர்களின்
நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்
என்கிற அந்தக் கோரிக்கைக்கு பரவலாக
ஏற்பு இருக்கிறது.
…. அங்கே உள்ள குறைகள் இங்கேயும் உண்டு.
தவிர, அங்கே பெருமளவில் இல்லாத ஊழலும்,
அரசியல்வாதிகளின் கொள்ளையும் இங்கே
மிகப்பெரிய அளவில் உண்டு.
…. இதையெல்லாம் பார்க்கிற மக்கள் –
நமது அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து
வருகிறார்கள்.
… நமது நாட்டு மக்கள் ஒரு கட்டுப்பாட்டுடன்
நடப்பது, சட்டத்தினால் மட்டுமல்ல –
அவர்களுடைய பொறுமை தான் இது வரை இந்த
நாட்டில் அமைதியைக் காத்து வருகிறது.
தவிர, மக்களின் அன்றாடத் தேவைகள் கூட
கவனிக்கப்படாமல், ஒரு சிறிய பகுதியினரிடையே
செல்வம் குவிந்து வருகிறது, நாட்டின் அமைதிக்கு
நல்லதல்ல.
இந்த நிலை தான், இன்று சர்வ தேச மக்களை
விரக்தி அடையச்செய்திருக்கிறது. நம் நாட்டின்
நிலை இன்னமும் மோசம்.
ஆகையால், இங்கு மக்கள் பொறுமை இழப்பதற்கு
முன்னால், ஆட்சியாளர்கள் விழித்துக் கொள்வது
நல்லது. நமது “சாது” ஜனங்கள்
மிரள ஆரம்பித்தால், நாடு கொள்ளாது”.




ரொம்ப நல்ல இருக்கு…………………………..ஒங்க காமெடி…..
வலைதளத்தில் நமக்கு இருக்கும் எழுத்து சுதந்திரம் பற்றி நீங்கள் எழுதிய அனைத்தும் மிக சரியே நான் நினைப்பதை நீங்கள் அழகாக எழுதியுள்ளீரிகள் வாழ்த்துக்கள்
முதலாளித்துவ எண்ணம் கொண்ட துகளக் பத்திரிகையில் வால் street போராட்டம் 4 வரியில் பூசி மெழுகப்பட்டுள்ளது. .நவம்பர் மாத ‘ த சன்டே இந்தியன் ‘ மாத இதழின் 4 பக்க தலையங்கத்தை படிக்கவும்