அத்தனையும் சுட்டது இங்கே இருந்து தான் …
(இ.யா.ப-2)
ஒரு நாளைக்கு 32/- ரூபாய் கூட சம்பாதிக்க
முடியாத அப்பாவி இந்தியர்கள் 41 கோடி பேர்
இருக்கும் இதே நாட்டில் சில முதலாளிகள்
ஒரு வருடத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பாருங்கள் –
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த M.P. யான –
(ஜிண்டால் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்)
நவீன் ஜின்டால் – ரூ.39.7 கோடி மட்டுமே.
திமுக வைச் சேர்ந்த தொழில் அதிபர்,
கருணாநிதியின் பேரன் – சன் டிவி கலாநிதி மாறன் –
ரூ.37.8 கோடி மட்டுமே.
இவரது மனைவி காவேரி மாறன் தனியே
இதே தொகையை – (ரூ.37.8 கோடியை -)
சம்பளமாகப் பெறுகிறார்.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி முந்தைய
வருடங்களில் ரூ.44/- கோடி வாங்கி வந்தார்.
சென்ற வருடம் தானாகவே தன் சம்பளத்தை
ரூ.15/- கோடியாகக் குறைத்துக் கொண்டு விட்டார்.
ஹீரோ ஹோண்டா- முஞ்சால் பெறும் சம்பளம்
ரூ.30.88 கோடி மட்டுமே.
இவை எல்லாம் சம்பளத்தை மட்டுமே குறிக்கின்றன.
இதைத் தவிர அவர்கள் கம்பெனி கணக்கில் பெறும்
சலுகைகள் பற்றி சொல்ல இந்த இடுகை பத்தாது.
அதைத் தவிர வருடா வருடம் கணக்கிடப்படும்
லாபத்தில் பங்கு வேறு.
நாட்டின் ஜனத்தொகையில் பாதிப் பேர்
சோத்துக்கே தாளம் போடும்போது –
கொள்ளைப் பணக்காரர்களையும்,
வீட்டிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும்
ஆபீசுக்கு ஹெலிகாப்டரில் போய் வருபவரையும்,
5 பேர் கொண்ட ஒரு குடும்பம் வசிப்பதற்கு
27 அடுக்குமாடி சொகுசு மாளிகையைக்
கட்டி இருப்பவரையும்,
எத்தனைக் காலம் நாம் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம் ?
இவர்கள் பணக்காரர்கள் ஆனதெல்லாம் நம்
அறியாமையைப் பயன்படுத்தியும்,
சுரண்டியும், ஏமாற்றியும் தானே ?
கடந்த 3 தலைமுறைக்கு முன்னதாகவே,
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னதாகவே,
பணக்காரர்களாக இருந்தவர்களை தவிர்த்து
விட்டுப் பார்த்தால் ,
மீதி அத்தனை பேரும் அரசியல்வாதிகளின்
துணையுடன், (+ அதிகாரிகளின் துணையுடன் ?)
ஏதாவது ஒரு விதத்தில்,
நம்மைக் கொள்ளையடித்துச்
சேர்த்த சொத்துக்கள் தான் இவை எல்லாமே.
நாமே உருவாக்கிய அரசியல் சட்டம் சொல்கிறது –
இந்தியா ஒரு சோஷலிச குடியரசு என்று.
சோஷலிசம் என்றால் சமத்துவம் என்று பொருள்.
ஏழை பணக்காரர் அற்ற ஒரு சமுதாயத்தை
உருவாக்குவோம் என்று நமது அரசியல் சட்டம்
சொல்லும்போது, அரசை நடத்தும் நமது
அமைச்சர்கள் அதற்கு நேர்மாறாகவே அல்லவா
நடந்து கொள்கிறார்கள் ?
இருப்பவருக்கு வரி போட்டு வசூலித்து –
இல்லாதவருக்கு வசதிகளையும்,வாய்ப்புக்களையும்
உருவாக்கிக் கொடுத்தால் தானே சமத்துவம்
வரும் ?
அதிகம் சம்பாதிப்பவனுக்கு அதிகம் வரி
போடுவதை விட்டு விட்டு – வரி போடுவதில்
மட்டும் சமத்துவத்தையும், சமதர்மத்தையும்
கடைபிடிக்கிறார்கள்.
நமது வருமான வரி விகிதங்களை பாருங்கள் –
1,80,000 வரை யாருக்கும் வரி இல்லை
1,90,000 வரை பெண்களுக்கு வரி இல்லை.
2,50,000 வரை மூத்த குடிமக்களுக்கு வரி இல்லை.
மற்ற அனைவருக்கும் –
1,80,001 முதல் – 5,00,000 வரை– 10 %
5,00,001 முதல் – 8,00,000 வரை- 20 %
8,00,001 க்கு மேற்பட்டு – 30 %
(மேல் வரம்பு இல்லை)
அதாவது அதிக பட்ச வருமான வரியே 30 % தான் !
அதாவது மாதம் ரூ.15,000/- சம்பாதிப்பவருக்கு
10 % வருமான வரி.
மாதம் ரூ.41,666/- சம்பாதிப்பவருக்கு 20 % வரி.
ஆனால் மாதம் ரூ.66,666/- க்கு மேல் எவ்வளவு
சம்பாதித்தாலும் அவருக்கு வரி 30 % மட்டும் தான்.
அதாவது வருடம் 8 லட்சம் சம்பாதிப்பவர்
கட்டும் அதே வருமான வரிவிகிதம் தான்
80 கோடி சம்பாதிப்பவருக்கும்,
800 கோடி சம்பாதிப்பவருக்கும் கூட.
அடிமட்டத்தில் 10 முதல் 30 சதவீதம் வரை
படிப்படியாக உயர்த்தி வந்தவர்கள் –
அதற்கு மேல் 40, 50, 60 என்று
ஏன் உயர்த்தவில்லை ?
வருடம் 8 லட்சம் சம்பாதிக்கும் ஒரு சாப்ட்வேர்
எஞ்சினியர் கட்டும் அதே வருமான வரி விகிதம்
தான் வருடம் 38 கோடி சம்பாதிக்கும் கலாநிதி
மாறனுக்கும் என்றால் அது எப்படி ?
8 லட்சத்துக்கு மேலாக தொடர்ந்து –
50 லட்சத்துக்கு மேல் 40 %
75 லட்சத்துக்கு மேல் 50 %
ஒரு கோடிக்கு மேல் 60 %
5 கோடிக்கு மேல் 70 %
10 கோடிக்கு மேல் 80 % என்று அல்லவா
வருமான வரி விகிதம் மேல் நோக்கி
போயிருக்க வேண்டும் ?
வரியை உயர்த்தினால் –
அரசுக்கு வரக்கூடிய
வருமானம் –
வரியை உயர்த்தாமல் இருந்தால்
அமைச்சர்களுக்கும்,
ஆளும் கட்சிக்கும் போய் விடுகிறது –
பின் எப்படி உயர்த்துவார்கள் ?
ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருப்பவருக்கும்,
5000 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பவருக்கும்
ஒரே விகிதத்தில் சொத்து வரி !
வருமான வரி பற்றிய விவரங்களை சற்று விவரமாக
படித்துக் கொண்டிருக்கும்பொது –
ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.
ஒருவன் 20 வருடத்திற்கு முன்பு ஒரு கொலை
பண்ணி இருந்தாலும், கொள்ளை அடித்திருந்தாலும்,
ஏன் ஆடு திருடி இருந்தாலும் கூட,
எத்தனை வருடங்கள் ஆனாலும் –
அவன் மாட்டும்போது அவன் மீது வழக்கு போட்டு
தண்டனை வாங்கிக் கொடுக்க சட்டம்
இடம் கொடுக்கிறது.
ஆனால் ஒருவன் வருமான வரி விவகாரத்தில்
எதாவது ஏமாற்று வேலை, தகிடுதத்தம் பண்ணி
கட்ட வேண்டிய பணத்தை கட்டாமல் தப்பி இருந்தால் –
6 வருடங்கள் கழிந்த பின்னர் அந்த தவறு கண்டு
பிடிக்கப் பட்டால் – அதன் மீது நடவடிக்கை எடுக்க
முடியாது. குற்றம் நடந்து 6 வருடங்கள் கடந்து
விட்டால் வருமான வரி சட்டமே குற்றவாளிக்கு
பாதுகாப்பு கொடுக்கிறது.
யோசித்துப் பாருங்கள் – இந்த மாதிரி சட்டங்கள்
எதற்காக உருவாக்கப்பட்டுள்ளன ?
உங்களுக்கோ, எனக்கோ உதவவா ?



8 லட்சத்துக்கு மேலாக தொடர்ந்து –
50 லட்சத்துக்கு மேல் 40 %
75 லட்சத்துக்கு மேல் 50 %
ஒரு கோடிக்கு மேல் 60 %
5 கோடிக்கு மேல் 70 %
10 கோடிக்கு மேல் 80 % என்று அல்லவா
This Tax rate may be Good for argument, but i will never suggest this as a solution. Anyway i like this article
//8 லட்சத்துக்கு மேலாக தொடர்ந்து –
50 லட்சத்துக்கு மேல் 40 %
75 லட்சத்துக்கு மேல் 50 %
ஒரு கோடிக்கு மேல் 60 %
5 கோடிக்கு மேல் 70 %
10 கோடிக்கு மேல் 80 % என்று //
இப்படி எல்லாம் பண்ணினா அப்புறம் முதலாளிமார்கள், அரசியல்வியாதிகளுக்கு ”காசு” தர மாட்டார்களே!
ஏழையோட வயித்துல அடி
பணக்காரனுக்கு பாத பூசை செய்
– இது தானே நம்ம ஜனநாயக, அரசியல் தத்துவம். புலம்புவதால் பிரயோசனமில்லை. புரையோடிப் போய் விட்டது. தேவை மருந்தோ, களிம்போ அல்ல. அறுவை சிகிச்சை.
அன்புள்ள கா.மை …………
இடுக்கைக்கு ஆதாரம் கலாநிதி சம்பளம்…..
http://contentsutra.com/article/419-sun-tvs-kalanidhi-maran-among-indias-
highest-paid-executives-yet-again/
அரசியல்வாதிகள்
போடுகின்ற சட்டங்கள் எல்லாமே
அவர்களை
வாழவைக்கின்ற பெரும் பணக்கார
தொழிலதிபர்களுக்கு சாதகமாகவே
போடுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை !
இதற்க்கு சாட்சி-
reliance -க்கு ஆதரவான சட்டதிருத்தம் …..
80 % ஏழைகள் உழைப்பு …….
20 %முதலைகள் சாரி ….
முதலாளிகளால் உரிஞ்சபடுகின்றது……
உடல் –
உழைப்பைகொடுக்கும் விவசாயின்
ஆண்டுவருமானம் 32 x 365 = 11680 ரூபாய் மட்டுமே !
ஆனால்-
உடல் உழைப்பே இல்லாமல்
மூளையை மட்டும் மூலதனமாக உள்ள
முதலாளிக்கு சம்பளம் கொடிகளில் ……
என்ன கொடுமை சார் இது ………….???
என்ன கொடுமை சார் இது ……………?????
என்ன கொடுமை சார் இது ………………?????
என்ன கொடுமை சார் இது …………………?????
என்ன கொடுமை சார் இது ………………….???????
என்ன கொடுமை சார் இது …………………….???????
என்ன கொடுமை சார் இது ………………………..???????
என்ன கொடுமை சார் இது …………………………..??????????
http://contentsutra.com/article/419-sun-tvs-kalanidhi-maran-among-indias-highest-paid-executives-yet-again/
http://articles.economictimes.indiatimes.com/2009-09-20/news/27648261_1_salary-cmie-database-promoters
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்களா,கா.மை?
முப்பது சதவிகித வரியையே ஒழுங்காக கட்டாதவர்கள்,
எண் பது சதவிகிதத்தையா கட்டுவார்கள்?
நம்நாட்டில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் காரணம்
நாம் தேர்தெடுக்கும் அரசின் தேசப்பற்று இல்லாத ஊழல செய்யும் மனப்பாங்கு.இதிலிருந்து நாம் விடுபட வழியே இல்லை.இது ஒரு புற்று நோய் போல எல்லா துறையிலும் பரவி விட்டது,ஜனநாயக நாடு என்பதால் புரட்சி என்பதும் அர்த்தமற்றது.ஆயுள் உள்ளவரை அனுபவிக்க வேண்டியதுதான்
(உண்மை கசக்கும்; மன்னிக்கவும்)
வருக நண்பர்களே,
ஊதுகின்ற சங்கை
தொடர்ந்து ஊதிக்கொண்டே இருப்போம் –
எப்போதாவது – விடியத்தானே
செய்யும் ?
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
பாகிஸ்தானில் விலைக் குறைப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் கூறி இந்திய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளன. அதற்கு அந்த நாட்டு அரசு கூறியுள்ள காரணம், கச்சா எண்ணை விலை குறைவு என்பதாகும்.
இந்த விலை குறைவு காரணமாக ஆக்டேன் பெட்ரோல் விலை ரூ 5-ம், சாதாரண பெட்ரோல் விலை ரூ 1.54 குறைக்கப்பட்டுள்ளது (இந்திய ரூபாயில் பாதி மதிப்புதான் பாகிஸ்தான் நாட்டு ரூபாய்க்கு. அப்படியும் கூட அந்த நாட்டில் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 47 மட்டுமே!).
கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக, அனைத்து வகை பெட்ரோலியப் பொருட்களின் விலையும் லேசாகக் குறைக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
வருக நண்பர் விஸ்வநாதன்,
முற்றிலும் உண்மை.
எத்தனை பேர் சொன்னாலும்,
யார் எதிர்த்தாலும்,
சொரணையே இல்லாமல் –
நியாயமே இல்லாமல் பெட்ரோல் விலையை
கூட்டுகிறது அரசு. ஒவ்வொரு முறை
கூட்டும்போதும், வரி மூலமும்
இரட்டை லாபம்.
விலைவாசி உயர பெட்ரோல் விலை
உயர்வு முக்கியமான காரணம் என்பது
இந்த் பொருளாதார மேதைக்கு தெரியாதா
என்ன ?
அவர்கள் கவலை எல்லாம் வேறு ….
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இதை தடுக்க வழி இருந்தால் சொல்லுங்கள் முயற்சி செய்வோம்
ஏழைகளும் நடுத்தரவாதிகளும் பணக்காரர்களைப்போல வாழ ஆரம்பித்துவிட்டதால்தான் பணக்காரர்கள் மிகப்பெரும் பணக்காரர்களாகி விட்டார்கள்.