இதெல்லாம் யார் பணம் … ?

இதெல்லாம் யார் பணம் … ?

இது இந்தியா தான் – இவர்களும் நம் மக்கள் தான் !

இயற்கை, கனிம வளங்கள் நிறைந்த நாடு இந்தியா.
இரும்பு, நிலக்கரி,செம்பு, துத்தநாகம்,
அலுமினியம் என்று  உலோகச்
சுரங்கங்கள் எத்தனை எத்தனையோ !
இயற்கை வாயுவும் (LPG), பெட்ரோலும்
கூட அதிக அளவில் கிடைக்கத் துவங்கி விட்டது.
தினம் ஒரு எண்ணை வயல் கண்டு
பிடிக்கப்படுகிறது( ரிலையன்ஸ் நிறுவனத்தால்…)

உழைக்கும் மக்களின் எண்ணிக்கைகோ
அளவே இல்லை. நிறைந்த உழைக்கும் மக்கள்
வளத்தையும் கொண்டது இந்த நாடு.
எழுத்தறிவு பெற்ற மக்களும், தொழில் திறமை
(skilled craftsman) மிக்கவர்களும்
நிறைந்திருக்கிறார்கள்.

அண்மையில் மத்திய அரசு உச்ச
நீதி மன்றத்திற்கு -பிரமாணம் செய்து
தெரிவித்திருக்கும் ஒரு தகவலில் –

40.74 கோடி இந்தியர்கள்   வறுமைக்
கோட்டிற்கு கீழே வாழ்வதாக கூறி இருக்கிறது.

இந்த இடத்தில் வறுமைக்கோடு என்று மத்திய
அரசு சொல்வது  நகரமாக இருந்தால் –
ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.32/-
(மாத வருமானம் ரூ.965/-) என்றும்

இதுவே கிராமப்புறங்களாக இருந்தால் –
ஒரு நாளைக்கு ரூ.26/-
(மாதத்திற்கு ரூ.781/-)என்றும் வரையறுக்கப்
பட்டிருக்கிறது.

(இந்த குறியளவு நிர்ணயம் செய்யப்பட்டதைப்
பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. அதை
இப்போதைக்கு விட்டு விடுவோம்)

இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
நம் நாட்டில் ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கு கூட
வக்கு இல்லாமல் சுமார் 41 கோடி பேர்
இருக்கிறார்கள்.

இவ்வளவு பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழ்கிறார்கள் என்றால் நாட்டின் உற்பத்தித்
திறனின் பலன் எல்லாம் எங்கே போகிறது ?

நிறைய இடங்களிலிருந்து திரட்டிய சில
புள்ளி விவரங்களை கீழே தருகிறேன்.
அனைத்தும் ஆதாரபூர்வமானவை –

இந்த நாட்டின் மொத்த செல்வத்தில் 80 %
வெறும் 20 % பணக்காரர்களிடம் இருக்கிறது.

(இதில் முதல் 10 பணக்காரர்களிடம் நாட்டின்
செல்வத்தில் 50 % சென்று குவிந்திருக்கிறது.
லக்ஷ்மி மிட்டல், சாவித்ரி ஜிண்டால் ஆகிய
இரண்டு குடும்பத்திடம் மட்டுமே நாட்டின்
மொத்த செல்வத்தின் 13% இருக்கிறது !)

மீதி உள்ள 20% செல்வத்தைத் தான் நாட்டின்
மிச்சமுள்ள 80 % மக்களும் பகிர்ந்து
கொள்கிறார்கள்.

உலகின் முதல் 500 பணக்காரர்களின் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முதல் 130 பணக்காரர்களுக்குள்
11 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

உலகப் பணக்காரர்களில் –
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களைக் குறிப்பாகச்
சொல்ல வேண்டுமானால் –
ஷிவ் நாடார் – 182 வது இடத்திலும்
கலாநிதி மாறன் – 310 வது இடத்திலும்
இருக்கிறார்கள்.

இப்போது தெரிகிறதா பணம் எல்லாம் எங்கே
போகிறது என்று. நாட்டின் மொத்த செல்வத்தில்
80% பகுதி, 20 % பணக்காரர்களிடம் சென்று
குவிந்திருந்தால் மற்ற மக்கள் சோற்றுக்குத் தாளம்
போடாமல் என்ன செய்வார்கள் ?

இந்த நிலை மாற வேண்டாமா ?

இயற்கை நமக்கு எந்த பாகுபாடும் காட்டவில்லை.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு,காற்று,
ஆகாயம் ஆகியவை உலகின் ஜீவராசிகள்
அனைத்திற்கும் சேர்த்து தான்
படைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் சுயநலவாதிகளும், அரசியல்வாதிகளும்
கூட்டு சேர்ந்து மக்கள் அனைவருக்கும் நியாயமாக
போய்ச் சேர வேண்டியதை அவர்களுக்குள் பங்கு
போட்டுக்கொண்டு விட்டார்கள்.

இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் –
குறைந்த பட்சம் –
உண்ண உணவு,
இருக்க இடம்,
உடுத்த துணியாவது வேண்டாமா ?

நல்ல குடிநீர் கிடைக்க வேண்டாமா ?
குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டாமா ?
முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும்
நல்ல மருத்துவ வசதி வேண்டாமா ?
சாலை, போக்குவரத்து வசதிகள்
மேம்பட வேண்டாமா ? சுங்க வரி கட்டாமல் நாம்
அனைவரும் நல்ல சாலைகளில் பயணம் செய்யும்
நிலை வர வேண்டாமா ?

ஆதரவற்ற பெண்களுக்கும்,
அநாதைக் குழந்தைகளுக்கும்,
மன நோயாளிகளுக்கும்,
பாதுகாப்பு இல்லங்கள் வேண்டாமா ?

இதை எல்லாம் மக்களுக்கு கிடைக்கும்படி
உறுதி செய்ய வேண்டியது
இந்த நாட்டு அரசாங்கத்தின் கடமை இல்லையா ?

நாம் ஜனநாயக நாட்டில் தானே இருக்கிறோம் ?
இவர்கள்-நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே?
நமக்கு நல்லது செய்வதற்காக தானே
நாம் இவர்களைத் தேர்ந்தெடுத்து,
அவர்கள் கையில்  அதிகாரத்தைக்  கொடுத்து
வைத்திருக்கிறோம்.

அவர்கள் அப்படி உணருவதாகத் தெரியவில்லையே –
அந்த திசை நோக்கி –
உருப்படியாக எதுவும் செய்வதாகத் தெரியவில்லையே –

என்ன செய்யலாம் ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இதெல்லாம் யார் பணம் … ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ஒன்றும் செய்ய முடியாது!
    நாம் இருப்பது ஒரு ஜனநாயக நாட்டில்!
    இந்த 40 கோடி பேர்களுக்கும் ஒட்டு உண்டு!
    அதற்கு அரசை தண்டிக்கும்/மாற்றும் சக்தி உண்டு.
    அதை அவர்கள் உணரும் வரை,
    மீண்டும் முதல் வாக்கியம்!

  2. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    //ஆனால் சுயநலவாதிகளும், அரசியல்வாதிகளும்
    கூட்டு சேர்ந்து மக்கள் அனைவருக்கும் நியாயமாக
    போய்ச் சேர வேண்டியதை அவர்களுக்குள் பங்கு
    போட்டுக்கொண்டு விட்டார்கள்.//ஒரு சின்ன திருத்தம் : அரசியல்வாதிகளும், சுயநலவாதிகளும், அரசு அதிகாரிகளும் என்று இருக்க வேண்டும்.

    அரசு வஞ்சக வணிகர்களையும் , தொழில் அதிபர்களையும் சரியான வரிகள் விதித்து, அதை சரியாக கணக்கிட்டு, வசூல் செய்ய வழிகளை சட்டமாக/விதிகளை இயற்ற வேண்டும். அரசியல் வாதிக்கு அவ்வாறு செய்யலாம் என்று ஆலோசனை வழங்குவதும், முன்னவர் ஒப்புக்கொண்டால் அவற்றுக்கு வழிமுறைகளை இயற்றுவதும் அதிகாரிகளின் வேலை. தானாகவே அரசியல்வாதிகள் மாற்றங்களை முன்மொழிவதும் உண்டு. தற்போது நாம் பார்ப்பது : ஒன்று, அதிகாரி தாமாக ஆலோசனைகளும் வழங்குவது இல்லை; அமைச்சர்கள் முன் மொழியும் மாற்றங்களுக்கு விதி முறைகளை நெறிப்படுத்தாமல் மாற்றங்கள் மக்களை அடையாமல் இருக்கக் காரணமாவது; மூன்றாவது- மிகவும் வருந்த வேண்டியது= விதிகளில் தெரிந்து கொண்டே ஓட்டைகளை வைப்பது, வேண்டியவர்க்கு அந்த ஓட்டைகளைப் பயன் படுத்தி வரி.கட்டணம்.தீர்வை செலுத்தாமல் இருக்க வழி செய்வது. எனக்கு தோன்றுவது என்னவென்றால், அமைச்சர்கள் சரியாக இல்லையென்றால், சில மாற்றங்கள் வாரா; ஆனால் அதிகாரிகள் சரியாக இல்லை என்றால் பல பணிகள் நடக்காது. இந்தியாவின் தற்போதைய நிலைக்கு அரசியல் வாதிகளை விட அதிகாரிகளே காரணம். ( அரசு நிறுவனங்கள் கம்பனிகளின் சட்டங்கள் வழிமுறைகள், லாபம்,/நஷ்டம், வாடிக்கையாளர் உரிமைச் சட்டம் என்றவற்றுக்கு உட்பட்டதால் அவற்றின் நடைமுறைகள் அரசு இயந்திரத்தை விட பல மடங்கு சிறப்பாக உள்ளது என எண்ணுகிறேன்.) அரசு அதிகாரிகளுக்கு accountability என்பதே இல்லாமல் போய் விட்டது. 2 ஜீயிலும் ஒரு ராசாவுடன் ஐந்து அதிகாரிகள் இருப்பர். ஒரு கல்மாடியுடன் பத்து அதிகாரிகள் தம் வேலையைச் சரியாக செய்திருக்க மாட்டார்.
    சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காவிட்டால் பயன் இல்லை என்று சொலவடை உண்டு; அரசு அதிகாரிகளுக்கு இது சாலப் பொருந்தும்.
    இது பதிவின் மூலக் கருத்தான பொருளாதாரப் பங்கீடு என்பதில் இருந்து விலகி செல்வதாக தோன்றலாம். நான் பதிய வேண்டுவது: பொருளாதார சமன்பாடு அரசின் தலையான பணி. அரசு செல்வம் குவியும் ள்– முந்இடத்தில் இருந்து இதர பகுதிகளுக்கு போய் சேர விதிகளை இயற்ற வேண்டும், ஆனால், அரசு — அதிகாரிகள், அமைச்சர்கதையவர்களுக்கு நஷ்டம் வராமல் பாதுகாப்பு கொடுத்து தம் பங்கை பெற்றுக்கொள்கிறது/பெற்றுக்கொள்கின்றனர். அரசு அதிகாரிகளின் செயல் முறை பற்றி பதிவு ஒன்று இட வேண்டுகிறேன்.

  3. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    நான் பதிய வேண்டுவது: பொருளாதார சமன்பாடு அரசின் தலையான பணி. அரசு செல்வம் குவியும் இ டத்தில் இருந்து இதர பகுதிகளுக்கு போய் சேர விதிகளை இயற்ற வேண்டும், ஆனால், அரசு — அதிகாரிகள், அமைச்சர்கள் –முந்தைய வர்களுக்கு நஷ்டம் வராமல் பாதுகாப்பு கொடுத்து தம் பங்கை பெற்றுக்கொள்கிறது/பெற்றுக்கொள்கின்றனர்.
    அரசு அதிகாரிகளின் செயல் முறை பற்றி பதிவு ஒன்று இட வேண்டுகிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே,

      நீங்கள் கூறுவது மிகவும் சரியே.
      அவசியம் இது பற்றி தனியாக
      ஒரு இடுகையில் விவாதிப்போம்.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. surendra's avatar surendra சொல்கிறார்:

    nammudaiya thalaiezhuththu enna saiya
    padhivu nandru nandri

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் சுரேந்திரா,

      இது தலையெழுத்தல்ல நண்பரே.

      சுயநலவாதிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்த
      நம்மைப் போன்றவர்கள் செய்த தவறு தான்.

      இதை மாற்றவும் நம்மால் முடியும் !

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  5. jawahar's avatar jawahar சொல்கிறார்:

    ivarhaluku yeapoathu thann vidivu pirakumoa. kadavul yeanbavar irukirara yana than yeana thoandruhirathu

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.