2ஜி சனி -நிவாரணத்திற்காக கோவில்
கோவிலாகச் செல்லும் ப.சி.– கடுப்பில்
அர்ச்சனை செய்யும் EVKS இளங்கோவன் !
அண்மையில் ப.சி. அவர்கள் விடுமுறையை
கழிப்பதற்காக குடும்பத்தோடு தேக்கடி வந்ததாக
செய்தி வெளிவந்தது. அதற்கான ஆதாரமாக
வேண்டுமென்றே ஒரு புகைப்படம் லீக்
செய்யப்பட்டபோதே இதன் பின்னணியில்
வேறு எதாவது காரணம்
இருக்கும் என்று தோன்றியது.
முதலில் வெளிவந்த தேக்கடி புகைப்படம் –
இப்போது ஒரு தகவல் கசிந்திருக்கிறது.
உண்மையில் அவர் தேக்கடி வந்தது –
விடுமுறையை கொண்டாட அல்ல.
குடும்பத்தோடு தேக்கடி அருகே இருக்கும்
குச்சனூர் சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று சிறப்பு
பரிகார பூஜைகள் செய்வதற்காக என்று.
இதோ சம்பந்தப்பட்ட புகைப்படம்.
நாத்திகரான ப.சி. சனீஸ்வரன் கோவிலுக்குப்
போய் விசேஷ பூஜை செய்திருப்பார்
என்பதை நானே நம்பி இருக்க
மாட்டேன் – புகைப்படத்தை பார்க்கவில்லை
என்றால்.
பாவம – அவர் என்ன செய்வார் !அவரைத்தான்
எத்தனை சனிகள் பிடித்திருக்கின்றன –
சிபிஐ கோர்ட், ராஜா, பிரனாப் முகர்ஜி,
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !
இதைப் பொறுக்க முடியாத EVKS இளங்கோவன்
பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் தோல்வி பற்றி
இன்று கொடுத்திருக்கும் பேட்டியைப் பாருங்கள் –
“காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்
அநாதைகள் போல் விடப்பட்டனர் !
நானும், வாசனும் மட்டும் தான் ஓரளவு
பிரச்சாரம் செய்தோம். மற்றவர்கள் எட்டிக்கூடப்
பார்க்கவில்லை !
மத்தியில் அதிக செல்வாக்கோடு இருக்கும்
ஒரு அமைச்சருக்கு (ப.சி.?) சோனியாவை
அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
ஆனால்,அவர் கட்சியைப் பற்றி கவலைப்படுவதாகவே
தெரியவில்லை. பிரச்சாரத்திற்கும் வரவில்லை;
வேட்பாளர் தேர்வுக்கும் வரவில்லை; கட்சியின்
முடிவுக்கு மாறாக அவரது சொந்த மாவட்டத்தில்,
(சிவகங்கை) திமுக வோடு மறைமுக கூட்டு
வைத்து செயல்பட்டார்.
தேர்தல் நேரத்தில், 4 நாட்கள் ஓய்வு
(தேக்கடியில் ?) எடுத்தாரே
தவிர தேர்தலைப் பற்றி கண்டு கொண்டதாகவே
தெரியவில்லை.”
இளங்கோவனுக்குத் தெரியாதா என்ன –
ப.சி.யை பிடித்திருக்கும் சனியைப் பற்றி ?
அவரவர் எரிச்சல் அவரவருக்கு !!





//நாத்திகரான ப.சி. சனீஸ்வரன் கோவிலுக்குப்
போய் விசேஷ பூஜை செய்திருப்பார் //
சிதம்பரம் நாத்திகரா? கண்டனூரில் நடக்கும் குலதெய்வ பூஜைக்கு எப்படியாவது வந்து விடுவாரே! ஒரு வேளை தான் ’ஆத்திகன்’ என்பதை வெளியில் காட்டிக் கொண்டால் அது ’கௌரவக் குறைவு’, ’அவமானம்’ என்று நினைக்கும் ’முட்டாள்கள்’ கும்பலில் அவரும் இணைந்து விட்டாரா? எல்லாம் ’சகவாச தோஷம்’ தான்.
//ஒரு வேளை தான் ’ஆத்திகன்’ என்பதை வெளியில் காட்டிக் கொண்டால் அது ’கௌரவக் குறைவு’, ’அவமானம்’ என்று நினைக்கும் ’முட்டாள்கள்’ கும்பலில் //
ஏன் நாத்திகர்கள் மேல் இந்த கொலை வெறி. கிடா வெட்டி பொங்கல் படைக்கும் ஆத்திகரோடு தாங்கள் சமமாக வழிபாடு நடத்துவீர்களா, அவமானம் பார்க்காமல்? பி.கு. கா.மை அவர்களே, இந்த மறுமொழி தங்களுடைய பதிவிற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பதற்கு நான் பொருப்பல்ல. நித்தில்
நித்தில்,
கடவுளை போற்றவோ,தூற்றவோ செய்யாமல் மனிதர்களை நேசிப்பவன் உண்மையான நாத்திகன்..உதாரணம்:சென்னை கே கே நகர் வாசி.
கடவுளை போற்றி,மனிதர்களை ( உண்மையான நாத்திகனையும் சேர்த்து) நேசிப்பவன் உண்மையான ஆத்திகன்
உதாரணம்:மேல்மருவத்தூர் வாசி.
கடவுளை போற்றவோ,தூற்றவோ செய்து மனிதர்களை ஏமாற்றி வாழ்பவன் உண்மையான மிருகம்..
அனைத்து உயிர்களையும் ( உண்மையான நாத்திகன் மற்றும் மிருகத்தையும் சேர்த்து) நேசிப்பவனே
க ட வு ள்
Ramanans அவர்கள் நாத்திகர்களை முட்டாள்கள் என்று சொல்ல வில்லை. நாத்திக வேஷம் போடுவது அறிவாளித்தனம் என்று, வெளிவேசம் போடும் பச்சோந்திகளை தான் அவ்வாறு கூறுகிறார்.குடும்பத்தினரை விட்டு பரிகாரம் ,ஹோமம்,பூஜை,புனஸ்காரம் நடத்தும் கருணாநிதியின் காங்கிரஸ் ஏஜென்ட் அப்படித்தான் இருப்பார்.
//ஏன் நாத்திகர்கள் மேல் இந்த கொலை வெறி//
ஐயா.. நான் நாத்திக்கர்களைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? வேஷம் போடும் ஆத்திகர்களைத்தானே கண்டித்தேன். இது எப்படிக் கொலைவெறியாகும்?
உங்கள் கூற்றுப்படிப் பார்த்தால் கடவுளை உள்ளுக்குள்ளே வணங்கிக் கொண்டு ”நாத்திகர்கள்” தான் ’கடவுள் இல்லை’ என்று கூறி வேஷம் போடுகிறார்கள் என்று பொருளாகிறது. நான் அந்தப் பொருளில் ஏதும் சொல்லவில்லை.
நான் (உண்மையான, நல்ல) நாத்திகர்களை மதிப்பவன். அரைகுறைப் போலிகளையும், வேஷம் போடும் ஆன்மீகவாதிகளையுமே அப்படிச் சொல்லியிருக்கிறேன்.
அதுசரி, நீங்கள் ஆத்திகரா அல்லது நாத்திகரா? நாத்திகர் என்றால் கோபப்படத் தேவையில்லை. ஏனென்றால் இது உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயம். ’உண்மையான’ ஆத்திகர் என்றாலும் வருந்த வேண்டியது இல்லை. நான் போலிகளைப் பற்றித் தானே அப்படிச் சொல்லியிருக்கிறேன்?.
//கிடா வெட்டி பொங்கல் படைக்கும் ஆத்திகரோடு தாங்கள் சமமாக வழிபாடு நடத்துவீர்களா, அவமானம் பார்க்காமல்?//
ஐயா சாமி
எங்க குல தெய்வத்துல கருப்பண்ணசாமியும் உண்டுங்கோ. அவருக்கு கிடா வெட்டித்தான் படையல் போடுவாங்கோ. இதுல என்ன மான, அவமானம் வேண்டி இருக்கு?
எனிவே, ”முட்டாள்கள்” என்று சொன்னதற்காக மன்னிக்கவும்.அது தவறுதான். யாரும், யாரையும் அப்படிச் சொல்ல உரிமை இல்லை.
மன்னர்களுக்கு இணையாகக் கோயில் கட்டி, ஆன்மீகம் தழைக்கச் செய்தவர்கள் நகரத்தார்கள். அவர்கள் வழி வந்தவர் ப.சி. அவர் பாதை மாறிவிட்டாரோ என்பதனால் எழுந்த பதட்டமே இந்தப் பின்னூட்டம்.
மோசமான ஆன்மீக வேஷ தாரிகளை விட ஒரு நல்ல நாத்திகன் பல மடங்கு மேலானவன்.இது கரெக்ட் தானே கண்பத் சார்.
சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் காவிரி மைந்தன். கருத்தினை சரியாகப் புரிந்து கொண்ட விவேக்கிறகு நன்றி!
வருக நண்பர்களே,
நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் !
விவாதம் நல்ல முறையில் தானே
சென்று கொண்டிருக்கிறது !
இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லையே ..
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
அன்புள்ள ramanans,
நீங்கள் சொன்னது மிகவும் சரி..இந்த உலகம் எனும் தோட்டத்தின் உரிமையாளர் கடவுள்.நாமெல்லாம் அவர் நியமித்திருக்கும் தோட்டக்காரர்கள்.நம் வேலை தோட்டத்தை பராமரிப்பதே தவிர,வேலை செய்யாமல் எஜமானனைப்புகழ்வது அல்ல.நேர்மை.உழைப்பு பரோபகாரம் இந்த மூன்று குணங்கள் உடையவனே ஆத்திகன் இல்லாதவன் நாத்திகன்..
காவிரிமைந்தன் மற்றும் ஏனைய நண்பர்களுக்கும்,
என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கா மை பதிவில் இருந்து நான் அறிவது என்னவென்றால், ஒருவர் நேர்மையாகவும், மனசாட்சிக்கு விரோதமாக நடக்காதவரை நாத்திகராக இருக்கலாம்; கடவுளையும் சாலஞ் பண்ணலாம். ஆனால் என்று அவன் சுய நலத்துடன் தடம் புரளுகிரானோ அன்றே பயம் அவனை ஆட்கொள்கிறது. அப்புறமென்ன…இப்படி கோயில் கோயிலாக (மறை முகமாக ஆவது) ஏறவேண்டிதது தான். இது சிதம்பரத்துக்கு மட்டுமல்ல, நமது நவீன ‘திருடராடினனுக்கும்’ பொருந்தும்.
வருக நண்பர் எழில்,
மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
பலரிடம் உயிர்த்துடிப்புடன் இருக்கும்
மனசாட்சி என்கிற ஒன்று தான்
இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல்
இருக்க காரணமாக இருக்கிறது.
அதே மாதிரி – பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும்
சில மனிதர்களிடம் அந்த மனசாட்சி என்கிற
ஒன்று இல்லாமலே போனது தான்
நம் மக்கள் படும்
இத்தனை துன்பங்களுக்கும் காரணம்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்