அவர் போட்ட கணக்கொன்று – இவர் போட்ட கணக்கொன்று –

அவர் போட்ட கணக்கொன்று –
இவர் போட்ட கணக்கொன்று –

இது சோனியா காந்தியின் கணக்கு –

ராகுல் காந்தி தான் பிரதமர். ஆனால் இன்றைய கூட்டணி
கூட்டத்தை வைத்துக்கொண்டு அவரால் பிரதமராக
சமாளிக்க முடியாது. எனவே அடுத்த தேர்தலில் –
காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அதிக அளவில் எம்பி க்களை
பெற்று – இப்போது இருக்கும்  சீனியர் அமைச்சர்களை
எல்லாம் தூர விலக்கி விட்டு, ராகுலுடைய கட்டுப்பாட்டிற்குள்
வரக்கூடியவர்களை மட்டும் வைத்துக்கொண்டு,
ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும்.

அதுவரை ஆபத்தில்லாத  மன்மோகன்சிங்கை  பிரதமராக
வைத்துகொண்டு, லகானை தன்னிடம் வைத்துக்கொள்ள
வேண்டும்.

ஆனால்,   வர வர மன்மோகன் சிங்கால்,  ஆட்சியும்,
கட்சியும் – அபாயகரமான முறையில் பலவீனத்தை
வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால்  சிங்குக்கு மாற்றாக –
தற்காலிகமாக  பிரனாப் முகர்ஜியையோ, ப.சி.யையோ
பிரதமர் ஆக்கலாமா என்று  சோனியா யோசிக்கத்
துவங்கவே  ஆளாளுக்கு  தனித்தனியே கணக்குப்
போடத் துவங்கி விட்டனர் !

ப.சி.யின் கணக்கு –

சோனியா காந்தி முகர்ஜியை விட தன்னைத் தான்
அதிகம் நம்புவார் என்பது தெரியும். எனவே
எப்படியாவது முகர்ஜியை  ஒதுக்கி விட்டால்,
தனக்கு  வாய்ப்புகள் அதிகம்.  நிதிமந்திரியாக
இருக்கும் முகர்ஜியின்  பலவீனத்தை  கண்டு பிடித்து
வெளிப்படுத்தினால் – தன் ரூட் க்ளியர்.
விளைவு –
முகர்ஜியின் அலுவலகத்தில் – ஒட்டுக்கேட்கும்
முயற்சிகளும், சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும்.

பிரனாப் முகர்ஜியின் கணக்கு –

இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே
நம்பர் 2  வாகவே இருக்கிறோம்.  இப்படியே
இருந்தால் – நாளை  ராகுல் காந்தியின் கீழ்
நம்பர் 2 வாக கூட இருக்க முடியாது. எனவே கிடைக்கும்
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு – ப.சி.யை
அகற்றி விட்டால் –  தன் ரூட் க்ளியர்.
தான் தான் அடுத்த பிரதமர் ?
தயாரானது உள்ளடி வேலைகள் .  விளைவு –
பிரதமருக்கு மார்ச்சு 25, 2011 தேதியிட்ட கடிதத்தின்
வெளிப்பாடு.

மன்மோகன் சிங்கின்  கணக்கு –

ஆளாளுக்கு கணக்கு போட்டுகொண்டிருந்தால் –
சிங்  என்ன மாங்கா மடையரா ?
சிங்கைப் பற்றி  எல்லாருமே  தப்பாகவே  எடை
போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு அப்பாவி-
ஒன்றும் தெரியாதவர் என்று.

ஒன்றும் தெரியாத சிங்கைப் பற்றி
ஒன்றை நினைத்துப் பாருங்கள் –
எண்பது வயதாகப்
போகும்  ம.ம.சிங்  இன்று வரை சும்மாவே இருந்ததில்லை !
சாமர்த்தியம் இல்லாமலா  
எப்போதும் – எங்கேயும் -எதாவது  ஒரு பதவியில் ?
முதலில் 35 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியில்,
பின்னர் திட்டக்குழுவில்,
பின்னர்  உலக வங்கியில்,
பின்னர் நரசிம்ம ராவ் மூலம் மத்திய நிதியமைச்சராக –
பின்னர் மீண்டும் உலக வங்கியில் –
அடுத்த முறை  சூப்பர் லக் –
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மூலமாக !
(அப்துல் கலாம் -சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க
அரசியல் சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை என்று
சுட்டிக்காட்டியதன் விளைவாகத் தானே  
சோனியா  தனக்கு ஒரு நம்பிக்கையான OPS ஐ
தேட நேர்ந்தது ? )

இப்போது  -சோனியா காந்தி தனக்கு பதிலாக  முகர்ஜியையோ,
ப.சி.யையோ பிரதமர் ஆக்குவது பற்றி யோசிக்கிறார் என்று
தெரிந்த பிறகு  ம.ம.சிங்கால் சும்மா இருக்க முடியுமா ?

ராகுல் காந்தியைத் தவிர வேறு யாருக்காகவும் அவர்
நாற்காலியை விடத்தயாரில்லை. (ராகுல் இப்போதைக்கு
தயார் ஆக மாட்டார் என்பது அவரது அசைக்க முடியாத
நம்பிக்கை ! )

எனவே – அவர் கணக்கு –

முகர்ஜியையும், ப.சி.யையும்
மோத விட்டு, இரண்டு பேரையுமே அகற்றி விட்டால் –
தன் ரூட்  க்ளியர்.  அடுத்த தேர்தல் வரை பதவி உறுதி.
(அதன் பின்னர் ஒரு வேளை காங்கிரஸ் ஜெயித்து
அதிகாரத்திற்கு வந்தால் – இருக்கவே இருக்கிறது –
துணை ஜனாதிபதி  அல்லது ஜனாதிபதி பதவி !
அதற்கு தேவையான  ஒரே தகுதி -சோனியா காந்தியிடம்
விசுவாசம் – தன்னிடம் ஏற்கெனவே  இருக்கிறது !!
அதை நிரூபித்தும் ஆகி விட்டது !!! )

விளைவு –  எதோ ஒரு தகவலை/கடிதத்தை,
குருட்டாம்போக்கில் கேட்ட  RTI  ஆர்வலருக்கு –
500 பக்க  ஆவணங்களுடன்  நிதியமைச்சக
25 மார்ச்சு 2011 கடிதத்தையும் சேர்த்து  அனுப்பி
வைத்தது.

இப்படி ஆளாளுக்கு போடும் கணக்குகள் –
இவற்றில் யார் கணக்கு  ஜெயிக்கப்போகிறது ?

எல்லாமே  தோற்றால் ?-
தோற்றால் – அதுவே இந்த நாட்டிற்கு
ஒரு விமோசனமாக  அமையக்கூடும் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to அவர் போட்ட கணக்கொன்று – இவர் போட்ட கணக்கொன்று –

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    வாவ்..! சிறந்த யூகம்! நடப்பவற்றைப் பார்த்தால் இவற்றுள் ஏதோ ஒன்று இன்னும் அடுத்த ஆறு மாதங்களில் சாத்தியமாகலாம்.
    //அடுத்த தேர்தலில் –
    காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அதிக அளவில் எம்பி க்களை
    பெற்று – //
    செம… காமெடி.. சிரிச்சி மாளல. இனி எப்போதும் இந்தியாவில் கூட்டாட்சிதான்!! தனிப்பட்ட கட்சிகள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறத் தவறிவிட்டன. இனியாவது சீர் செய்யவும் எவ்வித முயற்சியுமில்லை! “கிடைச்சவரைக்கும் அடிச்சு சுருட்டுறா…மவனே!”ங்கிற பாணிலதான் இந்தியா இப்போ ஓடிட்டிருக்கு.

  2. madurai tamil Guy's avatar madurai tamil Guy சொல்கிறார்:

    நீங்க போட்ட கணக்கு சூப்பர் காமெடி கணக்கு சார். நன்றாக உள்ளது

  3. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    இது எல்லாமே உண்மையாக இருக்க சான்ஸ் அதிகம்!

  4. ravi's avatar ravi சொல்கிறார்:

    கலக்கறீங்க காவிரி!! சும்மா புட்டு புட்டு வைக்கறீங்க !!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.