யார் சொல்லி இருப்பார்கள்… ?

யார் சொல்லி இருப்பார்கள்… ?

தமிழ் நாட்டின் முக்கியமான தலைவர்களில்
ஒருவர்  20 நாட்களுக்கு முன்னர் பேசியது இது –

யார் சொல்லி இருப்பார்கள் – யோசியுங்களேன் !

“எல்லா மதங்களும், மது கூடாது என்று தான்
சொல்கின்றன.
காந்தி அடிகள், ராஜாஜி, காமராஜர், அண்ணா
போன்ற தலைவர்களும் மது வேண்டாம்
என்று தான் சொன்னார்கள்.
இவ்வளவு பேர் சொல்லியும் அற்ப வருமானத்துக்காக
அரசாங்கமே மக்களுக்கு மது விற்பனை செய்வதை
எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.

இதில் கொடுமையான விஷயம் மது பாட்டிலில்
“மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்று
எழுதி வைத்து விற்பது.
ஏழைத்தொழிலாளிகள், அவர்களின் குடும்பங்கள்
எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.
மதுவின் மூலம் வரும் வருமானம் தான் முக்கியம்
என மிகத் தவறான கொள்கையை கடைப்பிடிக்கிறது
அரசாங்கம்.

கொலை, கொள்ளை, பலாத்காரம், விபத்துகள்,
ஆபாச வன்முறைகள், ஒழுக்கக்கேடுகள் என
அதிகரிக்கும் கொடுமைகள் எல்லாவற்றிற்கும்
அடிப்படை காரணமாக இருப்பது குடி தான்.

பாவங்களுக்கு எல்லாம் தாய் மது – என்று
இஸ்லாம் சொல்வது தமிழகத்தில் பட்டவர்த்தமான
உண்மை.
13 வயதுச் சிறுவன் முதல்கொண்டு பெரும்பான்மையான
இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி
வருகிறார்கள்.

சென்னையில் இரவு 8 மணியில் இருந்து டாஸ்மாக்
கடைகளில் இளைஞர்கள் மது வாங்குவதற்காக
ரேஷன் கடைகளில் நிற்பதைப் போல் நிற்கிறார்கள்.

பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாதபோது,
இங்கே மட்டும் கொண்டு வருவது கள்ளச்சாராயத்துக்கு
வழி வகுக்கும் என்று வெட்டிச் சாக்கு சொல்கிறார்கள்.
குஜராத்தில் இன்று வரை பூரண மதுவிலக்கு
நடைமுறையில் இருக்கிறது. சமூக, பொருளாதாரம்
என பல துறைகளில் அந்த மாநிலம் முதன்மையாகத்
தான் இருக்கிறது.

இதைப்பார்த்து பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரா
மதுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில்
இறங்கி உள்ளது.

உண்மையிலேயே மதுவிலக்கில் அக்கரை
இருக்குமானால், சனி, ஞாயிறு  இரண்டு நாட்களாவது
கடைகளை மூடுங்கள்.
கள்ளச் சாராயம் காய்ச்சினால் ஆயுள் தண்டனை,
விற்றால் 10 ஆண்டுக் கால சிறைத்தண்டனை
என்று சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள்.

பெண்களைக் கொண்ட மதுவிலக்கு கண்காணிப்பு குழுவை
ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டும்.

குடியை ஒழிக்காமல் இன்னும் 10 மடங்கு போலீஸ்
பலத்தை கூட்டினாலும் இங்கே சட்டம் ஒழுங்கை
கட்டுப்படுத்த முடியாது. சமூக விரோத செயல்கள்
நிற்காது.”

அநேகமாக யூகித்து விட்டிருப்பீர்கள்.
ஆமாம் – டாக்டர் ராம்தாஸ் பேசியது தான் மேலே
இருப்பது.

எனக்கு இந்தக் கருத்துக்களில்
100 க்கு 100 உடன்பாடு உண்டு.

ஆனால்  ஒரு  விஷயம் தான் எனக்கு புரியவே
மாட்டேனென்கிறது.

20  நாட்களுக்கு முன்னர் இவ்வளவு
பேசிய ராம்தாஸ் –
அதற்குப் பின்னர்   “அம்மா” –   “கள்ளச்சாராயம்
காய்ச்சுபவர்கள் தான் மதுவிலக்கு கொண்டு வர
வேண்டும் என்று கூறுகிறார்கள்” என்று
சட்டமன்றத்தில்  சொல்லியதைக் கேட்டு விட்டும்
இன்றுவரை பதில் கூறாமல் இருப்பது ஏன் ?

எதிர்த்துப் பேசினால் திமுகவினர் மீது பாய்வது
போல் “நில அபகரிப்பு”, “வரவிற்கு மேல்  சொத்து
குவிப்பு”,  “குண்டர்” எதாவது பாயுமோ என்கிற
பயம் தான்  என்று என்  நண்பர் ஒருவர் கூறுகிறார்.

ஆனால் – நான் அதை நம்பவில்லை.
ராம்தாஸ் போன்ற ” தமிழ்க் குடிதாங்கி – போராளி”
இதற்கு எல்லாம் பயப்படுவாரா என்ன ?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to யார் சொல்லி இருப்பார்கள்… ?

  1. Ezhil's avatar Ezhil சொல்கிறார்:

    அட போங்கப்பு! நீங்க ராமதாஸ் மேல வச்சிருக்கிற நம்பிக்கை, அன்புமணி கூட வச்சிருக்க மாட்டார்.

  2. rajasekhar.p's avatar rajasekhar.p சொல்கிறார்:

    நல்லா சொன்னீங்க எழில்……..நாம்
    ராமதாஸ் மேல வச்சிருக்கிற
    நம்பிக்கை அன்புமணி கூட வச்சிருக்க மாட்டார்….
    என்பதுதான் உண்மை

    ஒருமுறை –
    பா.ம.க வின் மது ஒழிப்பு பிரசாரத்தை
    குழுவினர் எங்கள் தெருவில்
    ஒரு மது கடையின் முன் நடத்தினர்…
    கட்சியின் அந்தந்த பகுதி நிர்வகியினர்
    வழிநடத்தி செல்வதையும் காணமுடிந்தது…
    இவர்கள் என்னால் அடையாளம் காட்டமுடியும்
    ஏன் என்றால்………!?
    எல்லாருமே எனக்கு தெரிந்த நபர்கள்…
    ஆம் அந்தநபர்களை பார்த்தபோது
    எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது
    அதில் இருந்தவரில் ஒருவர் கூட
    குடிபழக்கம் இல்லாதவரில்லை……
    அப்போ இவர்களின்
    தலைமையில் நடந்த இந்த பிரசாரத்தை
    யார்தான் கிண்டல் செய்யமாட்டார்கள் …
    மது பிரச்சரத்தை ஆதரிக்கிற ….

    ஒரு தலைவர்
    முதலில் நான் புகை மதுவை தொடுவதில்லை
    என்கட்சியில் என்கொள்கையை
    பின்பற்றுபவருக்குதான் கட்சி பொறுப்பு…
    கட்சிபோறுப்பில் இருப்பவர்கள்
    கொள்கையை பின்பற்றினால்
    தொண்டர்களும் …தொண்டர்களினால்
    இந்த பிரசாரத்தை முன்னெடுத்து
    மக்களிடம் சேர்க்கமுடியும்
    அதைவிடுத்து……………………………………
    செய்தித்தாளிலும் டிவியிலும் அறிக்கை
    விடுக்க மட்டும்
    கட்சி, கொள்கை வைத்துகொண்டு
    கட்சி நடத்துபவர்கள் ……………………சாரி
    சொல்லப்போனால்
    முதல்வர் சொன்னதுபோல
    சாராயம் காய்ச்சுபவர்கள் அவர்கள்
    தொழில் நலிவடைகிறது
    அதனால் தான் அறிக்கைவிடுகிறர்கள் என்று எடுத்துகொள்ளவேண்டியதுதான் …………………..

    ராமதாஸ் மேல நாம வச்சிருக்கிற
    நம்பிக்கை அன்புமணி கூட வச்சிருக்க மாட்டார்….
    என்பதுதான் உண்மை …..

    thanks & blessings all of u
    rajasekhar.p

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.