பயம் ஏன் திருமாவளவன் ?
பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே
சந்தர்ப்பத்தை ?
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தங்களை திமுக
கை விட்டு விட்டது பற்றி திருமாவளவன்
வருந்துகிறார் –
“இது எங்களை அதிர வைக்கும் அறிவிப்பு !
தனித்துப் போட்டியிடுவது குறித்து ஒப்புக்காக கூட
திமுக எங்களிடம் ஒன்றும் சொல்லவே இல்லை.
ஆனால், காங்கிரஸைப் பழிவாங்க நினைத்த
திமுக எங்களையும் அதில் சேர்த்தே சிக்கலில்
தள்ளியது தான் ஜீரணிக்க முடியாதது “
மேலும் – “தனித்து போட்டியிடுவதை விட,
பாமக, வைகோ தலைமையிலான மதிமுக
உள்ளிட்ட ஈழ ஆதரவு கட்சிகளுடன் சேர்ந்து
முன்னணி அமைத்து போட்டியிடவே
நான் விரும்புகிறேன்” என்றும்
தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.
மதிமுக தனித்து போட்டியிடும் என்று
ஏற்கெனவே வைகோ அறிவித்து விட்டார்.
வேட்பாளர் பட்டியல் கூட வெளிவர
ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில் –
கூட்டணி இல்லையே என்று கலங்கும்
கட்சிகளுக்கு ஒரு ஆலோசனை –
உள்ளாட்சித் தேர்தல்களில் யார் வென்றாலும்,
யார் தோற்றாலும் – குடி ஒன்றும் மூழ்கி
விடப்போவதில்லை. ஆட்சியில் மாற்றம்
ஏதும் வரப்போவதில்லை.
திமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக ஆகிய
கட்சிகள் தனித்துப் போட்டி என்று ஏற்கெனவே
அறிவித்து விட்டன.
அதிமுக அநேகமாக தனித்துப் போட்டியிடும்
முடிவில் இருப்பதாகவே தெரிகிறது.
அப்படி நடந்தால் –
தேமுதிக வும், இடதுசாரி கட்சிகளும் கூட
தனித்தனியாகவே போட்டியிடும்
சூழ்நிலை உருவாகும்.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தங்கள்
உண்மையான பலம் என்ன என்பதை தெரிந்து
கொள்ள, மற்றவர்களுக்கும் புரிய வைக்க,
இதை விட நல்ல தருணம் கிடைக்காது.
கூட்டணி சேர்க்க ஆள் தேடுவதை விட
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்,
பாமக வும் கூட தனித்தனியே
போட்டியிட்டால் —
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் மூலம்
தமிழ் நாட்டின் ஒவ்வொரு கட்சியின் உண்மையான
பலமும் என்ன என்பதை அனைவரும் அறியலாம்.
அந்தந்த கட்சிகளுக்கும் கூட –
ஒரு விதத்தில் – இது
எதிர்கால கூட்டணி பேரங்களுக்கு உதவலாம் (?)
திருமாவளவனும், டாக்டர் ராமதாசும் இதுபற்றி
தீவிரமாக யோசிக்க வேண்டும் !
இதற்கு தேவை – தன்னம்பிக்கை மட்டுமே !



உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் வேட்பாளரைப் பார்த்துதான் ஓட்டுப் போடுவார்கள். கட்சி பார்த்துப் போடுவது என்பது குறைவுதான். மேயர் அல்லது நகராட்சி தலைவர் இடங்களுக்கு வேண்டுமானால் குறிப்பிட்ட சதவீத அளவிற்கு கட்சி ஓட்டு பலனளிக்கலாம். ஆகவே, அரசியல் வியாபாரத்தில் ஊழிக்காற்றில் அடித்துச் செல்லப்படும் துரும்பு போல ஆகிவிடுவோமோ என்று திருமா பயப்படுகிறார். நியாயந்தானே!! அவர் நம்பும் சாதி ஓட்டுகளே அவருக்கு விழுவது சிரமம் எனும்போது கூட்டணிக் குதிரைகளின் முதுகில்தானே சவாரி செய்ய நினைப்பார். ஆக, அதிமுக->தேமுதிக->திமுக->கம்யூனிஸ்ட்->மதிமுக->காங்கிரஸ்->பாமக —- இந்த அடிப்படையில் ஓட்டு சதவீதமும், வெற்றி வாய்ப்பும் அமையும் என்ற யூகம் எனக்கிருக்கிறது.
innumaa indha naadhaariya nambaringaa
அன்பு தோழர்களே!
அருமை தாய்மார்களே !!
என் இளைய சமுதாயமே!!!
உங்களை-
சாதி,இனம்,மொழி
என்ற பெயரால் ஏமாற்றி
பொழப்பு நடத்தி வந்த
நம்பிக்கை திருடர்கள்
இப்போதுதான்
”””” முதல் முறையாக ”””’
பயப்பட ஆரம்பிதிருக்கிறர்கள்…..
அடுத்தவன்
முதுகில் சவாரி
செய்து பழக்கப்பட்டவர்கள்
ஆம்-
இவர்கள் வண்டவாளம்
தெரிந்துவிடும் என்பதால்
புலம்புகிறார்கள்……………………
கூட்டணி வைக்கிறோம் என்று
சொல்லி ஏமாற்றி விட்டார்கள்
என்கிறார்கள்-
ஒரு ஏமாற்றத்தையே
தாங்கமுடியாத இவர்கள்
வாய் மட்டும் முதலாக வைத்து
மக்களை,நாட்டை சுரண்டும்
இவர்களை அடையாளம் கண்டுகொள்ள
நேரம் வந்து விட்டது…
ஆம்-
ராமதாச,வைகோ,திருமா,கம்யூனிஸ்ட்,
பெரியகட்சிகளாக இருக்கட்டும்
தங்கள் திறமைகளை காட்ட வேண்டும்,
அனைத்து தொகுதிகளிலும்
வேட்பாளரை நிறுத்தவேண்டும் …..
யாருக்கு-
தைரியம் இருக்கிறது என்று பாப்போம் தைரியமில்லாதவர்களை
அடையாளம் காண்போம்
அப்படி நிறுத்த தயங்கும்
கட்சிகளை அடையாளம் காணுங்கள்
அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்……