சிக்கினார் ப.சிதம்பரம் !- டாக்டர்
சுப்ரமணியன் சுவாமியின் துருப்புச் சீட்டு !!
எடுத்துக் கொடுத்தவர் பிரனாப் முகர்ஜி !!!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய
நிதியமைச்சர் (இப்போதைய உள்துறை அமைச்சர்)
ப.சிதம்பரம் அவர்களையும் சேர்க்க வேண்டும்
என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்திருந்தார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
சிபிஐ வழக்கறிஞரும், உள்துறையும் இதை
எதிர்த்து வழக்காடின. விசாரணை கிட்டத்தட்ட
முடிவடைந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல்
செய்து விட்ட இந்த நிலையில் இதை அனுமதிக்க
கூடாது என்று அவர்கள் வாதித்தனர்.
மேலும், இதை தீர்மானம் செய்ய வேண்டிய
இடம் சுப்ரீம் கோர்ட் அல்ல என்றும், சுவாமி
சொல்ல வேண்டியதை சிபிஐ கோர்ட்டில் தான்
சொல்ல வேண்டும் என்றும் வாதித்தனர்.
ஒரு புதிய திருப்புமுனையாக,
யாரும் எதிர்பாரா வண்ணம்,
இன்றைய தினம் (21/09/2011) தனது
வாதத்திற்கு துணையாக, அசைக்க முடியாத
புதிய ஆவணம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்
சமர்ப்பித்திருக்கிறார் டாக்டர் சுவாமி.
மார்ச் 2011ல் நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜியின்
தரப்பில் இருந்து, பிரதமருக்கு ஒரு கடிதம்
போயிருக்கிறது. அதில் –
ராஜாவின் 2g ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க
ப.சிதம்பரம் அவர்கள் ஒத்துழைத்ததே காரணம்
என்கிற வகையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு
இருக்கின்றன.
ப.சிதம்பரத்திற்கும், பிரனாப் முகர்ஜிக்கும்
இடையே பிரச்சினை என்று சில மாதங்கள்
முன்னரே செய்திகள் வெளியாயின. பின்னர்
பிரனாப் முகர்ஜியின் அலுவலகத்தில் உளவு வேலை
நடப்பதாக முகர்ஜி பிரதமருக்கு புகார் கொடுத்தார்.
ரகசிய விசாரணைகள் நடந்ததாகவும் தகவல்கள்
கசிந்தன.
இப்போது வெளிவந்து விட்டது விவகாரம்.
இருவருக்குள் மோதல் இருந்திருப்பது இப்போது
வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்த கடிதத்தின் நகலை டாக்டர் சுப்ரமணியன்
சுவாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
பெற பிரனாப் முகர்ஜியின் துறையே உதவி
இருப்பதும் தெரிகிறது.
நாளை சுப்ரீம் கோர்ட்டில் வாதம் தொடர்கிறது.
முன்பு ஒருமுறை இதே தளத்தில் ஒரு இடுகை
எழுதி இருந்தேன்“தொப்பியை தூக்குகிறேன்
(hats off )
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அவர்களே” என்று.
இப்போது மீண்டும் ஒருமுறை –
hats off to Dr. Subramanian Swamy !



விநாயகர் ஆசியில்,அவர் தம்பி சுப்ரமணியன் சுவாமி முனைவிலும்,
எப்படியாவது இந்த சனியன் பிடித்த சோனியா காங்கிரஸ் ஒழிந்தால் சரி.அத்தனை கிழங்களும் அயோக்கியர்கள்!அடுத்த முறை வந்தால் அந்த ராகு காலம்தான் பிரதமர் என வேறு சொல்லி பயமுறுத்துகிறார்கள். இனியும் இந்த காங்கிரசையும்,தி.மு க வையும் நாடு தாங்காது!
வருக கண்பத்,
டெல்லி டிவி ஒன்றில் “விஷயம் இங்கே
வந்து நிற்கிறது”
“தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்”
என்று ஒரு நிகழ்ச்சி நடத்துவார்கள்.
விஷயம் “இங்கே”யும் நிற்கவில்லை
என்பது என் கருத்து.
முதலில்”இவரை” சிபிஐ யிடம் கொண்டு
போய்ச் சேர்த்த பிறகு “அவரை”யும்
கொண்டு வர சுப்ரமணியன் சுவாமி
முயற்சி செய்வார் என்றே கருதுகிறேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
நீர்த்துப் போகப் போகிற கேஸுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். எதுவுமே நடக்கப்போவதில்லை!! (சிதம்பரம் ஜெயிலுக்குள்!). எங்கள் “சொல் பேச்சு” கேட்கவில்லை என்று முதலில் கூறிய டிராய்.. இப்போது பல்டி அடித்துள்ளதைக் கவனிக்கவில்லையா?
ரத்தன் டாடாவை ஏன் இதுவரை விசாரிக்கவேயில்லை???
இப்போது நடக்கும் அத்தனை கூத்துகளும் “மேன்மக்களுக்குள்” நடைபெறும் ஈகோ விளையாட்டுகள்! இந்த விளையாட்டில் எல்லோருமே “சமரசம்” ஆகி வெற்றி பெறுவார்கள். கவலை வேண்டாம். வேடிக்கை பார்க்கும் நமக்கு இந்த டெஸ்ட் விளையாட்டு டிராவில் முடிந்துவிடும் என்ற முன்கூட்டிய முடிவு தெரியாமல், பரபர ஆட்டத்தை எதிர்பார்த்து கடைசியில் ஏமாறுவோம்!
வருக நண்பர் ரிஷி,
நீர்த்துப் போகப் போவது உண்மை தான்.
டிரா ஆகப்போவதும் தெரிந்ததே.
ஆனால் – மேட்ச் முடியும்போது,
எத்தனை விக்கெட்டுகள் விழுகின்றன –
எந்தெந்த விக்கெட்டுகள் விழுகின்றன –
என்பதை அறியும் ஆவல் இருக்கத்தானே
செய்யும் ?
அது தான் இது !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
ஹா.ஹா.. நிச்சயமாக இல்லை. விக்கெட் வீழ்ச்சி என்றால் மீண்டும் ஆட வரக் கூடாதே? ஜெயலலிதா ஆட்சி கொள்ளையடித்தது என்பது பகிரங்கமாக தெரிந்தபோதிலும் அதன்பின் இரண்டு முறை ஆட்சியைப் பிடிக்கவில்லையா? யாராவது முதல்வரோ, மத்திய அமைச்சர்களோ குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் தண்டனை பெற்று இருந்திருக்கிறார்களா? இல்லையே!! ஆக, இது விளையாடிக் கொண்டிருக்கும்போது தண்ணி குடிக்க வெளியே வருவது போன்றதுதான்! வீழ்ச்சி அல்ல!!
முற்றிலும் உண்மை
2G last it’s charm:)
It’s time to expose politicians,bizmen,and actors who got swiss account block money.
lost to be a typo error::)
oru velai bjp government vanthal evargaluku punishment kidaikuma?