முகமூடி கொள்ளை, கடப்பாறை கொள்ளை
மாதிரி -காட்பாடி கொள்ளை –
ஸ்டாலின் மனசாட்சி என்ன சொல்லும் ?
ஸ்டாலின் ஊர் ஊராகச்சென்று ஜெயிலில்
இருக்கும் திமுக தலைவர்களை (?)
பார்த்து வருகிறார்.
வெளியே வரும்போதெல்லாம் தவறாமல் –
அவர் கூறும் வாசகம் “அதிமுக ஆட்சி
திமுகவினர் மீது வேண்டுமென்றே –
பொய்யாக நில அபகரிப்பு வழக்கு” போடுகிறது.
சேலம், கோவை, ஈரோடு, மதுரை, விழுப்புரம்
கதைகள் எல்லாம் – சம்பந்தப்பட்டவர்கள்
ஏற்கெனவே “உள்ளே” போய் விட்டதால்
விஷயம் விவரமாக “வெளியே” வந்து விட்டது.
ஆனால், காட்பாடி, திருவண்ணாமலை
விவகாரங்கள் எல்லாம் இன்னும் ஏன்
வெளிவரவில்லை – என்று விஷயம் தெரிந்த
மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இதோ காட்பாடி கொள்ளை விவரம் –
வேலூர் -காட்பாடி, காந்தி நகர், நகரமைப்பு
சங்கத்திற்கு சொந்தமான, சுமார் 66 ஆயிரம்
சதுர அடி காலி நிலத்தை (து.மு. கல்லூரிக்கு
அருகே உள்ளது ) – பொது மக்கள் (?)
ஆக்கிரமிப்பு செய்து விடாமல் இருப்பதற்காக
ஏலத்தில் விற்க திடீரென்று முடிவு செய்கிறார்கள்.
ஏலம் நடந்த அன்று பொது-மக்கள் யாரும்
கலந்து கொள்ளவில்லை ( !)
கீழ்க்கண்ட மக்கள் மட்டும் கலந்து கொண்டு
ஏலம் எடுத்தார்கள் –
முன்னாள் திமுக சட்ட அமைச்சர்
துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் –
5400 சதுர அடி – ரூ.27 லட்சம் 27 ஆயிரம்.
துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி –
480 சதுர அடி – ரூ.23 லட்சம்,85,300.
கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா –
5400 சதுர அடி – ரூ.27 லட்சம், 27 ஆயிரம்.
துரைமுருகன் தம்பி துரை சிங்காரம் –
6000 சதுர அடி – ரூ.28 லட்சம், 26 ஆயிரம்.
துரை சிங்காரம் மனைவி முல்லைக்கொடி –
16,500 சதுர அடி – ரூ.85 லட்சம், 80 ஆயிரம்.
ஏலத்தில் கலந்து கொள்ள வந்த வெளி ஆட்களை
அடித்துத் துரத்தி விட்டு ஏலம் நடந்திருக்கிறது.
இதுபற்றி காவல் துறையில் முறையிட்டு பயன்
இல்லாததால், காட்பாடியைச் சேர்ந்த பலராமன்,
கார்த்திகேயன் உட்பட சிலர் அப்போதைய
முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவுக்கு புகார்
அனுப்பி இருக்கிறார்கள்.
இதையொட்டி கலைஞர் ஆலோசனைப்படி
ஸ்டாலின் நேரில் வந்து விசாரித்திருக்கிறார்.
ஸ்டாலின் உண்மையை விசாரித்தறிந்து
துரை முருகன் குடும்பத்தினர் உடனடியாக
ஏலத்தில் எடுத்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க
உத்திரவு இட்டிருக்கிறார்.
(முனொரு தடவை திடீரென்று துரை
முருகனிடமிருந்து பொதுப்பணித்துறை
பறிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த
சம்பவத்தை ஒட்டித்தான் துரை முருகனிடமிருந்து
இலாகா பறிக்கப்பட்டிருக்கிறது !)
இதை அடுத்து,சாந்தகுமாரி, கதிர் ஆனந்த்,
சங்கீதா ஆகியோர் நிலத்தை திரும்பக் கொடுத்து
இருக்கின்றனர்.
ஆனால் துரை முருகனின் தம்பி துரை சிங்காரமும்,
அவரது மனைவி முல்லைக்கொடி சிங்காரமும்
நிலத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி
இருக்கின்றனர்.
ஆட்சி மாறிய பிறகு இப்போது மீண்டும்
விஷயம் வெளியில் வந்து புகார் மீது
நடவடிக்கை ஆரம்பிக்கிறது.
உள்ளூர்க்காரர்களுக்கு முழு விஷயமும்
வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து, இறுதியில்
ஸ்டாலினே நேரடியாக தலையிட்ட இந்த
நில அபகரிப்பு விஷயத்தையும் “பொய் வழக்கு”
என்று ஸ்டாலின் சொல்வாரா ?
அவரது மனசாட்சி அதை ஏற்றுக் கொள்ளுமா ?




சபாஷ் நல்ல செய்தி சொன்னீர்கள் !
“காட்பாடி” “உள்ளே” போகும்
நன்னாள் எந்நாளோ ?
நம்பகதன்மை அதிகமாக உள்ள செய்திகளை வெளியிடுவதால் உங்கள் செய்தியை படிப்பதில் ஆச்சிரியாமோ வியப்போ அடைவதை விட உண்மையை நன்கு உணரமுடிகிறது. நன்றி
வருக நண்பர் சிவா,
தங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி.
இதைத் தக்க வைத்துக்கொள்ள
தொடர்ந்து முயற்சிப்பேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
ஸ்டாலின்-
வெளியிடும்
அறிக்கைகளை பார்த்தால்
மனசாட்சின்னு ஒன்னு
இருப்பதாக தெரியவில்லை …!
அதுசரி-
மனசுன்னு ஒன்னு
இருந்தாதானே……….
மனசாட்சின்னு ஒன்னு இருக்கும்…!!