தூக்கு தண்டனை …..

தூக்கு தண்டனை …..

கடந்த 10 வருடங்களாக  இந்தியாவில்
யாரையும் தூக்கில் போட்டது கிடையாது.
இப்போது  திடீரென்று எப்படி கிளம்பியது
இந்த பிரச்சினை ?

சுமார் 25 பேர்களுக்கு மேல் பல்வேறு
குற்றங்களுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு,
ஆனால் அவர்களின் கருணை மனு மீது
எந்த முடிவும் எடுக்கப்படாமல் 10 வருடங்களுக்கும்
மேலாக காத்திருக்கிறார்கள்.

இப்போது திடீரென்று 3 தமிழர்களின்
கருணை மனுவையும் தள்ளுபடி செய்து, மத்திய
அரசு  உத்திரவு போட்டதன் பின்னணியில்
இருப்பது என்ன ?

அதற்கு முன் மரண தண்டனை பற்றி
சில விவரங்கள் –

உலகில் – 96 நாடுகள் மரண தண்டனையை
சட்டப்படி விலக்கிக் கொண்டு விட்டன.

34 நாடுகள் –  சட்டப்படி விலக்கா விட்டாலும்
மிக நீண்ட காலமாக இந்த தண்டனையை
விதிப்பதில்லை.

58 நாடுகள் மட்டும் இன்னும் தங்கள்
சட்ட புத்தகத்தில் இந்த தண்டனையை
வைத்திருக்கின்றன.

2007 ஆம் ஆண்டு ஐ.நா. சபை உலக நாடுகள்
அனைத்தும், மரண தண்டனையை தடை செய்ய
வேண்டுமென்று -கட்டுப்படுத்தாத –(non-binding)
தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியது.

ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில்
65 % வசிக்கும் சீனா, இந்தியா, இந்தோனேஷியா,
அமெரிக்கா ஆகிய நாடுகள் இன்னும் இந்த
தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

மரண தண்டனையை அதிகம் பயன்படுத்துபவை
அரபு  நாடுகளும், சீனாவும் தான்.
அமெரிக்காவில் சில மாகாணங்களில் மரண தண்டனை
ரத்து செய்யப்பட்டு விட்டாலும், பொதுவாக
சட்ட புத்தகத்திலிருந்து விலக்கப்படவில்லை.

இந்தியாவில் – IPC (Indian Penal Code )
பிரிவு 302-ன் கீழ் கொலைக்குற்றம் நிரூபிக்கப்
பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அல்லது
ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். குற்றத்தின்
தன்மையை பொறுத்து, இது நீதிமன்றத்தால்
தீர்மானிக்கப்படுகிறது. (அரிதிலும் அரிதான –
வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை
விதிக்கப்படுவது வழக்கம் ).

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் –
ஜனாதிபதிக்கு, தங்கள் தண்டனையை குறைக்கும்படி
வேண்டி கருணை மனு கொடுக்கலாம்.

அரசியல் சட்ட விதிகளின்படி, ஜனாதிபதி
தன்னிச்சையாக இதில் முடிவெடுக்க முடியாது.
மத்திய மந்திரி சபைக் கூட்டத்தில் இந்த விஷயம்
விவாதிக்கப்பட்டு, அதன் முடிவு ஜனாதிபதிக்கு
எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்.
அதன் பின்னரே, மந்திரி சபையின்
ஆலோசனைப்படியே
ஜனாதிபதி முடிவெடுப்பார்.

இந்த 3 பேர் விஷயத்தில், மத்திய மந்திரி சபை
எப்போது கூடி, முடிவெடுத்தது ?
அந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரவையில் உள்ள
திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டார்களா ?
அவர்கள் இந்த முடிவிற்கு சம்மதம் தெரிவித்தார்களா
என்பவை  தெரிந்தால் –

இப்போது கலைஞர் வடிக்கும் கண்ணீர் நிஜக்கண்ணீரா,
அல்லது முதலைக்கண்ணீரா என்பதும் தெரிய வரும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தூக்கு தண்டனை …..

  1. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    dear,
    kavirimainthan…..

    கலைஞர்-
    வடிக்கும் கண்ணீர்
    முதலை கண்ணீர்
    என்பது உலகுக்கு தெரியும்

    2000 -ம்ஆண்டில்
    தமிழக சட்டசபையில்
    நிறைவேற்றிய தீர்மானத்தின்
    பின்னணியில்
    மூவரின் தூக்கு தண்டனை மறுக்கப்பட்டது
    என்பது தான் உண்மை…

    பெயருக்கு-
    தழினதலைவர் என்று
    அவருக்கு அவரே
    சூட்டிய பட்டம் என்பது
    உண்மையாகிவிட்டது !
    கடமைதவறிவிட்டார்
    என்பது நிருபணம்மாகிவிட்டது…

    இது –
    தேசத்துக்கு இழைத்தகொடுமை என்பது
    தமிழக சட்டசபையில் தீர்மானத்துக்கு பின்
    கஷ்மீர் முதல்வரின் செயல்பாடுகளால் உணரலாம்………………

    தூக்கு-
    தண்டனை வேண்டாம்
    என்பது எல்லோருடைய
    விருப்பமாக இருந்தாலும்
    தண்டனைகள் கடுமையக்கபடவேண்டும்
    தண்டனை கடுமையாகும் போது தான்
    குற்றங்கள் குறையும் என்பது
    யாராலும் மறுக்கமுடியாத உண்மை….!!!

    thanks & blesssings all of u
    rajasekhar.p

  2. நித்தில்'s avatar நித்தில் சொல்கிறார்:

    2004ல் தனஞ்செ சட்டர்ஜி கொலை மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டான்.

  3. நித்தில்'s avatar நித்தில் சொல்கிறார்:

    எல்லாம் இத்தாலி அம்மையாரின் விருப்பத்திற்கினங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருக்கலாம். மற்றபடி திமுக அமைச்சர்கள் எல்லாம் டம்மிகள் தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.