காலியாகிறது டில்லி “திஹார்” –
திரும்பி வருகின்றன திருச்செல்வங்கள் !!
அடுத்த வாரம் ரிலீஸ் ..
கதை முடிந்து விடும் என்பது –
எதிர்பார்த்தது தான்.
ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்பது தெரியாது !
முடிக்கா விட்டால், பங்காளிகளை
எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிட
வேண்டி இருக்கும் என்று சொன்னதற்கு –
நல்ல பலன் !
விசாரிக்கப் போனவர்களை எல்லாம்
திரும்பக் கூப்பிட்டு விட்டார்களாம் …
“துரை” மீது கை வைக்க மாட்டார்கள் என்பது
ஏற்கெனவே எதிர்பார்த்தது தான்.
“அன்னை”க்கு செல்லப்பிள்ளை ஆயிற்றே !
அப்படியானால் மிரட்டியதாகச் சொன்னார்களே ?
எல்லாம் ச்சும்மா – எதற்கும் ஆதாரமில்லை.
மலேசியா முதல் போட்டதற்கும் –
இவர்கள் மிரட்டியதற்கும் சம்பந்தமே இல்லை.
அவர்கள் எல்லாம் பள்ளியிலிருந்தே “தோஸ்த்”-
பம்பரம் விடும் வயதிலிருந்தே விளையாடி பழக்கம்!
வெறும் விளையாட்டு தான் !
அரசர் வழக்கு ?
ஒழுங்கு முறை ஆணையமே எல்லாம்
ஒழுங்காகத் தான் இருக்கிறது என்று சொன்ன பிறகு
வழக்கெங்கே வழக்கு ?
ஏலமே இல்லை என்கிறபோது நஷ்டம் எங்கே
லாபம் எங்கே ?
நடக்காத ஏலத்தில் எல்லாமே “ஜீரோ” தான் !
இவ்வளவு நாளாகச் சொல்லாத ஒழுங்கு
இப்போது இப்படி சொல்வது ஏன் ?
அடப்போய்யா -இது கூட தெரியாம !
எப்போ சொல்லச் சொல்கிறார்களோ
அப்போ தானே சொல்வார்கள் !
சரி அரசி … இளவரசி ?
பண்ணுவது வியாபாரம்.
வாங்கியது கடன்.
வட்டியோடு திரும்பக் கொடுத்தாகி விட்டது.
இதில் லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ?
சந்தேகம் இருப்பவர்கள் அண்ணா (!)விடம்
போய்க் கேட்டுப் பாருங்கள் !
அப்படியானால் வழக்கு
விலக்கிக் கொள்ளப்படுமா ?
அடேடே – அப்படியெல்லாம் வெளிப்படையாக
செய்யக்கூடாது. நடக்கும் அவசியம் நடக்கும்.
ஆனால் மெள்ள மெள்ள …
மெள்ள மெள்ள …. !
ஜாமீனில் வெளிவந்த பிறகு இதில்
யாருக்கென்ன அவசரம் ?
“கீழே” இரண்டு வருடம்.
“உயரே” நாலைந்து வருடம்.
பின்பு “உச்சத்தில்” ஒரு பத்து வருடம் !
அதற்கும் பின்னால் இதில் யாருக்கு அக்கரை
இருக்கப் போகிறது ?
அப்படியானால் அடுத்த வாரம்
திரும்புவது நிச்சயம் தானா ?
முப்பெரும் விழா ஏற்பாடு தொடரலாமா ?
செய்ய வேண்டியது தான் …. ஆனால் –
என்ன ஆனால் …?
“அன்னை”யை சமாளித்தாகி விட்டது.
ஆனால் “அம்மா” – ?
விடியும் முன்னரே கதவை தட்டுகிறார்களாமே !
அய்யோ மீண்டும் களியா ?
விழா எங்கே போகிறது ?
கொண்டாட ஆள் வேண்டாமா ?
இப்போதைக்கு பேசாமல் –
அண்ணனுடன் டில்லியிலேயே தங்கி விடலாமா ?



திஹாரில் இருந்து திரும்பி வந்தால் புழலுக்குப் போக வேண்டி வரும் பரவாயில்லையா? திஹாரிலாவது யாருக்கும் தெரியாமல் ராஜா, ராணி உபச்சாரம் நடக்கும் இங்கு ? திரும்பி வந்தால் ராஜாவுக்கு, ராணிக்கும் களி காத்திருக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஏறினால் மெயில் இறங்கினால் ஜெயில் வாங்கினால் பெயில்தான்.