…………………..

……………………
இந்த பேட்டி கொஞ்சம் வித்தியாசமானது….
இது கேள்வி பதிலாக இல்லை…
கலந்துரையாடலாகவும் இல்லை ; மாறாக,
விவாதமாக இருக்கிறது….
ரங்கராஜ் பாண்டே-வுக்கு ஒரு சந்தேகம் …
தன் சந்தேகத்தை இந்த விவாதத்தின் மூலம்,
மறைமுகமாக வெளிப்படுத்த விரும்புகிறார்…
என்ன சந்தேகம் ..?
மோடிஜியின் இமேஜை சேதப்படுத்த, அவரைச் சுற்றியிருக்கும்
நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரோ, சிலரோ
முயற்சி செய்கின்றனரோ என்பது…
ஏன் -இந்த சந்தேகம் வருகிறது….?
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பது குறித்து,
தேவையே இல்லாமல், செயற்கையாக ஒரு பிரச்சினையை
உருவாக்கி பிரதமரை சங்கடமான சூழ்நிலையில்
நிற்க வைத்து விட்டார்கள் அந்த குழுவினர்.
பிரதமர், ஜனாதிபதி – இருவரும் கலந்து கொள்வார்கள்;
ஜனாதிபதி முன்னிலை அல்லது தலைமையில்,
பிரதமர் திறந்து வைப்பார் என்று மிகச் சாதாரணமாக
செல்ல வேண்டிய விஷயத்தை,
- திரும்ப திரும்ப பிரதமர் தான் திறந்து வைக்க வேண்டும்,
ஜனாதிபதி அங்கே வரவே கூடாது என்று
சொல்லி இதை பிரஸ்டைஜ் விவகாரமாக்கி விட்டார்கள்…
குருமூர்த்திஜியும் அதையே தான் மீண்டும் மீண்டும்
சொல்கிறார்…. பாண்டே கேட்கும் எதிர்க்கேள்விகளுக்கு
அவரிடம் சரியான விளக்கங்கள் இல்லை … சமாளிப்பு மட்டுமே….!!!
சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டு,
பதிலுக்கு கேள்வி கேட்டால் – நான் அரசியல்வாதி அல்ல –
நான் அரசியலுக்குள் போக விரும்பவில்லை என்றால்
என்ன அர்த்தம் ….?
ரங்கராஜ் பாண்டே-யின் முயற்சிக்கு
எந்த அளவு வெற்றி கிடைக்கிறது….?
இதற்கு விடை தெரிய, இந்த காணொலியின் –
கடைசி 13 நிமிடங்களை, அதாவது –
27-வது நிமிடத்திலிருந்து கடைசி வரை பார்த்தாலே போதுமானது.
என் அனுமானம் சரியோ – தவறோ எனக்குத் தெரியாது.
எனக்கு தோன்றுவதை இங்கே சொல்லி விட்டேன்…
வாசக நண்பர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்
என்பதை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.
…………..
.
………………………………………………………………………………………………
பிரதமர் திறந்து வைப்பதில், அடையாள செங்கோல் வாங்கிக்கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியைக் கூப்பிடவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்றே நினைக்கிறேன்.
எதிர்கட்சிகள் என்ன சொல்கின்றன? ஜனாதிபதி என்பவர் அரசின் தலைவர், அதனால் அவர்தான் திறந்துவைக்கவேண்டும் என்று. இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், பழங்குடி இனத்தவர் என்பதால் ஜனாதிபதியை அழைக்கவில்லை என்கிறார்கள். இப்படிச் சொல்லுபவர்கள்தாம், பழங்குடி இனத்தவருக்கு வாக்களிக்காமல், பிராமணரான யஷ்வந்த் சின்ஹாவிற்கு வால் பிடித்தவர்கள்.
தமிழகத்தில் யார் அரசின் தலைவர்? கவர்னர். அப்புறம் ஏன் மற்றவர்களை அரசு அழைக்கவேண்டும்? இதற்கு முன்பு, கருணாநிதி, சம்பந்தமே இல்லாமல் மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் அழைத்து தலைமைச் செயலக செட்டைத் திறந்துவைக்கவில்லையா? தமிழகத்தில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்’ பெரியவர் என்று சொல்லும்போது, அகில இந்திய அளவில் பிரதமருக்கு அதே செல்வாக்கு இருக்கிறதல்லவா? இதற்கு முன்பும் பாராளுமன்ற additional கட்டிடங்களை பிரதமர் திறந்துவைத்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன அல்லவா?
சரி.. கட்சி அளவில் இவங்க எல்லோரும் protocol பின்பற்றுகிறார்களா? காங்கிரஸின் தலைவர் யார்? கார்கே. அப்புறம் எதற்கு ராகுல், கர்நாடகா காங்கிரஸ் அரசு என்ன சட்டம் போடும் என்பதைச் சொல்கிறார்? காங்கிரஸ் என்ன செய்யும் என்று எதற்கு அவர் பேட்டி கொடுக்கவேண்டும்? ராகுலுக்கு, தனக்கு விழாவிற்கு அழைப்பு கிடையாது என்பதால், தான் போகாத விழாவுக்கு யாருமே போகக்கூடாது என்று புறக்கணிக்கிறார். அவ்ளோதான்.
..
புதியவன்,
இடுகையில் நான் எழுப்பிய கேள்வியை
ஏன் தவிர்க்கிறீர்கள்…..?
அதைப்பற்றி கருத்து கூறுவதில் உங்களுக்கு
என்ன சங்கடம் …?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//தேவையே இல்லாமல், செயற்கையாக ஒரு பிரச்சினையை
உருவாக்கி// – நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. இந்தச் சாதனையைச் செய்தது பிரதமமந்திரி. இதனைத்தான் குலாம் நபி ஆசாத் அவர்களும் சொல்லியிருக்கிறார்.
இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே என்றெல்லாம் அநுமானித்துக் கேட்கும் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது.
சாதனையைச் செய்தது மோடி அவர்கள். அவர் திறந்துவைப்பது மிகச் சரி.
..
புதியவன்,
இப்போதும் நீங்கள் விஷயத்துக்கு வரவில்ல;
குரு’ஜி மாதிரியே நழுவுகிறீர்கள்….
இனிமேலும் உங்களைக் கேட்பதில் அர்த்தமில்லை…!!!
(ஓரு கட்சியை சார்ந்தவராகி விட்டால் இதான் பிரச்சினை;
சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
மீண்டும் மீண்டும் எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும்…
மேலே குரு’ஜி செய்கிறாரே அந்த மாதிரி… 😊😊😊 !!! )
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நீங்க பட் பட் என்று நம்பர் போட்டு கேள்வி கேளுங்கள். சட் சட் என்று என் கருத்தை எழுதுகிறேன். இங்கு என்ன கேள்வி என்பது எனக்குப் படவில்லை. நான் உங்கள் கேள்விகளை எதிர்பார்க்கிறேன் (12 மணிக்குள்). உடனே பதில் எழுதறேன் இங்கேயே
.
புதியவன்,,
இடுகையின் தலைப்பு என்ன ….?
“மோடிஜியின் உள்வட்டத்திலேயே கருப்பு ஆடுகளா….?
“மோடிஜியின் இமேஜை சேதப்படுத்த, அவரைச் சுற்றியிருக்கும்
நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரோ, சிலரோ
முயற்சி செய்கின்றனரோ …? ”
இதற்கெல்லாம் கருத்து சொல்ல வேண்டுமென்று
நிஜமாகவே உங்களுக்கு தோன்றவே இல்லையா ..?
பரவாயில்லை…
என்ன செய்வது….உங்களுக்கு
குலாம் தான் இங்கே முக்கியமாக தெரிகிறார் …!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்…. மோடியின் உள்வட்டத்தில் கருப்பு ஆடுகள் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் பாஜகவின் தலைவர்கள் மட்டத்தில் பல கருப்பு ஆடுகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. பொறாமை, தனக்கு வாய்ப்பில்லையே என்று பலரும் எண்ணுவர். (உதாரணமா… இவர் கருப்பு ஆடு இல்லை… கட்கர்ஜியின் முகத்துக்கு எத்தனை வாக்குகள் விழும்? சு.சுவாமிக்கு எத்தனை வாக்குகள் விழும்? இந்த படிக்காதவனுக்கு வந்த வாழ்வைப்பாரு என்று பொசுங்கிக்கொண்டுதான் இருப்பாங்க, ஆனால் தேர்தல் அரசியலில் தொடர்ந்து வெற்றிபெறுகிறாரே என்பதை அவங்களால ஜீரணிக்க முடியாது)
தமிழகத்திலேயே பாருங்க….இப்போ வந்த ஆளுக்கு மா.செ பதவி, லட்டு லட்டான துறைகள் என்று வயிறெரிபவர்கள் இருக்காங்களா இல்லையா? ரெய்டு, இத்தனை கோடிகள் அடித்துள்ளாரே, சாராயச் சாவு, போலி மதுபானக் கடைகள் என்றெல்லாம் கேள்வி வந்தால், அமைச்சர் நேரு, என்கிட்ட மூத்திரப் பிரச்சனை இருந்தால் கேளுங்க, மற்றவற்றைப் பற்றிக் கேட்காதீங்கன்னு நேற்று சொன்னாரா இல்லையா? கனிமொழியிடம் அதே கேள்வி கேட்டபோது, ஐயாம் பிஸி.. ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு என்று காணாமல் போனாரா இல்லையா?
பாஜகவில் அமைச்சராக இருந்து நல்ல பதவியில் இருந்த சு.சு. பாஜக தலைமையைப் பற்றி எத்தனை கமெண்டுகள் சொல்லியிருக்கிறார்? ஏன் சத்யபால் மாலிக் சொல்லாத குற்றச்சாட்டுகளா? இதெல்லாம் அரசியல் வாழ்வில், அதிலும் தலைமைக்கு சகஜமாகத்தான் இருக்கும் (ஆனால் தகுந்த நேரத்திற்குக் காத்திருப்பாங்க தலைமை) என்றைக்கு மோடி மேஜிக் வேலைக்கு ஆகலையோ (அதாவது ராகுல் மாதிரி தொடர் தோல்வியைத் தன் கட்சிக்குப் பரிசாகக் கொண்டுவருகிறாரோ) அப்போது மற்றவர்கள் பலம் பெறுவர்.
இதெல்லாம் சகஜமான விஷயங்கள். அதனால் கருத்துத் தெரிவிக்கவில்லை. இப்போதுமே, மோடிக்கு, போயும் போயும் இந்த டமிளனுங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமா? தமிழகத்திலிருந்து ஆதீனங்கள் வந்து அவர்கள் கையால் செங்கோல் வாங்கிக்கணுமா என வட இந்தியத் தலைவர்கள் வயிறெரிந்துகொண்டிருப்பார்கள் (பாஜகவிலும்). அதனால்தான் முஸ்லீம் வாக்குகளுக்காக, அகிலேஷ், ஏன் மற்ற மதத்தினர்களை திறப்புவிழாவுக்கு அழைத்து முக்கியத்துவம் தரவில்லை என்று கேட்கிறார், லோகல் புல்லுருவிகளும் இந்த மாதிரிப் பேசுகின்றனர்.
..
புதியவன்,
பரவாயில்லையே….
இப்போது புதிதாக உங்களுக்கு
குலாம் நபி ஆசாத் – மீது கூட காதல் வந்து விட்டது
போலிருக்கிறதே….!!!😊
அப்படியே கமல்ஹாசனையும்
கடைக்கண்ணால் பார்க்கலாமே…!!!😊
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கமலஹாசனை மாதிரி கொஞ்சம்கூட sense இல்லாத, பட்டவர்த்தனமான அசிங்கமான சுயநலவாதியை நாம் எளிதில் பார்க்கமுடியாது. அவரது முடிவுகள் கொள்கைகள் நடத்தைகள் எல்லாமே ‘தான் தன் சுகம் தன் நலம்’ இவற்றை மாத்திரமே சுற்றிவருபவை. கர்நாடகா தேர்தலில் தானும் காங்கிரஸுக்குப் பிரச்சாரம் போகப்போகிறேன் என்றார். அப்புறம் இழுத்தடித்தார். ராகுல், அந்த ஆள் வராட்டாப் பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். இப்போ புதிய நாடாளுமன்றத்தை வரவேற்கிறேன் என்றார். காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் சொல்வதில் பாயிண்டுகள் உண்டு என்றார். கிடைத்த இடத்திலெல்லாம் துண்டுபோட்டு வைக்கிறார். அவருக்குத் தேவை ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் சில பல விருதுகள், காசுகள். திமுக பற்றிய அவரது விமர்சனங்களே (அவை விமர்சனங்கள் அல்ல, மயிலிறகால் வருடிக்கொடுப்பது… காரணம் காசு) அந்த ஆளை வெறுக்க போதுமானது.
இதற்கு நேர் எதிர் ரஜினிகாந்த் அவர்கள். ஒருவனின் வெளி அழகு முக்கியமல்ல. அக அழகே முக்கியம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி அவர்களும், வெளி அழகு இருந்தாலும் உள்ளம் இருண்டது என்பதைக் காட்டுவது கமலஹாசன்.
Nanree Puthiyavan sir, about Thalaivar Rajinikanth sir