…………………

…………………
சுதந்திரம் அடைந்த பிறகு, லண்டனில், பிபிசி தொலைக்காட்சிக்கு
முதல் முதலாக நேருஜி கொடுத்த ஆங்கில பேட்டி கீழே –
இதில், துவக்கத்திலேயே, எனக்கு தொலைக்காட்சி பற்றி அதிகம்
தெரியாது, இங்கே பேட்டி கொடுப்பதன் மூலம் ஒரு கடினமான செயலை எதிர்கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார் …!
- இந்தியாவில் அப்போது (1953) தொலைக்காட்சியைப்பற்றி அறிந்தவர்கள் அபூர்வம்…..
( தகவலுக்காக கொஞ்சம் –
இந்தியாவில், கொல்கத்தா, நியோகி குடும்பத்தின்
வீட்டில் தொலைக்காட்சி முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
இது இந்தியாவில் தொழில்மயமாக்கலுக்கு ஒரு பெரிய மைல்கல்லாக
இருந்தது. இந்தியாவில் நிலப்பரப்பு தொலைக்காட்சி
செப்டம்பர் 15, 1959 அன்று தில்லியில் ஒரு சிறிய டிரான்ஸ்மிட்டர்
மற்றும் ஒரு தற்காலிக அரங்கத்துடன் சோதனை ஒளிபரப்புடன்
தொடங்கியது.
அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக 1965-ல் தினசரி
ஒளிபரப்பு தொடங்கியது. தொலைக்காட்சி சேவை பின்னர் 1972 -ல்
மும்பை மற்றும் அமிர்தசரஸ் வரை நீட்டிக்கப்பட்டது. 1975 வரை,
ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள்
இருந்தன….)
- நான், என் வாழ்க்கையில் முதல்தடவையாக 1979-ல் டெல்லியில் ஒரு தொலைகாட்சி – தூர்தர்ஷன் – நிகழ்ச்சியை பார்த்தேன்….
………………..
.
………………………………………………..