……………………………….

……………………………….
108 -110 டிகிரி தகிக்கும் வெய்யிலில் தவிக்கும் நமக்கு
நடுங்கும் குளிரில் வாழும் சில நாடுகளைப் பார்த்தால்
பொறாமையாகத் தான் இருக்கும்….
வருடத்திற்கு 8-9 மாதங்கள் வரை கூட சூரியனே உதிக்காத
சில நாடுகளும், அபூர்வமாக ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு மணி
நேரங்களுக்கு மட்டுமே சூரியன் தரிசனம் தரும் நாடுகளும்
காண்பது மனதிற்கு மிகவும் இதமாகவே இருக்கிறது…
நம்மில் பெரும்பாலோரால் போக முடியாத அத்தகைய சில
குளிர் நாடுகளின், வெய்யிலுக்கு இதமான தரிசனம் தரும்
ஒரு காணொலி கீழே –
…………………..
- நார்வே, ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்த் மற்றும் நெதர்லாந்த் நாடுகளில் கூட நமக்கு சில வாசக நண்பர்கள் இருக்கிறார்கள்… சமீபத்தில் சேர்ந்து கொண்ட ஒரு நண்பர் இருப்பது ஐஸ்லாந்த் …!!!
- ..
…………………………………………………………………………………………………………………………………….
முதன் முதலில் France Lille சென்றிருந்தபோது இரவு 9 மணிக்கும் வெயில் இருந்ததைப் பார்த்து எனக்கு ரொம்பவே ஆச்சர்யம். (இரு நாட்களுக்கு முன்பு மேப் பார்த்தபோதுதான் தொட்டுவிடும் தூரத்தில் பெல்ஜியம் இருப்பதைக் கண்டேன்..லில் லிலிருந்து) லண்டனில் இறங்கும்போதும் வெடவெட குளிர். பிரயாணிக்கும்போது மழை, குளிர், பச்சைப் பசும் வயல்கள் என்று அங்கேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது.
சமீபத்தில் ஒருவர், அவர் பையனுக்குத் திருமணம் முடிக்க என் நண்பரிடம் interact செய்துகொண்டிருந்தபோது, பிர்மிங்க்ஹாமில் 8 மாதங்களுக்கு மேல் கடும் குளிர் மழைனு இருக்கும், வருடத்தில் மூன்று மாதங்கள்தாம் வெயில்னு ஒண்ணு இருப்பதே தெரியும், மகளுக்கு அதனைத் தாங்கிக்கொள்ள முடியுமா? அங்கேயேதான் வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டிருந்தார். நமக்கு ஆஹா ஓஹோ என்று தோன்றும் இடங்கள் அங்கு வசிப்பவர்களுக்கு எப்படி இருக்குமோ?
இவையெல்லாம் பார்க்க அழகாக இருக்கும். வெய்யில் இல்லாமல் எப்போதும் குளிர் இருக்கும் கொடுமை யாருக்கும் வரவேண்டாம். டிப்ரெஷனை வரவழைக்கும்!