……

…………..
அரசு அன்றே கொல்லும்…. ஆண்டவன் நின்று கொல்வான் – என்பது
சொல்வடை…
ஆனால், நமது அனுபவம், அரசனும் சரி, ஆண்டவனும் சரி,
பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்… அரசியலுக்காக,
இருப்பை காட்டிக்கொள்ள –
அவ்வப்போது எதாவது நிகழ்வுகள் நடக்கின்றன…
ஆனால் பலன்….?
இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நம்மால்
காண முடியவில்லை;
இப்போதாவது உருப்படியாக எதாவது நடந்தால் தான்
மக்களுக்கு நம்பிக்கை வரும்…. !!!
நம்பிக்கை வரும்படி எதாவது நடக்கச் செய்வார்களா …???
…………………………….

இவரும் உள்ளே போக வேண்டியவர் தான்….. எப்போது ஆண்டவர் மனசு வைப்பாரோ….???
……………………………….




.
…………………………………………………………………………………………………………………………………………………..
இந்த ரெய்டே அநியாயம் இல்லையா? குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தித்தான் விசாரணை நடக்கும். அதுபோல, ஐ.டி. ரெய்டு வருவதற்கு முன்பு அமைச்சருக்கும் அவர் உறவினருக்கும் ஒரு சில மாதங்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டாமா? அதுபோல ஆர்.எஸ்.பாரதி (திமுக கொ.செ … கொத்தடிமைச் செயலாளர் என்று புரிந்துகொள்ளாதீர்கள், கொள்கைச் செயலாளர்)க்கும் ஒரு நோட்டீஸ் கொடுத்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் ஐடி ரெய்டுக்கு வந்தால் என்ன அர்த்தம்? அமைச்சரே சொல்லுகிறாரே 2006க்குப் பிறகு ஒரு அடி நிலம் கூட அவர் வாங்கவில்லை என்று. (நல்லா ஆராய்ச்சி பண்ணினீங்கன்னா, முதல்வர் வீட்டில் மேற்கொள்ளப்படும் நீச்சல் குளம் மற்றும் மற்ற அழகுபடுத்துதலுக்கும் முதல்வர் வீட்டாருக்கும் சம்பந்தமே இருக்காது. யாரேனும் ஒரு சிலத் தொண்டர்கள் தங்கள் பணத்தைச் செலவழித்து அவைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்)
இந்தப் பேட்டி வேறு சேனலின் வந்ததைத்தான் நான் பார்த்திருந்தேன். இப்போது தாமரை டிவி என்று காண்பிக்கிறது. ஆனால் இளங்கோ நல்லா விளக்குகிறார்.
….
ஒரு சதுர அடி கூட வாங்கவில்லை –
ஆனால் இப்படி அநியாயமாக துன்புறுத்துகிறார்களே ….
………………..
.
…………………………………………
இதில் அருவருப்பான விஷயம் என்றால் அது இந்த ‘மீடியாக்களின்’ தலைப்புகள்தான்!