மோடிஜி சென்ற பப்புவா நியூ கினியா – 839 மொழிகள், 94 லட்சம் மக்கள்…. !!!

………………………………………..

………………………………………………………………………

……………………………………………………………………..

பெரியவர்களை சந்திக்கும்போது, அவர்கள் காலைத்தொட்டு
வணங்கி, வாழ்த்துகளைப் பெறுவது இந்திய பண்பாடு ….

ஆனால், இந்தியாவுக்கு சற்றும் தொடர்பில்லாத, பசிபிக் பெருங்கடல் தீவு ஒன்றின் அரசுத் தலைவர் ஒருவர் அண்மையில் இந்த மரபினை கடைபிடித்த
சம்பவம் அனைவருக்கும் வியப்பை அளித்தது.

பசிபிக் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான, பப்புவா நியூ கினியா-வுக்கு
இந்திய பிரதமர் மோடிஜி கடந்த ஞாயிறன்று சென்றபோது,
ஆர்வத்துடன் இந்த இந்திய வழக்கத்தை முன்னதாகவே தெரிந்து கொண்ட
பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் James Marape அவர்கள்,

மோடிஜியின் கால்களைத் தொட்டு வணங்க முற்பட்டதும்,
அதை பாதியிலேயே தடுத்த மோடிஜி, அவரை கட்டியணைத்து
தன் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்ததும்
மீடியாக்களில் தலைப்புச் செய்தியானது….

இந்தியா-பசிபிக் தீவுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும்பொருட்டு, Forum for India–Pacific Islands Cooperation (FIPIC) ஒன்றை இந்தியா உருவாக்கி இருக்கிறது.
அந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் ஒன்று பப்புவா
நியூகினியாவில் நடைபெறுகிறது… அதை முன்னிட்டே மோடிஜி
அங்கு சென்றிருந்தார்…

இந்தியாவின் வெளியுறவுத்துறை மிகச்சிறப்பாக செயல்படுகிறது
என்பதற்கு பிரதமரின் இந்த வெளிநாட்டுப்பயணம் ஒரு
நல்ல எடுத்துக்காட்டு.
………….

பிரதமர் சென்ற இந்த பசிஃபிக் தீவு நாடான பப்பு நியூ
கினியாவைப்பற்றி தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவலாக இருக்கும்….
அந்த நாட்டைப்பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள் இங்கே –
…………..

ஆஸ்திரேலியாவின் வடக்கே தென்மேற்கு பசிபிக் பெருங்கடலின்
ஒரு பகுதி இந்த நாடு… அதன் தலைநகரம், போர்ட் மோர்ஸ்பி
நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது, . 462,840 சகிமீ
( அதாவது 178,700 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட இந்த நாடு
உலகின் மூன்றாவது பெரிய தீவு நாடாகும் .

முதலாம் உலகப் போரின் போது தொடங்கி ஏறக்குறைய
60 ஆண்டுகால ஆஸ்திரேலிய நிர்வாகம் முடிந்து , பப்புவா நியூ கினியா
ஒருவழியாக – 1975-ல் தனது இறையாண்மையை பெற்றது.
பப்புவா நியூ கினியா 10 அக்டோபர் 1975 இல் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டது

சுதந்திர நாடாக இருந்தபோதும், விரும்பியே, பிரிட்டிஷ் காமன்வெல்த்
நாடுகளில் ஒன்றாக இருந்தது என்கிற உரிமையில் இப்போதும்,
பிரிட்டிஷ் அரசி/அரசரையே தங்கள் நாட்டு அரசாக ஏற்று,
ஒரு முடியரசாகவே இயங்குகிறது. பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்படும்,
(ஆனால், பப்பு நியூகினியா நாட்டைச்சேர்ந்த ) ஒருவரே நாட்டிற்கு
தலைமைப் பொறுப்பை ஏற்று, கவர்னர் ஜெனரல் என்று
அழைக்கப்படுகிறார். பிரதமர் அந்த நாட்டின் பாராளுமன்றத்தால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பப்புவா நியூ கினியாவில் 839 அறியப்பட்ட மொழிகள் உள்ளன;
இந்த அளவிற்கு வேறுபட்ட மொழிகளைக் கொண்ட வேறு நாடு
எதுவுமே உலகில் இல்லை என்று சொல்லலாம்…
3 மொழிகளா- 2 மொழிகளா என்று இந்தியா படும் அவஸ்தையை
பார்க்கும்போது, இந்த செய்தி நமக்கு வியப்பையே தருகிறது.

2011-ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்த நாட்டின் மொத்த
மக்கள் தொகையே சுமார் 94 லட்சம் தான். ( 2011 கணக்கின்படி
சென்னை நகரின் மக்கள் தொகை சுமார் 71 லட்சம்….!!! )

பெரிய ஊர்களோ, நகரங்களோ இங்கே இல்லை.
மொத்தம் சுமார் 13% மக்களே ஊர்கள்/நகரங்களில் வசிக்கின்றனர்.
பெரும்பாலானோர், சமூக கூட்டங்களாக (கொம்யூன்…)
வசிக்கின்றனர். அவர்கள் கரன்சியை அதிகமாக பயன்படுத்துவதில்லை;
பெரும்பாலும் தங்களுக்குள்ளேயே பண்டமாற்று முறை தான்.

சுமார் 95.5% மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.

பப்பு நியூ கினியா தொடர்புடைய சில புகைப்படங்கள் கீழே –

…………………..

இருக்கும் இடம் -ஆஸ்திரேலியாவுக்கு மேலே —

முதல் உலகப்போரின் போது ஆக்கிரமிப்பாளர்களால், அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

………………….

எரிமலை –

………………..

நிலக்கரிச் சுரங்கம் –

………………..

தீவின் ஆதிவாசிகள் –

……………………….

…………………………….

……………………………….

கவர்னர் ஜெனரல் –

.

……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மோடிஜி சென்ற பப்புவா நியூ கினியா – 839 மொழிகள், 94 லட்சம் மக்கள்…. !!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    ஆளும் கட்சியினர் ஆதரவோடு சாலைக்கிராமத்தில் –
    திறந்தவெளியில் மது விற்பனை …

    ….
    https://www.hindutamil.in/news/tamilnadu/993769-open-air-sale-of-liquor.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s