…………………………………………………

…………………………………………………

…………………………………………………..
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் –
ஒரு அட்டகாச சிரிப்புடன் டாக்டர் தமிழிசை ஒற்றை வார்த்தையில் சொல்வதன் அர்த்தமென்ன புரிகிறதா ….?
………………..
………………..
திரு.ப.சிதம்பரம் –
…………………
…………………
திரு.ஆனந்த் ஸ்ரீநிவாசன் –
…………………
.
……………………………………………….
நாம் நினைப்பது என்ன …???
சாதாரண பொதுமக்களுக்கு இதனால் பெரிய இன்னல்கள் எதுவுமில்லை. சிலருக்கு மட்டும் ஒருநடை வங்கி வரை சென்று வரவேண்டி இருக்கும்… அவ்வளவே…. அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.
ஆனால், இதில் சம்பந்தப்பட்டது எல்லாமே அரசியல் …!
உத்திரவு போடப்பட்டதும் அரசியல் காரணங்களுக்காக …..!!
எதிர்ப்பவர்கள் சொல்வதும் அரசியல் காரணங்களுக்காக ….!!!
நிஜமான காரணமாக இருக்கக்கூடியது இதுவாகத்தான் இருக்க முடியும் –
வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும், 2024 பாராளுமன்ற தேர்தலும்,
அவற்றையொட்டிய, அரசியல் கட்சிகளின் கணக்கில் வராத செலவுகளும்….!!!
வரப்போகிற தேர்தல்களை சந்திக்க – கணக்கில் காட்டமுடியாத பணத்தை பெரிய அளவில் ரொக்கமாகவே வைத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இது ஒரு பிரச்சினையாகத் தான் இருக்கும்…
ஆனால், அதிலும் – மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் – இதை பல விதங்களிலும் சமாளித்து விடும். ( அவர் அவர்களுக்கு தகுந்தாற்போல், பல விதங்களில் ரிலீஃப் செண்டர்கள் இருக்கின்றனவே…. )
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் (டாக்டர் தமிழிசையின் சிரிப்புக்கு அர்த்தம் புரிகிறதா…? ), போக்குவரத்து நிர்வாகங்கள், கூட்டுறவு வங்கிகள், பண்டகசாலைகள், ஆவின் போன்ற பணம் புழங்கும் நிறுவனங்கள் இருப்பது போல்….)
அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிக்கிளைகளின் மேனேஜர்களுக்கு எக்கச்சக்கமான டிமாண்ட் இருக்கும்…. !!! நிறைய பேர் கமிஷன் ஏஜெண்டுகளாக மாறுவார்கள்….
இறுதியாக ஒரு தமாஷும் நடக்கும்…
2023 மார்ச் 31-ன் படி 3.62 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த கெடுநாள் முடியும் செப்டம்பர் 30,2023 அன்றுக்குள் வங்கிகளுக்கு வந்து சேரும் 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை நிச்சயமாக இதை விட அதிகமாகவே இருக்கும்….. ஆக, பலகோடி கள்ள 2000 ரூபாய் நோட்டுகளும் அதிகாரபூர்வமாக நல்ல ரூபாய் நோட்டுக்களாக மாறி இருக்கும்….
கள்ள நோட்டுகளை ஒழிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று தானே…!!! அது எந்த விதத்தில் ஒழிந்தாலென்ன ….
குறைந்த பட்சம் அந்த நோக்கம் ஒன்றாவது நிறைவேறி இருக்குமல்லவா…!!!
.
…………………………………………………………………………………………………………………………………..
உங்களில் கருத்து மிகச் சரியானதுதான். இது அரசியல் காரணங்களுக்கான முடிவு என்றே நானும் நினைக்கிறேன். (ராஜஸ்தான் போன்ற பல மாநிலத் தேர்தல்கள். மத்திய அரசு-நான் திமுக கொத்தடிமை இல்லை என்பதால் ‘ஒன்றிய’ என்று உபயோகிக்கவில்லை, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் தமிழகத்தில் ஸ்பெஷலாக ஏதேனும் இந்த மாதிரி சட்டம் போட்டால், பணத்தை மூஞ்சில் அடித்து வாக்கு வாங்கும் திமுக ட்ரிக் எடுபடாமல் போக வாய்ப்பு இருக்கிறது) டிமானிடைசேஷன் போல இது பொதுமக்களைப் பாதிக்காது. ஆனால் பாருங்க, கட்டிக் கட்டி வைத்திருக்கும் 2000ரூ கணக்கில் வந்துவிடும் என்றாலும், இந்த மாதிரி முடிவு எடுக்கும்போது, அரசு நிறுவனங்கள் அனைத்தும் sourceன் ஆதார் கார்ட் நம்பரையும் குறித்துக்கொள்ளவேண்டும், அப்போதுதான் வங்கிகளில் மாற்றமுடியும் என்றும் சட்டம் போட்டிருந்தால், டாஸ்மாக்கில் 10,000 கோடி அளவுக்கு 2000 ரூ நோட்டுகள் இருக்கின்றன, கூட்டுறவுச் சங்கங்களில் இன்னொரு 10,000 கோடி அளவு, போக்குவரத்துத் துறையில் இன்னொரு 10,000 கோடி என்று கணக்கு காட்டுவது கடினமாக ஆகியிருக்கும் அல்லவா?
இன்னொரு அறிவிப்பும் வந்துள்ளது. விரைவில் புது 500 ரூ நோட்டு வரப்போகிறது என்று. இதனால் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கும் 500 ரூ (சமீபத்தைய தேர்தல்) செல்லாததாக ஆக வாய்ப்பு இருக்கிறதா?