……………………………………..

…………………………………………………………….
“ஸ்கைவாக்” – ஆகாய நடை பாலம், அண்மையில் திறந்து
வைக்கப்பட்டது…. அது குறித்த காணொலியொன்று கீழே …..
அதற்கு முன்னால், சில விவரங்கள் —
“ஸ்மார்ட் சிடி ” திட்டம், அகில இந்திய அளவில் பிரதமர் மோடிஜி
அவர்களால், 25, ஜூன் 2015 அன்று அறிவிக்கப்பட்டது….
இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் 100 பெரிய நகரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்த
மத்திய அரசால், 5 ஆண்டுகளில் மொத்தம் 48,000 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டது….
இதில் தேர்ந்தெடுக்கப்படும், ஒவ்வொரு நகரத்திற்கும்,
ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்படும்.
இதே அளவிற்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசும் “ஸ்மார்ட் சிடி”
திட்டங்களில் முதலீடு செய்யும்.
ஆக, ஒவ்வொரு ஸ்மார்ட் சிடி திட்டத்திற்கும் – மத்திய அரசும்,
மாநில அரசும் சம அளவில் நிதி முதலீடு செய்கின்றன.
சென்னை, தி.நகர் “ஸ்கை வாக்” திட்டம், முந்தைய அதிமுக
ஆட்சியில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக
இருந்தபோது உருவாக்கப்பட்டு, உரிய நிதி ஒதுக்கீட்டுடன்
2018-ல் அறிவிக்கப்பட்டு, திட்டமும் துவங்கப்பட்டது…
இடையில் குறிக்கிட்ட கொரோனா கொடுமையால்,
திட்ட கட்டுமானப் பணிகளை தொடர்வது தாமதப்பட்டது.
கொரோனா வீரியம் குறைந்த பிறகு, தொடர்ந்து கட்டுமானபணிகள்
மேற்கொள்ளப்பட்டு, இப்போது திமுக ஆட்சியில் திறந்து
வைக்கப்பட்டுள்ளது….
ஆக, இந்த திட்டத்தில், மோடிஜியின் மத்திய அரசுக்கும்,
எடப்பாடியாரின் அதிமுக அரசுக்கும் கூட நிறைய பங்கு உண்டு….
ஆனால், பாவம் அவர்களுக்கு –
செல்ஃபி பாக்கியம் கிடைக்கவில்லை …!!!
கீழே ஸ்கைவாக் காணொலி –
………………………………….
.
……………………………………………..
இது ஒரு பெரிய விஷயமா? அடுத்து அதிமுக ஆட்சி வந்தால், திட்டம் ஆரம்பித்தது ‘மாண்புமிகு……’ என்று ஒரு பெரிய கருங்கல் பலகை வைத்தாலே போதுமே. சரி..இந்தத் திறப்புவிழாவினால் என்ன ஆதாயம்? பத்திரிகைகளே ஏதோ ஸ்டாலின் அரசே இதனை கடுமையாக முயற்சி செய்து நிறைவேற்றியது என்று பஜனை பாடி, ஸ்டாலினைக் குளிர்விக்க முயற்சி செய்யும். கள்ளச்சாராயச் சாவு, தயாரித்தவனுக்கே அரசு உதவி, செத்தவனுக்கு 10 லட்சம் என்ற நெகடிவ் இமேஜ் ஸ்டாலினுக்கு வராமல் இந்தச் செய்தியை முன்னிலைப்படுத்தி, அதைச் சாக்கிட்டு விளம்பர வருவாயைப் பெருக்கிக்கொள்ள எண்ணும்.
இதுபோலத்தானே கோயம்பேடு புது பஸ்டாண்ட் திறந்தபோது நடந்தது.
அதைவிட முக்கியமாக PTR audioவினால், 2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் வாங்கப்பட்டதா என்றொரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறதே. இனி தேர்தலின்போது மக்களுக்கு 500 ரூ விநியோகிக்கப்படுமா இல்லை அதையும் தடை செய்து 300 ரூ நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்படுமா? கொஞ்சம் ஜோசியத்தை எடுத்து விடுங்களேன்.
அப்புறம் எனக்கு இன்னொரு சந்தேகம். நம் காரியம் ஆகவேண்டும் என்பதால் லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதித்துக்கொள்கிறோம். சட்டம், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று சொல்கிறது. தன் கட்சிக்காக இன்னொரு கட்சியிடம் நிதியினைப் பெற்று அதற்காக ஆதரவு தருவது, தன் ஊடகத்தில் ஜால்ரா போட்டு விளம்பர காசை அரசிடமிருந்து பெறுவது போன்றவையெல்லாம் லஞ்சம் கேடகரியில் வராதா?