பாஜவுக்கு அவசியம் தேவை இந்த தோல்வி – மாரிதாஸ் ….!!!

……………………………………………………..

…………………………………………………….

…………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

7 Responses to பாஜவுக்கு அவசியம் தேவை இந்த தோல்வி – மாரிதாஸ் ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    மாரிதாஸ் சொல்வது சரியானதுதான்.

    1. பாஜக வாக்கு சதவிகிதம் குறையவில்லை. ஆனால் என் அநுமானப்படி, மோடி அவர்களின் Road Showவினால் கவரப்பட்ட வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களித்ததனால் வாக்கு சதவிகிதம் குறையவில்லை. இல்லையென்றால் நிச்சயம் இன்னும் 4-5 சத வாக்குகள் பாஜகவிற்குக் குறைந்திருக்கும். (பெங்களூர் ஜெயநகரில் எப்போதுமே வெற்றிபெற்று வந்த சௌமியா ரெட்டி என்ற காங்கிரஸ் வேட்பாளர் 16 வாக்குகளில் பாஜகவிடம் தோற்றுள்ளார். எங்கள் தொகுதியில் தினேஷ் குண்டுராவ்-காங்கிரஸ் 100 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டு தொகுதிகளுமே மோடி அவர்களின் Road showவில் இடம் பெற்றிருந்தன). கட்சி சாராத பொதுமக்கள் இந்தத் தேர்தலில் 7 சதவிகித அளவு காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர் என்று நினைக்கிறேன்.

    2. காங்கிரஸ் 6 சதவிகித வாக்குகள் அதிகமாக வாங்கியிருக்கின்றனர். அதில் 5 சத வாக்குகள் ஜனதா தளத்திலிருந்து காங்கிரஸை நோக்கிச் சென்ற வாக்காளர்கள். என் அநுமானம் சரி என்றால், ஜனதா தளத்திற்கான வாக்காளர்கள் காங்கிரஸ்தான் பாஜகவை எதிர்த்து வெற்றி பெறும் என்று அதை நோக்கி நகர்ந்திருக்கின்றனர், அதிலும் முஸ்லீம் வாக்காளர்கள்.

    3. பொதுவாக முஸ்லீம் வாக்களர்கள் ஜனதா தளத்திற்கும் வாக்களிப்பவர்கள். இந்தத் தடவை நான், ஜனதா தளம் 15-20 சீட்டுகள் பெற்றாலே அதிகம் என்று கணித்தேன். ஆனால் 20 சீட்டுகள் வந்திருப்பதே ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது. அதன் காரணம், பத்திரிகைகள் எல்லாமே, hung assembly என்று எழுதிவந்ததால், அப்படிப்பட்ட சூழலில் ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதனால் அதன் strong holdகளில் முஸ்லீம்கள் அதற்கு வாக்களித்திருக்கின்றனர்.

    பாஜக ஒருவேளை 90 சீட்டுகள் பெற்றிருக்குமானால், அது கர்னாடகாவிற்கு நல்லதல்ல. உள்ளூர் தலைவர்களின் ஆணவம் அதிகமாகியிருக்கும். வெறும்ன, ஹனுமார், இந்துக்களுக்கான கட்சி, முஸ்லீம்கள் மீது வன்மம் இவை மாத்திரம் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்காது. கிடைத்த அரசை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். அதைச் செய்ய முந்தைய கர்நாடகா பாஜக தவறிவிட்டது. என் அநுமானப்படி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 18க்கு மேல் வெற்றிபெறும், சட்டமன்றத் தேர்தல் effect அதற்கு இருக்காது என்றே நினைக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ..
      புதியவன்,

      // மாரிதாஸ் சொல்வது சரியானதுதான். //

      அப்படியானால், ராகுல் காந்தியை, பாஜக-வினர்
      கேவலமாக நடத்துவது பற்றி, மாரிதாஸ்
      சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா…..?

      ராகுல் காந்தியை மக்கள் நம்புகிறார்கள்.
      அவரது பாதயாத்திரை மிகவும் பலனளித்து
      இருக்கிறது என்று சொல்வதை ….???

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன் சொல்கிறார்:

        தேர்தல் பற்றி அவர் அவதானித்துள்ளது உண்மை.

        ராகுல் காந்தியை அவர் கட்சியினரே மதிப்பதில்லை. பாஜகவினர் அவர் சிறுபிள்ளை என்ற ரீதியில் பரப்புரை செய்கிறார்கள். Personally I dont think that is the correct way. கிள்ளக் கிள்ள பிள்ளைப் பூச்சியும் தேளாகிவிடும். அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

        ராகுல் காந்தியை மக்கள் நம்புகிறார்கள், பாதயாத்திரை பலனளித்தது என்று சொல்வதை, நான் ஏற்கவில்லை. Traditionally Karnataka is for Congress, due to Congressmen as well as Muslims. வட இந்தியாவில் அவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தபோதும் சிக்மகளூரில் இந்திரா ஜெயித்தது நினைவிருக்கும் அல்லவா? ராகுல் காந்தி, கர்நாடகத்தைப் பொறுத்த வரையில் கரிஷ்மேடிக் லீடர். வேறு மாநிலம் எதுவும் சட் என்று என் நினைவுக்கு வரவில்லை. ராகுல் காந்தியை மக்கள் நம்புகிறார்கள் என்று நீங்கள் நம்பினால், அவருடைய கட்சி, அவர் தலைமையில் 120-150 சீட்டுகளுக்கு அதிகமாக வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுக் காட்டட்டும்.

        ராகுல்காந்தி is not matured. He is an irrational kid. கட்சிக்குத் தலைவராவதற்குத் தகுதி படைத்தவரல்லர். ஒரு கட்சிக்கு கொஞ்சம் கொஞ்சம் மக்கள் ஆதரவு பெற்ற நிறையப் பேர்கள் தேவை. ராகுல்காந்திக்கு கூஜா தூக்கும் ஆட்கள்தான் தேவை. அப்படி கூஜாக்களை வைத்து கட்சியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அவர் வளரவில்லை. கர்நாடகாவில் நடந்த தேர்தல் கூட்டம் ஒன்றில்கூட, சோனியா அமர்கிறார். ராகுல் அடுத்த சேரில் அமர்கிறார். மல்லிகார்ஜுன் கார்கே நின்றுகொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறார். அவரை உட்காரச் சொல்லணும் என்ற basic courtesy கூட அவர்களுக்கு இல்லை.

        அவர் வளர்ந்ததாக, அரசியல் கட்சிகள் நினைத்திருந்தால், அவரே பிரதம மந்திரி வேட்பாளர், எங்கள் கட்சி எம்பிக்கள் அவர் பிரதமர் ஆவதற்கே வாக்களிப்பார்கள் என்று முக்கிய மாநிலக் கட்சிகள் சொல்லுவார்களே. பார்ப்போம். 2024க்கும் முன்பு அப்படி ஒரு நிகழ்வு நடக்கிறதா என்று.

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          …..

          // மாரிதாஸ் சொல்வது சரியானதுதான். //

          -என்று நீங்கள் எழுதியபோது, இதையெல்லாம்
          நீங்கள் கவனிக்கவில்லையோ…???

          கவனிக்காமலே தான் “சரி” என்று கருத்து சொன்னீர்களோ…?

          ……………………

          அப்படியானால், மாரிதாஸ் முட்டாள்தனமாக
          பேசுகிறார் என்று இப்போது சொல்கிறீர்களா…?😊

          நிச்சயமாக அப்படித்தானே … மீண்டும்
          பின் வாங்க மாட்டீர்களே….?

          • புதியவன் சொல்கிறார்:

            //ராகுல் காந்தியை மக்கள் நம்புகிறார்கள். அவரது பாதயாத்திரை மிகவும் பலனளித்து இருக்கிறது என்று சொல்வதை// – நீங்களும் இதை ஏற்றுக்கொள்வதென்றால் (அதுபோல பலரும்), தமிழகத்தில் காங்கிரஸ் வாக்கு வங்கி 10 சதமாகியிருக்கிறது, மற்ற மாநிலங்களிலும் (எங்கெங்கு ஜோடோ யாத்திரை சென்றதோ அங்கெல்லாம்) காங்கிரஸின் செல்வாக்கு மிகவும் அதிகரித்திருக்கிறது, மிக அதிக எம்.பிக்களும், தேர்தலில் எம்.எல்.ஏக்களும் கிடைக்கும் என்று சொல்வதாக ஆகிறது. அப்படித்தானே… நீங்கள் இதிலிருந்து பின்வாங்க மாட்டீர்களே.

            காங்கிரஸுக்குக் கிடைத்த 4 சதம், ஜனதா தளத்திலிருந்து கிடைத்திருக்கிறது. (அல்லது முன்பு ஜனதா தளத்தை ஆதரித்தவர்கள், ராகுல் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கவேண்டும்). பாஜகவிற்கு வாக்கு சதம் குறையவில்லை. ஆனால் நான் அவதானிப்பது, பாஜக அரசிற்கு சென்ற தேர்தலில் வாக்களித்த ‘கட்சி மனநிலை’ இல்லாதவர்கள் இப்போது காங்கிரஸை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். மோடி அவர்களின் யாத்திரையினால் அவர் மீதான நம்பிக்கையை புதிய வாக்காளர்களில் கணிசமானவர்கள் வாக்களித்திருக்கின்றனர். அதனால் பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் குறையவில்லை என்பதுபோல் ஒரு மாயை தோன்றுகிறது. மாநில அரசு ஒழுங்காக perform செய்யாமல் ஊழலில் திளைக்க ஆரம்பித்தால் இதுதான் எந்த அரசுக்கும் நிலைமை. வெறும் ‘மோடி அவர்களின் முகம்’ மாநில அரசைக் காப்பாற்ற உதவாது என்பதுதான்.

          • Vicky சொல்கிறார்:

            கர்நாடகாவில் நடந்த தேர்தல் கூட்டம் ஒன்றில்கூட, சோனியா அமர்கிறார். ராகுல் அடுத்த சேரில் அமர்கிறார். மல்லிகார்ஜுன் கார்கே நின்றுகொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறார். அவரை உட்காரச் சொல்லணும் என்ற basic courtesy கூட அவர்களுக்கு இல்லை.
            Your comment please. . .

  2. புதியவன் சொல்கிறார்:

    யூ டியூப்களில் 80, 120, 140 என்று பாஜகவிற்கு அடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது, புள்ளி விவரங்கள் கள நிலவரம் என்று பல்வேறு காணொளிகள் வந்திருந்தபோதும், நான் இங்கு எப்போதுமே 50-60 சீட்டுகளுக்கு மேல் பாஜக பெறாது என்றே எழுதிவந்திருக்கிறேன்.

    எனக்குத் தெரிந்து பலர், ‘ஆமாம் பாஜகவிற்கு வாக்களித்தோம்’ என்று கேட்பவர்களிடம் சொல்லிவிட்டு காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருந்தனர். அதனால் புள்ளிவிவரங்கள் தவறானவையாகவே இருந்தன. பாஜக தோல்வியடைந்த இடங்களில் வாக்கு வித்தியாசம் 20 இடங்களிலாவது மிகக் குறைவாக இருந்திருக்கும். காங்கிரஸின் ஏரியாக்களில் வெற்றி வித்தியாசம், அதிலும் குறிப்பாக கிராமப்புரங்களில் மிக அதிகமாக இருந்திருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s